#299 ஓ.. எந்தன் வாழ்விலே - உனக்காகவே வாழ்கிறேன்

படம்: உனக்காகவே வாழ்கிறேன்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
இது இளங்கனவுகள் மலரும் நேரமே
அதில் மனச் சிறகுகள் விரியும் காலமே
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
...

பண்ணோடு நாளும் இணையும் தாளம்
என்னோடு வாழ்வில் இணைந்தாய் நீயும்
கல்யாண ராகம் விழிகள் பாடும்
கால் போடும் கோலம் கவிதையாகும்
சந்தோஷத் தென்றல் என் வாழ்வில் வீசும்
என்னாசை நெஞ்சம் ஊர்கோலம் போகும்
அன்பாலே.. அன்பாலே பண் பாடி
உன் நிழலென வருவேன்

ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
...

செந்தாழம்பூவே கதைகள் பேசு
சிங்காரக் காற்றே மெதுவாய் வீசு
என் காதல் தேவன் அருகே வந்தான்
எனக்காகத்தானே இதயம் என்றான்
நானந்த நேரம் நானாக இல்லை
நாணங்களாலே வாய் பேசவில்லை
விழாவே.. விழாவே கொண்டாட
கண் மயங்குது கிளியே

ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
இது இளங்கனவுகள் மலரும் நேரமே
அதில் மனச் சிறகுகள் விரியும் காலமே
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
...