#309 மின்னலே நீ வந்ததேனடி - மே மாதம்

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!doasembahros
படம்: மே மாதம்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே.. என் வானம் உன்னைத் தேடுதே
மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே.. என் வானம் உன்னைத் தேடுதே
...

கண் விழித்துப் பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே
கண் விழித்துப் பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே
கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இன்று சிதறிப் போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
ஓ.. மின்னலே.. என் வானம் உன்னைத் தேடுதே
...

பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா
பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞனில்லையா
நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நாம் பூத்திருக்கிறேன்

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே.. என் வானம் உன்னைத் தேடுதே
...

#308 ஆறும் அது ஆழமில்ல - முதல் வசந்தம்

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros
படம்: முதல் வசந்தம்
இசை: இளையராஜா
எழுதியவர்: முத்துலிங்கம்
பாடியவர்: இளையராஜா

பெ.குழு: ம்ம் ம்ம்ம்.. ம் ம்ம் ம்ம்ம்..
ம்ம் ம்.. ம்ம் ம்.. ம்ம்ம்ம் ம்.. ம்..
...
: ஆறும் அது ஆழமில்ல
அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆறும் அது ஆழமில்ல
அது சேருங்கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
அடி அம்மாடி.. அதனாழம் பார்த்ததாரு
அடி ஆத்தாடி.. அதப் பார்த்த பேரைக் கூறு நீ
ஆறும் அது ஆழமில்ல
அது சேருங்கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
...

: மாடி வீட்டுக் கன்னிப் பொண்ணு
மனசுக்குள்ள ரெண்டு கண்ணு
ஏழைக் கண்ணை ஏங்க விட்டு
இன்னும் ஒன்னைத் தேடுதம்மா
கண்ணுக்குள்ள மின்னும் மையே
உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யே
சொன்ன சொல்லு என்ன ஆச்சு
சொந்தமெல்லாம் எங்கே போச்சு
நேசம் அந்தப் பாசம்
அது எல்லாம் வெளி வேஷம்
திரை போட்டுச் செஞ்ச மோசமே

: ஆறும் அது ஆழமில்ல
அது சேருங்கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
...

பெ.குழு: ம்ம் ம்ம் ம்ம்ம்..
ம்ம் ம்ம் ம்.. ம்ம் ம்ம் ம்..
ம்ம் ம்ம் ம்.. ம்ம் ம்ம் ம்..
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்..
...

: தண்ணியில கோலம் போடு
ஆடிக்காத்தில் தீபம் ஏத்து
ஆகாயத்தில் கோட்டை கட்டு
அந்தரத்தில் தோட்டம் போடு
ஆண்டவனக் கூட்டி வந்து
அவன அங்கே காவல் போடு
அத்தனையும் நடக்கும் ஐயா
ஆசை வச்சாக் கிடைக்கும் ஐயா
ஆனா கிடைக்காது நீ ஆசை வைக்கும் மாது
அவள் நெஞ்சம் யாவும் வஞ்சமே