#208 கொடியிலே மல்லியப்பூ - கடலோரக் கவிதைகள்

படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: பி.ஜெயச்சந்திரன் & எஸ்.ஜானகி

: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
எடுக்கவா.. தொடுக்கவா.. துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவள மல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்
பெ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா.. தடுக்கவா.. தவிக்கிறேன் நானே
...

பெ: மனசு தடுமாறும்.. அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்.. ஒரு தயக்கம் தடை போடும்
: நித்தம் நித்தம் உன் நெனப்பு.. நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு.. பாதை ரெண்டு.. வண்டியெங்கே சேரும்
பெ: பொத்தி வச்சா அன்பு இல்ல.. சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல.. இந்தத் துன்பம் யாரால
...

: பறக்கும் திசையேது.. இந்தப் பறவை அறியாது
உறவோ தெரியாது.. அது உனக்கும் புரியாது
பெ: பாறையிலே பூ முளைச்சுப் பார்த்தவக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு
: காலம் வரும் வேளையிலே.. காத்திருப்பேன் பொன் மயிலே
பெ: தேரு வரும் உண்மையிலே.. சேதி சொல்வேன் கண்ணாலே

பெ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா.. தடுக்கவா.. தவிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவள மல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்
: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
எடுக்கவா.. தொடுக்கவா.. துடிக்கிறேன் நானே

#207 போகுதே போகுதே - கடலோரக் கவிதைகள்

படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே.. உறவுமில்லையே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
...

சுதி சேரும்போது விதி மாறியதோ
அறியாத ஆடு வழி மாறியதோ
புடவை அது புது.. இழுந்து அழும் மனசு
தங்கப் பூவே சந்திப்போமா.. சந்தித்தாலும் சிந்திப்போமா.. மாயம்தானா

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
...

நடந்தாலும் கால்கள் நடை மாறியதோ
மறைத்தாலும் கண்ணீர் மடை தாண்டியதோ
தரைக்கு வந்த பிறகு தவிக்கும் இந்தச் சருகு
காதல் இங்கே வெட்டிப் பேச்சு.. கண்ணீர்தானே மிச்சமாச்சு.. பாசம் ஏது

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே.. உறவுமில்லையே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
...

#206 பொடி நடையாப் போறவரே - கடலோரக் கவிதைகள்

படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: சித்ரா

பொடி நடையா.. போறவரே.. பொறுத்திருங்க.. நானும் வரேன்
வேணாய்யா வீராப்பு.. ஹோய்..
...
பொடி நடையாப் போறவரே.. பொறுத்திருங்க.. நானும் வரேன்
பொடி நடையாப் போறவரே.. பொறுத்திருங்க.. நானும் வரேன்
வேணாய்யா வீராப்பு.. உன்னை நெனச்சு நான் போட்டேன் மாராப்பு
வேணாய்யா வீராப்பு.. உன்னை நெனச்சு நான் போட்டேன் மாராப்பு
உன் அத்திரி கத்திரி பாச்சா என் கிட்டே ஆகாது
ஒரு மஞ்சளக் கட்டி மேய்ச்சா எங்கேயும் போகாது
பொடி நடையாப் போறவரே.. பொறுத்திருங்க.. நானும் வரேன்
வேணாய்யா வீராப்பு.. ஹேய்..
...

இறுக்கிப் பிடிச்சு இழுக்குதய்யா மனசுக்குள்ள
அந்த சுகத்த நெனச்சு தவிக்குதய்யா வயசுப் புள்ள
இறுக்கிப் பிடிச்சு இழுக்குதய்யா மனசுக்குள்ள
அந்த சுகத்த நெனச்சு தவிக்குதய்யா வயசுப் புள்ள
சங்கதி ஒண்ணா ரெண்டா.. ஜாதகம் பார்ப்போம் கொண்டா
குத்தத்தைப் பார்த்தாக்கா சொந்தமில்ல
கோவத்தைப் பார்த்தாக்கா பந்தமில்ல
சிலுத்துக்கிட்டா சிலுத்துக்குங்க.. சிறுக்கியத்தான் பொறுத்துக்குங்க

பொடி நடையாப் போறவரே.. பொறுத்திருங்க.. நானும் வரேன்
வேணாய்யா வீராப்பு.. ர்ர்ர்ர்ர்
...

பாக்கு வெத்தலை மடிச்சு உனக்குக் கொடுக்கட்டுமா
நல்ல பவள மல்லியப்பூவ எடுத்துத் தொடுக்கட்டுமா
பாக்கு வெத்தலை மடிச்சு உனக்குக் கொடுக்கட்டுமா
நல்ல பவள மல்லியப்பூவ எடுத்துத் தொடுக்கட்டுமா
உன்ன நான் புள்ளி வச்சேன்.. ஊருக்குச் சொல்லி வச்சேன்
வாங்கினா ஒந்தாலி வாங்கப் போறேன்
தாங்கினா ஒம்மாலை தாங்கப் போறேன்
பொருத்தமுன்னா பொருத்தமய்யா.. மனசிலென்ன வருத்தமய்யா

பொடி நடையாப் போறவரே.. பொறுத்திருங்க.. நானும் வரேன்
வேணாய்யா வீராப்பு.. உன்னை நெனச்சு நான் போட்டேன் மாராப்பு
வேணாய்யா வீராப்பு.. உன்னை நெனச்சு நான் போட்டேன் மாராப்பு
உன் அத்திரி கத்திரி பாச்சா என் கிட்டே ஆகாது
ஒரு மஞ்சளக் கட்டி மேய்ச்சா எங்கேயும் போகாது
பொடி நடையாப் போறவரே.. பொறுத்திருங்க.. நானும் வரேன்
வேணாய்யா வீராப்பு.. ஹோய்..
...

#205 பள்ளிக்கூடம் போகாமலே - கடலோரக் கவிதைகள்

படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா

: ஒரு காலைத் தூக்கித் தவம் செய்யும் வாசா
தாசான தாசா.. சின்னப்பதாஸா.. லேசான லேசா.. பாடமது லேசா
முட்டத்து சின்னப்பதாஸா.. இளவட்டத்து சின்னப்பதாஸா
...
பெ.குழு: ஆ.. ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆ.. ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆ..
ஆஆஆஆஆஆ.. ஆஆஆஆஆஆ..
...
: பள்ளிக்கூடம் போகாமலே.. பாடங்களைக் கேட்காமலே
பள்ளிக்கூடம் போகாமலே.. பாடங்களைக் கேட்காமலே
தாஸ் தாஸ்.. சின்னப்பதாஸ் தாஸ்
பாஸ் பாஸ்.. நீ இப்ப பாஸ் பாஸ்

பெ.குழு: ஆ.. ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆ..
ஆஆஆஆ ஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆ..
...

: கத்திக் கையிலெடுத்துக் கத்திப் பேசி வந்த நீயும்
பெ.குழு: ஆ ஆ ஆ..
: வாயப் பொத்தி மூடிக்கிட்டு சுத்திச் சுத்தி வாரதென்ன
பெ.குழு: ஆ ஆ ஆ..
: கம்பு சிலம்புச் சண்டை போட்டு வந்த நீயும் இப்போ
அன்பால் அடியும் பட்டுக் கட்டுப்பட்ட மாயமென்ன
பெ.குழு: இந்தப் படிப்புக்கொரு பள்ளிக்கூடமெதுக்கு
சொல்லிக் கொடுப்பதற்கு வெட்டவெளிப் பொட்டலுண்டு
பாஸும் ஃபெயிலுமில்ல இந்த ஒரு பள்ளியிலெ
அள்ளி அளந்து விடு.. சொல்லிச் சொல்லி நீயும் கொடு
: தாஸ் தாஸ்.. சின்னப்பதாஸ் தாஸ்
பாஸ் பாஸ்.. நீ இப்ப பாஸ் பாஸ்
பெ.குழு: லாலல்லல்ல லாலால்லலா.. லாலல்லல்ல லாலால்லலா..
லாலல்லல்ல லாலால்லலா.. லாலல்லல்ல லாலால்லலா..
தாஸ் தாஸ்.. சின்னப்பதாஸ் தாஸ்
பாஸ் பாஸ்.. நீ இப்ப பாஸ் பாஸ்
தாஸ் தாஸ்.. சின்னப்பதாஸ் தாஸ்
பாஸ் பாஸ்.. நீ இப்ப பாஸ் பாஸ்
...

#204 அடி ஆத்தாடி.. நீ போகும் - கடலோரக் கவிதைகள்

படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி: அடி ஆத்தாடி.. நீ போகும் பாதை எங்கே பொன் மானே
பெ: அடி அம்மாடி.. நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே
: கிளி போகும் வழியோடு உயிர் போகுதிப்போது
விதி போகும் போக்கில் வாழ்க்கை போகுது
அடி ஆத்தாடி.. நீ போகும் பாதை எங்கே பொன் மானே
அடி ஆத்தாடி..
...

பெ: ஆஆஆ ஆ ஆ.. ஆஆ ஆஆ.. ஆஆஆ ஆஆ.. ஆஆஆ ஆஆ..
...

பெ: சொந்தம் என்ன சொந்தம் என்று சொல்லவில்லை அப்போது
: பக்கம் வந்து பார்த்துச் சொல்ல றெக்கை இல்லை இப்போது
பெ: காதல் வந்து சேர்ந்தபோது வார்த்தை வந்து சேரவில்ல
: வார்த்தை வந்து சேர்ந்தபோது வாழ்க்கை ஒண்ணு சேரவில்லை
பெ: பூசைக்காக போன பூவு பூக்கடைக்கு வாராது
: கத்துத் தந்த கண்ணே.. உன்னை குத்தஞ்சொல்லக் கூடாது
மனம் தாங்காது.. ஓ ஓ ஓஓஓஓஓ

பெ: அடி அம்மாடி.. நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே
: அடி ஆத்தாடி.. நீ போகும் பாதை எங்கே பொன் மானே
...

: கண்ணே.. இது ஊமைக் காதல்.. காத்திருந்து நொந்தேனே
பெ: தண்டனைக்குப் பின்னே நீயும் சாட்சி சொல்ல வந்தாயே
: காத்திருந்து ஆனதென்ன.. கண்ணீர் வத்திப் போனதென்ன
பெ: தேர் முறிஞ்சு போன பின்னே தெய்வம் வந்து லாபமென்ன
: என்ன சொல்லி என்ன பெண்ணே.. என்னைச் சுத்தி ஏகாந்தம்
பெ: பாறாங்கல்லில் முட்டிக் கொண்டு முட்டைக்கென்ன வேதாந்தம்
இனி பூகம்பம்..

: அடி ஆத்தாடி.. நீ போகும் பாதை எங்கே பொன் மானே
பெ: அடி அம்மாடி.. நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே
: கிளி போகும் வழியோடு உயிர் போகுதிப்போது
விதி போகும் போக்கில் வாழ்க்கை போகுது
அடி ஆத்தாடி.. நீ போகும் பாதை எங்கே பொன் மானே
அடி ஆத்தாடி..
...

#203 அடி ஆத்தாடி இள மனசொண்ணு - கடலோரக் கவிதைகள்

படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி

பெ: அடி ஆத்தாடி..
...
பெ: அடி ஆத்தாடி..
&பெ: இள மனசொண்ணு றெக்கை கட்டிப் பறக்குது.. சரிதானா
பெ: அடி அம்மாடி..
&பெ: ஒரு அலை வந்து மனசுல அடிக்கிது.. அதுதானா
: உயிரோடு
பெ: உறவாடும்
: ஒரு கோடி ஆனந்தம்
பெ: இவன் மேகம் ஆக யாரோ காரணம்
: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆ..
அடி ஆத்தாடி.. இள மனசொண்ணு றெக்கை கட்டிப் பறக்குது.. சரிதானா
அடி அம்மாடி..
...

பெ: மேலே போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ
உன்னப் பார்த்து அலைகள் எல்லாம் மெட்டுக் கட்டிப் பாடாதோ
: இப்படி நான் ஆனதில்ல.. புத்தி மாறிப் போனதில்ல
முன்னப் பின்ன நேர்ந்ததில்ல.. மூக்கு நுனி வேர்த்ததில்ல
பெ: கன்னிப் பொண்ணு கண்ணுக்குள்ள கத்திச் சண்டை கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ
இசை கேட்டாயோ..
...

பெ: லலலல லா.. லலலல லலலல லா..
லலலல லா.. லலலல லா.. லலலல லா..
லலலல லலலல லலலல லா..
...

: தாகப்பட்ட நெஞ்சுக்குள்ளே ஏகப்பட்ட சந்தோசம்
உண்மை சொல்லு பொண்ணே என்னை என்ன செய்ய உத்தேசம்
பெ: வார்த்தை ஒண்ணு வாய் வரைக்கும் வந்து வந்து போவதென்ன
கட்டு மரம் பூப்பூக்க ஆசைப்பட்டு ஆவதென்ன
: கட்டுத்தறிக் காளை நானே கன்னுக்குட்டி ஆனேனே
தொட்டுத் தொட்டு தென்றல் பேச.. தூக்கங்கெட்டுப் போனேனே
சொல் பொன் மானே..

பெ: அடி ஆத்தாடி..
&பெ: இள மனசொண்ணு றெக்கை கட்டிப் பறக்குது.. சரிதானா
அடி அம்மாடி..
&பெ: ஒரு அலை வந்து மனசுல அடிக்கிது.. அதுதானா
: உயிரோடு
பெ: உறவாடும்
: ஒரு கோடி ஆனந்தம்
பெ: இவன் மேகம் ஆக யாரோ காரணம்
: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆ..
அடி ஆத்தாடி.. இள மனசொண்ணு றெக்கை கட்டிப் பறக்குது.. சரிதானா
அடி ஆத்தாடி..
...

#202 யார் வீட்டில் ரோஜா - இதய கோயில்

படம்: இதய கோயில்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ.. கார்காலக் காற்றில் ஏன் வாடுதோ
மேகம் தன்னை மேகம் மோதி மின்னல் மின்னுதோ.. ஹோ..
மின்னல் இந்த நேரம் எந்தன் கண்ணில் மின்னுதோ
ஒரு ராகம்.. புது ராகம்.. அதில் சோகம்தான் ஏனோ
யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
...

ராகங்கள் நூறு அவள் கொடுத்தாள்.. கீதங்கள் நூறு அவள் தொடுத்தாள்
ஜீவன் அங்கே என்னைத் தேடும்.. பாடல் இங்கே காற்றில் ஓடும்
காணாமல் கண்கள் நோகின்றதோ
காதல் ஜோடி ஒன்று வாடும் நேரம் இன்று
ஓர் ஏழை வெண் புறா மேடையில்.. என் காதல் பெண் புறா வீதியில்
பூங்காற்று போராடவே.. பூத்த பூவும் ஆற்றில் ஓடவே

யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
...

வான் மேகம் மோதும் மழைதனிலே நான் பாடும் பாடல் நனைகிறதே
பாடல் இங்கே நனைவதனாலே நனையும் வார்த்தை கரையுது இங்கே
ஜென்மங்கள் யாவும் நீ வாழவே
காதல் கொண்ட உள்ளம் காணும் அன்பின் இல்லம்
ஓர் காற்றின் கைகளும் தீண்டுமோ.. என் காவல் எல்லையைத் தாண்டுமோ
நியாயங்கள் வாய் மூடுமோ.. தெய்வம் இல்லை என்று போகுமோ

யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
மேகம் தன்னை மேகம் மோதி மின்னல் மின்னுதோ.. ஹோ..
மின்னல் இந்த நேரம் எந்தன் கண்ணில் மின்னுதோ
ஒரு ராகம்.. புது ராகம்.. அதில் சோகம்தான் ஏனோ
யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ.. கார்காலக் காற்றில் ஏன் வாடுதோ
...

#201 வானுயர்ந்த சோலையிலே - இதய கோயில்

படம்: இதய கோயில்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ: ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆ.. ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆ..
...
பெ: ஆஆ ஆ ஆ.. ஆஆ ஆ.. ஆஆ ஆ ஆ.. ஆஆ ஆ..
...
: வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்.. நா வரண்டு பாடுகின்றேன்
நானிருந்து வாடுகின்றேன்.. நா வரண்டு பாடுகின்றேன்
வானுயர்ந்த சோலையிலே..
...

: வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாளிலென்று பார்த்தவர்கள் கூறவில்லை
வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாளிலென்று பார்த்தவர்கள் கூறவில்லை
தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்
தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்
வீணாகப் போகுமென்று யாரேனும் நினைக்கவில்லை

: வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்.. நா வரண்டு பாடுகின்றேன்
வானுயர்ந்த சோலையிலே..
...

பெ: ஆ.. ஆஆ ஆஆ ஆஆ ஆ.. ஆஆ ஆஆ ஆஆ ஆ..
ஆஆ ஆஆ ஆஆ ஆ.. ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ..
...

: ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி
ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி
பூத்திருந்த மலரெடுத்துப் பூங்குழலில் சூடி வைத்துப்
பார்த்திருந்த கோலமெல்லாம் பழங்கதை ஆனதடி

: வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்.. நா வரண்டு பாடுகின்றேன்
நானிருந்து வாடுகின்றேன்.. நா வரண்டு பாடுகின்றேன்
வானுயர்ந்த சோலையிலே..
...

#200 பாட்டுத் தலைவன் பாடினால் - இதய கோயில்

படம்: இதய கோயில்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

: தா.. தரரீநா.. hah தரரீ..
தரிராநாநா.. நா.. hah
...

: பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுத்தான்
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுத்தான்
சோர்ந்த போது சேர்த்த சுருதி சொர்க்கலோகம் காட்டுதிங்கே
உலகமே ஆடும் தன்னாலே
: பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுத்தான்
...

: காதல் பேசும் தாழம்பூவே.. ஓவியம் ஆனதே கைகள் மீது
பெ: கைகள் வண்ணம் தீட்டும் நேரம் ஓவியம் தேவி போல் ஆடிடும் கோலம்
: பாடிடும் பூங்குயில் மார்பிலே ஆடுதே
பெ: காதலே வாழ்கவே ஆயிரம் காலமே
: நீதானே தாலாட்டும் நிலவே

பெ: பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்
கேட்டு ரசிப்பேன் தாளமே போட்டுத்தான்
சோர்ந்த போது சேர்த்த சுருதி சொர்க்கலோகம் காட்டுதிங்கே
உலகமே ஆடும் தன்னாலே
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்
கேட்டு ரசிப்பேன் தாளமே போட்டுத்தான்
...

பெ: பாதி ஜாமம் பாயும் போடும்.. பால் நிலா வானிலே காதல் பேசும்
: ஊரைத் தூக்கம் ஆளும்போது பார்வைகள் பேசுதே பாவையோடு
பெ: காமனின் தேரிலே ஊர்வலம் போகலாம்
: ஆசையின் மேடையில் நாடகம் ஆடலாம்
பெ: நான்தானே தாலாட்டும் நிலவு

: பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்
பெ: கேட்டு ரசிப்பேன் தாளமே போட்டுத்தான்
: சோர்ந்த போது சேர்த்த சுருதி
பெ: சொர்க்கலோகம் காட்டுதிங்கே
: உலகமே ஆடும் தன்னாலே
பெ: பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்
: கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுத்தான்
...

#199 ஊரோரமா ஆத்துப் பக்கம் - இதய கோயில்

படம்: இதய கோயில்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கங்கை அமரன் & சித்ரா

: ஜும்ஜும்குஜும் ஜுங்குச் சுக்குச் ஜும்ஜும்குஜும்
ஜும்ஜும்குஜும் ஜுங்குச் சுக்குச் ஜும்ஜும்குஜும்
ஜும்ஜும்குஜும் சுக்குச் ஜும்ஜும்குஜும்

ஊரோரமா ஆத்துப் பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரமா இந்தப் பக்கம் குருவிக் கூடு
அட.. ஊரோரமா ஆத்துப் பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரமா இந்தப் பக்கம் குருவிக் கூடு
ஆண் குருவிதான் இரையத் தேடிப் போயிருந்தது
பெண் குருவிதான் கூட்டுக்குள்ளே காத்திருந்தது
வீட்டைத் தேடி ஆண் குருவிதான் வந்து சேர்ந்தது
கூட்டுக்குள்ளே குருவி ரெண்டுமே ஒண்ணாச் சேர்ந்து
ஜிம்ஜுகு ஜிம்ஜுகு
&பெ: ஜிம் ஜிம்குஜும் ஜிங்குச் ஜிம் ஜிம்குஜும்
ஜிம் ஜிம்குஜும் ஜிங்குச் ஜிம் ஜிம்குஜும்
: ஊரோரமா ஆத்துப் பக்கம் தென்னந்தோப்பு
ஜும்ஜும்குஜும் ஜுங்குச் சுக்குச் ஜும்ஜும்குஜும்
ஜும்ஜும்குஜும் ஜுங்குச் சுக்குச் ஜும்ஜும்குஜும்
...

பெ: அங்கே தினம் முத்தம் இடும் சத்தம் வருது
: இங்கே அது வந்தால் பெரும் குத்தம் வருது
பெ: அங்கே ஒரு பெட்டை பல முட்டை இடுது
: இங்கே பல பெட்டை விரல் பட்டால் சுடுது
பெ: கண்ணாடி மீனா பின்னாடி போனா கண்ணாலே முறைப்பாளே
: என்னான்னு கேட்டுக் கூச்சல்கள் போட்டு வில்லாட்டம் விரைப்பாளே
பெ: நாள்தோறுமே உறவைக் காட்டும் பண் பாடிடும் குருவிக் கூட்டம் நாம்தான்

: ஜும்ஜும்குஜும் ஜுங்குச் சுக்குச் ஜும்ஜும்குஜும்
ஜும்ஜும்குஜும் ஜுங்குச் சுக்குச் ஜும்ஜும்குஜும்
ஊரோரமா ஆத்துப் பக்கம் தென்னந்தோப்பு
பெ: தோப்போரமா இந்தப் பக்கம் குருவிக் கூடு
: ஊரோரமா ஆத்துப் பக்கம் தென்னந்தோப்பு
பெ: தோப்போரமா இந்தப் பக்கம் குருவிக் கூடு
: ஆண் குருவிதான் இரையத் தேடிப் போயிருந்தது
பெ: பெண் குருவிதான் கூட்டுக்குள்ளே காத்திருந்தது
: வீட்டைத் தேடி ஆண் குருவிதான் வந்து சேர்ந்தது
&பெ: கூட்டுக்குள்ளே குருவி ரெண்டுமே ஒண்ணாச் சேர்ந்து
: ஜிம்ஜுகு ஜிம்ஜுகு
&பெ: ஜிம் ஜிம்குஜும் ஜிங்குச் ஜிம் ஜிம்குஜும்
ஜிம் ஜிம்குஜும் ஜிங்குச் ஜிம் ஜிம்குஜும்
...

: அங்கே ஒரு சொர்க்கம்.. அது இங்கே வருமோ
பெ: இங்கே பல வர்க்கம்.. இது இன்பம் தருமோ
: எல்லாம் ஒரு சொந்தம் என எண்ணும் பறவை
பெ: கண்ணும் இள நெஞ்சும் அதில் காணும் உறவை
பெண் பார்க்கும்போதே பேரங்கள் பேசும் ஆண் வர்க்கம் அங்கேது
: அம்மாடி வேண்டாம் கல்யாண வாழ்க்கை.. நம்மாலே ஆகாது
&பெ: நாம்தானொரு பறவைக் கூட்டம்.. நாள்தோறுமே ஆட்டம் பாட்டம்தான்

: ஜும்ஜும்குஜும் ஜுங்குச் சுக்குச் ஜும்ஜும்குஜும்
ஜும்ஜும்குஜும் ஜுங்குச் சுக்குச் ஜும்ஜும்குஜும்
ஊரோரமா ஆத்துப் பக்கம் தென்னந்தோப்பு
பெ: தோப்போரமா இந்தப் பக்கம் குருவிக் கூடு
: அடடட.. ஊரோரமா ஆத்துப் பக்கம் தென்னந்தோப்பு
பெ: தோப்போரமா இந்தப் பக்கம் குருவிக் கூடு
: ஆண் குருவிதான் இரையத் தேடிப் போயிருந்தது
பெ: பெண் குருவிதான் கூட்டுக்குள்ளே காத்திருந்தது
: வீட்டைத் தேடி ஆண் குருவிதான் வந்து சேர்ந்தது
&பெ: கூட்டுக்குள்ளே குருவி ரெண்டுமே ஒண்ணாச் சேர்ந்து
: ஜிம்ஜுகு ஜிம்ஜுகு
&பெ: ஜிம் ஜிம்குஜும் ஜிங்குச் ஜிம் ஜிம்குஜும்
ஜிம் ஜிம்குஜும் ஜிங்குச் ஜிம் ஜிம்குஜும்
ஜிம் ஜிம்குஜும் ஜிங்குச் ஜிம் ஜிம்குஜும்
ஜிம் ஜிம்குஜும் ஜிங்குச் ஜிம் ஜிம்குஜும்
: ஜுகுஜுகுஜுகுஜுகுஜும்
...

#198 நான் பாடும் மௌன ராகம் - இதய கோயில்

படம்: இதய கோயில்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

நான் பாடும் மௌன ராகம்.. என் காதல் தேவி இன்னும்
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் தேவி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் தேவி இன்னும் தூங்கவில்லையா
...

உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு
ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது
கூடுதானே இங்கு பாடுது
கூடு இன்று குயிலைத்தானே தேடுது

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் தேவி இன்னும் தூங்கவில்லையா
...

கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து போனது.. காம்பு என்ன வாழ்வது
காலம் என்னை கேள்வி கேட்குது
கேள்வியின்று கேலியாகிப் போனது

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் தேவி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் தேவி இன்னும் தூங்கவில்லையா
...

#197 கூட்டத்திலே கோயில் புறா - இதய கோயில்

படம்: இதய கோயில்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

: கூட்டத்திலே கோயில் புறா.. யாரையிங்கு தேடுதம்மா
கூட்டத்திலே கோயில் புறா யாரையிங்கு தேடுதம்மா
கூட்டத்திலே கோயில் புறா யாரையிங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்கிது.. தந்தியடிக்கிது
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே ஒளி மின்னலடிக்கிது.. மின்னலடிக்கிது
கூட்டத்திலே கோயில் புறா யாரையிங்கு தேடுதம்மா
கூட்டத்திலே கோயில் புறா யாரையிங்கு தேடுதம்மா
...

பெ: ஆஆ ஆ.. ஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆ.. ஆஆஆஆ..
ஸக கமப ஸக மதநி பஸநிஸ நிதப
...
: நான் பாடும் ராகங்கள் யார் தந்தது
என் காதல் தேவி நீ தந்தது
உன் பார்வை என் நெஞ்சில் யாழ் மீட்டுது
உன்னாசை என்னைத் தாலாட்டுது
பூங்குயிலே.. பூங்குயிலே உந்தன் பாதையிலே ஆனந்தத் தேன் பொழிவேன்
பாவை உன்னை எண்ணிக் கொண்டு பாடுகின்றேன் பாடல் ஒன்று
நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து வாழுகின்றாய் கோயில் கொண்டு
ஆனந்த மேடையில் பூவிழி ஜாடையில்
ஆயிரங் காவிய நாடகம் ஆடிட எண்ணுது என் மனமே

: கூட்டத்திலே கோயில் புறா யாரையிங்கு தேடுதம்மா
கூட்டத்திலே கோயில் புறா யாரையிங்கு தேடுதம்மா
...

பெ.குழு: தத்தித் தகதாம்.. தலாங்கு தகதாம்.. தரிகிட தகதாம்..
ததம் ததம் ததம் ததம்..
...
பெ.குழு: ஆஆஆஆ ஆஆ.. ஆஆஆஆ ஆஆ..
ஸாஸா நி தா
...

: நீதானே நானாடும் ப்ருந்தாவனம்.. நின்றாடும் தேகம் ரோஜாவனம்
ஆகாயம் காணாத பொன் மேகமே.. என் பாடல் உன்னாலே உயிர் வாழுமே
கன்னிப் பெண்ணே நீயும் இல்லை என்றால் கான மழை வருமோ
தாமரைப் பூங்காலெடுத்து நீ நடக்கும் வேளையிலே
தாளத்துடன் சந்தங்களைக் கற்றுக் கொண்டேன் பொன் மயிலே
என்னிசை தீபத்தை ஏற்றிய பொன் மயில்
வான் மழை போலிந்தப் பாவலன் நெஞ்சினில் வாழிய வாழியவே

: கூட்டத்திலே கோயில் புறா யாரையிங்கு தேடுதம்மா
கூட்டத்திலே கோயில் புறா யாரையிங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்கிது.. தந்தியடிக்கிது
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே ஒளி மின்னலடிக்கிது.. மின்னலடிக்கிது
ஸக மப தநிஸ நிஸகம..
கூட்டத்திலே கோயில் புறா..
நிஸ நிஸத தநி தநிப பமக நிதப ஸநித நிஸ கமப
கூட்டத்திலே கோயில் புறா..
கமகமகஸ.. கமபமகஸ.. பபநிநி ததஸஸ நிநிகக பதநிஸ கமப
கூட்டத்திலே கோயில் புறா..
தத்தித் தகதிமி தலாங்கு தகதிமி தகதித் தகதிமி தோம்..
தித்தோம்.. தித்தகிட தகிட தகிட தகிட..
தகிட ததிமி தஜனு தனுத தஜம் தஜம் தஜம் தகிட
தகதாம் தத் தரிகிடதரிகிடத.. திரிகிடதிரிகிடதோம்.. கிரிகிடதிரிகிடதோம்
தத்தகதிமி தகதிமிதக..
திரிகிடதிரிகிடதோம்.. திரிகிடதிரிகிடதோம்.. திரிகிடதிரிகிடதோம்.. திரிகிடதிரிகிடதோம்..
கூட்டத்திலே கோயில் புறா யாரையிங்கு தேடுதம்மா
கூட்டத்திலே கோயில் புறா யாரையிங்கு தேடுதம்மா
...

#196 இதயம் ஒரு கோயில் - இதய கோயில்

படம்: இதய கோயில்
இசை: இளையராஜா
எழுதியவர்: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி: ஆஆ ஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ ஆ.. ஆஆஆ ஆஆஆ..
ஆஆ ஆஆ.. ஆஆ ஆ.. ஆஆஆ ஆ ஆ..
...

: இதயம் ஒரு கோயில்.. அதில் உதயம் ஒரு பாடல்
இதயம் ஒரு கோயில்.. அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ.. இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோயில்.. அதில் உதயம் ஒரு பாடல்
...

பெ: லலலலலா.. லல லலலலலலலா..
லலலலலா.. லல லலலலலா..
லலல லலல.. லலல லலல.. லலல லலல.. லலல லலல..
...

: ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி.. எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடிக் கோடி.. எதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீதான் என்றும் புதிது

: இதயம் ஒரு கோயில்.. அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ.. இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோயில்.. அதில் உதயம் ஒரு பாடல்
...

பெ: லலலா லாலலலா.. லலலா லாலலா..
லாலா லல லாலாலா.. லாலா லல லாலாலா..
...

: காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்
ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ.. அது நீயே
நீயும் நானும் ஒன்றுதான்.. எங்கே பிரிவது

: இதயம் ஒரு கோயில்.. அதில் உதயம் ஒரு பாடல்
...

: நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேரும் நேரம் வந்தது.. மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
எனது பாதை வேறு.. உனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே
வாழ்க நீயும் வளமுடன்.. என்றும் வாழ்கவே

: இதயம் ஒரு கோயில்.. அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ.. இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
...

#195 வா வா வஞ்சி இள மானே - குரு சிஷ்யன்

படம்: குரு சிஷ்யன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

: வா வா.. வஞ்சி இள மானே
...
: வா வா.. வஞ்சி இள மானே.. வந்தாலென்னைத் தருவேனே
வா வா.. வஞ்சி இள மானே.. வந்தாலென்னைத் தருவேனே
வாழ்நாளிலே.. நீங்காமலே.. நீ பாதி நான் பாதி ஆக
பெ: வந்தாள் வஞ்சி இள மானே.. கொண்டாள் உன்னை இங்குதானே
...

: ஈரெட்டு வயதில் ஈரத்தாமரை வாய் விட்டுச் சிரிக்காதா
பெ: வாய் விட்டுச் சிரிக்கும் மாலை வேளையில் தேன் சொட்டுத் தெரிக்காதா
: தேகத்தில் உனக்குத் தேன் கூடு இருக்கு.. தாகத்தைத் தணித்திட வா
பெ: ஆனாலும் நீ காட்டும் வேகம் ஆத்தாடி ஆகாதம்மா
: பொன்வண்டு கூத்தாடும்போது பூச்செண்டு நோகாதம்மா
பெ: போதும் போதும்.. போ..

: வா வா.. வஞ்சி இள மானே.. வந்தாலென்னைத் தருவேனே
வாழ்நாளிலே.. நீங்காமலே.. நீ பாதி நான் பாதி ஆக
பெ: வந்தாள் வஞ்சி இள மானே.. கொண்டாள் உன்னை இங்குதானே
...

பெ: நானுன்னை நினைத்தேன் நேத்து ராத்திரி.. நூலாட்டம் இளைத்தேனே
: நான் கூடத் தவித்தேன் வேறு மாதிரி.. பாலாட்டம் கொதித்தேனே
பெ: ஆசைகள் எனக்கும் அங்கங்கே சுரக்கும்.. ஆளைத்தான் அசத்துவதேன்
: பொன்வண்டு கூத்தாடும்போது பூச்செண்டு நோகாதம்மா
பெ: கால் மீது கால் போட்டு ஆட.. கல்யாண நாளில்லையா
: நேரம் காலம் ஏன்

பெ: வந்தாள் வஞ்சி இள மானே.. கொண்டாள் உன்னை இங்குதானே
வாழ்நாளிலே.. நீங்காமலே.. நீ பாதி நான் பாதி ஆக
: வா வா.. வஞ்சி இள மானே.. வந்தாலென்னைத் தருவேனே
பெ: வந்தாள் வஞ்சி இள மானே.. கொண்டாள் உன்னை இங்குதானே
...

#194 உத்தம புத்திரி நானு - குரு சிஷ்யன்

படம்: குரு சிஷ்யன்
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா

உத்தம புத்திரி நானு.. உண்டேனே செந்தேனு
தண்ணியில் துள்ளுற மீனு.. தள்ளாடும் பொன் மானு
அப்பாவுக்குத் தப்பாமதான் பொறந்த பெண்தானே
ஹோய் ஹோய்.. பொறந்த பெண்தானே
உத்தம புத்திரி நானு.. ஹா.. ஆஆஆ ஓஓஓ..
...

பெண் ஜென்மங்கள் எல்லாமே ஒரு வெள்ளாட்டு மந்தைதான்
ஓஓஓ.. நம் சொந்தங்கள் எந்நாளும் ஒரு வியாபாரச் சந்தைதான்
இதிலென்ன காதல் கீதம்.. இங்கு யாவும் மாயம்தானே
இலக்கியக் காதல் கூட வெறும் ஏட்டில் வாழும் மானே
கோப்பைதான் என் கையோடு.. போதைதான் என் கண்ணோடு
ஆனந்தம் என் நெஞ்சோடு.. ஆலோலம் என் நினைவோடு
சோகங்களே ராகங்களாய் நான் பாடுறேன்.. ஹோய்.. ஹா..

உத்தம புத்திரி நானு.. உண்டேனே செந்தேனு.. ஹோய்..
தண்ணியில் துள்ளுற மீனு.. தள்ளாடும் பொன் மானு
அப்பாவுக்குத் தப்பாமதான் பொறந்த பெண்தானே
ஹோய் ஹோய்.. பொறந்த பெண்தானே

உத்தம புத்திரி நானு.. ஹா.. ஆஆஆ ஓஓஓ..
...

தரரரர தரத்தா தரத்தத்தத்தா.. தரத்தா தரத்தத்தத்தம்.. ததம்
தரத்தா தரத்தத்தத்தா.. தரத்தா தரத்தத்தத்தம்..
தரத்தா தரத்தத்தத்தா.. தரத்தா தரத்தத்தத்தம்.. ததம்
தரத்தா தரத்தத்தத்தா.. தரத்தா தரத்தத்தத்தம்..
தரத்தா தரத்தா தரத்தா தரத்தா
தரத்தா தரத்தா தா..
...

என் எண்ணத்தில் இப்போது ஒரு உல்லாசக் கச்சேரி
ஆஆ ஆஆ.. நான் தள்ளாடித் தள்ளாடி இங்கு வந்தாடும் சிங்காரி
அந்திப் பகல் நான்தான் வாட.. வந்த காதல் நோயும் போச்சு
கண்ணிரண்டில் பார்த்தா ஆசை.. இப்போ கானல் நீராய் ஆச்சு
போடி போ.. நீ தனியாளு.. நாளெல்லாம் உன் திருநாளு
கூத்தாடு.. உன் மனம் போலே.. பூத்தாடு.. பொன் மலர் போலே

சோகங்களே ராகங்களாய் நான் பாடுறேன்.. ஹோய்.. ஹா..

உத்தம புத்திரி நானு.. உண்டேனே செந்தேனு.. ஹோய்..
தண்ணியில் துள்ளுற மீனு.. தள்ளாடும் பொன் மானு
அப்பாவுக்குத் தப்பாமதான் பொறந்த பெண்தானே
ஹோய் ஹோய்.. பொறந்த பெண்தானே

உத்தம புத்திரி நானு.. உண்டேனே செந்தேனு.. ஹோய்..
உத்தம புத்திரி நானு.. ஆ.. ஆஆஆ ஆஆஆ..
...

#193 துள்ளி எழுந்தது பாட்டு - கீதாஞ்சலி

படம்: கீதாஞ்சலி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & சித்ரா

பெ: துள்ளி எழுந்தது பாட்டு.. சின்னக் குயிலிசை கேட்டு
சந்த வரிகளைப் போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடுதான் nangihஅதைப் பாடணும்.. இரவோடுதான் அரங்கேறணும்
துள்ளி எழுந்தது பாட்டு.. nangih சின்னக் குயிலிசை கேட்டு nangih
: துள்ளி எழுந்தது பாட்டு.. சின்னக் குயிலிசை கேட்டு
சந்த வரிகளைப் போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடுதான் அதைப் பாடணும்.. இரவோடுதான் அரங்கேறணும்
துள்ளி எழுந்தது பாட்டு.. சின்னக் குயிலிசை கேட்டு
...

: உயிரே.. ஒரு வானம்பாடி உனக்காகக் கூவுது
அழகே.. புது ஆசை வெள்ளம் அணை தாண்டித் தாவுது
மலரே.. தினம் மாலை நேரம் மனம்தானே நோவுது
மாலை முதல்..
மாலை முதல் காலை வரை சொன்னாலென்ன காதல் கதை
காமன் கணை எனை வதைக்குதே

: துள்ளி எழுந்தது பாட்டு.. சின்னக் குயிலிசை கேட்டு
...

: அடியே.. ஒரு தூக்கம் போட்டு நெடுநாள்தான் ஆனது
கிளியே.. பசும்பாலும் தேனும் வெறுப்பாகிப் போனது
நிலவே பகல் நேரம் போலே நெருப்பாகக் காயுது
நான் தேடிடும்..
நான் தேடிடும் ராசாத்தியே.. நீ போவதா ஏமாத்தியே
வா வா கண்ணே.. இதோ அழைக்கிறேன்

: துள்ளி எழுந்தது பாட்டு.. சின்னக் குயிலிசை கேட்டு
சந்த வரிகளைப் போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடுதான் அதைப் பாடணும்.. இரவோடுதான் அரங்கேறணும்
துள்ளி எழுந்தது பாட்டு.. சின்னக் குயிலிசை கேட்டு
...

#192 வான மழை போலே - இது நம்ம பூமி

படம்: இது நம்ம பூமி
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஏசுதாஸ்

ம்ஹும்.. ம்ம்ம்.. ம் ம் ம்.. ம்ஹும்.. ம்ம்ம்.. ம் ம்..
ம்ஹும்.. ம்ம்ம்.. ம் ம் ம் ம்..
வான மழை போலே புதுப் பாடல்கள்
கான மழை தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது.. நெடு நாள் வாழும் இது
வான மழை போலே புதுப் பாடல்கள்
கான மழை தூவும் முகில் ஆடல்கள்
...

இதயம் ராத்திரியில் இசையால் அமைதி பெறும்
இருக்கும் காயமெல்லாம் இசையால் ஆறிவிடும்
கொதிக்கும் பாலையிலும் இசையால் பூ மலரும்
இரும்புப் பாறையிலும் இசையால் நீர் கசியும்
பழி வாங்கும் பகை நெஞ்சும் இசையால் சாந்தி பெறும்

வான மழை போலே புதுப் பாடல்கள்
கான மழை தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது.. நெடு நாள் வாழும் இது
வான மழை போலே புதுப் பாடல்கள்
கான மழை தூவும் முகில் ஆடல்கள்
...

மா.. கம தநிதா.. கம கதநி..
தநி ஸாநி நிப பக கஸ ஸநி நித
தஸா மதா நி பா க ஸா
...
குரலில் தேன் குழைத்துக் குயிலைப் படைத்தவர் யார்
மனத்தை மெல்லிசையால் இழுத்தே வைத்தவர் யார்
அறையில் பாட்டெடுப்பேன்.. அரங்கம் தேவையில்லை
சபையில் பேரெடுக்கக் குயில்கள் இசைப்பதில்லை
எனக்கே நான் சுகம் சேர்க்க தினமும் பாடுகின்றேன்

வான மழை போலே புதுப் பாடல்கள்
கான மழை தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது.. நெடு நாள் வாழும் இது
வான மழை போலே புதுப் பாடல்கள்
கான மழை தூவும் முகில் ஆடல்கள்
...

#191 ஒரு குங்குமச் செங்கமலம் - ஆராதனை

படம்: ஆராதனை
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

: ஒரு குங்குமச் செங்கமலம்.. இள மங்கையின் தங்க முகம்
ஒரு குங்குமச் செங்கமலம்.. இள மங்கையின் தங்க முகம்
பசி தூண்டும் அமுதம்.. தர வேண்டும் கமலம்.. உன் கூந்தல் பூவனம்
ஒரு குங்குமச் செங்கமலம்.. இள மங்கையின் தங்க முகம்
ஒரு குங்குமச் செங்கமலம்..
...

பெ: ஆ ஆ ஆ.. ஆஆஆ..
...

: திருவாய் மலர்வாய்.. தருவாய் என் பாவாய்
வருவாய் விரைவாய் நான் சூடும் பூவாய்
சாம்பல் ருசிக்கத் தனியாவாய்
பெ: ஆஆஆஆஆ..
: காயைப் புசிக்கும் கனியாவாய்
பெ: ஆஆஆஆஆ..
: பூவைக்கு நாங்கள் பூ வைக்க வேண்டும்
பூலோகம் யாவும் பூக்கொய்ய வேண்டும்.. மின்னலிலே
பெ: லால்லலலா..
: ஒரு கயிறு எடு
பெ: லாலலலா..
: மேகங்களால் ஒரு தூளியிடு
கதிரோ.. தளிரோ.. இளமகளது திருமுகம்

பெ: லாலல லாலல லா.. லல லாலல லாலல லா..
லலலாலல லா லல லா..
...

பெ: லல்லல லல்லல லல்லல லல்லா..
லல்லல லல்லல லல்லல லல்லா..
ஆஹா.. ஆஹா.. லாலலா லாலா..
ஆஹா.. ஆஹா.. லா லாலலா..
...

: முதுமை ஒரு நாள் நமை வந்து தீண்டும்
மூன்றாம் காலில் நாம் நிற்க வேண்டும்
முடியைப் பார்த்தால் முழு வெள்ளை
பெ: ஆஆஆஆஆ..
: மடியில் தவழும் மகன் பிள்ளை
பெ: ஆஆஆஆஆ..
: நீயேந்திக் கொஞ்ச.. நான் கொஞ்சம் கெஞ்ச
பெ: ihikhik
: பூப்போன்ற பிஞ்சு என் நெஞ்சில் துஞ்ச.. பாயதனில்
பெ: லாலலலா..
: நீ சாய்ந்திருக்க
பெ: லாலலலா..
: பசியடங்கி நான் ஓய்ந்திருக்க
இருக்கும் வரைக்கும் எனை தினசரி அனுசரி

: குங்குமச் செங்கமலம்
பெ: ஆ..
: இள மங்கையின் தங்க முகம்
பெ: ஆ..
: பசி தூண்டும் அமுதம்
பெ: ஆ..
: தர வேண்டும் கமலம்
பெ: ihikhik
: உன் கூந்தல் பூவனம்
ஒரு குங்குமச் செங்கமலம்
பெ: ஆ..
: இள மங்கையின் தங்க முகம்
ஒரு குங்குமச் செங்கமலம்..
பெ: லால்லா லால்லா லா..
...

#190 இளம் பனித்துளி விழும் நேரம் - ஆராதனை

படம்: ஆராதனை
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: ராதிகா

லலலல லலலல லாலா.. லலலல லலலல லாலா..
இளம் பனித்துளி விழும் நேரம்.. இலைகளில் மகரந்தக் கோலம்
துணைக்கிளி தேடி துடித்தபடி.. தனிக்கிளி ஒன்று தவித்தபடி
சுடச்சுட நனைகின்றதே
இளம் பனித்துளி விழும் நேரம்.. இலைகளில் மகரந்தக் கோலம்
...

ஆசை நதி மடை திறக்கும்.. பாஷை வந்து கதவடைக்கும்
காயாது மன ஈரங்கள்.. தாளாது சுடு பாரங்கள்
காவியக் காதலின் தேசங்களே.. ஊமையின் காதலைப் பேசுங்களே
மலர்களும் சுடுகின்றதே

தனானா.. இளம் பனித்துளி விழும் நேரம்.. இலைகளில் மகரந்தக் கோலம்
...

பாவை விழித்துளி விழுந்து பூவின் பனித்துளி நனையும்
தீயாகும் ஒரு தேன் சோலை.. போராடும் ஒரு பூமாலை
சூரிய காந்திகளாடியதோ.. சூரியனை அது மூடியதோ
முகில் வந்து முகம் பொத்துமோ

தனானா.. இளம் பனித்துளி விழும் நேரம்.. இலைகளில் மகரந்தக் கோலம்
துணைக்கிளி தேடி துடித்தபடி.. தனிக்கிளி ஒன்று தவித்தபடி
சுடச்சுட நனைகின்றதே
லலலல லலலல லாலா.. லலலல லலலல லாலா..
...

#189 அழகிய விழிகளில் அறுபது - டார்லிங் டார்லிங் டார்லிங்

படம்: டார்லிங் டார்லிங் டார்லிங்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்

: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
ஏ ராதா..
பெ: ஆஹா..
: ஐ லவ் யூ
பெ: ஓஹோ..
: ஏ ராதா..
பெ: ஆஹாஹா..
: ஐ லவ் யூ
பெ: ஓஹோஹோ..
: இதய தாகமது தணியும் நேரமிது.. கவிதை பாடி வருவாய்
பெ: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே
ஹே ராஜா
: ஹாஹாஹா..
பெ: ஐ லவ் யூ..
: ஹோஹோஹோ
பெ: ஹே ராஜா
: ஹா ஹாஹா..
பெ: ஐ லவ் யூ
: ஹே ஹேஹே
பெ: இதய தாகமது தணியும் நேரமிது.. கவிதை பாடி வருவாய்
: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
...

: மங்கை நீ.. ரதி தேவி தங்கை நீ
பெ: மன்னன் நீ.. இள நெஞ்சின் கள்வன் நீ
: சிறு இடை சிறை.. சிறையிடு எனை
பெ: கண்ணுக்குள் காவல் துறை.. வா.. கைதாக்கும் ஆயுள் வரை
: மங்கை நீ.. ரதி தேவி தங்கை நீ
பெ: மன்னன் நீ.. இள நெஞ்சின் கள்வன் நீ
: சிறு இடை சிறை.. சிறையிடு எனை
பெ: கண்ணுக்குள் காவல் துறை.. வா.. கைதாக்கும் ஆயுள் வரை
: என்னாசை ராஜாத்தி உன்னாசை போலே
பெ: இணைந்தும்
: கலந்தும்
பெ: சுகத்தில்
: நனைந்தும்
பெ: அம்மாடி சொன்னாலே வெட்கம் வரும்

: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
பெ: ஹே ராஜா
: ஹாஹாஹா..
பெ: ஐ லவ் யூ..
: ஓஹோஹோ.. ஏ ராதா..
பெ: ஹாஹாஹா..
: ஐ லவ் யூ
பெ: ஓஹோஹோ..
: இதய தாகமது தணியும் நேரமிது.. கவிதை பாடி வருவாய்
பெ: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே
...

பெ: பட்டுப் போல் மெதுவாகத் தொட்டுக் கொள்
: கட்டிக் கொள்.. உயிரோடு ஒட்டிக் கொள்
பெ: தலைவனின் கரம் தழுவிட வரும்
: பன்னீரை அள்ளித் தெளி.. நீ என்னாசை செல்லக்கிளி
பெ: பட்டுப் போல் மெதுவாகத் தொட்டுக் கொள்
: கட்டிக் கொள்.. உயிரோடு ஒட்டிக் கொள்
பெ: தலைவனின் கரம் தழுவிட வரும்
: பன்னீரை அள்ளித் தெளி.. நீ என்னாசை செல்லக்கிளி
பெ: என் தேகம் எங்கெங்கும் மின்சாரம் பாயும்
: விடியும்
பெ: வரைக்கும்
: அமுதம்
பெ: சுரக்கும்
: ஆத்தாடி சொன்னாலே சொர்க்கம் வரும்

பெ: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே
: ஏ ராதா..
பெ: ஹாஹாஹா..
: ஐ லவ் யூ
பெ: ஓஹோஹோ.. ஏ ராஜா
: ஹாஹா..
பெ: ஐ லவ் யூ..
: ஹா ஹஹஹா..
பெ: இதய தாகமது தணியும் நேரமிது.. கவிதை பாடி வருவாய்
: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
பெ: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே
...

#188 ஓ நெஞ்சே நீதான் - டார்லிங் டார்லிங் டார்லிங்

படம்: டார்லிங் டார்லிங் டார்லிங்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

: ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
...

பெ: ஆஆ ஆஆ ஆ ஆ.. ஆஆ ஆஆ ஆ ஆ..
லலலா லலலா லலலா லலலா.. லலலா லலலா லா..
லலலா லலலா லலலா லலலா.. லலலா லலலா லா..
...

: தென்னங்கிளிதான்.. நீ சொல்லும் மொழி தேன்
தென்னங்கிளிதான்.. நீ சொல்லும் மொழி தேன்
சங்கீதம் பொங்காதோ உன் சின்னச் சிரிப்பில்
செந்தூரம் சிந்தாதோ உன் கன்னச் சிவப்பில்
என்னாசை மங்கை.. எந்நாளும் கங்கை.. கண்ணீரில் தாலாட்டினாள்
என்னாசை மங்கை.. எந்நாளும் கங்கை.. கண்ணீரில் தாலாட்டினாள்

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே.. ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
...

பெ: லாலா லாலா லல்லல்லா.. லாலா லாலா லல்லல்லா..
லாலா லாலா லல்லல்லாலா.. லாலா லாலாலா..
...

: உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்
உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்
அந்நாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும்
எந்நாளும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும்
கொத்தான முல்லை பித்தான என்னை எப்போது முத்தாடுவாள்
கொத்தான முல்லை பித்தான என்னை எப்போது முத்தாடுவாள்

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே.. ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
...

#187 ஒரு மந்தாரப்பூ வந்தா - சின்ன ஜமீன்

படம்: சின்ன ஜமீன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா

: ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா.. ஹோ..
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
பெ: ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா.. ஹோ..
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
: மலையோரம் மாந்தோப்பு.. மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும் சாயங்கால வேளையில்
பெ: ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா.. ஹோ..
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
...

பெ: நித்தம் நித்தம் நான் குளிக்கும் மஞ்சளுக்கு
ஒன்ன விட்டா யாருமில்ல காவலுக்கு
: நெஞ்சுக்குள்ள உன்னை வச்சேன் பத்திரமா
நான் ரசிக்கத் தீட்டி வச்சேன் சித்திரமா
பெ: உன்னால ராத்திரி தூக்கம் கெட்டுப் போவுது
: ஒத்தையில தூங்குனா என் உடம்பு நோவுது
பெ: ஒன்ன விட்டு அஞ்சு நிமிஷம் என்னால் வாழ ஆவாது

: ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா.. ஹோ..
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
பெ: மலையோரம் மாந்தோப்பு.. மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும் சாயங்கால வேளையில்
: ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா.. ஹோ..
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
...

: வெத்தலைய பாக்கு வச்சு நான் கொடுப்பேன்
நீ சுவைச்சு மிச்சம் மீதி நான் எடுப்பேன்
பெ: செம்பெடுத்துப் பால் நிரப்பி நான் கொடுப்பேன்
நீ குடிச்ச மிச்சம் மீதி நான் குடிப்பேன்ன்
: ஒண்ணாகச் சேர்ந்துதான் சந்திரனைப் பார்க்கணும்
பெ: உண்டான ஏக்கத்தை ரெண்டு பேரும் தீர்க்கணும்
: நள்ளிரவில் நாம கலந்தா கோழி கூவக் கூடாது

பெ: ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா.. ஹோ..
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
: மலையோரம் மாந்தோப்பு.. மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும் சாயங்கால வேளையில்
பெ: ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா.. ஹோ..
: அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
...

#186 சிறிய பறவை சிறகை - அந்த ஒரு நிமிடம்

படம்: அந்த ஒரு நிமிடம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ: சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே
உதடு உருக அமுதம் பருக வருகவே.. வருகவே
சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே
...

: அன்பு லைலா
பெ: ம்..
: நீயே எந்தன் ஜீவ சொந்தம்
பெ: ihikhik
: நீ சிரித்தால் பாலையெங்கும் பூ வசந்தம்
பெ: சம்மதம் என்ன சொல்லவா.. மௌனமே சொல்லும் அல்லவா
: கிண்ணமாய் என்னை மாற்ற வா.. உன்னையே வந்து ஊற்ற வா
பெ: மது போதை வேண்டுமா.. இதழ் போதை நல்லது
: உன் பேரைச் சொல்கிறேன்.. அதில் போதை உள்ளது.. ஆ..
ஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆ.. ஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
பெ: வருகவே.. வருகவே

: சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே
உதடு உருக அமுதம் பருக வருகவே.. வருகவே
சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே
...

பெ.குழு: ஆ.. பதநி ஸா.. நிஸநி தநித பத மகம பா..
தநித மா.. பமக மபநி தா.. கபத மா.. பமக கமத.. பா..
...

: மஞ்சமே.. தமிழின் மன்றமே.. புதிய சந்தமே சிந்தினேன்
பெ: அன்பனே.. இளைய கம்பனே.. கவிதை நண்பனே.. நம்பினேன்
: சொர்ணமே.. அரச அன்னமே.. இதழின் யுத்தமே.. முத்தமே
பெ: நெற்றியில் வியர்வை சொட்டுமே.. கைகள் பற்றுமே.. ஒற்றுமே
: சோழற் குயில் பாடுகையில் சோலைக்குயில் ஓய்வெடுக்கும்
மெல்லினங்கள் பாடு கண்ணே.. வல்லினங்கள் வாய் வலிக்கும்
பெ: சந்தமே இன்பம் தந்தது.. கங்கையே இங்கு வந்தது
தென்றலே இன்று நின்றது.. நன்றுதான் சந்தம் என்றது
கன்றுகள் ரெண்டு இன்று போல் என்றும் வென்று வாழ் என்றது
: வாழ்கவே.. வாழ்கவே

பெ: சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே
உதடு உருக அமுதம் பருக வருகவே.. வருகவே
: சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே
...

பெ: அன்பு ரோமியோ.. இங்கே ஒரு காவல் இல்லை
தேன் குடித்தால் இங்கே ஒரு கேள்வி இல்லை
: காதலின் கல்விச் சாலையில் கண்களே நல்ல தத்துவம்
பூவையின் மேனி அற்புதம்.. பூக்களால் செய்த புத்தகம்
பெ: நம் காதல் பாடவே சுரம் ஏழு போதுமா
: நம் நேசம் பேசவே ஒரு பாஷை போதுமா
பெ: கவி மழை பொழியுமா

: ihikhik பழைய கனவு உனக்கு எதற்கு.. கலையட்டுமே
நமது கதையை உலகம் முழுதும் புகழட்டுமே
கவிதையெழுத இளைய கவிகள் எழுகவே.. எழுகவே
பழைய கனவு உனக்கு எதற்கு.. கலையட்டுமே
நமது கதையை உலகம் முழுதும் புகழட்டுமே
...

#185 நல்ல நேரம் நேரம் - அந்த ஒரு நிமிடம்

படம்: அந்த ஒரு நிமிடம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

நல்ல நேரம் நேரம்.. நாளும் யோகம் யோகம்.. வெற்றி மாலைகள் சூடும்
நல்ல நேரம் நேரம்.. நாளும் யோகம் யோகம்.. வெற்றி மாலைகள் சூடும்
கனவுகள் எல்லாம் நனவுகள் ஆகும்
தேவர்கள் பாடலாம்.. தேவர்கள் பாடலாம்.. தேவதை ஆடலாம்
நல்ல நேரம் நேரம்.. நாளும் யோகம் யோகம்.. வெற்றி மாலைகள் சூடும்
கனவுகள் எல்லாம் நனவுகள் ஆகும்
...

கண்டதும் உன் மனம் பொங்கும்.. என் கண்களில் சந்திரன் தங்கும்
பபபபா.. பபப..
கண்டதும் உன் மனம் பொங்கும்.. என் கண்களில் சந்திரன் தங்கும்
மன்மதச் சங்கமிது.. வாடகைத் தங்கமிது
நாயகன் விடும் வரை நழுவாது
தாண்ட வேண்டும் எல்லை.. வேலி ஏதும் இல்லை
எல்லாம் ஆண்டவன் வேலை
மேடையேறும் பெண்மை.. ஆடையில்லா பொம்மை
இளமை துடிக்கிது.. பப பபா.. ஆஹா.. ஆஹா

நல்ல நேரம் நேரம்.. நாளும் யோகம் யோகம்.. வெற்றி மாலைகள் சூடும்
கனவுகள் எல்லாம் நனவுகள் ஆகும்
...

ஆடவர் கண்களுக்கென்று என் ஆடையில் ஜன்னலும் உண்டு
பபபபா.. பபப..
ஆடவர் கண்களுக்கென்று என் ஆடையில் ஜன்னலும் உண்டு
வாசனைச் சோலையிது.. வாலிப வாசலிது
ராத்திரி ஏற்றிய ஜோதியிது
வாழ மண்ணில் வந்தோம்.. வாழ்க்கை இங்கே கொஞ்சம்
காண்போம் மல்லிகை மஞ்சம்
போதையேறும் வண்ணம் பொங்க வேண்டும் கிண்ணம்
இரவு கொதிக்கிது.. தரத்தர.. பபபப

நல்ல நேரம் நேரம்.. நாளும் யோகம் யோகம்.. வெற்றி மாலைகள் சூடு
...

#184 அலைகளில் மிதக்குது - அந்த ஒரு நிமிடம்

படம்: அந்த ஒரு நிமிடம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ: ஆ.. ஆஆஆ.. ஆ.. ஆஆ.. ஆ..
ஆ.. ஆஆஆ.. ஆ.. ஆ ஆஆ..
அலைகளில் மிதக்குது.. நிலவொன்று குளிக்கிது.. கை கொடு
குளிக்கின்ற நிலவுக்கு முதுகினில் அரிக்கிது.. கை தொடு
தேகம் உருகியதே.. ஆடை உருவியதே.. நீரும் சூடு ஏற
: வழி ஒண்ணுந் தெரியல்ல.. வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி.. குளிர்வது எனக்கடி.. ஏனடி
தேகம் மரத்துருச்சே.. நீச்சல் மறந்துருச்சே.. கூச்சமாகிப் போச்சு
வழி ஒண்ணுந் தெரியல்ல.. வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி.. குளிர்வது எனக்கடி.. ஏனடி
...

பெ: முத்தங்கள் முந்நூறு நீ தந்து முன்னேறு
: ஹையோ.. முந்நூறும் தாங்காது.. தந்தாலும் தகராறு
பெ: இவள் வசம்.. புது ரசம்
இவள் வசம் புது ரசம்.. இதழ் ரசம் இலவசம்.. நீ குடி
: ஹோ.. புது ரசம் அழைக்குது.. பழ ரசம் கொதிக்குது.. பாரடி
பெ: நானிங்கே நானில்லை.. நீயின்னும் ஆணில்லை
ஆடை காணவில்லை

பெ: அலைகளில் மிதக்குது.. நிலவொன்று குளிக்கிது.. கை கொடு
குளிக்கின்ற நிலவுக்கு முதுகினில் அரிக்கிது.. கை தொடு
: தேகம் மரத்துருச்சே.. நீச்சல் மறந்துருச்சே.. கூச்சமாகிப் போச்சு
வழி ஒண்ணுந் தெரியல்ல.. வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி.. குளிர்வது எனக்கடி.. ஏனடி
பெ: ihikhik
...

பெ: லா லா.. லா லா..
: ஹாஹா ஹாஹா..
பெ: லாலால லலலல லலலலா..
: ஹாஹாஹ ஆஆஆஆ ஆஆஆஆ ஹா..
பெ: லாலாலா
: ஹா
பெ: லாலாலா.. ஆ
: ஹா.. ஹா ஹா ஹே..
...

பெ: ஆணுக்கு ஆவேசம் ihikhik வந்தாலே சந்தோஷம்
: ஹும்.. ஒம்பாடு உல்லாசம்.. எம்பாடு படு மோசம்
பெ: வெயிலுக்கு.. நிழல் கொடு
வெயிலுக்கு நிழல் கொடு.. மயிலுக்கு உடை கொடு.. மாமனே
: ஐயையோ.. இருக்கிற வேட்டியக் கொடுத்துட்டு தவிப்பது பாவமே
பெ: பஞ்சாங்கம் பார்க்காதே.. என்னங்கம் தாங்காதே.. நீரில் ஈரம் இல்லை

: வழி ஒண்ணுந் தெரியல்ல.. வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி.. குளிர்வது எனக்கடி.. ஏனடி
பெ: தேகம்
: ஹா..
பெ: உருகியதே
: ஹோ..
பெ: ஆடை
: ஹா..
பெ: உருவியதே
: ஹா..
பெ: நீரும் சூடு ஏற
அலைகளில் மிதக்குது.. நிலவொன்று குளிக்கிது.. கை கொடு
: ஹா.. வழி ஒண்ணுந் தெரியல்ல.. வயசுக்கு வரவில்ல நானடி
...

#183 விழியில் விழுந்து - அலைகள் ஓய்வதில்லை

படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: இளையராஜா & சசிரேகா

பெ2: ஸ க ம ப நி ஸா..
ஸா நி ப ம க ஸ..
மமபா பப பா.. கமப கமக ஸா..
நிநிஸ காக கஸஸா.. நிநிஸ காக மமபா..
ஸாஸ நிநி பாப மாம காக ஸாஸ நிநி ஸா..
: விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில்
&பெ: வந்துவிடு
பெ: அலைகள் உரசும் கரையில் இருப்பேன்.. உயிரைத் திருப்பித் தந்துவிடு
...

பெ: தனன னனன னனன னனன னனன னனன னனனா..
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்.. உயிரைத் திருப்பித் தந்துவிடு
தனன னனன னனன னனன னனன னனன னனனா..
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
...
: தகதோம் தகதோம் தகதோம் தகதோம்.. தகதகதகதகதோம்..
தகதோம் தகதோம் தகதோம் தகதோம்.. தகதகதகதகதோம்..
தகதோம் தகதோம் தகதோம் தகதோம்..
தகதோம் தகதோம் தகதோம் தகதோம்..
...

பெ: உன் வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால்..
ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆ..
உன் வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால்
அத்தனை ஜன்னலும் திறக்கும்
நீ சிரிக்கும்போது பௌர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும்
நீ மல்லிகைப் பூவைச் சூடிக் கொண்டால் ரோஜாவுக்குக் காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்

பெ: விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
...

பெ: விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
கல்வி கற்க நாளை செல்ல அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் ரெண்டில் ஒன்றை கரையில் தூக்கிப் போட்டான்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின்போது
அலையின் கரையில் காத்திருப்பேன்.. அழுத விழிகளோடு
எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்
...

#182 காதல் ஓவியம் - அலைகள் ஓய்வதில்லை

படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & ஜென்சி

ஆ.குழு: ஓம்.. சதமானம் பவதி சதாயுஷ் புருஷ
சதஸ்தேந்த்ரிய ஆயுஷ் வேதேந்திரியே ப்ரதி திஷ்டதி
பெ.குழு: ஓஓ ஓஓ ஓ.. ஓஓ.. ஓஓ ஓஓ ஓ.. ஓஓ.. ஓஓ ஓஓ ஓ..
...
பெ: காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம்.. பேரின்பம்.. தெய்வீகம்
: ஓஹோஓ.. காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம்.. பேரின்பம்.. தெய்வீகம்
பெ: ஓஓ.. காதல் ஓவியம் பாடும் காவியம்
...

பெ.குழு: லல்லால லலலல லா.. லல்லால லலலல லா..
லாலலாலா.. லாலலாலா.. லாலலாலா.. லாலலாலா.. லா..
...

: தேடினேன்.. ஓஓஓ.. என் ஜீவனே
தென்றலிலே மிதந்து வரும் தேன் மலரே
பெ: நீயென் நாயகன்.. காதல் பாடகன்
அன்பில் ஓடி.. இன்பம் கோடி என்றும் காணலாம்

: காதல் ஓவியம் பாடும் காவியம்
பெ: தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
: என்றும் ஆனந்தம்.. பேரின்பம்.. தெய்வீகம்
பெ: ஓஓ.. காதல் ஓவியம் பாடும் காவியம்
...

பெ.குழு: ராரா.. ரார ராரரா.. ராரா.. ரார ராரரா..
ரரார ரரரர ரா.. ரர ரரரா.. ரர ரரரா..
...

பெ: தாங்குமோ என் தேகமே
மன்மதனின் மலர்க்கணைகள் தோள்களிலே
: மோகம் தீரவே வா என் அருகிலே
உள்ளம் கோயில்.. கண்கள் தீபம்.. பூஜை காணலாம்

பெ: காதல் ஓவியம் பாடும் காவியம்
: தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
பெ: என்றும் ஆனந்தம்.. பேரின்பம்.. தெய்வீகம்
: ஓஹோஓ..
&பெ: லாலாலாலலா.. லாலாலாலலா..
ம்ஹும்ஹும்ஹும்ஹும்.. ம்ஹும்ஹும்ஹும்ஹும்..
...

#181 புத்தம் புது காலை - அலைகள் ஓய்வதில்லை

படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்: எஸ்.ஜானகி

ஆஹாஹஹா.. ஆஹாஹஹா.. ஆஹாஹஹா.. ஆஹாஹா..
...

புத்தம் புது காலை.. பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுக ராகம் கேட்கும்.. எந்நாளும் ஆனந்தம்
புத்தம் புது காலை.. பொன்னிற வேளை
...

பூவில் தோன்றும் வாசம்.. அதுதான் ராகமோ
இளம்பூவை நெஞ்சில் தோன்றும்.. அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள்.. மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்.. அதிகாலையின் வரவேற்புகள்

புத்தம் புது காலை.. பொன்னிற வேளை
...

ஆஆஆஆ ஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆ..
...

வானில் தோன்றும் கோலம்.. அதை யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்ததோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது.. இசை பாடுது.. வழிந்தோடிடும் சுவை கூடுது

புத்தம் புது காலை.. பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுக ராகம் கேட்கும்.. எந்நாளும் ஆனந்தம்
லல்ல லல லா.. லாலல லா..
...

#180 தூங்காத விழிகள் ரெண்டு - அக்னி நட்சத்திரம்

படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி

பெ.குழு: ஓஓ.. ஓஓஓ ஓஓ ஓ..
ஓஓ ஓஓஓஓ.. ஓஓ ஓஓஓஓ.. ஓஓஓ..
...
பெ: தூங்காத விழிகள் ரெண்டு.. உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்.. பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது.. அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு.. உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
...

பெ.குழு: ம்ம்ம் ம்ம்.. ம்ம்ம் ம்ம்.. ம்ம்ம் ம்ம்.. ம்ம்ம் ம்ம்..
...

: மாமர இலை மேலே..
ஆஆஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ..
மாமர இலை மேலே மார்கழிப் பனி போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
மாமர இலை மேலே மார்கழிப் பனி போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
பெ: ராத்திரி பகலாக ஒரு போதும் விலகாமல்
ராஜனைக் கையேந்தித் தாலாட்டவோ
: நாளும் நாளும் ராகம் தாளம்
சேரும் நேரம் தீரும் பாரம்
பெ: ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ ஆ..

: தூங்காத விழிகள் ரெண்டு.. உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்.. பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது.. அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு.. உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
...

பெ.குழு: லல்லல்ல லலலல லா..
லல்லல்ல லாலல்லல்லா.. லல்லல்ல லாலல்லா..
...

பெ: ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலையென்னவோ
: ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேறும் கதையல்லவோ
பெ: மாதுளங்கனியாட.. மலராட.. கொடியாட
மாருதம் உறவாடும் கலை என்னவோ
: வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ
பெ: மேலும் மேலும் மோகம் கூடும்
: தேகம் யாவும் கீதம் பாடும்
பெ: ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
: ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ ஆ..

பெ: தூங்காத விழிகள் ரெண்டு
: உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
பெ: செம்பூமஞ்சம் விரித்தாலும்.. பன்னீரைத் தெளித்தாலும்
: ஆனந்தம் எனக்கேது.. அன்பே நீ இல்லாது
&பெ: தூங்காத விழிகள் ரெண்டு.. உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
...

#179 நின்னுக்கோரி வர்ணம் - அக்னி நட்சத்திரம்

படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: சித்ரா

நின்னுக்கோரி வர்ணம்.. வர்ணம்..
இசைத்திட என்னைத் தேடி வரணும்.. வரணும்
ஒரு கிளி தனித்திருக்க.. உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க.. இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே.. அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம்.. வர்ணம்..
இசைத்திட என்னைத் தேடி வரணும்.. வரணும்
...

உன்னைத்தான் சின்னப் பெண் ஏதோ கேட்க
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க
தொட்டுப்பார்.. கட்டிப்பார்.. தேகம் வேர்க்க
பூஜைக்காக வாடுது.. தேவன் உன்னைத் தேடுது
ஆசை நெஞ்சில் ஏங்குது.. ஆட்டம் போட்டுத் தூங்குது
உன்னோடு நான் ஓயாமல் தேனாற்றிலே நீராட நினைக்கையில்

நின்னுக்கோரி வர்ணம்.. வர்ணம்..
இசைத்திட என்னைத் தேடி வரணும்.. வரணும்
ஒரு கிளி தனித்திருக்க.. உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க.. இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே.. அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம்.. வர்ணம்..
இசைத்திட என்னைத் தேடி வரணும்.. வரணும்
...

பெண்ணல்ல.. வீணை நான்.. நீதான் மீட்டு
என்னென்ன ராகங்கள்.. நீதான் காட்டு
இன்றல்ல.. நேற்றல்ல.. காலம்தோறும்
உன்னோடு பின்னோடும் காதல் நெஞ்சம்
வண்ணப் பாவை மோகனம்.. வாடிப் போன தோரணம்
கன்னித் தோகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம்
உன் நியாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே தீயாகக் கொதிக்குது

நின்னுக்கோரி வர்ணம்.. வர்ணம்..
இசைத்திட என்னைத் தேடி வரணும்.. வரணும்
ஒரு கிளி தனித்திருக்க.. உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க.. இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே.. அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம்.. வர்ணம்..
இசைத்திட என்னைத் தேடி வரணும்.. வரணும்
...

#178 ரோஜாப்பூ ஆடி வந்தது - அக்னி நட்சத்திரம்

படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: எஸ்.ஜானகி

பெ.குழு: சா.. சாச்ச சாச்சா.. சா.. சாச்ச சாச்சா..
சா.. சாச்ச சாச்சா.. சா.. சசாச்சா சச்சசாச்சா..
பெ: ரோஜாப்பூ ஆடி வந்தது.. ராஜாவைத் தேடி வந்தது
பூவைக் கொஞ்சம் நீ சூடு.. பூவின் தேனில் நீராடு
பேசிப் பேசித் தீராது.. ஆசை என்றும் ஆறாது
லவ்.. லவ்.. என்பதா.. சொல்.. சொல்.. மன்மதா
சொன்னால் போதுமா.. தாகம் தீருமா
ரோஜாப்பூ ஆடி வந்தது.. ராஜாவைத் தேடி வந்தது
...

பெ.குழு: தூருரூருரூருரூ.. தூருரூருரு..
தூருரூரூரூ.. தூருரூரூரூ..
சா.. சாச்ச சாச்சா.. சா.. சசாச்சா சச்சசாச்சா..
பெ: நேற்று நீர் விட்டது.. இன்று வேர் விட்டது
நெஞ்சில் அம்மாடியோ.. நூறு பூப்பூத்தது
சின்னஞ்சிறு பருவம் இன்னும் கொதிப்பதோ
சொல்லிச் சொல்லிப் பொழுதை இன்னும் கழிப்பதோ
தொடு.. தொடு.. தொடாமல் நிலாவின் மேனி நாளெல்லாம் தேய்ந்ததே

பெ: ரோஜாப்பூ ஆடி வந்தது.. ராஜாவைத் தேடி வந்தது
...

பெ.குழு: சா.. சச்சா சா.. சா.. சச்சா சா..
...
பெ.குழு: சா.. சாச்ச சாச்சா.. சா.. சசாச்சா சச்சசாச்சா..
பெ: நீயும் அச்சம் விடு.. நூறு முத்தம் இடு
மீத மிச்சம் எடு.. மேலும் சொல்லிக் கொடு
அந்திப் பகல் இரவு சிந்தை துடிக்குது
அந்தப்புற நினைவில் சிந்து படிக்குது
இதோ.. இதோ.. உன்னாலே விடாமல் மோகம் வாட்டுது.. தாங்குமா

பெ: ரோஜாப்பூ ஆடி வந்தது.. ராஜாவைத் தேடி வந்தது
பூவைக் கொஞ்சம் நீ சூடு.. பூவின் தேனில் நீராடு
பேசிப் பேசித் தீராது.. ஆசை என்றும் ஆறாது
லவ்.. லவ்.. என்பதா.. சொல்.. சொல்.. மன்மதா
சொன்னால் போதுமா.. தாகம் தீருமா
ரோஜாப்பூ ஆடி வந்தது.. ராஜாவைத் தேடி வந்தது
...

#177 ஒரு பூங்காவனம் - அக்னி நட்சத்திரம்

படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: எஸ்.ஜானகி

ஒரு பூங்காவனம்.. புது மனம்
அதில் ரோமாஞ்சனம்.. தினம் தினம்
உலா வரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே
ஒரு பூங்காவனம்.. புது மனம்
...

நான் காலை நேரத் தாமரை
என் கானம் யாவும் தேன் மழை
நான் கால் நடக்கும் தேவதை
என் கோயில் இந்த மாளிகை
எந்நாளும் தென்றல் வந்து வீசிடும்
என்னோடு தோழி போல பேசிடும்
உலா வரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

ஒரு பூங்காவனம்.. புது மனம்
...

நான் வானவில்லை வேண்டினால்
ஓர் விலை கொடுத்து வாங்குவேன்
வெண் மேகக் கூட்டம் யாவையும்
என் மெத்தையாக்கித் தூங்குவேன்
சந்தோஷப் பூக்கள் எந்தன் சோலையில்
சங்கீதம் பாடும் அந்தி மாலையில்

உலா வரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

ஒரு பூங்காவனம்.. புது மனம்
உலா வரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே
ஒரு பூங்காவனம்.. புது மனம்
...