#256 சேலை கட்டும் பெண்ணுக்கொரு - கொடி பறக்குது

படம்: கொடி பறக்குது
இசை: ஹம்சலேகா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

பெ: ஓஹோஹோ ஓஹோஹோஹோ.. ஓஹோஹோ ஓஹோஹோ..
: ஓஹோஹோ ஓஹோஹோஹோ.. ஓஹோஹோ ஓஹோஹோ..
...
பெ: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா.. கண்டவர்கள் சொன்னதுண்டா
: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டு கொண்டேன்.. கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
பெ: வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள்
: பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
பெ: இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
: இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை
பெ: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா.. கண்டவர்கள் சொன்னதுண்டா
...

பெ: ஓ.. ஓஓஓ ஓஓ.. கூந்தலுக்குள்ளே ஒரு வீடு கட்டுங்கள்
காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்
: ஆ.. ஆஆஆ.. ஆஆ.. ஆயிரம் உண்டு என்னோடு மச்சங்கள்
ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள்
பெ: ஆனந்தச் சங்கமத்தில் அச்சம் வருமா
பூக்களைக் கிள்ளுவதால் ரத்தம் வருமா
: இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
பெ: இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை

: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு
கண்டு கொண்டேன்.. கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
...

: ஓ.. ஓஓஓ ஓஓ.. காதல் வெண்ணிலா கையோடு வந்ததோ
கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ
பெ: ஓ.. ஓஓஓ ஓஓ.. மோக மந்திரம் கண்ணோடு உள்ளதோ
மூடு மந்திரம் பெண்ணோடு உள்ளதோ
: மீனுக்குத் தூண்டிலிட்டால் யானை வந்தது
மேகத்தைத் தூது விட்டால் வானம் வந்தது
பெ: இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
: இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை

பெ: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா.. கண்டவர்கள் சொன்னதுண்டா
: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு
கண்டு கொண்டேன்..  ihikhikகண்களுக்குள் பள்ளி கொண்டேன்
பெ: வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள்
: பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
பெ: இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
: இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை
...

#255 ஓ.. காதல் என்னைக் காதலிக்கவில்லை - கொடி பறக்குது

படம்: கொடி பறக்குது
இசை: ஹம்சலேகா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா
பெ: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் என்னைக் காதலிக்கவில்லை
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் என்னை ஆதரிக்கவில்லை
கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன்
உன்னை எண்ணியே பூத்திருக்கிறேன்
தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..
...

: தேவி.. வான் சொல்லியா மேகம் வரும்.. நீ சொல்லியா காதல் வரும்
பெ: தேவா.. நான் கேட்பது காதல் வரம்.. நீ தந்தது கண்ணீர் வரம்
: பெண்ணழகு முழுதும் கற்பனையென்று உறுதி மொழிகிறேன்
பெ: என்னழகு உனது அர்ப்பணம் என்று எழுதிவிடுகிறேன்
: போதும் போதும் பெண்ணே.. புன்னகை என்பது காதலின் பல்லவி
I love you.. I love you.. I love you..
...

பெ: ஆஹா.. என் வானமோ ரெண்டானது.. நீ சொல்லியே ஒன்றானது
: ஓஹோ.. கள்ளென்பது பாலானது.. நான் காணவே நாளானது
பெ: என் புடவை உனது கட்டளை கேட்டு  ihikhikஇடையை மறந்தது
: என் விழிகள் உனது கண்களைக் கண்டு  ihikhik இமைய மறந்தது
பெ: தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..

: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் உன்னைக் காதலித்ததம்மா
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் உன்னை ஆதரித்ததம்மா
: கன்னி வெண்ணிலா
பெ: லாலலாலலா..
: கையில் வந்தது
பெ: லாலலாலலா..
: கையில் வந்ததும்
பெ: லாலலாலலா..
: காதல் வந்தது
பெ: லாலலாலலா..
: தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..
...

#254 ஓ.. காதல் என்னைக் காதலிக்கவில்லை - கொடி பறக்குது

படம்: கொடி பறக்குது
இசை: ஹம்சலேகா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்

பெ: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் என்னைக் காதலிக்கவில்லை
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் என்னை ஆதரிக்கவில்லை
கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன்
போகும் பாதையில் பூத்திருக்கிறேன்
தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் என்னைக் காதலிக்கவில்லை
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் என்னை ஆதரிக்கவில்லை
...

பெ: கைகள் ஏந்தி வந்தேன்.. கவனம் இல்லையா
கண்ணில் ஈரம் கண்டும் கருணையில்லையா
: பாலைப் போலக் கள்ளும் வெள்ளையில்லையா
பருகிப் பார்க்கச் சொன்னால் பாவம் இல்லையா
பெ: நான் இன்று சீதையென்று தீக்குளிப்பேன் உன்னாலே
பெண் பாவம் சாபம் என்று காண வேண்டும் பின்னாலே
: போதும் போதும் பெண்ணே.. புன்னகை என்பது காதலின் பல்லவி
I love you.. I love you.. I love you..
: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் உன்னைக் காதலித்ததம்மா
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் உன்னை ஆதரித்ததம்மா
...

: என்னைக் கொல்லத்தானா இளமை வந்தது
எந்த நாளிலம்மா பருவம் வந்தது
பெ: புருவம் வந்தபோதே பருவம் வந்தது
புடவை மாற்றும்போது கர்வம் வந்தது
: ஶ்ரீராமன் வில் வளைத்து சீதை கொண்டான் அப்போது
என் சீதை வில் வளைத்து ராமன் கொண்டாள் இப்போது
பெ: தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..

: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் உன்னைக் காதலித்ததம்மா
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் உன்னை ஆதரித்ததம்மா
பெ: கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன்
போகும் பாதையில் பூத்திருக்கிறேன்
: தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
பெ: I love you..
: I love you..
பெ: I love you..
...