#7 மனதிலே ஒரு பாட்டு - தாயம் ஒண்ணு

படம்: தாயம் ஒண்ணு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா

: மனதிலே ஒரு பாட்டு.. மழை வரும் அதைக் கேட்டு
...
: மனதிலே ஒரு பாட்டு.. மழை வரும் அதைக் கேட்டு
இது பூபாளம்.. புது ஆலோலம்
விழிப் பூவும் மலரும் காலை நேரம்
மனதிலே ஒரு பாட்டு.. மழை வரும் அதைக் கேட்டு
...

: காற்று பூவோடு கூடும்.. காதல் சங்கீதம் பாடும்
பார்த்து என்னுள்ளம் தேடும்.. பாசம் அன்போடு மூடும்
இதயம் போடாத லயமும் கேட்டு
இளமை பாடாத கவிதைப் பாட்டு
இதயம் போடாத லயமும் கேட்டு
இளமை பாடாத கவிதைப் பாட்டு
இமைகளில் பல தாளம்.. இசைகளை அது கூறும்
இரவிலும் பகலிலும்.. உனைப் பார்த்துப் பார்த்து பார்வை வாடும்

பெ: மனதிலே ஒரு பாட்டு.. மழை வரும் அதைக் கேட்டு
...

பெ: நீயும் நூறாண்டு வாழ.. நேரம் பொன்னாக மாற
நானும் பாமாலை போட.. தோளில் நான் வந்து சூட
எனது ராகங்கள் எழுதும் வேதம்
புதிய தாகங்கள் விழியில் ஊறும்
எனது ராகங்கள் எழுதும் வேதம்
புதிய தாகங்கள் விழியில் ஊறும்
இது ஒரு சுக ராகம்.. இதில் வரும் பல பாவம்
இனிமைகள் தொடர்கதை.. இனி சோகம் ஏது சேரும் போது

: மனதிலே ஒரு பாட்டு.. மழை வரும் அதைக் கேட்டு
பெ: இது பூபாளம்.. புது ஆலோலம்
: விழிப் பூவும் மலரும் காலை நேரம்
&பெ: மனதிலே ஒரு பாட்டு.. மழை வரும் அதைக் கேட்டு
...

#6 பூஜைக்கேத்த பூவிது - நீதானா அந்தக் குயில்

படம்: நீதானா அந்தக் குயில்
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: கங்கை அமரன் & சித்ரா

பெ: பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
: மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது
பெ: சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது
: கொக்கு ஒண்ணு கொக்கி போடுது.. ஹோய்..

பெ: பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
...

: பாவாடை கட்டயில பாத்தேனே மச்சம்
ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்
பெ: நோகாம பாத்துப்புட்ட வேறென்ன மிச்சம்
கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம்
: அச்சு வெல்லப் பேச்சுல ஆளத் தூக்குற
கொஞ்ச நேரம் பாருன்னா கூலி கேக்குற
பெ: துள்ளிப் போகும் புள்ளி மான மல்லு வேட்டி இழுக்குது
மாமன் பேசும் பேச்சக் கேட்டு வேப்பங்குச்சி இனிக்கிது

: பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
...

பெ: ஊரெல்லாம் உன்னப் பத்தி வெறும் வாய மெல்ல
தோதாக யாருமில்ல தூது சொல்ல
: வாய் வார்த்தை பொம்பளைக்கி போதாது புள்ள
கண் ஜாடை போல ஒரு பாஷையில்ல
பெ: சுத்திச் சுத்தி வந்து நீ சோப்பு போடுற
கொட்டிப் போன குடுமிக்கு சீப்பு தேடுற
: என்னப் பார்த்து என்ன கேட்ட.. ஏட்ட ஏண்டி மாத்துற
கால நேரம் கூடிப் போச்சு.. மாலை வந்து மாத்துற

பெ: பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
: மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது
பெ: சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது
: கொக்கு ஒண்ணு கொக்கி போடுது.. ஹோய்..
பெ: பூஜைக்கேத்த பூவிது
: நேத்துத்தான பூத்தது
பெ: பூத்தது.. யாரத பாத்தது
...

#5 நீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன் - மாவீரன்

படம்: மாவீரன்
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & சித்ரா: நீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி.. என் சின்னக் கண்மணி
நீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி.. என் சின்னக் கண்மணி
கொண்டாட்டம் டம் வேணாம் தாம் தோம்
திண்டாட்டம் டம் ஆகும் மானே மானே
நீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்னக் கண்மணி
...

: இட்டதிங்கு சட்டமென்றுதான்.. மானே
எண்ணுவது இன்று இனிக்கும்
கட்டவிழ்ந்த காளைக் கன்றுதான்.. மானே
முட்டும்போது முட்டி வலிக்கும்
சொன்னால் செய்யும் சூரன் நானே
ஊரே பேசும் வீரன்தானே
ராசா வீட்டுக் கண்ணுக்குட்டி ரொம்பத்தானே துள்ளுது
கட்டிப் போட்டுக் காளையத்தான் கிட்ட வந்து முட்டுது
போடி போடி நீயும் இந்தக் காளை கிட்ட மாட்டும்போது

: நீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி.. என் சின்னக் கண்மணி
நீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி.. என் சின்னக் கண்மணி
கொண்டாட்டம் டம் வேணாம் தாம் தோம்
திண்டாட்டம் டம் ஆகும் மானே மானே
நீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்னக் கண்மணி
...

பெ: நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
சின்னக் கண்மணி உன் செல்லக் கண்மணி
நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
கொண்டாட்டம் டம் போட்டால் ஜம்ஜம்
வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம்
நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
...

பெ: உன்னைச் சுற்றி வட்டம் இடுது.. ராஜா
உள்ளம் ஒரு திட்டம் இடுது
தொட்ட இடம் தாளமிடுது.. ராஜா
மற்ற இடம் தத்தளிக்குது
நானா நானா வந்தேன் அன்பே
வம்பாய்க் கொண்டு வந்தாய் இங்கே
ஏழடுக்கு மாளிகையும் தேவையில்லை ராஜா
வாழும் வரை உன்னுடன்தான் வாழுமிந்த ரோஜா
வண்டைப் போலப் பாட்டுப் பாடு
வந்து வந்து ஆட்டம் போடு

பெ: நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
கொண்டாட்டம் டம் போட்டால் ஜம்ஜம்
வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம்
நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
...

பெ: உன் நினைப்பு உள்ளுக்குள் வந்து.. ராஜா
என்னை தினம் தொல்லை பண்ணுது
உச்சி முதல் பாதம் வரைக்கும்.. ராஜா
எத்தனையோ மின்னல் மின்னுது
தொட்டால் என்ன வெந்தா போகும்
தீயா சொல்லு எந்தன் தேகம்
ஆடையிட்டு மூடி வைத்த தேனிருக்கும் பாத்திரம்
வாங்கி வாங்கி நீ குடிக்கத் தீருமுந்தன் ஆத்திரம்
யாரும் இல்லை இங்கு இங்கு
என்னை மெல்லக் கொஞ்சு கொஞ்சு

பெ: நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
கொண்டாட்டம் டம் போட்டால் ஜம்ஜம்
வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம்

பெ: தார டட்டட்டா.. தர ராரட்டட்டட்டா..
டட்ட டகடக டடன்டா
டகுட டட்ட டகடக டடன்டா டகுடன்டா...
...

#4 சின்னக் குயில் பாடும் பாட்டுக் கேக்குதா - பூவே பூச்சூடவா

படம்: பூவே பூச்சூடவா
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: சித்ரா & குழுவினர்

பெ: லாலா லாலலா.. லாலா லாலலா..
...
பெ: சின்னக் குயில் பாடும் பாட்டுக் கேக்குதா
பெ&குழு: குக்கூ குக்கூ கூக்கூ.. குக்கூ குக்கூ கூக்கூ
பெ: தம்பிகளே தங்கைகளே தேரில் என்னை ஏற்றுங்கள்
உல்லாசமாய் உற்சாகமாய் ஊரைச் சுற்றிக் காட்டுங்கள்

பெ&குழு: சின்னக் குயில் பாடும் பாட்டுக் கேக்குதா
குக்கூ குக்கூ கூக்கூ.. குக்கூ குக்கூ கூக்கூ
...
பெ: எங்கும் அலைவேனே
குழு: ஆஆஆஆ ஆ..
பெ: தன்னந்தனியா..
கங்கை நதிக்கென்ன
குழு: ஆஆஆஆ ஆ..
பெ: கட்டுத்தறியா
அட வானம் எங்கு போகும் அங்கு நானும் போவேனே
குழு: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ..
பெ: ஏத்தம் விடும் ஓடையை இப்போதுதான் பார்க்கிறேன்
மைனாக்களின் பாஷையை இப்போதுதான் கேட்கிறேன்
ப்ருந்தாவனம் இங்கே பார்த்தேனே
பெ&குழு: லலல லலலா..

பெ&குழு: சின்னக் குயில் பாடும் பாட்டுக் கேக்குதா
குக்கூ குக்கூ கூக்கூ..
பெ: கூக்கூ கூக்கூ
பெ&குழு: குக்கூ குக்கூ கூக்கூ
பெ: கூக்கூ கூக்கூ
..
பெ: கூக்கூ.. கூக்கூ.. கூக்கூ கூக்கூ
கூக்குக்கு கூக்குக்கு கூக்குக்கூ..
குழு: கூக்குக்கு கூக்குக்கு கூக்குக்கு கூக்குக்கு குகுகுக்கூ
பெ: கூக்குக்கு கூக்குக்கு கூக்குக்கூ..
குழு: குகுகுக்கு கூக்குக்கு கூக்குக்கு கூக்குக்கு குகுகுக்கூ
பெ: கூக்குக்கு கூக்குக்கு..
குழு: கூக்குக்கு கூக்குக்குக்கூ
பெ: கூக்குக்கு கூக்குக்கு
குழு: குகுகுக்க்ய் குகுகுக்கூக்கூ
...
பெ: ஆஹா இந்த பூமி
குழு: ஆஆஆஆ ஆ..
பெ: புத்தம் புதுசு
பாசம் வந்ததாலே
குழு: ஆஆஆஆ ஆ..
பெ: பொங்கும் மனசு
இனி வாசம் வீசும் பூவில் நானும் வாசம் செய்வேனே
குழு: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ..
பெ: தாவி எங்கும் ஓடினேன்.. தாயின் மடி தேடினேன்
பூவனங்கள் எங்கிலும் பூஜை செய்யப் போகிறேன்
என் சோலையில் நானும் பூவானேன்
பெ&குழு: லலல லலலா..

பெ&குழு: சின்னக் குயில் பாடும் பாட்டுக் கேக்குதா
குக்கூ குக்கூ கூக்கூ..
பெ: கூக்கூ கூக்கூ
பெ&குழு: குக்கூ குக்கூ கூக்கூ
பெ: கூக்கூ கூக்கூ
பெ: தம்பிகளே தங்கைகளே தேரில் என்னை ஏற்றுங்கள்
உல்லாசமாய் உற்சாகமாய் ஊரைச் சுற்றிக் காட்டுங்கள்
பெ&குழு: சின்னக் குயில் பாடும் பாட்டுக் கேக்குதா
குக்கூ குக்கூ கூக்கூ..
பெ: கூக்கூ கூக்கூ
பெ&குழு: குக்கூ குக்கூ கூக்கூ
பெ: கூக்கூ கூக்கூ
...

#3 பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா - பூவே பூச்சூடவா

படம்: பூவே பூச்சூடவா
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: சித்ரா


பெ.குழு: லலலா லலலா லாலாலா.. லலலா லலலா லாலாலா..
லலலா லாலா லாலாலா.. லா..லா..லா..

பெ: பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
வாசல் பார்த்து.. கண்கள் பூத்து.. காத்து நின்றேன் வா
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
...

பெ: அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை
கண்ணில் வெந்நீரை வார்ப்பேன்
கண்களும் ஓய்ந்தது.. ஜீவனும் தேய்ந்தது
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம்
நீயும் நெய்யாக வந்தாய்
இந்தக் கண்ணீரில் சோகமில்லை
இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

பெ: பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
...

பெ: காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே
பொன்முகம் பார்க்கிறேன்.. அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்தப் பொன்மானைப் பார்த்துக் கொண்டே
சென்று நான் சேர வேண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்
நான் உன் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்

பெ: பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
...

#2 வண்ணம் கொண்ட வெண்ணிலவே - சிகரம்

படம்: சிகரம்
இசை: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதையில்லை
உன்னைத் தொட ஏணியில்லை
விண்ணிலே பாதையில்லை
உன்னைத் தொட ஏணியில்லை
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
...

பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை
ஸ்வாசிக்க ஆசையில்லை
பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை
ஸ்வாசிக்க ஆசையில்லை
கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானம் இல்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை
தள்ளித் தள்ளி நீயிருந்தால்
சொல்லிக் கொள்ள வாழ்க்கையில்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
...

நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி
நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி
கன்னி உன்னைப் பார்த்திருப்பேன்
கால் கடுக்கக் காத்திருப்பேன்
ஜீவன் வந்து சேரும்வரை
தேகம் போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னைத் தொட ஏணி இல்லை
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
...

#1 நான் தேடும் செவ்வந்திப் பூவிது - தர்ம பத்தினி

படம்: தர்ம பத்தினி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி

: ஆஆஆ... ஆ... ஆஆஆஆ ஆஆ ஆ... ஆ...
ஆஆ ஆஆஆஆ ஆ ஆஆ... ஆ...
ஆ... ஆ... ஆ... ஆ... ஆஆஆ...
...

: நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
....

: பறந்து செல்ல வழியில்லையோ
பருவக்குயில் தவிக்கிறதே
பெ: சிறகிரண்டும் விரித்துவிட்டேன்
இளம் வயது தடுக்கிறதே
: பொன்மானே என் யோகந்தான்
பெ: பெண்தானோ சந்தேகந்தான்
: என் தேவி...
பெ: ஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ..
: உன் விழி ஓடையில் நான் கலந்தேன்
பொன் கனி விழும் எனத் தவம் கிடந்தேன்
பெ: பூங்காற்று சூடாச்சு ராஜாவே யார் மூச்சு

: நான் தேடும்
பெ: செவ்வந்திப் பூவிது
: ஆ.. ஒரு நாள் பார்த்து
பெ: அந்தியில் பூத்தது
: ஆ ஆ..
...

பெ: மங்கைக்குள் என்ன நிலவரமோ
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ
: அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ
என்றைக்கும் அந்த சுகம் வருமோ
பெ: தள்ளாடும் பெண் மேகம்தான்
: எந்நாளும் உன் வானம் நான்
பெ: என் தேவா..
: ஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ..
பெ: கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
: தாலாட்டுப் பாடாமல் தூங்காது என் கிள்ளை

: நான் தேடும்
பெ: செவ்வந்திப் பூவிது
: ஆஆஆ.. ஒரு நாள் பார்த்து
பெ: அந்தியில் பூத்தது
: ஆஆஆ ஆ.. பூவோ இது வாசம்
பெ: போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம்
: போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும்
பெ: செவ்வந்திப் பூவிது
: ஆ.. ஒரு நாள் பார்த்து
பெ: அந்தியில் பூத்தது
: ஆ..
...