#267 செல்லக் குழந்தைகளே - மை டியர் குட்டிச்சாத்தான்

படம்: மை டியர் குட்டிச்சாத்தான்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: வாணி ஜெயராம் & மாதுரி

பெ1: செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
பாடுங்களே.. கொண்டாடுங்களே.. ஒரு தோழன் துணைக்கு வந்தான்.. ஆடுங்களே
பெ2: செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
பாடுங்களே.. கொண்டாடுங்களே.. ஒரு தோழன் துணைக்கு வந்தான்.. ஆடுங்களே
...

பெ1: காற்றும் இவனுக்குக் கட்டுப்படும்.. இவன் செப்படி வித்தைக்காரன்
தரை வேண்டாம் என்றான்.. தலைகீழாய் நின்றான்
பெ2: தொண்டு கிழங்களும் கண்டு பயப்படும் காரியம் கற்று வைத்தான்
இவன் பார்த்தால் போதும்.. கடல் பாலாய் மாறும்
பெ1: இனி நம் வீட்டிலே தினம் தீபாவளி
பெ2: இங்கு நாம் பாடுவோம் புது கீதாஞ்சலி
பெ1&பெ2: அலை நான்கு விளையாடும் கவி பாடி

பெ1: செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
பாடுங்களே.. கொண்டாடுங்களே.. ஒரு தோழன் துணைக்கு வந்தான்
பெ1&பெ2: ஆடுங்களே
செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
...

பெ2: ஜன்னல் திறந்தொரு மின்னல் நுழைந்தது என்னென்ன விந்தைகளோ
இனி ஊஞ்சல் ஆடு.. இது தேவன் வீடு
பெ1: உண்மை நிலவையும் பொம்மையென இவன் கைகளில் வைத்திருப்பான்
புது லீலை மன்னன்.. இனி எங்கள் அண்ணன்
பெ2: அந்த ஆகாயமே எங்கள் பாயாகுமே
பெ1: இனி நாம் தூங்கவே வெகு நாளாகுமே
பெ1&பெ2: நம் சொந்தம் எந்நாளும் மாறாதே

பெ1: செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
பெ2: செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
பெ1: பாடுங்களே.. கொண்டாடுங்களே.. ஒரு தோழன் துணைக்கு வந்தான்
பெ1&பெ2: ஆடுங்களே
பெ2: செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
...

#266 பூவாடைக் காற்றே - மை டியர் குட்டிச்சாத்தான்

படம்: மை டியர் குட்டிச்சாத்தான்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ், இளையராஜா & குழுவினர்

பெ.குழு: தா.. தகதா.. தகதா.. தகதா.. தகதா.. தகதா..
தகதக தகதக தகதக தகதகதா..
...
ஆ1: பூவாடைக் காற்றே.. சுகம் கொண்டு வா
பனி நீராடும் பூவே.. மணம் கொண்டு வா
பழகும்
பெ.குழு: லல்லல்லா
ஆ1: கிளிகள்
பெ.குழு: லல்லல்லா
ஆ1: பழகும் கிளிகள் இன்று பறக்கின்றதே
சிறகை விரித்து விண்ணை மறைக்கின்றதே
பூவாடைக் காற்றே.. சுகம் கொண்டு வா
பனி நீராடும் பூவே.. மணம் கொண்டு வா
...

ஆ1: சொர்க்கத்தை மண் மீது காண்கின்றோம் இப்போது
சொர்க்கத்தை மண் மீது காண்கின்றோம் இப்போது
ஓடும் மேகங்களே.. உடைகளாகுங்களே
ஓடும் மேகங்களே.. சொல்லுங்களே
உடைகளாகுங்களே.. நில்லுங்களே
வசந்தமெங்கள் வாழ்விலே
ஆ2: ஏ.. தகதக தகதக தகதக தகதக தகதக தகதக தகதக தகதகதா..

ஆ1: பூவாடைக் காற்றே.. சுகம் கொண்டு வா
பனி நீராடும் பூவே.. மணம் கொண்டு வா
...

ஆ1: ஆஹாஹா ஆனந்தம்.. பூலோகம் பூமஞ்சம்
ஆஹாஹா ஆனந்தம்.. பூலோகம் பூமஞ்சம்
இன்பம் எங்கும் கொள்ளை.. அள்ளக் கைகள் இல்லை
இன்பம் எங்கும் கொள்ளை.. யாரும் இல்லை
அள்ளக் கைகள் இல்லை.. நேரம் இல்லை
குழந்தை செய்த சாதனை
ஆ2: ஏ.. தகதக தகதக தகதக தகதக தகதக தகதக தகதக தகதகதா..

ஆ1: பூவாடைக் காற்றே.. சுகம் கொண்டு வா
பனி நீராடும் பூவே.. மணம் கொண்டு வா
பழகும்
பெ.குழு: லல்லல்லா
ஆ1: கிளிகள்
பெ.குழு: லல்லல்லா
ஆ1: பழகும் கிளிகள் இன்று பறக்கின்றதே
சிறகை விரித்து விண்ணை மறைக்கின்றதே
பூவாடைக் காற்றே.. சுகம் கொண்டு வா
பனி நீராடும் பூவே.. மணம் கொண்டு வா
...

#265 நீலக்குயிலே சோலைக் குயிலே - சூரசம்ஹாரம்

படம்: சூரசம்ஹாரம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி & சித்ரா

: நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
பெ: பாடிப் பார்க்கலாம் புதுத் தேவாரம்.. பாடும் பாட்டிலே நீ ஆதாரம்
: நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
...

பெ: பாடும் சங்கீதம் கண்ணே உன் மொழி.. பாடாது போனால் வாழாது ஜீவன்
பாசம் அன்போடு கண்டேன் உன் விழி.. வாராது போனால் தாளாது நெஞ்சம்
தாய் போல நானும் தாலாட்டுப் பாட.. தாளாமல் நீயும் கண் மூட
: தாராததெல்லாம் தந்தாக வேண்டும்.. என் அன்னை இப்போது நீதானம்மா

பெ: நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
: நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
...

: பூபாளம் பாடும் என் பூந்தென்றலே.. இளநெஞ்சைத் தூண்டும்.. இசை பாட வேண்டும்
பெ: தேடாமல் தேடும் பொன் மீன் கண்களே.. திரை போட்டதின்று.. திசை பார்த்து நின்று
: பொன்னள்ளித் தூவும் பூமாலை நேரம்.. கண்ணே நம் காதல் கல்யாணமே
பெ: மாலை வந்தாலே மார் மீதிலாடும்.. மாறாது.. ஆறாது.. நம் காதல் தேரோட்டம்

: நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
பெ: நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
: பாடிப் பார்க்கலாம் புதுத் தேவாரம்.. பாடும் பாட்டிலே நீ ஆதாரம்
பெ: நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
...

#264 ஆடும் நேரம் இதுதான் - சூரசம்ஹாரம்

படம்: சூரசம்ஹாரம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: பி.சுசீலா & குழுவினர்

பெ: ஆடும் நேரம் இதுதான் இதுதான்.. வா வா வா வா..
பாடும் நேரம் இதுதான் இதுதான்.. வா வா வா வா..
போகிற இளமை மீண்டும் வருமா.. ஆடிடு.. பாடிடு இளமையில்
தேடிடும் தனிமை திரும்ப வருமா.. கூடிடு.. பாடிடு தனிமையில்
பெ.குழு: பூவல்ல.. தேனல்ல.. நானின்று நானல்ல
பெ: ஆடும் நேரம்..
பெ&பெ.குழு: இதுதான் இதுதான்.. வா வா வா வா..
...

பெ&பெ.குழு: மேலோகம் பூலோகம் மாறும்.. மாறாது தாகங்கள்தான்
நூலாகும் பூந்தேகம் ஏங்கும்.. நாள்தோறும் மோகங்கள்தான்
ஆடும்போது தேகம் தேயும்.. பார்க்கும்போது பார்வை சாயும்
எங்கெங்கும் இன்பம் வந்து கூடாதோ.. வா இங்கே இங்கே..

பெ: ஆடும் நேரம்..
பெ&பெ.குழு: இதுதான் இதுதான்.. வா வா வா வா..
...

பெ&பெ.குழு: நானென்று நீயென்று ஏது.. பேதங்கள் இங்கே இல்லை
வீடென்று நாடென்று ஏது.. போதைக்கு எல்லை இல்லை
காலை ஏது.. மாலை ஏது.. காணும்போது காலம் ஏது
ஆனந்தம் நம்மை விட்டுப் போகாது.. வா இங்கே இங்கே..

பெ: ஆடும் நேரம்..
பெ&பெ.குழு: இதுதான் இதுதான்.. வா வா வா வா..
போகிற இளமை மீண்டும் வருமா.. ஆடிடு.. பாடிடு இளமையில்
தேடிடும் தனிமை திரும்ப வருமா.. கூடிடு.. பாடிடு தனிமையில்
பெ.குழு: பூவல்ல.. தேனல்ல.. நானின்று நானல்ல
பெ: ஆடும் நேரம்..
பெ&பெ.குழு: இதுதான் இதுதான்.. வா வா வா வா..
பாடும் நேரம் இதுதான் இதுதான்.. வா வா வா வா..
...

#263 பாடு நிலாவே - உதய கீதம்

படம்: உதய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ: ஆஆ.. ஆ.. ஆ.. ஆஆஆஆ..
ஆஆஆ.. ஆ.. ஆஆஆஆ..
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ.. ஆ.. ஆ.. ஆஆஆஆ..
...
பெ: பாடு நிலாவே.. தேன் கவிதை.. பூ மலர..
பாடு நிலாவே.. தேன் கவிதை.. பூ மலர..
உன் பாடலை நான் தேடினேன்.. கேட்காமலே நான் வாடினேன்
பாடு நிலாவே.. தேன் கவிதை.. பூ மலர..
...

பெ: நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமல் ஏன் போகுமோ
கைதானபோதும் கைசேர வேண்டும்
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறவே

: பாடும் நிலாவே.. தேன் கவிதை.. பூ மலரே..
உன் பாடலை நான் கேட்கிறேன்.. பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே.. தேன் கவிதை.. பூ மலரே..
...

: ஊரெங்கும் போகும் என் ராகங்களே
உன் வீடு தேடும் இந்நேரங்களே
பூ மீது தேன் தூவும் காதல் வரம்
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
காவேரி வெள்ளம் கைசேரத் துள்ளும்
ராகங்கள் சேரும்.. தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே

: பாடும் நிலாவே.. தேன் கவிதை.. பூ மலரே..
பெ: உன் பாடலை நான் கேட்கிறேன்
: பாமாலையை நான் கோர்க்கிறேன்
பெ: பாடும் நிலாவே
: தேன் கவிதை
பெ: பூ மலரே..
...

#262 என்னோடு பாட்டுப் பாடுங்கள் - உதய கீதம்

படம்: உதய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

: என்னோடு பாட்டுப் பாடுங்கள்.. எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்.. இமை ஜாலங்கள்.. சுகம் தேடுங்கள்
என்னோடு பாட்டுப் பாடுங்கள்.. எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்.. இமை ஜாலங்கள்.. சுகம் தேடுங்கள்
ஏனோ நெஞ்சம்.. தனனன தனனன.. பாடும் போது தனனன்னனா..
தானே கொஞ்சம்.. தனனன தனனன.. சோகம் போகும் தனனன்னனா..
என்னோடு பாட்டுப் பாடுங்கள்.. எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்.. இமை ஜாலங்கள்.. சுகம் தேடுங்கள்
...

: பார்வையில் ஆயிரம் சூரியன் ஏன்.. பாரியின் தேரிலே முல்லையே சொல்
வானவில் வார்த்தைகள் கேட்டதும் நீ சேலையில் சீதனம் மூடினாய்.. ஏன்
பௌர்ணமி.. பௌர்ணமி புன்னகை.. பால்மொழி கன்னிகை
உன் மடி மல்லிகை.. அதில் வரும் தினம் ஒரு புதுக் கனவு

: என்னோடு பாட்டுப் பாடுங்கள்.. எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்.. இமை ஜாலங்கள்.. சுகம் தேடுங்கள்
என்னோடு பாட்டுப் பாடுங்கள்.. எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்.. இமை ஜாலங்கள்.. சுகம் தேடுங்கள்
ஏனோ நெஞ்சம்.. தனனன தனனன.. பாடும் போது தனனன்னனா..
தானே கொஞ்சம்.. தனனன தனனன.. சோகம் போகும் தனனன்னனா..
என்னோடு பாட்டுப் பாடுங்கள்.. எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்.. இமை ஜாலங்கள்.. சுகம் தேடுங்கள்
...

பெ.குழு: லல்ல லல்ல லலலலா.. லல்லல்லலா..
லல்ல லல்ல லலலலா.. லல்லல்லா..
லல்லா.. லல்லா.. லல்லா..
...

: தேனிலே நாளிலே தாரகைப்பூ.. தேவதை கூந்தலில் சூடவா நான்
சாமரம் வீசிடும் மார்பிலே நான் சாய்நததும் ஓய்ந்ததே சரசமும்.. ஏன்
மௌனமோ.. மௌனமோ உன் மொழி.. நாணமோ தாய்மொழி
எண்ணமோ கண்வழி.. தினம் தினம் தொடத்தொடத் தொடர்கதையோ

: என்னோடு பாட்டுப் பாடுங்கள்.. எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்.. இமை ஜாலங்கள்.. சுகம் தேடுங்கள்
என்னோடு பாட்டுப் பாடுங்கள்.. எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்.. இமை ஜாலங்கள்.. சுகம் தேடுங்கள்
ஏனோ நெஞ்சம்.. தனனன தனனன.. பாடும் போது தனனன்னனா..
தானே கொஞ்சம்.. தனனன தனனன.. சோகம் போகும் தனனன்னனா..
என்னோடு பாட்டுப் பாடுங்கள்.. எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்.. இமை ஜாலங்கள்.. சுகம் தேடுங்கள்
...

:  என்னோடு பாட்டுப் பாடுங்கள்.. எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்.. இமை ஜாலங்கள்.. சுகம் தேடுங்கள்
என்னோடு பாட்டுப் பாடுங்கள்.. எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்.. இமை ஜாலங்கள்.. சுகம் தேடுங்கள்
ஏனோ நெஞ்சம்.. தனனன தனனன.. பாடும் போது தனனன்னனா..
தானே கொஞ்சம்.. தனனன தனனன.. சோகம் போகும் தனனன்னனா..
என்னோடு பாட்டுப் பாடுங்கள்.. எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்.. இமை ஜாலங்கள்.. சுகம் தேடுங்கள்
...

#261 மானே தேனே கட்டிப்புடி - உதய கீதம்

படம்: உதய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

: மானே தேனே கட்டிப்புடி.. மாமன் தோளைத் தொட்டுக்கடி
மானே தேனே கட்டிப்புடி
ஆ.குழு: கட்டிப்புடி
: மாமன் தோளைத் தொட்டுக்கடி
ஆ.குழு: தொட்டுக்கடி
: மல்லிகை வாசனை மந்திரம் போடுது
மம்முத ராசனின் மையலைத் தேடுது
ஆ.குழு: மல்லிகை வாசனை மந்திரம் போடுது
மம்முத ராசனின் மையலைத் தேடுது
: மானே தேனே கட்டிப்புடி.. அட மாமன் தோளைத் தொட்டுக்கடி
...

: ஆஹா.. ஆஹா.. ஆஹா.. ஆஹா..
...
: ஓய்.. ஓய்.. ஓய்.. ஓய்..
...

பெ: நாணல் பூவைப் போல உள்ளம் ஆடிடுமே
நானும் நீயும் சேர்ந்தா இன்பம் கூடிடுமே
: கோடை மேகம் போல உன்னைத் தேடி வந்தேன்
ஆசை வேகம் மீறும் சிந்து பாடி வந்தேன்
பெ: கன்னதில் என்னென்ன செஞ்சு வச்சான்.. மன்மதன் அள்ளி வச்சான்
கன்னதில் என்னென்ன செஞ்சு வச்சான்.. மன்மதன் அள்ளி வச்சான்
: ஆத்தோரம்
ஆ.குழு: காத்தாடுது
: காத்தோடு
ஆ.குழு: பூவாடுது
: பூவோடு
ஆ.குழு: தேன் பாயுது
: தேனோட
ஆ.குழு: தேன் சேருது
பெ: அஞ்சுது கெஞ்சுது மிஞ்சுது கொஞ்சிடத்தான் வா வா வா வா..

: மானே தேனே கட்டிப்புடி.. அட மாமன் தோளைத் தொட்டுக்கடி
மல்லிகை வாசனை மந்திரம் போடுது
மம்முத ராசனின் மையலைத் தேடுது
ஆ.குழு: மல்லிகை வாசனை மந்திரம் போடுது
மம்முத ராசனின் மையலைத் தேடுது
: மானே தேனே கட்டிப்புடி.. அட மாமன் தோளைத் தொட்டுக்கடி
...

ஆ.குழு: தந்தன தந்தன தந்தா தந்தன.. ஏ.. தந்தன தந்தன தந்தா தந்தன..
ஏ.. தந்தானா தந்தன தந்தன.. ஏ.. தந்தானா தந்தன தந்தன..
...

: அன்னம் கூட தோக்கும் நடை ஆடுதடி
ஹொய்.. அம்பு கூட தோக்கும் விழி பாடுதடி
பெ: காதல் வேதம் பாட இன்று தேடி வந்தேன்
மாமன் மேலே ஆசை கொண்டு ஓடி வந்தேன்
: உள்ளத்தை மெல்லத்தான் அள்ள வந்தா.. அம்மம்மா என்ன சொகம்
உள்ளத்தை மெல்லத்தான் அள்ள வந்தா.. அம்மம்மா என்ன சொகம்
பெ: ஊரோரம்
ஆ.குழு: தோப்பானது
பெ: தோப்போரம்
ஆ.குழு: நீரானது
பெ: நீரோட
ஆ.குழு: நீர் சேருது
பெ: ஆனந்தம்
ஆ.குழு: தான் பாடுது
: கன்னமும் கண்களும் சொன்னது என்னடியோ.. வா வா வா வா..

: மானே தேனே கட்டிப்புடி
பெ: ஹா..
: அட மாமன் தோளைத் தொட்டுக்கடி
பெ: மல்லிகை வாசனை மந்திரம் போடுது
மம்முத ராசனின் மையலைத் தேடுது
: மல்லிகை வாசனை
பெ: மந்திரம் போடுது
: மம்முத ராசனின்
பெ: மையலைத் தேடுது
ஆ.குழு: லாலாலாலா.. லல்லலல்லா.. லாலாலாலா.. லல்லலல்லா..
லாலாலாலா.. லல்லலல்லா.. லாலாலாலா.. லல்லலல்லா..
...

#260 தேனே தென்பாண்டி மீனே - உதய கீதம்

படம்: உதய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

தேனே தென்பாண்டி மீனே.. இசைத்தேனே.. இசைத்தேனே
...
தேனே தென்பாண்டி மீனே.. இசைத்தேனே.. இசைத்தேனே
மானே.. இள மானே..
நீதான் செந்தாமரை.. ஆரிராரோ..
நெற்றி மூன்றாம் பிறை.. தாலேலேலோ..
தேனே தென்பாண்டி மீனே.. இசைத்தேனே.. இசைத்தேனே
மானே.. இள மானே..
...

மாலை வெயில் வேளையில் மதுரை வரும் தென்றலே
ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாலும் உண்டு.. நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு.. மாலை கட்டிப் போடலாம்
ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

தேனே தென்பாண்டி மீனே.. இசைத்தேனே.. இசைத்தேனே
...

பால் கொடுத்த நெஞ்சிலே ஈரமின்னும் காயலே
பால் மணத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே
பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா
தாழம்பூவைத் தூரம் வைத்தால் வாசம் விட்டுப் போகுமா
ராஜா நீதான் நானெடுத்த முத்துப் பிள்ளை

தேனே தென்பாண்டி மீனே.. இசைத்தேனே.. இசைத்தேனே
மானே.. இள மானே..
நீதான் செந்தாமரை.. ஆரிராரோ..
நெற்றி மூன்றாம் பிறை.. தாலேலேலோ..
தேனே தென்பாண்டி மீனே.. இசைத்தேனே.. இசைத்தேனே
மானே.. இள மானே..
...

#259 உதய கீதம் பாடுவேன் - உதய கீதம்

படம்: உதய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

ஆ.. ஆஆஆஆஆஆ ஆ ஆ..
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆ..
ஆ.. ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆ..
...
உதய கீதம் பாடுவேன்.. உயிர்களை நான் தொடுவேன்
உதய கீதம் பாடுவேன்.. ஒலிகளில் பூத்தொடுப்பேன்
உலகமெல்லாம் மறந்து போகும்.. மரணம் கூட இறந்து போகும்
குழந்தைக்காகவே..
உதய கீதம் பாடுவேன்.. உதய கீதம் பாடுவேன்
...

பிள்ளை நாளை பார்க்குமே.. எனை எங்கே என்று கேட்குமே
கண்கள் நீரை வார்க்குமே.. அது சிந்தும் கண்ணீர் தீர்த்தமே
தோளில் மாலை மாலையில்.. தூக்கு மேடை காலையில்
அழுகின்ற உள்ளங்களே.. வாழ்க வாழ்கவே..

உதய கீதம் பாடுவேன்.. உயிர்களை நான் தொடுவேன்
உலகமெல்லாம் மறந்து போகும்.. மரணம் கூட இறந்து போகும்
குழந்தைக்காகவே..
உதய கீதம் பாடுவேன்.. உதய கீதம் பாடுவேன்
...

கண்ணே.. தீரும் சோதனை.. இரு கண்ணில் என்ன வேதனை
தந்தேன் எந்தன் ஜீவனை.. என் சாவில் கூட சாதனை
நாளை நானும் போகிறேன்.. உன்னில் நானே வாழ்கிறேன்
பூப்போன்ற உள்ளங்களே.. வாழ்க வாழ்கவே..

உதய கீதம் பாடுவேன்.. உயிர்களை நான் தொடுவேன்
உலகமெல்லாம் மறந்து போகும்.. மரணம் கூட இறந்து போகும்
குழந்தைக்காகவே..
உதய கீதம் பாடுவேன்.. உதய கீதம் பாடுவேன்
...

#258 சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் - உதய கீதம்

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!! doasembahros
படம்: உதய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

: சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
...

பெ: லால லாலலா.. லால லாலலா..
லால லால லால லால லா..
..
: போகும் பாதை தூரமே.. வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்த வா
போகும் பாதை தூரமே.. வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்த வா
இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே.. ஓஓஓஓஓஓஓஓ..

: சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
...

: உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜபவனிகள் போகின்றதே
உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜபவனிகள் போகின்றதே
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
கேளாய் பூமனமே.. ஓஓஓஓஓஓஓஓ..

: சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே.. ஓஓஓ..
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
...

#257 தென்றல் வந்து தீண்டும்போது - அவதாரம்

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros
படம்: அவதாரம்
இசை: இளையராஜா
எழுதியவர்: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, எஸ்.ஜானகி & குழுவினர்

பெ.குழு: தானத்தந்தம் தானத்தந்தம்.. தானத்தானானா
தானத்தந்தம் தானத்தந்தம்.. தானத் தானத் தானத் தானானா
தம்தம் தந்தனதந்தம் தம்தம்.. தம்த தம்தம் தந்தனதந்தம் தம்தம்..
: தந்த தன தான தான தான தானனா.. தனனனா..
தந்த தன தான தான தான தானனா.. தனனனா..
தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ.. மனசுல
திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ.. நெ(நி)னப்புல
வந்து வந்து போகுதம்மா.. எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா.. உள்ளத நானுஞ்சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணே..
தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ.. மனசுல
திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ.. நெ(நி)னப்புல
...

பெ.குழு: தும்தும்தும்தும்.. தும்தும்தும்தும்..
ஓ ஓஓஓஓஓ.. ஓஓ ஓஓஓ ஓஓஓஓஓ ஓஓஓ..
ஓ ஓ.. ஓஓ.. ஓ ஓ.. ஓஓ.. ஓஓஓஓ ஓ ஓ
ஓ ஓஓ ஓஓஓ ஓ..
ஆஆஆ ஆஆஆஆ ஆ..
...
பெ: எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
ஒ(உ)றவும் இல்லாமலே இரு மனம் ஏதோ பேசுது
: எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனாப் பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது
பெ: ஓடை.. நீரோடை.. இந்த ஒ(உ)லகம் அது போல
: ஓடும்.. அது ஓடும்.. இந்தக் காலம் அது போல
பெ: நெ(நி)லையா நில்லாது நினைவில் வரும் நெ(நி)றங்களே

: தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ.. மனசுல
...

பெ.குழு: ம்ம்ம்.. ம்ம் ம்.. ம்ம் ம்..
ம்ம்.. ம்ம் ம்.. ம்ம் ம்.. ம்ம்
ம்.. ம்.. ம்ம்..
...
: ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாந்(ம்) துளிர்க்குது
நேசம் பொ(பி)றந்தாலே ஒ(உ)டம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது
பெ: ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலைபோலே அழகெல்லாம் கோலம் போடுது
: குயிலே குயிலினமே.. அன்பை எ(இ)சையாக் கூவுதம்மா
பெ: கிளியே கிளியினமே.. அதைக் கதையாய்ப் பேசுதம்மா
: கதையாய்.. விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்

பெ: தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ.. மனசுல
: திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ.. நெ(நி)னப்புல
பெ: வந்து வந்து போகுதம்மா.. எண்ணமெல்லாம் வண்ணமம்மா
: எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
பெ: உண்மையிலே உள்ளது எண்ணம் என்ன
வண்ணங்கள் என்ன என்ன
: தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ.. மனசுல
பெ: திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ.. நெ(நி)னப்புல
...