#7 மனதிலே ஒரு பாட்டு - தாயம் ஒண்ணு

படம்: தாயம் ஒண்ணு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா

: மனதிலே ஒரு பாட்டு.. மழை வரும் அதைக் கேட்டு
...
: மனதிலே ஒரு பாட்டு.. மழை வரும் அதைக் கேட்டு
இது பூபாளம்.. புது ஆலோலம்
விழிப் பூவும் மலரும் காலை நேரம்
மனதிலே ஒரு பாட்டு.. மழை வரும் அதைக் கேட்டு
...

: காற்று பூவோடு கூடும்.. காதல் சங்கீதம் பாடும்
பார்த்து என்னுள்ளம் தேடும்.. பாசம் அன்போடு மூடும்
இதயம் போடாத லயமும் கேட்டு
இளமை பாடாத கவிதைப் பாட்டு
இதயம் போடாத லயமும் கேட்டு
இளமை பாடாத கவிதைப் பாட்டு
இமைகளில் பல தாளம்.. இசைகளை அது கூறும்
இரவிலும் பகலிலும்.. உனைப் பார்த்துப் பார்த்து பார்வை வாடும்

பெ: மனதிலே ஒரு பாட்டு.. மழை வரும் அதைக் கேட்டு
...

பெ: நீயும் நூறாண்டு வாழ.. நேரம் பொன்னாக மாற
நானும் பாமாலை போட.. தோளில் நான் வந்து சூட
எனது ராகங்கள் எழுதும் வேதம்
புதிய தாகங்கள் விழியில் ஊறும்
எனது ராகங்கள் எழுதும் வேதம்
புதிய தாகங்கள் விழியில் ஊறும்
இது ஒரு சுக ராகம்.. இதில் வரும் பல பாவம்
இனிமைகள் தொடர்கதை.. இனி சோகம் ஏது சேரும் போது

: மனதிலே ஒரு பாட்டு.. மழை வரும் அதைக் கேட்டு
பெ: இது பூபாளம்.. புது ஆலோலம்
: விழிப் பூவும் மலரும் காலை நேரம்
&பெ: மனதிலே ஒரு பாட்டு.. மழை வரும் அதைக் கேட்டு
...