#33 கேளடி கண்மணி பாடகன் சங்கதி - புதுப்புது அர்த்தங்கள்


படம்: புதுப்புது அர்த்தங்கள்

இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

ம்ஹும்ஹும் ம்ஹும்ஹும்.. ஆஹஹா.. ஆஹஹா..
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீயிதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
ஆ ஆஆஆஆ ஆ.. நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
...

எந்நாளும்தானே தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான்
இந்நாளில்தானே நான் இசைத்தேனம்மா
எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்
கானல் நீரால் தீராத தாகம்
கங்கை நீரால் தீர்ந்ததடி
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை

கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீயிதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
...

நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்
நீயென்னைத் தாலாட்டும் தாயல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால்தானே உண்டானது
கால் போன பாதைகள் நான் போனபோது
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது

கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீயிதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
ஆ ஆஆஆஆ ஆ.. நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீயிதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
...

பாடும் நிலாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!!senyum

#32 சொர்க்கமே என்றாலும் - ஊரு விட்டு ஊரு வந்து

படம்: ஊரு விட்டு ஊரு வந்து
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி

: ஏ.. தந்தன தந்தன தந்தா..
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
...

பெ: ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ பாட்டும்
இங்கே ஏதும் கேட்கவில்லையே
: பாடும் குயில் சத்தம்.. ஆடும் மயில் நித்தம்
பார்க்க ஒரு சோலையில்லையே
பெ: வெத்தலைய மடிச்சு மாமன் அதைக் கடிச்சு
துப்ப ஒரு வழியில்லையே
: ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கிக் குளிச்சு
ஆட ஒரு ஓடையில்லையே
பெ: இவ்வூரு என்ன ஊரு.. நம்மூரு ரொம்ப மேலு
: அட ஓடும் பல காரு.. வீண் ஆடம்பரம் பாரு
பெ: ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு

: சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பெ: பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
: அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
...

பெ: தனதந்த தந்தன தந்தா.. தனதந்த தந்தன தந்தா..
தனதந்த தந்தன தந்தா.. தனதந்த தந்தன தந்தா..
தந்தான நாநா தனதந்த நாநா..
...

: மாடு கண்ணு மேய்க்க.. மேயிறதப் பாக்க
மந்தைவெளி இங்கு இல்லையே
பெ: ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட
அரச மர மேடை இல்லையே
: காளை ரெண்டு பூட்டி கட்டை வண்டி ஓட்டி
கானம் பாட வழியில்லையே
பெ: தோழிகளை அழைச்சு சொல்லிச் சொல்லி ரசிச்சு
ஆட்டம் போட முடியலையே
: ஒரு எந்திரத்தை போல அட இங்கே உள்ள வாழ்க்கை
பெ: இதை எங்கே போயி சொல்ல.. மனம் இஷ்டப்படவில்லை
: நம்மூரைப் போல ஊரும் இல்லை

பெ: சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
: அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பெ: பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
: சொர்க்கமே என்றாலும்
&பெ: அது நம்மூரைப் போல வருமா
: அட எந்நாடு என்றாலும்
&பெ: அது நம் நாட்டுக்கீடாகுமா
...

#31 நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம் - புதுப்பாட்டு

படம்: புதுப்பாட்டு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & சித்ரா

: நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்
நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்
காத்து.. குளிர் காத்து
கூத்து.. என்ன கூத்து
சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது
பாட்டுத்தான்.. புதுப்பாட்டுத்தான்
தனக்குத் தக்க கூட்டுத்தான்.. இணைஞ்சதொரு கூட்டுத்தான்
பாட்டுத்தான்.. புதுப்பாட்டுத்தான்
தனக்குத் தக்க கூட்டுத்தான்.. இணைஞ்சதொரு கூட்டுத்தான்
பெ: நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்
...

பெ: ஆத்தங்கரையோரம் பூத்திருக்கும் அழகுப் பூவாசம்
பாத்து மனசெல்லாம் பசித்திருக்கும் பல நாள் உன் நேசம்
: அடி ஆத்தி ஆத்தி மரம்.. அரும்பு விட்டு ஆரம் பூத்த மரம்
பெ: மாத்தி மாத்தி தரும்.. மனசு வச்சு மாலை போட வரும்
: பூத்தது பூத்தது பார்வை.. போர்த்துது போர்த்துது போர்வை
பெ: பாத்ததும் தோளில தாவ.. கோர்த்தது கோர்த்தது பூவை
: போட்டா.. கணை போட்டா.. கேட்டா பதில் கேட்டா
பெ: வழி காட்டுது பல சுகம் கூட்டுது வருகிற
: பாட்டுத்தான்.. புதுப்பாட்டுத்தான்
தனக்குத் தக்க கூட்டுத்தான்.. இணைஞ்சதொரு கூட்டுத்தான்

பெ: நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்
: ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்
பெ: பாத்து ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்
: ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்
...

: அழகா சுதி கேட்டு.. நீ நடக்கும் நடையில் ஜதி கேட்டு
படிப்பேன் பல பாட்டு.. தினம் நடக்கும் காதல் விளையாட்டு
பெ: இந்த மானே மரகதமே.. உன்னை நெனச்சு நானே தினம்தினமே
: பாடும் ஒரு வரமே.. எனக்களிக்க வேண்டும் புது ஸ்வரமே
பெ: பாத்தொரு மாதிரியாச்சு.. ராத்திரி தூக்கமும் போச்சு
: காத்துல கரையுது மூச்சு.. காவியமாகிடலாச்சு
பெ: பாத்து.. வழி பாத்து.. சேர்த்து.. உன்னை சேர்த்து
: அரங்கேத்துது மனசுல பூத்தது பூத்தது
பெ: பாட்டுத்தான்..
: ஏஹேஹே
பெ: புதுப்பாட்டுத்தான்.. தனக்குத் தக்க கூட்டுத்தான்
: ஏஹேஹேஹே
பெ: இணைஞ்சதொரு கூட்டுத்தான்

: நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்
பெ: ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்
: பாத்து ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்
பெ: ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்
: காத்து
பெ: குளிர் காத்து
: கூத்து
பெ: என்ன கூத்து
: சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது
பெ: பாட்டுத்தான்.. புதுப்பாட்டுத்தான்
: தனக்குத் தக்க கூட்டுத்தான்.. இணைஞ்சதொரு கூட்டுத்தான்
பெ: பாட்டுத்தான்.. புதுப்பாட்டுத்தான்
: தனக்குத் தக்க கூட்டுத்தான்.. இணைஞ்சதொரு கூட்டுத்தான்
...

#30 மலரே பேசு மௌன மொழி - கீதாஞ்சலி

படம்: கீதாஞ்சலி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & சித்ரா

பெ: ஆ.. ஆஆஆஆ ஆஆஆ..
ஆ.. ஆஆஆஆ ஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆ ஆ ஆ..
...
பெ: மலரே பேசு மௌன மொழி
மனம்தான் ஓடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே பேசு மௌன மொழி.. மலரே
...

: வாசனைப் பூக்கள் வாய் வெடிக்க
ஆயிரம் ஈக்கள் தேன் குடிக்க
பெ: நானொரு பூவோ நீ பறிக்க
நால்வகை குணமும் நான் மறக்க
: மெதுவாய்க் குலுங்கும் மாங்கனியே
கிடைத்தால் விடுமோ ஆண்கிளியே
பெ: மடிமேல் கொடிபோல் விழுந்தேனே

: மலரே பேசு மௌன மொழி
மனம்தான் ஓடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே பேசு மௌன மொழி.. மலரே
...

பெ: ஏந்திய வீணை நானிருக்க
ஏழிசை மீட்ட நீயிருக்க
: ராத்திரி நேர ராகமிது
பூவொடு காற்று பாடுவது
பெ: இதழால் இனிமேல் நீ எழுதும்
கதைதான் படிப்பேன் நாள் முழுதும்
: படித்தால் எனக்கும் இனிக்காதோ

பெ: மலரே பேசு மௌன மொழி
: மனம்தான் ஓடும் ஆசை வழி
பெ: வாசலைத் தேடி ஓடி வந்தேன்
: வாலிப ராகம் பாடி வந்தேன்
பெ: மலரே பேசு மௌன மொழி
&பெ: மலரே
...

இசை ஞானியின் பிறந்தநாளின்று!!senyum நம் ராஜா என்றும் நம்மிடையே வாழ இறைவனை வேண்டுவோம்!!doa