#157 ஓம் நமஹா - இதயத்தை திருடாதே

படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: மனோ & எஸ்.ஜானகி

: ம்.. ம் ம்..
ஓம் நமஹா.. உருகும் உயிருக்கு
ஓம் நமஹா.. உயிரின் உணர்வுக்கு ஓம்..
பெ: ஓம் நமஹா.. உணர்வின் உறவுக்கு
ஓம் நமஹா.. உறவின் உதவிக்கு ஓம்..
: வான் வழங்கும் அமுதக் கலசம்
வாய் வழியே ததும்பித் ததும்பி வழியுதோ.. ஓஓஓ ஓஓஓ..
பெ: தேன் பொங்கும் தெய்வ வடிவம்
தோள் தழுவித் தலைவன் மடியில் விழுந்ததோ
...

: மூங்கிலில் காற்று நுழைந்து மோகனம் பாடுதா
பெ: நால்வகை நாணம் மறந்து நாடகம் ஆடுதா
: ஆயிரம் சூரியன் நாடியில் ஏறுதா
பெ: ஆதியும் அந்தமும் வேர்வைகள் ஊறுதா
: நூலாடை விலகி விலகி.. நீரோடை பெருகி வடியும் வேளை
பெ: முத்தங்கள் வைத்ததும் மூன்று உலகை மறந்த நெஞ்சுக்கு ஓம்..
...

பெ: செவ்விதழ் சேரும்போது ஜீவன்கள் சிலிர்த்தது
: ஒவ்வொரு ஆசையாக உள்ளத்தில் துளிர்த்தது
பெ: மெல்லிய மேனியும் சில்லென ஆனது
: வெட்கமும் சீக்கிரம் விடைபெற்று போனது
பெ: ஏடென்று இடையும் இருக்க.. நூலொன்று இதயம் எழுதாதோ
: இளமையின் இலக்கணம் எடுத்துச் சொல்லிய இளைய கன்னிக்கு
&பெ: ஓம்..

பெ: நமஹா.. உருகும் உயிருக்கு
ஓம் நமஹா.. உயிரின் உணர்வுக்கு ஓம்..
: ஓம் நமஹா.. உணர்வின் உறவுக்கு
ஓம் நமஹா.. உறவின் உதவிக்கு ஓம்..
பெ: வான் வழங்கும் அமுதக் கலசம்
வாய் வழியே ததும்பித் ததும்பி வழியுதோ.. ஓஓஓ ஓஓஓ..
: தேன் பொங்கும் தெய்வ வடிவம்
தோள் தழுவித் தலைவன் மடியில் விழுந்ததோ
...

#156 காட்டுக்குள்ள பாட்டுச் சொல்லும் - இதயத்தை திருடாதே

படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: மனோ & சித்ரா

பெ1: ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ..
காட்டுக்குள்ள பாட்டுச் சொல்லும் கன்னிப் பூவும் நான்தானோ
கிட்ட வந்து கொஞ்சச் சொல்லும் சின்னப் பொண்ணு நான்தானோ
நிழலாய்த்தான் ஓட.. நானோ உன் கூட
என் ஊர் என்ன
பெ2: என்ன
பெ1: என் பேர் என்ன
பெ2: என்ன
பெ1: நாந்தான் யாரு
பெ2: யாரு
பெ1: என் வழி யாரு
பெ2:
பெ1: ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ..
...

பெ1: எந்நாளும் ஆசைகள் எனை விடுமோ
நீ தழுவ நான் வரவோ
இந்நாளில் சூடாகும் என் மனமும்
கண் விழி மேல் நீயில்லையோ
மோகினி பிசாசு என் இனந்தான்
சாத்தானின் பேய் கூட என் நிழல்தான்
மோகினி பிசாசு என் இனந்தான்
சாத்தானின் பேய் கூட என் நிழல்தான்
பருவத்துணை மயக்கியுன்னை பாய் போட நீ வாடா

பெ1: காட்டுக்குள்ள பாட்டுச் சொல்லும் கன்னிப் பூவும் நான்தானோ
: பூதப் பேத பிசாச வேதாள
பேயின் ஜம்பம் ஜடம்பம்பம்
காட்டுக்குள்ளே பாட்டுச் சொல்லும் கன்னிப் பூவும் நீதானோ
கிட்ட வந்து கொஞ்சச் சொல்லும் சின்னப் பொண்ணு நீதானோ
நிழலாய்த்தான் ஓட.. நானோ உன் கூட
என் சபலம் வருதா.. நீயும் காட்டுக்குப் புதிதா
நீ மயங்கும் பொழுதா.. நானும் புடிச்சிக்கத் தோதா
ஆஆஆஆ ஆஆஆ.. ஓஓஓஓ.. ஓஓஓ..
...

: ராத்திரி நேரப் பூஜைகள் எல்லாம் இப்போ.. இனிமேல்தான்
அருகினில் வருவேண்டி.. ஆசையில் தொடுவேண்டி
குண்டலி ஏற சொக்குர பூஜை இப்போ.. இனிமேல்தான்
சட்டுன்னு போடத்தான் சுள்ளுன்னு ஏறாதா
நில்லடி மானே.. போக்கிரிப் பெண்ணே.. பெண் பேய் உனை பார்த்தா
நாளொரு மோகம் ஏறிடும் கண்ணே.. அதுதான் அடங்காதா
நில்லடி மானே.. போக்கிரிப் பெண்ணே.. பெண் பேய் உனை பார்த்தா
நாளொரு மோகம் ஏறிடும் கண்ணே.. அதுதான் அடங்காதா
அடியாத்தி பட் பட் பட் பட்.. விலகாதே.. ஜட் ஜட் ஜட் பட்..
ஓ பெண்ணே.. மயக்கங்கள் எதுக்கு.. நான் கூட..

: காட்டுக்குள்ளே பாட்டுச் சொல்லும் கன்னிப் பூவும் நீதானோ
கிட்ட வந்து கொஞ்சச் சொல்லும் சின்னப் பொண்ணு நீதானோ
நிழலாய்த்தான் ஓட.. ட.. ட.. ட.. நானோ உன் கூட
என் சபலம் வருதா.. நீயும் காட்டுக்குப் புதிதா
நீ மயங்கும் பொழுதா.. நானும் புடிச்சிக்கத் தோதா
ஆஆஆஆ ஆஆஆ.. ஓஓஓஓ.. ஓஓஓ..
காட்டுக்குள்ளே பாட்டுச் சொல்லும் கன்னிப் பூவும் நீதானோ
கிட்ட வந்து கொஞ்சச் சொல்லும் சின்னப் பொண்ணு நீதானோ
...

#155 காவியம் பாடவா தென்றலே - இதயத்தை திருடாதே

படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: மனோ

காவியம் பாடவா தென்றலே.. புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ.. புரியாத புதிர்தான் எதிர்காலமோ
பாடும் நீலப் பூங்குயில் மௌனமான வேளையில்
காவியம் பாடவா தென்றலே.. காவியம் பாடவா தென்றலே
...

விளைந்ததோர் வசந்தமே.. புதுச்சுடர் பொலிந்திட
மனத்திலோர் நிராசை ஏன்.. இருட்டிலே மயங்கிட
வாழ்கின்ற நாளிலே சோகங்கள் என்பதை
கண்ணீரில் தீட்டினேன்.. கேளுங்கள் என் கதை
கலைந்து போகும் கானல் நீரிது

காவியம் பாடவா தென்றலே.. புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ..
...

புலர்ந்ததோர் பொழுதிதுவோ.. புள்ளினத்தின் மகோத்சவம்
இவை மொழி இசை தரும் சுரங்களின் மனோகரம்
புதுப் பிரபஞ்சமே மலர்ந்த நேரமே
அம்மாடி சொர்க்கந்தான் முன்னாடி வந்ததோ
கசந்து போன காட்சியில்லையே

காவியம் பாடவா தென்றலே.. புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ.. புரியாத புதிர்தான் எதிர்காலமோ
பாடும் நீலப் பூங்குயில் மௌனமான வேளையில்
காவியம் பாடவா தென்றலே.. காவியம் பாடவா தென்றலே
...

#154 விடிய விடிய நடனம் - இதயத்தை திருடாதே

படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: மனோ

விடிய விடிய நடனம்.. சந்தோஷம் விழியில் வழியும் தருணம்
ஒன்றான இளைய கரங்கள் எழுதும் மண் மேலே புது யுகம்
பிறந்து பிறந்து எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும்
மீண்டும்தான் புதிய புதிய ஜனனம்.. பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம்.. நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்.. ரம்பம்பம்பம்..

காலங்கள் உதயமாகட்டும்.. கவலைகள் விலகி ஓடட்டும்
காட்டாறு நாமல்லவோ.. ஹேஹே..
வா மனிதா உலகை ஆளலாம்.. வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்
ராஜாதி ராஜாக்கள் போல்..
ஏனென்று கேள்வி கேட்பவன் யாரும் இல்லை
எங்கேயும் கால்கள் போகலாம்.. ஏது எல்லை
கொண்டாட்டம் கும்மாளம்தானே.. தப்பாத தாளங்கள் நாம் போட
தக தகதிமி தகஜனு

விடிய விடிய நடனம்.. சந்தோஷம் விழியில் வழியும் தருணம்
ஒன்றான இளைய கரங்கள் எழுதும் மண் மேலே புது யுகம்
பிறந்து பிறந்து எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும்
மீண்டும்தான் புதிய புதிய ஜனனம்.. பயமென்னடா யமனிடம்
...

பாடுங்கள் புதிய கீர்த்தனம்.. எழுதுங்கள் புதிய சாசனம்
மாறட்டும் சமுதாயமே.. ஹோஹோ..
ஆடுங்கள் புதிய தாண்டவம்.. அழியட்டும் பழைய தத்துவம்
அச்சங்கள் நமக்கில்லை
ஓர் நாளும் ஓய்வதில்லையே நம் போராட்டம்
ஓர் நாளும் சாய்வதில்லையே நம் தேரோட்டம்
ஆரம்பம் ஆனந்த கீதம்.. தப்பாத தாளங்கள் நாம் போட
தக தகதிமி தகஜனு

விடிய விடிய நடனம்.. சந்தோஷம் விழியில் வழியும் தருணம்
ஒன்றான இளைய கரங்கள் எழுதும் மண் மேலே புது யுகம்
பிறந்து பிறந்து எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும்
மீண்டும்தான் புதிய புதிய ஜனனம்.. பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம்.. நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்.. ரம்பம்பம்பம்..
விடிய விடிய நடனம்.. சந்தோஷம் விழியில் வழியும் தருணம்
ஒன்றான இளைய கரங்கள் எழுதும் மண் மேலே புது யுகம்
தகிட தகிட தகதிமி.. தகதிமி தக.. தகிட தகிட தகதிமி.. தகதிமி தக..
தகிட தகிட தகதிமி.. தகதிமி தக.. தகிட தாம் தாம் தாம் தாம் தாம்..
...

#153 ஆத்தாடி அம்மாடி - இதயத்தை திருடாதே

படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: சித்ரா

ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான்
கூத்தாட தூறல்கள் நீர் விட்டுதான்
ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான்
கூத்தாட தூறல்கள் நீர் விட்டுதான்
உருகுதோ.. மருகுதோ..
குழந்தை மனமும் குறும்புத்தனமும் இனிமையே
கொடியிலே அரும்புதான் குளிரும் மழையில் நனையும் பொழுது
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதேதோ வந்தாச்சோ எண்ணத்திலே
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே.. ஹே..
ஏதேதோ வந்தாச்சோ எண்ணத்திலே
...

வானமும் வையமும் கரங்களை இணைப்பதே மழையில்தான்
செடிகளும் மலர்களும் ஈரமாய் இருப்பதே அழகுதான்
மழையும் சாரலும் கிள்ளாமல் கிள்ளவும்
அழகும் ஆசையும் ஆடாமல் ஆடவும்
துள்ளுகின்ற உள்ளமென்ன.. தத்தளிக்கும் மேனியென்ன
வஞ்சியெந்தன் கண்கள் கண்ட தேவலோகம் பூமிதான்

ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான்
கூத்தாட தூறல்கள் நீர் விட்டுதான்
ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான்
கூத்தாட தூறல்கள் நீர் விட்டுதான்
உருகுதோ.. மருகுதோ..
குழந்தை மனமும் குறும்புத்தனமும் இனிமையே
கொடியிலே அரும்புதான் குளிரும் மழையில் நனையும் பொழுது
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதேதோ வந்தாச்சோ எண்ணத்திலே
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே.. ஹே..
ஏதேதோ வந்தாச்சோ எண்ணத்திலே
...

என்னவோ எண்ணியே இளையவள் இதயமே ததும்புதா
சிறு சிறு மழைத்துளி சிதறிட சபலந்தான் அரும்புதா
வான தேவனே சல்லாபம் செய்திட
வாயு தேவனே முத்தாட வந்திட
நீர் பூத்த கூந்தலோடு ஊதக்காற்று தழுவும்போது
துள்ளும் பெண்ணின் உள்ளம் நூறு கவிதை சொல்லும்.. ஓஹொஹோ

ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான்
கூத்தாட தூறல்கள் நீர் விட்டுதான்
ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான்
கூத்தாட தூறல்கள் நீர் விட்டுதான்
உருகுதோ.. மருகுதோ..
குழந்தை மனமும் குறும்புத்தனமும் இனிமையே
கொடியிலே அரும்புதான் குளிரும் மழையில் நனையும் பொழுது
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதேதோ வந்தாச்சோ எண்ணத்திலே
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே.. ஹே..
ஏதேதோ வந்தாச்சோ எண்ணத்திலே
...

#152 ஓ பாபா லாலி - இதயத்தை திருடாதே

படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: மனோ

: ஓ பாபா லாலி..
பெ.குழு: ஆ..
: கண்மணி லாலி..
பெ.குழு: ஆ..
: பொன்மணி லாலி
பெ.குழு: ஆ..
: பாடினேன் கேளடி.. ஓ பாபா லாலி..
பெ.குழு: ஆ..
: கண்மணி லாலி..
பெ.குழு: ஆ..
: பொன்மணி லாலி
பெ.குழு: ஆ..
: பாடினேன்.. ஓ பாபா லாலி..
...

: நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட
காதலன் குழந்தைதான் காதலி
ஏன் செவ்விழி கலங்குது பூந்தென்றலில்
கொதித்ததா குளிர்ந்ததா கூறடி
தலை சாய்த்திட மடிப் பாய் மேல் திருமேனிக்கு சுகமோ
எந்த நாளிலும் வாடாத இளம் தாமரை முகமோ
இதைக் காப்பது என்றும் பார்ப்பது இந்தத் தாய் மனமே

: ஓ பாபா லாலி..
பெ.குழு: ஆ..
: கண்மணி லாலி..
பெ.குழு: ஆ..
: பொன்மணி லாலி
பெ.குழு: ஆ..
: பாடினேன் கேளடி.. ஓ பாபா லாலி..
...

: ஓ.. மேகமே.. ஓரமாய் நீ ஒதுங்கிடு
இரைச்சலோ இடிகளோ வேண்டுமோ
ஓ.. குயிலியே பாடி வா என் பாடலை
நல்லிசை இதயத்தின் நாதமோ
எழும் சந்தமும் இனிதாக.. அதன் ஓசைகள் சுகமோ
இந்த நாளொரு அலைபாய.. வரும் ஆசைகள் கனவோ
எந்த ஆசையும் நிறைவேறிட நல்ல நாள் வருமே

: ஓ பாபா லாலி..
பெ.குழு: ஆ..
: கண்மணி லாலி..
பெ.குழு: ஆ..
: பொன்மணி லாலி
பெ.குழு: ஆ..
: பாடினேன் கேளடி.. ஓ பாபா லாலி..
பெ.குழு: ஆ..
: கண்மணி லாலி..
பெ.குழு: ஆ..
: பொன்மணி லாலி
பெ.குழு: ஆ..
: பாடினேன்.. ஓ பாபா லாலி..
பெ.குழு: ஆ..
...

#151 ராமனின் மோகனம் - நெற்றிக்கண்

படம்: நெற்றிக்கண்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி

: ராமனின் மோகனம்.. ஜானகி மந்திரம்
பெ: ராமனின் மோகனம்.. ஜானகி மந்திரம்
: ராமாயணம்.. பாராயணம்.. காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு..
ராமனின் மோகனம்.. ஜானகி மந்திரம்
...

பெ: இடமும் வலமும்.. இரண்டு உடலும் மனமும்
: ஓஓஓஓஓ..
பெ: இணைந்தோங்கி நிற்கும்போது இதையன்றி எண்ணம் ஏது
இளவேனிற்காலம் வசந்தம்
: ஒரு கோவில் மணியின் ராகம்..
பெ: லலல லலல லலல லலலலா..
: ஒரு கோவில் மணியின் ராகம்
ஒரு வானில் தவழும் மேகம்
பறந்தோடும் நாளின்றுதான் கண்களே

பெ: ராமாயணம்.. பாராயணம்.. காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு.. ஹோஓ..
: ராமனின் மோகனம்.. ஜானகி மந்திரம்
...

: இடையும் கொடியும்.. குலுங்கும் நடையும் மொழியும்
பெ: ஹாஆஆஆஆ
: எடை போட கம்பன் இல்லை.. எனக்கந்த திரனும் இல்லை
இலை மூடும் வாழைப் பருவம்
பெ: மடி மீது கோவில் கொண்டு..
: லலல லலல லலல லலலலா..
பெ: மடி மீது கோவில் கொண்டு
மழைக்காலம் வெயில் கண்டு
சிலையாக நான் நிற்பதே அற்புதம்

: ராமாயணம்.. பாராயணம்.. காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு..
பெ: ராமனின் மோகனம்.. ஜானகி மந்திரம்
&பெ: லாலலா லாலலா.. லாலலா லாலலா..
...

#150 என்னுள்ளே என்னுள்ளே - வள்ளி

படம்: வள்ளி
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா
பெ.குழு: ஆஹாஆ.. ஆஆஆ.. ஆ ஆஆஆஆ ஆஆ..
ஆஆஆ ஆஆஆ ஆ ஆஆஆஆ ஆஆ..
...
பெ&பெ.குழு: என்னுள்ளே என்னுள்ளே.. பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே.. பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற.. ஓர் வார்த்தையில்லை கூற.. எதுவோ..
பெ: ஓர் மோகம்
பெ& பெ.குழு: என்னுள்ளே என்னுள்ளே.. பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
...

பெ.குழு: ஆஹஹாஹஹாஹா ஆஹஹாஹஹாஹா..
ஆஹஹாஹஹாஹா ஆஹஹாஹஹா..
பெ: கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடியெங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்

பெ& பெ.குழு: என்னுள்ளே என்னுள்ளே.. பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
...

பெ.குழு: ஆஆஆ.. ஆ ஆஆஆ.. ஆஆஆ ஆஆ ஆ ஆ..
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆ..
பெ: கூடு விட்டுக் கூடு ஜீவன் பாயும்போது
ஒன்றிலொன்றாய்க் கலந்தாட
ஊன் கலந்து ஊனும் ஒன்றுபட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற
காலமென்ற தேரே.. ஆடிடாமல் நில்லு
இக்கணத்தைப் போலே இன்பமெது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமேதான்