# 116 தூது செல்வதாரடி - சிங்கார வேலன்

படம்: சிங்கார வேலன்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

தூது செல்வதாரடி.. உருகிடும்போது செய்வதென்னடி
ஓ.. வான்மதி மதி மதி மதி.. அவர் என் பதி பதி
என் தேன்மதி மதி மதி மதி.. கேள் என் சகி சகி
உடன் வர தூது செல்வதாரடி.. உருகிடும்போது செய்வதென்னடி
...

பெண்ணழகு பூச்சூடி பொட்டு வைத்தது
மன்னவனின் சீர் பாடி மெட்டுப் போடுது
தென்றல் சில நாளாக நெஞ்சம் மாறுதே
செல்வன் அவன் தோள் சேர கண்கள் தேடுதே
நிலை பாரடி கண்ணம்மா
பதில் கூறடி பொன்னம்மா
என் காதல் வேலன் உடன் வர

தூது செல்வதாரடி.. உருகிடும்போது செய்வதென்னடி
ஓ.. வான்மதி மதி மதி மதி.. அவர் என் பதி பதி
என் தேன்மதி மதி மதி மதி.. கேள் என் சகி சகி
உடன் வர தூது செல்வதாரடி.. உருகிடும்போது செய்வதென்னடி
...