#173 மல்லி மல்லி இது ஜாதி மல்லி - ராட்சஸன்

படம்: ராட்சஸன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

பெ: மல்லி மல்லி இது ஜாதி மல்லி.. பூத்திருக்கு உங்கள் பேரைச் சொல்லி
: மல்லி மல்லி இது ஜாதி மல்லி.. பூத்திருக்கு என்னைக் கிள்ளச் சொல்லி
பெ: நாணம் எங்கள் தாய்மொழி
: மெளனம் உங்கள் வாய்மொழி
பெ: எனை நீ தீண்டும்போது உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம் பாய்ந்து செல்லும்
: மல்லி மல்லி இது ஜாதி மல்லி
பெ: பூத்திருக்கு உங்கள் பேரைச் சொல்லி
...

: நெஞ்சுக்குள்ளே ஒரு போராட்டம்.. இன்னும் என்ன கண்ணே மெளனம்
பெ: உள்ளுக்குள்ளே சின்னத் தேரோட்டம்.. தந்துவிட்டேன் என்னை நானும்
: உனக்குள் என்னை நான் தேடுகிறேன்
பெ: நானும் அதையே பாடுகிறேன்
: வசந்தங்கள் உன்னைக் கண்டு வணக்கங்கள் போடாதா
பெ: குளிக்காத பூக்கள் எல்லாம் மழைக்காக வாடாதா
: தேவியே தேடி வா.. தேனிசை பாடி வா

பெ: மல்லி மல்லி இது ஜாதி மல்லி
: பூத்திருக்கு என்னைக் கிள்ளச் சொல்லி
...

பெ: இன்பக் கண்ணா உன்னைக் காணாமல் கண்ணுக்குள்ளே ஒரு மோகம்
: சின்னப் பெண்ணே உன்னைத் தீண்டாமல் கைகளுக்கு இல்லை யோகம்
பெ: அங்கங்கள் எங்கெங்கோ நோகலாம்
: அங்கங்கே இன்பங்கள் காணலாம்
பெ: நதி உன்னைச் சேர்த்தது கண்ணா.. நீ என்னை விலகாதே
: விதி என்னைச் சேர்த்தது பெண்ணே.. நீ என்னை மறவாதே
பெ: வானிலா தேயலாம் வானந்தான் தேயுமா

: மல்லி மல்லி இது ஜாதி மல்லி
பெ: பூத்திருக்கு உங்கள் பேரைச் சொல்லி
: மெளனம் உங்கள் வாய்மொழி
பெ: நாணம் எங்கள் தாய்மொழி
: எனை நீ தீண்டும்போது உள்ளம் எங்கும்
பெ: ஆஹ்..
: இன்ப வெள்ளம்
பெ: ஆஹ்..
: பாய்ந்து செல்லும்
பெ: ஆஹ்.. மல்லி மல்லி இது ஜாதி மல்லி
: பூத்திருக்கு என்னைக் கிள்ளச் சொல்லி
பெ: லல்லல்லா.. லல லாலல்லல்லா..
: ம்ஹும்ஹும்ஹும்.. ஆஹா ஆஹா ஆஹா..
...

#172 சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம்

படம்: கல்லுக்குள் ஈரம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி
 
பெ: சிறு பொன்மணி அசையும்.. அதில் தெரிக்கும் புது இசையும்
இரு கண்மணிப் பொன் இமைகளில் தாள லயம்
சிறு பொன்மணி அசையும்.. அதில் தெரிக்கும் புது இசையும்
இரு கண்மணிப் பொன் இமைகளில் தாள லயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும்.. இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்
: சிறு பொன்மணி அசையும்.. அதில் தெரிக்கும் புது இசையும்
இரு கண்மணிப் பொன் இமைகளில் தாள லயம்
...

பெ: விழியில் சுகம் பொழியும்.. இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும்வரை எழுதும்.. இனி புலரும் பொழுதும்
விழியில் சுகம் பொழியும்.. இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும்வரை எழுதும்.. இனி புலரும் பொழுதும்
: தெளியாதது எண்ணம்.. கலையாதது வண்ணம்
தெளியாதது எண்ணம்.. கலையாதது வண்ணம்
அழியாதது.. அடங்காதது.. அணை மீறிடும் உள்ளம்
பெ: வழி தேடுது.. விழி வாடுது.. கிளி பாடுது உன் நினைவினில்

: சிறு பொன்மணி அசையும்.. அதில் தெரிக்கும் புது இசையும்
பெ: இரு கண்மணிப் பொன் இமைகளில் தாள லயம்

: நதியும் முழு மதியும் இரு இதயம்தனில் பதியும்
ரதியும் அதன் பதியும் பெரும் சுகமே உதயம்
நதியும் முழு மதியும் இரு இதயம்தனில் பதியும்
ரதியும் அதன் பதியும் பெரும் சுகமே உதயம்
பெ: விதை ஊன்றிய நெஞ்சம்.. விளைவானது மஞ்சம்
விதை ஊன்றிய நெஞ்சம்.. விளைவானது மஞ்சம்
கதை பேசுது.. கவி பாடுது.. கலந்தால் சுகம் மிஞ்சும்
: உயிர் உன் வசம்.. உடல் என் வசம்.. பயிரானது உன் நினைவுகள்

பெ: சிறு பொன்மணி அசையும்.. அதில் தெரிக்கும் புது இசையும்
: இரு கண்மணிப் பொன் இமைகளில் தாள லயம்
பெ: நிதமும் தொடரும் கனவும் நினைவும்.. இது மாறாது
: ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்
பெ: சிறு பொன்மணி அசையும்.. அதில் தெரிக்கும் புது இசையும்
: இரு கண்மணிப் பொன் இமைகளில் தாள லயம்
...

#171 வளையோசை கலகலகலவென - சத்யா

படம்: சத்யா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & லதா மங்கேஷ்கர்

: வளையோசை கலகலகலவென கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
பெ: சில நேரம் சிலுசிலுசிலு என சிறு விரல் படப் பட துடிக்கிது
எங்கும் தேகம் கூசுது
: சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
பெ: கொட்டட்டும் மேளம்தான் அன்று காதல் தேரோட்டம்

: வளையோசை கலகலகலவென கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
பெ: சில நேரம் சிலுசிலுசிலு என சிறு விரல் படப் பட துடிக்கிது
எங்கும் தேகம் கூசுது
...

: ஒரு காதல் கடிதம் விழி போடும்.. உன்னைக் காணும் சபலம் வரக் கூடும்
பெ: நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்.. நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்
: கண்ணே என் கண் பட்ட காயம்.. கைவைக்கத் தானாக ஆறும்
பெ: முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
செம்மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்

: வளையோசை கலகலகலவென கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
பெ: சில நேரம் சிலுசிலுசிலு என சிறு விரல் படப் பட துடிக்கிது
எங்கும் தேகம் கூசுது
: சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
பெ: கொட்டட்டும் மேளம்தான் அன்று காதல் தேரோட்டம்
: வளையோசை கலகலகலவென கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
...

பெ: லால லால லாலா.. லாலா..... : ம்..
பெ: லால லால லாலா.. லாலா..... : ஹே..
&பெ: லாலா லாலா லாலா.. லாலா லாலா லாலா லா..
...

பெ: உன்னைக் காணாதுருகும் நொடி நேரம்.. பல மாதம் வருடம் என மாறும்
: நீங்காத ரீங்காரம் நான்தானே.. நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே
பெ: ராகங்கள் தாளங்கள் நூறு.. ராஜா உன் பேர் சொல்லும் பாரு
: சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில்தான்
வளையோசை கலகலகலவென கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
பெ: சில நேரம் சிலுசிலுசிலு என சிறு விரல் படப் பட துடிக்கிது
எங்கும் தேகம் கூசுது
: சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
பெ: கொட்டட்டும் மேளம்தான் அன்று காதல் தேரோட்டம்
: வளையோசை கலகலகலவென கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
பெ: சில நேரம் சிலுசிலுசிலு என சிறு விரல் படப் பட துடிக்கிது
எங்கும் தேகம் கூசுது
...

#170 சிங்களத்துச் சின்னக் குயிலே - புன்னகை மன்னன்

படம்: புன்னகை மன்னன்
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

: ஜிங்கள ஜிங்கள ஜிங்கள ஜிங்கள
ஜிங்கள ஜிங்கள ஜிங்கள ஜிங்கா
பெ: ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
கன்னம் வலிக்கும் கிள்ளாதே கள்ளூளி மங்கா
: கூ.. சிங்களத்துச் சின்னக் குயிலே
எனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லும் மயிலே
சிங்களத்துச் சின்னக் குயிலே
எனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லும் மயிலே
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா.. கூ..
...

: அன்பே நீயின்றி அலைகள் ஆடாது
கண்கள் சாய்ந்தாலும் இமைகள் மூடாது
பூவே நீயின்றிப் பொழுதும் போகாது
காதல் இல்லாமல் கவிதை வாராது
பெ: ஆதரிக்க நல்ல இளைஞன்
மனம் விட்டுக் காதலிக்க நல்ல கவிஞன்
: காதலிக்க வந்த கலைஞன்
இவன் என்றும் தாவணிக்கு நல்ல தலைவன்
பெ: தடை ஏது தலைவா.. இடை மேலே உடை நீயே
பூ மஞ்சம் நீ போட வா

பெ: எனக்கென்ன சிங்களத்துச் சின்னக் குயில் நான்
உனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லும் மயில் நான்
சிங்களத்துச் சின்னக் குயில் நான்
உனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லும் மயில் நான்
: ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா.. கூ..
...

பெ: நிலவே நான்தானா நிஜமா வீண் கேலி
உந்தன் மடிதானே நிலவின் நாற்காலி
ஒரு நாள் அமர்ந்தாலும் உலகில் நான் ராணி
காமன் பூச்சூடும் கலையில் நீ ஞானி
: ஆத்திரத்தில் தொட்டு வைக்கிறேன்
இருக்கட்டும் ராத்திரிக்கு விட்டு வைக்கிறேன்
பெ: விட்டுவிடு தத்தளிக்கிறேன்
என்னை விட்டு எட்டி நில்ல எச்சரிக்கிறேன்
: பிடிவாதம் தகுமா கொடி ஒன்று கனி ரெண்டு
வாங்காமல் தாங்காதம்மா

: இசை தரும் சிங்களத்துச் சின்னக் குயிலே
எனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லும் மயிலே
சிங்களத்துச் சின்னக் குயிலே
எனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லும் மயிலே
பெ: ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
கன்னம் வலிக்கும் கிள்ளாதே கள்ளூளி மங்கா
: கூ.. ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா.. கூ..
...

#169 சிலுசிலுசிலுவெனக் காத்து - கிழக்குக் கரை

படம்: கிழக்குக் கரை
இசை: தேவா
பாடியவர்: சித்ரா

லலலல லா.. லாலா.. லலலல லா..
லலலல லா.. லாலா.. லலலல லா..
லா.. லாலாலா.. லலலல லா.. லலலல லா..
...

சிலுசிலுசிலுவெனக் காத்து பக்கம் வர வர உருகுது நாத்து
புதுப்புது வரிகளைப் போட்டு அது படிக்குது பருவத்துப் பாட்டு
ஒரு நேசம்.. ஒரு பாசம்
அந்தக் காத்தும் நாத்தும் நீதான் நாந்தான் வா மாமனே

சிலுசிலுசிலுவெனக் காத்து பக்கம் வர வர உருகுது நாத்து
...

வாய்க்காலும் வயலும் சாட்சி.. மாமாவே நான்தான்
ஓயாம ஒன்ன எண்ணித் துரும்பான மான்தான்
வடக்கால போகும் காத்தே.. நாள்தோறும் நானே
உனக்காகத் தூது விட்டு தினம் மாஞ்சு போனேன்
நீங்காத ஆசை நோயாச்சு
பூங்காத்தும் எப்போ தீயாச்சு
மணநாள் வந்து கூட வேணும்
பூமாலை போட வேணும்

சிலுசிலுசிலுவெனக் காத்து பக்கம் வர வர உருகுது நாத்து
புதுப்புது வரிகளைப் போட்டு அது படிக்குது பருவத்துப் பாட்டு
...

எங்கேயும் பொழப்பைத் தேடிப் போகாதே மாமா
நாள் பாத்துப் பரிசம் போடு நாளாச்சு மாமா
என்னை நீ காதல் பண்ணு அதுதான் உன் வேலை
பண்ணாட்டி போய்யா என்று விட மாட்டேன் ஆளை
நான் பூசும் மஞ்சள் நீதானே
நீ போடும் சோப்பும் நான்தானே
பொதுவா அன்பைக் காட்டு மாமா
பேசாம வாட்டலாமா

சிலுசிலுசிலுவெனக் காத்து பக்கம் வர வர உருகுது நாத்து
புதுப்புது வரிகளைப் போட்டு அது படிக்குது பருவத்துப் பாட்டு
ஒரு நேசம்.. ஒரு பாசம்
அந்தக் காத்தும் நாத்தும் நீதான் நாந்தான் வா மாமனே
சிலுசிலுசிலுவெனக் காத்து பக்கம் வர வர உருகுது நாத்து
புதுப்புது வரிகளைப் போட்டு அது படிக்குது பருவத்துப் பாட்டு
...

#168 மலையோரம் வீசும் காத்து - பாடு நிலாவே

படம்: பாடு நிலாவே
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

ஆ..ஆ ஆஆ..
ஆ.. ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ
ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆ..
...
மலையோரம் வீசும் காத்து.. மனசோடு பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா
மலையோரம் வீசும் காத்து.. மனசோடு பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா
ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாய் தந்த பாட்டுதானம்மா
மலையோரம் வீசும் காத்து.. மனசோடு பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா
...

வான் பறந்த தேன் சிட்டு நான் புடிக்க வாராதா
கள்ளிருக்கும் ரோசாப்பூ கைகலக்கக் கூடாதா
ராப்போது ஆனா உன் ராகங்கள்தானா
அன்பே சொல் நானா தொட ஆகாத ஆணா
உள் மூச்சு வாங்கினேனே.. முள் மீது தூங்கினேனே
இல்லாத பாரமெல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே
நிலாவை நாளும் தேடும் வானம் நான்

மலையோரம் வீசும் காத்து.. மனசோடு பாடும் பாட்டு கேக்குதா
...

குத்தாலத்துத் தேனருவி சித்தாடைதான் கட்டாதா
சித்தாடைய கட்டியே கையில் வந்து கிட்டாதா
ஆத்தோரம் நாணல் பூங்காத்தோடு ஆட
ஆவாரம் பூவில் அது தேவாரம் பாட
இங்கே நான் காத்திருக்க.. என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீயிருந்து என் மீது போர்தொடுக்க
கொல்லாதே பாவம் இந்த ஜீவன்தான்

மலையோரம் வீசும் காத்து.. மனசோடு பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா
மலையோரம் வீசும் காத்து.. மனசோடு பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா
ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாய் தந்த பாட்டுதானம்மா
மலையோரம் வீசும் காத்து.. மனசோடு பாடும் பாட்டு கேக்குதா
...

#167 மாசி மாசந்தான் - ஊர்க்காவலன்

படம்: ஊர்க்காவலன்
இசை: சங்கர்-கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

பெ: ஓடுகிற மேகங்களா... ஓடைத் தண்ணி மீனுங்களா
கன்னிதான் கண்ணாலம் கட்டுறா
ஊரெல்லாம் தம்பட்டம் கொட்டுறா
மச்சானுக்கும் மணப் பொண்ணுக்கும் மொய்யெழுத வாரீயளா
...

பெ: மாசி மாசந்தான்.. சொல்லு சொல்லு.. சொல்லு சொல்லு
மேள தாளந்தான்.. சொல்லு சொல்லு.. சொல்லு சொல்லு
மாசி மாசந்தான்
பெ2: சொல்லு சொல்லு.. சொல்லு சொல்லு
பெ: மேள தாளந்தான்
பெ2: சொல்லு சொல்லு.. சொல்லு சொல்லு
: மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலைதான் வந்து கூடும் வேளைதான்
பெ: பட்டுச் சேலை ரவிக்கை சொலிசொலிக்க
பக்கம் மாமன் இருக்க.. தாலி முடிக்க
வந்து வாழ்த்துச் சொல்லணும் ஊரு சனம்
: மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலைதான் வந்து கூடும் வேளைதான்
...

: பொட்டோடு பூச்சூடி பொஞ்சாதி வந்தாச்சு
பெ: என் புருஷன் நீயாச்சு.. என் மனசு போலாச்சு
: நேரங்காலம் எல்லாமே இப்பத்தானே தோதாச்சு
பெ: சொந்தமென்னு ஆயாச்சு.. சோகமெல்லாம் போயாச்சு
: பூ முடிச்ச மானே.. பசுந்தேனே.. சுகந்தா
பெ: தொட்டு தொட்டு
: ஹோய்..
பெ: வரும் பந்தம் இது
: அட தொத்திக் கொண்டு வந்த சொந்தம் இது
பெ: ஆயிரம் காலங்கள் கூடுவது

: மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்
பெ: மாத்து மாலைதான் வந்து கூடும் வேளைதான்
: ஆஹாஹா..பட்டுச் சேலை ரவிக்கை சொலிசொலிக்க
பெ: பக்கம் மாமன் இருக்க.. தாலி முடிக்க
: வந்து வாழ்த்துச் சொல்லணும் ஊரு சனம்
பெ: மாசி மாசந்தான்
: கெட்டி மேள தாளந்தான்
பெ: மாத்து மாலைதான்
: வந்து கூடும் வேளைதான்
...

பெ: ராசாவே உன்னாலே ராத்தூக்கம் போயாச்சு
: பொன்மானே ஒன்னால பூங்காத்தும் தீயாச்சு
பெ: அஞ்சு வகைப் பூபாணம் மம்முதனும் போட்டாச்சு
: அந்திப் பகல் இனிமேலே கட்டிலறைப் பாட்டாச்சு
பெ: நித்தம் இது போலே மடி மேலே விழவா
: எந்நாளுமே
பெ: ஹா..
: இனி உன்னோடுதான்
பெ: என் ஜீவனும்
: ஹஹஹா..
பெ: உன் பின்னோடுதான்
: நாளொரு நாடகம் ஆடிடத்தான்

பெ: மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்
: மாத்து மாலைதான் வந்து கூடும் வேளைதான்
பெ: ஆஹாஹா..பட்டுச் சேலை ரவிக்கை சொலிசொலிக்க
: பக்கம் மாமன் இருக்க.. தாலி முடிக்க
பெ: வந்து வாழ்த்துச் சொல்லணும் ஊரு சனம்
மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலைதான் வந்து கூடும் வேளைதான்
...

#166 கூக்கூ என்று குயில் - காதல் பரிசு

படம்: காதல் பரிசு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

: கூக்கூ என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ
கூக்கூ என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ
இந்தக் குயில் எந்த ஊர்க் குயில்
நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில்
பெ: கூக்கூ என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ
கூக்கூ என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ
இந்தக் குயில் எந்த ஊர்க் குயில்
நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில்
: கூக்கூ என்று குயில் கூவாதோ
பெ: இன்ப மழை தூவாதோ
...

பெ: வானம் கை நீட்டும் தூரம் எங்கெங்கும் எங்கள் ராஜாங்கம் ஆகும்
: மேகம் தேர் கொண்டு மின்னல் சீர் கொண்டு காதல் ஊர்கோலம் போகும்
பெ: வானம் கை நீட்டும் தூரம் எங்கெங்கும் எங்கள் ராஜாங்கம் ஆகும்
: மேகம் தேர் கொண்டு மின்னல் சீர் கொண்டு காதல் ஊர்கோலம் போகும்
பெ: கல்யாணமாம்.. தேனாறு கொஞ்சம் பாலாறு கொஞ்சம்
பாய்ந்தோடும் நேரம் ஆனந்த மேளம்.. கூக்கூ..
: என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ.. கூக்கூ..
பெ: என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ
: இந்தக் குயில் எந்த ஊர்க் குயில்
பெ: நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில்
: கூக்கூ
பெ: என்று குயில் கூவாதோ
: இன்ப மழை தூவாதோ
...

: கூந்தல் பாய் போடு தோளில் கை போடு கண்ணில் மை போட்ட மானே
பெ: கையில் கை போடு ஊஞ்சல் நீ போடு என்னைத் தந்தேனே நானே
: கூந்தல் பாய் போடு தோளில் கை போடு கண்ணில் மை போட்ட மானே
பெ: கையில் கை போடு ஊஞ்சல் நீ போடு என்னைத் தந்தேனே நானே
: மேகங்களே.. என் நெஞ்சின் தாகம் எப்போது தீரும்
கல்யாண ராகம் எப்போது கேட்கும்.. கூக்கூ..
பெ: என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ.. கூக்கூ..
: என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ
பெ: இந்தக் குயில் எந்த ஊர்க் குயில்
: நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில்
பெ: இந்தக் குயில்
: எந்த ஊர்க் குயில்.. நெஞ்சைத் தொடும்
பெ: இன்னிசைக் குயில்
...

#165 மீண்டும் மீண்டும் வா - விக்ரம்

படம்: விக்ரம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ: மீண்டும் மீண்டும் வா.. வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா.. வேண்டும் வேண்டும் வா
பால் நிலா ராத்திரி.. பாவை ஓர் மாதிரி
அழகு ஏராளம்.. அதிலும் தாராளம்
மீண்டும் மீண்டும் வா.. வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா.. வேண்டும் வேண்டும் வா
...

பெ: ஆண்மை என்னும் வார்த்தைக்கேற்ற தோற்றம் நீதானா
தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த தேகம் இதுதானா
: செந்நிறம் பசும்பொன்னிறம் தேவதை வம்சமோ
சேயிடை விரல் தீண்டினால் சந்திரன் அம்சமோ
பெ: தொடங்க
: மெல்லத் தொடங்க
பெ: வழங்க
: அள்ளி வழங்க
பெ: இந்த போதைதான் இன்ப கீதைதான் அம்மம்மா.. ஆஹ்..

: மீண்டும் மீண்டும் வா.. வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா.. வேண்டும் வேண்டும் வா
...

: விரகம் போலே உயிரை வாட்டும் நரகம் வேறேது
சரசக் கலையைப் பழகிப் பார்த்தால் விரசம் கிடையாது
பெ: தேன் தரும் தங்கப் பாத்திரம் நீ தொட மாத்திரம்
ராத்திரி நடு ராத்திரி பார்க்குமோ சாத்திரம்
: கவிதை
பெ: கட்டில் கவிதை
: எழுது
பெ: அந்திப் பொழுது
: கொஞ்சும் பாடல்தான் கொஞ்சம் ஊடல்தான் அம்மம்மா.. ஹா..

பெ: மீண்டும் மீண்டும் வா.. வேண்டும் வேண்டும் வா
: மீண்டும் மீண்டும் வா.. வேண்டும் வேண்டும் வா
பெ: பால் நிலா ராத்திரி.. பாவை ஓர் மாதிரி
: அழகு ஏராளம்.. அதிலும் தாராளம்
பெ: அழகு ஏராளம்.. அதிலும் தாராளம்
...

#164 இள மனது பல கனவு - செல்வி

படம்: செல்வி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

: இள மனது.. பல கனவு.. விழிகளிலே வழிகிறதே
பெ: சிறு வயது.. புது உறவு.. அருகினிலே வருகிறதே
: இந்த மனதுக்கும் வயதுக்கும் சுகமென்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே
பெ: அது இரவுக்கும் பகலுக்கும் பொதுவல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே
: இள மனது.. பல கனவு.. விழிகளிலே வழிகிறதே
பெ: சிறு வயது.. புது உறவு.. அருகினிலே வருகிறதே
...

பெ.குழு: லாலலலா..
லல்லலலா.. லல்லலலா.. லல்லலலா.. லல்லலலா.. லாலலலா..
லல்லலலா.. லல்லலலா.. லல்லலலா.. லல்லலலா..
லலலலலா.. லலலலலா.. லலலலலா.. லலலலலா.. லா..
...

: கொடியிடை நாணத்தில் நெளிகிறதோ
கனிகளின் பாரத்தில் வளைகிறதோ
பெ: மனமொரு மோகத்தில் விழுகிறதோ
மருவிடும் ஆசைகள் வருகிறதோ
: விரல் பட்டு இள மொட்டு விரியட்டுமே
வெட்கம் விலகட்டும் விலகட்டுமே
பெ: இரு கண்ணும் இரு கையும் இள நெஞ்சமும்
அன்பை எழுதட்டும் எழுதட்டுமே
: புது மலரை முதன் முதலாய்த் தொடுவதினால் சுடுகிறதோ
பெ: புது மலரை முதன் முதலாய்த் தொடுவதினால் சுடுகிறதோ

: இள மனது..
பெ: பல கனவு..
: விழிகளிலே..
பெ: வழிகிறதே..
: சிறு வயது..
பெ: புது உறவு..
: அருகினிலே..
பெ: வருகிறதே..
: இந்த மனதுக்கும் வயதுக்கும் சுகமென்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே
பெ: அது இரவுக்கும் பகலுக்கும் பொதுவல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே
: இள மனது..
பெ: பல கனவு..
: விழிகளிலே..
பெ: வழிகிறதே..
: சிறு வயது..
பெ: புது உறவு..
: அருகினிலே..
பெ: வருகிறதே..
...

பெ.குழு: தந்தனன தந்தனன தந்தனன தந்தனன தானா..
தந்தனன தந்தனன தந்தனன தந்தனன தானா..
தந்தனன தந்தனன தந்தன்னன்னா.. தந்தனன தந்தனன தந்தன்னன்னா..
தந்தனன தந்தனன தந்தன்னன்னா.. தந்தனன தந்தனன தந்தன்னன்னா..
தந்தனனா.. தந்தனனா.. தந்தனனா..
...

பெ: அழகிய வாசல்கள் திறந்திடுமோ
அதிலொரு ஆனந்தம் பிறந்திடுமோ
: தலையணை வேதங்கள் விளங்கிடுமோ
தொடங்கிய ராகங்கள் தொடர்ந்திடுமோ
பெ: இளமைக்குள் விளைகின்ற எழில் வண்ணமே
இங்கு மலரட்டும் மலரட்டுமே
: தனிமைக்குள் எரிகின்ற துயர் வெள்ளமே
இன்று வடியட்டும் வடியட்டுமே
பெ: புது உலகம் அதிசயமாய் விழிகளிலே விரிகிறதோ
: புது உலகம் அதிசயமாய் விழிகளிலே விரிகிறது

பெ: இள மனது.. பல கனவு.. விழிகளிலே வழிகிறதே
: சிறு வயது.. புது உறவு.. அருகினிலே வருகிறதே
பெ: இந்த மனதுக்கும் வயதுக்கும் சுகமென்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே
: அது இரவுக்கும் பகலுக்கும் பொதுவல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே
பெ: இள மனது..
: பல கனவு..
பெ: விழிகளிலே..
: வழிகிறதே..
பெ: சிறு வயது..
: புது உறவு..
பெ: அருகினிலே..
: வருகிறதே..
...

#163 நினைத்தது யாரோ நீதானே - பாட்டுக்கு ஒரு தலைவன்

படம்: பாட்டுக்கு ஒரு தலைவன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & ஜிக்கி

: நினைத்தது யாரோ.. நீதானே.. தினம் உன்னைப் பாட நான்தானே
நினைத்தது யாரோ.. நீதானே.. தினம் உன்னைப் பாட நான்தானே
நீதானே என் கோயில்.. உன் நாதம் என் நாவில்
ஊர்வலம் போவோம் பூந்தேரில்
பெ: நினைத்தது யாரோ.. நீதானே.. தினம் உன்னைப் பாட நான்தானே
...

: மனதில் ஒன்று விழுந்ததம்மா.. விழுந்தது பூவாய் எழுந்ததம்மா
கனவில் ஒன்று தெரிந்ததம்மா.. கைகளில் வந்தே புரிந்ததம்மா
நானறியாத உலகினைப் பார்த்தேன்.. நான் தெரியாத உறவினில் சேர்ந்தேன்
எனக்கோர் கீதை உன் மனமே.. படிப்பேன் நானும் தினம் தினமே
பரவசமானேன் அன்பே..

பெ: நினைத்தது யாரோ.. நீதானே.. தினம் உன்னைப் பாட நான்தானே
...

பெ: பூவெடுத்தேன்.. நான் தொடுத்தேன்.. பூஜையின் நேரம் நான் கொடுத்தேன்
காலமெல்லாம் காத்திருப்பேன்.. கண்ணனைத் தேடி சேர்ந்திருப்பேன்
பூவிழி மூட முடியவுமில்லை.. மூடிய போது விடியவுமில்லை
கடலைத் தேடும் காவிரி போல் கலந்திட வேண்டும் உன் மடி மேல்
இது புது சொந்தம் அன்பே..

: நினைத்தது யாரோ.. நீதானே.. தினம் உன்னைப் பாட நான்தானே
நீதானே என் கோயில்.. உன் நாதம் என் நாவில்
ஊர்வலம் போவோம் பூந்தேரில்
பெ: நினைத்தது யாரோ.. நீதானே.. தினம் உன்னைப் பாட நான்தானே
...

#162 இந்த மாமனோட மனசு - உத்தம ராசா

படம்: உத்தம ராசா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ: இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது
குத்தாலக் குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை

பெ: மாமனோட.. ஹேய்.. மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது
...

: அக்காளின் மகளுக்குக் கேட்டதை நான் கொடுப்பேன்
மனசில் இப்ப அல்லாடிக் கிடக்குற ஆசையை நான் முடிப்பேன்
பெ: விரும்பியது இந்நேரம் கிடைக்குற போது ஒரு ஏக்கம் நெஞ்சில் ஏது
: எல்லோர்க்கும் நினைத்தது போலே மண வாழ்க்கை வாய்த்திடாது
பெ: எப்போதும் ஒருவனை எண்ணித் தவித்தேன்
: இப்போது நானதைக் கண்டுபிடித்தேன்
பெ: கெட்டி மேளம் கேட்கும் நேரம் கூட.. மாமனோட..

: இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது
குத்தாலக் குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை.. மாமனோட..
இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது
...

பெ: பொன்னான நகைகளும் மாலையும் போட்டிருப்பேன்
மணவறையில் கண்ணாலே உனக்கொரு நன்றியை நானுரைப்பேன்
: எனக்கு அன்று சொல்லாத உணர்வுகள் கூடும்.. விழி ஓரம் ஈரமாகும்
பெ: கல்யாணக் கனவுகள் யாவும் கையில் சேரும் நேரமாகும்
: பல்லாண்டு படித்திடும் ஊர் முழுதும்
பெ: வண்டாட்டம் பறந்திடும் வஞ்சி மனதும்
: மஞ்சத் தாலி மார்பில் ஊஞ்சலாட.. மாமனோட..

பெ: ஹேய்.. மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
: இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது
பெ: குத்தாலக் குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை.. மாமனோட..
இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது
...

#161 இந்திர லோகத்து சுந்தரி - உயிருள்ளவரை உஷா

படம்: உயிருள்ளவரை உஷா
இசை: டி.ராஜேந்தர்
எழுதியவர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சசிரேகா
 
பெ: ஏலேலம்பர ஏலேலம்பர ஏலேலம்பர ஹோய்
ஏலேலம்பர ஏலேலம்பர ஏலேலம்பர ஹோய்
: இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவில் வந்தாளோ
மோகினி போல் வந்து காளையென் உயிரினைப் பருகியும் சென்றாளோ
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவில் வந்தாளோ
மோகினி போல் வந்து காளையென் உயிரினைப் பருகியும் சென்றாளோ
ரதியென்பேன்.. மதியென்பேன்.. கிளியென்பேன்.. நீ வா..
உடலென்பேன்.. உயிரென்பேன்.. உறவென்பேன்.. நீ வா..
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவில் வந்தாளோ
மோகினி போல் வந்து காளையென் உயிரினைப் பருகியும் சென்றாளோ
...

: தென்றலதன் விலாசத்தைத் தன் தோற்றமதில் பெற்று வந்தவள்
மின்னலதன் உற்பத்தியை அந்த வானத்துக்கே கற்றுத் தந்தவள்
முகத்தைத் தாமரையாய் நினைத்து மொய்த்த வண்டு ஏமாந்த கதைதான் கண்கள்
சிந்து பைரவியைச் சிந்தும் பைங்கிளியின் குரலில் ஒலிப்பதெல்லாம் பண்கள்
பாவை புருவத்தை வளைப்பதே புது விதம்
அதில் பரதமும் படிக்குது அபிநயம்
பாவை புருவத்தை வளைப்பதே புது விதம்
அதில் பரதமும் படிக்குது அபிநயம்
பெ: லாலாலலா.. லாலாலலா.. லாலாலலா.. லாலாலலா..
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவில் வந்தேனோ
: ம்..
பெ: மோகினி போல் வந்து காளையின் உயிரினைப் பருகியும் சென்றேனோ
: ம் ம்ம்ம்..
...

: கலைமகள் ஆடினால் சலங்கைகள் குலுங்கினால்
மின்னும் விழியை நல்ல வைரம் கண்டது
நாணம் தழுவ பூமியுள்ளே ஒளிந்தது
கருவிழி உருளுது.. கவிதைகள் மலருது
பாதங்கள் அசையுது.. பாவங்கள் விளையுது
எழில் நிலா ஆடும் விழா நடக்குது
தேனில் பலா ஊறும் சுவை அவள் சிரிப்பு
பொன்னுருகும் கன்னம் குழிய ஒரு புன்முறுவல் சிந்திச் சென்றாள்
இந்த மானிடனும் மயங்கி விட்டான்.. அந்த மானிடமே மனதை விட்டான்
அமுதம் என்ற சொல்லை ஆராய்ச்சி செய்வதற்கு அவனியில் அவளே ஆதாரம்
பாண்டியப் பேரரசு பார்த்து வியந்ததொரு முத்துச் சரங்களிதழோரம்.. ஹா..
பாவை இதழது சிவப்பெனும்போது.. ihikhik பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது
பாவை இதழது சிவப்பெனும்போது.. பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது
பெ: லாலாலலா..
: ஆஹா..
பெ: லாலாலலா..
: ஓஹோ..
பெ: லாலாலலா..
: ஏஹே..
பெ: லாலாலலா..
: ஆ..

பெ: இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவில் வந்தேனோ
: ம்ஹும் ம்ம்ம்..
பெ: மோகினி போல் வந்து காளையின் உயிரினைப் பருகியும் சென்றேனோ
: ஓ.. ரதியென்பேன்.. மதியென்பேன்.. கிளியென்பேன்.. நீ வா..
உடலென்பேன்.. உயிரென்பேன்.. உறவென்பேன்.. நீ வா..
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவில் வந்தாளோ
மோகினி போல் வந்து காளையென் உயிரினைப் பருகியும் சென்றாளோ
...

#160 காலையிலும் மாலையிலும் - சந்தைக்கு வந்த கிளி

படம்: சந்தைக்கு வந்த கிளி
இசை: தேவா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுனந்தா

: காலையிலும் மாலையிலும் இது கல்லூரி வாசலில் வந்த நிலா
பெ: காதலிக்க கையணைக்க இது கண்ணாலே சம்மதம் தந்த நிலா
: காலையிலும் மாலையிலும் இது கல்லூரி வாசலில் வந்த நிலா
பெ: காதலிக்க கையணைக்க இது கண்ணாலே சம்மதம் தந்த நிலா
: சின்னஞ்சிறு நிலா.. சேலை கட்டும் நிலா.. சித்திரை மாத நிலா
பெ: புத்தம் புது நிலா.. பொட்டு வைத்த நிலா.. புன்னகை மின்னும் நிலா
: கட்டித் தழுவிடும் வானம் இனி விட்டுப் பிரியாது
பெ: எட்டி விலகிடும் நாணம்.. மனம் வெட்கம் அறியாது
: காலையிலும் மாலையிலும் இது கல்லூரி வாசலில் வந்த நிலா
பெ: காதலிக்க கையணைக்க இது கண்ணாலே சம்மதம் தந்த நிலா
...

: காவேரி கரை புரண்டு கல்லணையைத் தேடி வர
கேளாத கவிதையொன்று கைவளையல் பாடி வர
பெ: மூவாறு வயது வந்து முத்து ரதம் ஆடி வர
மேலாடை விரித்து வைத்து முன்னழகை மூடி வர
: மயங்கி மயங்கித் தவிக்க ஒரு மந்திரம் போட்டதென்ன
பெ: சிறுகச் சிறுக அணைக்க என்னை சம்மதம் கேட்டதென்ன
: கைகள் தடவித் தடவி இடமும் வலமும்
தட்டாத தஞ்சாவூர் மத்தளமே

: காலையிலும் மாலையிலும் இது கல்லூரி வாசலில் வந்த நிலா
பெ: காதலிக்க கையணைக்க இது கண்ணாலே சம்மதம் தந்த நிலா
...

பெ: காதோரம் ரகசியமாய்க் கூவும் இந்தக் கோகிலமே
கண்ணா உன் இருப்பிடந்தான் என்னுடைய கோகுலமே
: தேவாரம் திருப்புகழ் போல் தித்திக்கும் உன் வாசகமே
நான் பாட நெருங்கி வந்த தியாகராஜ கீர்த்தனமே
பெ: சுதியும் லயமும் இணைய பிறர் சம்மதம் தேவையில்லை
: இசையும் மொழியும் தழுவ இங்கு எப்பவும் கேள்வியில்லை
பெ: உன்னை நினைக்க நினைக்க இனிக்க இனிக்க
உண்டாகும் ஆனந்த ராகங்களே

: காலையிலும் மாலையிலும் இது கல்லூரி வாசலில் வந்த நிலா
பெ: காதலிக்க கையணைக்க இது கண்ணாலே சம்மதம் தந்த நிலா
: காலையிலும் மாலையிலும் இது கல்லூரி வாசலில் வந்த நிலா
பெ: காதலிக்க கையணைக்க இது கண்ணாலே சம்மதம் தந்த நிலா
: சின்னஞ்சிறு நிலா.. சேலை கட்டும் நிலா.. சித்திரை மாத நிலா
பெ: புத்தம் புது நிலா.. பொட்டு வைத்த நிலா.. புன்னகை மின்னும் நிலா
: கட்டித் தழுவிடும் வானம் இனி விட்டுப் பிரியாது
பெ: எட்டி விலகிடும் நாணம்.. மனம் வெட்கம் அறியாது
: அ.. காலையிலும் மாலையிலும் இது கல்லூரி வாசலில் வந்த நிலா
பெ: காதலிக்க கையணைக்க இது கண்ணாலே சம்மதம் தந்த நிலா
...

#159 காட்டுக்குள்ள காதல் - கரிமேடு கருவாயன்

படம்: கரிமேடு கருவாயன்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன்
வீட்டுக்குள்ள அதை அடைச்சி வச்சேன்
காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன்
வீட்டுக்குள்ள அதை அடைச்சி வச்சேன்
பொழுதிருக்க பறந்திருச்சு.. போன திசை மறந்திருச்சு
காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன்
வீட்டுக்குள்ள அதை அடைச்சி வச்சேன்
...

நீ போட தடம் பார்த்துத்தானே
நிழல் தேடி வரும் இந்த மானே
முகம் பார்க்கத் துடிச்சேனே நானே
முந்தானை உனக்காகத்தானே
புலிக்கூட்டம் கிளி வேட்டையாட
புழுவாக நான் தீயில் வாட
ஒண்ணான என் சோகம் பாட
பொதுக்கூட்டம் நானெங்கு போட
மகராசன் பேச்சு மலையேறிப் போச்சு
ஆனாலும் என் நெஞ்சு அலைபாயுது

காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன்
வீட்டுக்குள்ள அதை அடைச்சி வச்சேன்
பொழுதிருக்க பறந்திருச்சு.. போன திசை மறந்திருச்சு
காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன்
வீட்டுக்குள்ள அதை அடைச்சி வச்சேன்
...

விதைச்சாலும் முளைக்காது என்று
விதை போட்டு வளர்த்தேனே அன்று
விறகோடு வந்தேனே அங்கு
விறகாகிப் போனேனே இங்கு
ராசாவே நானிங்கு யாரு
பூவோடு சேராத நாரு
ஏனென்று ஒரு பார்வை பாரு
என் சோகம் ஒன்றல்ல நூறு
ஆகாயம் பூமி தாங்காது சாமி
அழுகின்ற பெண்ணுக்கு ஆயுள் கம்மி

காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன்
வீட்டுக்குள்ள அதை அடைச்சி வச்சேன்
பொழுதிருக்க பறந்திருச்சு.. போன திசை மறந்திருச்சு
காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன்
வீட்டுக்குள்ள அதை அடைச்சி வச்சேன்
...

#158 புத்தம் புது மலரே - அமராவதி

படம்: அமராவதி
இசை: பாலபாரதி
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

புத்தம் புது மலரே.. என்னாசை சொல்லவா
...
புத்தம் புது மலரே.. என்னாசை சொல்லவா
பொத்தி வைத்து மறைத்தேன்.. என் பாஷை சொல்லவா
இதயம் திறந்து கேட்கிறேன்.. என்னதான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்
நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன்.. தவித்தேன்
புத்தம் புது மலரே.. என்னாசை சொல்லவா
...

செல்லக் கிளி என்னைக் குளிப்பிக்க வேண்டும்
சேலைத் தலைப்பில் துவட்டிட வேண்டும்
கல்லிற் சிலை போல நீ நிற்க வேண்டும்
கண்கள் பார்த்துத் தலை வார வேண்டும்
நீ வந்து இலை போட வேண்டும்
நான் வந்து பரிமாற வேண்டும்
என்னிமை உன் விழி மூட வேண்டும்
இருவரும் ஒரு சுரம் பாட வேண்டும்
உன்னில் என்னைத் தேட வேண்டும்

புத்தம் புது மலரே.. என்னாசை சொல்லவா
...

கன்னி உந்தன் மடி சாய வேண்டும்
கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும்
உன்னைக் கட்டிக் கொண்டு தூங்க வேண்டும்
உந்தன் விரல் தலை கோதிட வேண்டும்
கையோடு இதம் காண வேண்டும்
கண்ணீரில் குளிர் காய வேண்டும்
உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும்
உயிருக்குள் உயிர் சென்று சேர வேண்டும்
தாயாய் சேயாய் மாற வேண்டும்