#28 காக்கிச் சட்டை போட்ட மச்சான் - சங்கர் குரு

படம்: சங்கர் குரு
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.பி.ஷைலஜா

: ஏஹே.. ஏஹே..
பெ: ஏஹே.. ஏஹே..
...
பெ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசப் பத்த வச்சான்
எங்க வீட்டுத் திண்ணையில இதுக்குத்தானா குத்த வச்சான்
: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசப் பத்த வச்சான்
ஒங்க வீட்டுத் திண்ணையில அதுக்குத்தானே குத்த வச்சான்
பெ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
...

பெ: அந்திக்குப் பின்னே சந்திப்பதெங்கே
சிந்திச்சுப் பார்த்தேன் ஒண்ணுமில்ல
: ஆத்துக்கு வடக்க ஐயப்பந்தோப்பு
அதுக்குள்ள வாடி யாருமில்லே.. ஏஹே.. ஏஹே..
பெ: ஹே.. தோப்புக்குள்ள சத்தமிருக்கு.. ஆமா.. நெஞ்சில் அச்சமிருக்கு
: மானே என்ன அச்சம் ஒனக்கு.. மாமன் கிட்ட மச்சமிருக்கு

பெ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
: கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
...

: விளக்கை அணைச்சா விவரம் என்ன
ஒத்திகை பார்த்தா தப்பு இல்லே
பெ: ஒத்திகை இங்கே உண்மையா போனா
கல்யாணம் நடத்தும் நம்ம புள்ள.. ஏஹே.. ஏஹே..
: ஏய்.. இன்னும் என்னை நம்பவில்லையா
பெ: ம்ஹும்..
: கன்னம் தர எண்ணமில்லையா
பெ: தாலி இன்னும் செய்யவில்லையா.. சேதி சொல்லத் தேதி சொல்லய்யா

: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
பெ: ஆ.. கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
: பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசப் பத்த வச்சான்
பெ: எங்க வீட்டுத் திண்ணையில இதுக்குத்தானா குத்த வச்சான்
: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
பெ: கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
...

#27 ஜிங்கிடி ஜிங்கிடி - குரு சிஷ்யன்

படம்: குரு சிஷ்யன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா

: ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு.. இங்க என்னடி உன் மனக்கணக்கு
சொல்லடி சொல்லடி எனக்கு.. இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு
சந்தேகம் வரலாமா.. காதல் கிளிக்கு தேகம் சுடலாமா
சந்தேகம் வரலாமா.. காதல் கிளிக்கு தேகம் சுடலாமா
ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு.. இங்க என்னடி உன் மனக்கணக்கு
ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு..
...

பெ: அரும்பு மீசை முகத்தில் வளர்ந்தால்
எங்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்குது
சிறுகச்சிறுக அருகில் நெருங்கி
கிறுகிறுக்கப் பாட்டும் பாடுது
அரும்பு மீசை முகத்தில் வளர்ந்தால்
எங்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்குது
சிறுகச்சிறுக அருகில் நெருங்கி
கிறுகிறுக்கப் பாட்டும் பாடுது
: ஏ.. கொஞ்சிக் கொஞ்சி நான் கொண்டாடிடும்
என் வஞ்சிக் கொடி நீ மிஞ்சாதடி
சிந்தாதடி இங்கு சில்லறைய
என் சிந்தாமணி.. அது செல்லாதடி
பெ: ஆண்களுக்குத்தான் இங்கு என்ன இருக்கு
நல்ல பெண்ணைத் தவிர இந்த உலகத்திலே
: அதைச் சொல்லாதே சொர்ணக் கிளியே

பெ: ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு.. அட என்ன இங்கு உந்தன் கணக்கு
சொல்லிடு சொல்லிடு எனக்கு.. இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு
என் வீர மகராஜா அடடடட ஊரைச் சுத்தலாமா
என் வீர மகராஜா அடடடட ஊரைச் சுத்தலாமா
...

: துரத்தித் துரத்தி விரட்டிப் பிடிக்கும்
பழக்கம் என்னைச் சேர்ந்ததில்லையே
வளைத்துப் பிடித்து எடுத்து அணைத்து
பெண்ணைக் கெடுக்கும் எண்ணம் இல்லையே.. ஹோய்
துரத்தித் துரத்தி விரட்டிப் பிடிக்கும்
பழக்கம் என்னைச் சேர்ந்ததில்லையே
வளைத்துப் பிடித்து எடுத்து அணைத்து
பெண்ணைக் கெடுக்கும் எண்ணம் இல்லையே
பெ: ஊர்க்காவலா நான் உன் காதலி
நீ ஊர் மேயவா உந்தன் பின்னால் வந்தேன்
காதல் கிளி எந்தன் காவல் உண்டு
சிறு மோதல் என்றால் இங்கு ரெண்டில் ஒன்று
: பாமாவுக்கு நான் கண்ணனடி
நல்ல மாமி வீட்டு மகராஜனடி
என்னைச் சீண்டாதே செல்லக் கிளியே

பெ: ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு.. அட என்ன இங்கு உந்தன் கணக்கு
: அட சொல்லடி சொல்லடி எனக்கு.. இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு
பெ: என் வீர மகராஜா அடடடட ஊரைச் சுத்தலாமா
: சந்தேகம் வரலாமா.. காதல் கிளிக்கு தேகம் சுடலாமா
பெ: ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு.. அட என்ன இங்கு உந்தன் கணக்கு
: அட ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு..
...

#26 ஹே.. ஐ லவ் யூ - உன்னை நான் சந்தித்தேன்

படம்: உன்னை நான் சந்தித்தேன்
இசை: இளையராஜா

பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & வாணி ஜெயராம்

பெ: ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
: அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை எழுது.. மெல்ல எழுது
ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
...

பெ: பசும்புல் பாய்கள் விரிக்கும்.. பனியில் பூக்கள் குளிக்கும்
இதயமே மதுவிலே நனையுதே
: இதுதான் மாலை விருந்து.. மலரே நீயும் அருந்து
இரவிலே மயங்கலாம் நிலவிலே
பெ: காதோரம் மெல்ல கூறும் சேதி தேன் போலே பாயாதோ
: நீராடும் வண்ணப் பூவும் நாளை பூ மஞ்சம் போடாதோ
&பெ: லா.. லலலா.. லலலா.. லா..

: ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
பெ: அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை எழுது.. மெல்ல எழுது
...

: துகிலோ மெல்ல விலகும்.. கரமோ தொட்டுப் பழகும்
சுகத்திலே கனவுகள் வளருதே
பெ: முகிலோ வானில் மிதக்கும்.. மலையோ முத்தம் கொடுக்கும்
இயற்கையும் காதலால் மயங்குதே
: தேனூறும் கன்னிப் பூவைச் சூடும் பூங்காத்தும் நான்தானே
பெ: போராடும் பள்ளிக்கூடம் தேடும் பூச்செண்டு நான்தானே
&பெ: லா.. லலலா.. லலலா.. லா..

பெ: ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
: அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை எழுது.. மெல்ல எழுது
&பெ: ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
...

#25 தில் தில் தில் தில் மனதில் - மெல்லத் திறந்தது கதவு

படம்: மெல்லத் திறந்தது கதவு
இசை: இளையராஜா & எம்.எஸ்.விஸ்வநாதான்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா

: தில் தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் தல் காதல்..
லவ் லவ் லவ்..
...
: தில் தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் தல் காதல்
ஆஹா.. தில் தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் தல் காதல்
பெ: ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
: ஆடல் பாடல் கூடல்
பெ: ஆ.. தில் தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் தல் காதல்
...

பெ: வளர்ந்த நாள் முதல் கார்குழலும் அழைக்குதே உனைப் பூச்சூட
: மயக்கமேனடி பூங்குயிலே.. தவிக்கிறேனடி நான் கூட
பெ: விளக்கு வைத்தால் துடித்திருப்பேன்.. படுக்கையில் நான் புரண்டிருப்பேன்
: கைகள் படாத இடந்தான் இப்போது
ஆசை விடாத சுகந்தான் அப்போது
பெ: ஏக்கம் ஏதோ கேட்கும்

: ம்.. தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் காதல்
பெ: ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
: ஆடல் பாடல் கூடல்
பெ: ஆ.. தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் காதல்
...

: மழைக்கு ஏங்கிய மாந்தளிரே.. உனக்கு நான் சிறு தூறல்தான்
பெ: வியர்த்து வாடிய மெய் சிலிர்க்க.. உனக்கு நான் மலைச்சாரல்தான்
: அடுத்த கட்டம் நடப்பதெப்போ.. எனக்கு உன்னைக் கொடுப்பதெப்போ
பெ: மாலையிடாமல் வசந்தம் வராது
வேளை வராமல் பெண் உன்னைத் தொடாது
: போதும் போதும் ஊடல்

பெ: ஆ.. தில் தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் தல் காதல்
: ஆஹா.. தில் தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் தல் காதல்
பெ: ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
: ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
பெ: ஆடல் பாடல் கூடல்
...

#24 தெய்வீக ராகம் - உல்லாசப் பறவைகள்

படம்: உல்லாசப் பறவைகள்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜென்சி

பெ.குழு: ஏஏ.. ஓஓ.. ஏஏ.. ஓஓ..
ஏஏ.. ஓஓ..
பெ: தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்.. இள நெஞ்சங்கள் வாடும்
பெ.குழு: ஏஏ.. ஓஓ..
பெ: தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்
...

பெ: செந்தாழம் பூவைக் கொண்டு சிங்காரம் பண்ணிக் கொண்டு
செந்தூரப் பொட்டும் வச்சு சேலாடும் கரையும் நின்றேன்
பாராட்ட வா.. சீராட்ட வா..
நீ நீந்த வா என்னோடு.. மோகம் தீருமே
பெ.குழு: ஏஏ.. ஓஓ..

பெ: தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்.. இள நெஞ்சங்கள் வாடும்
...

பெ: தழுவாத தேகம் ஒன்று தணியாத மோகம் கொண்டு
தாலாட்டத் தென்றல் உண்டு.. தாளாத ஆசை உண்டு
பூ மஞ்சமும் தேன் கிண்ணமும்
நீ தேடி வா.. ஒரே ராகம் பாடியாடுவோமா
பெ.குழு: ஏஏ.. ஓஓ..

பெ: தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்.. இள நெஞ்சங்கள் வாடும்
பெ.குழு: ஏஏ.. ஓஓ.. ஏஏ.. ஓஓ..
...

#23 தேவாம்ருதம் ஜீவாம்ருதம் - மூன்று முகம்

படம்: மூன்று முகம்
இசை: சங்கர்-கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்

: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
துறவறம் என்ன சுகம் தரும்
என்றும் பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்
&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
: தீவானா
&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
பெ: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
துறவறம் என்ன சுகம் தரும்
என்றும் பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்
&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
: தீவானா
&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
...

: இதம் பதம் சுகமாகலாம்.. இதழ் தரும் இனிய மதுவில்
ஜபம் தவம் இனியேதடி.. மனம் தினம் உனது மடியில்
பெ: இதை விடவா இன்பலோகம்.. இதுவல்லவா ராஜ யோகம்
இதை விடவா இன்பலோகம்.. இதுவல்லவா ராஜ யோகம்
உற்சாகம் உல்லாசம் உண்டாகும் பெண்ணாலேதான்

: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
பெ: சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
: எவ்ரிபடி..
&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
: தீவானா
&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
...

: ஷாபரபரிபரப...
பெ: பாபாபா..
...

பெ: தளர் நடை தடுமாறுதே.. தளிர் இடை தழுவத் தழுவ
தணல் சுடும் நிலையானதே.. விரல் நகம் பதியப் பதிய
: மனநிலையை மாற்றி வைத்தாய்.. புதுக் கனலை ஏற்றி வைத்தாய்
மனநிலையை மாற்றி வைத்தாய்.. புதுக் கனலை ஏற்றி வைத்தாய்
தொட்டாலும் பட்டாலும் மின்சாரம் பாய்கின்றதே

பெ: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
: சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
பெ: துறவறம் என்ன சுகம் தரும்
: என்றும் பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்.. கமான்..
,பெ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
: தீவானா
,பெ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
ஆ: தீவானா
,பெ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
: தீவானா
,பெ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
...

#22 சின்னப் பொண்ணு சேலை - மலையூர் மம்பட்டியான்

படம்: மலையூர் மம்பட்டியான்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி

: சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
எங்கே மாராப்பு.. மயிலே நீ போ.. வேணாம் வீராப்பு
பெ: சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
கையே மாராப்பு.. அருகே நீ வா.. வேணாம் வீராப்பு
...

பெ: நீர் போகும் வழியோடுதான் போகும் என் சேலை
நீ போகும் வழி தேடி வருவேனே பின்னால
: வழி தெரியாத ஆறு இது
இத நம்பித்தானா ஓடுவது
பெ: புது வெள்ளம் சேரும்போது வழியென்ன பாதையென்ன
காத்தாகி வீசும்போது திசையென்ன தேசம் என்ன
: மனசத் தாழ்போட்டு மயிலே நீ போ.. வேணாம் விளையாட்டு
பெ: ஆஹ்ஹா.. சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
கையே மாராப்பு..
: மயிலே நீ போ.. வேணாம் வீராப்பு
...

பெ: ஓஹோஹோஹோ.. ஓஓஹோஹோ ஹோஹோ..
ஓ ஓஓஓ ஓ ஓஓஓ..
...

: என் மேல நீ ஆசை கொண்டாலும் தப்பில்ல
என்றாலும் குயிலுக்கு நின்றாட கொப்பில்ல
பெ: நீ தந்த தாலி முடிஞ்சு வச்சேன்
உன்னை நம்பித்தானே ஒளிச்சு வச்சேன்
: பொல்லாப்பு வேணாம் புள்ள.. பூச்சூடும் காலம் வல்ல
நான் தூங்கப் பாயும் இல்லை.. நீ வந்தா நியாயம் இல்ல
பெ: வேணாம் கூப்பாடு.. அருகே நீ வா.. ரோசாப் பூச்சூடு..

: சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
பெ: நாநா நாநாநா.. லாலா லா லா.. லாலா லாலாலா
...

#21 தங்கச் சங்கிலி மின்னும் - தூறல் நின்னு போச்சு

படம்: தூறல் நின்னு போச்சு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி

பெ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
மலர் மாலை தலையணையாய்.. சுகமே பொதுவாய்
ஒரு வாய் அமுதம் மெதுவாய்ப் பருகியபடி
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
...

: காவல் நூறு மீறி காதல் செய்யும் தேவி
உன் சேலையில் பூவேலைகள்.. உன் மேனியில் பூஞ்சோலைகள்
பெ: அந்திப்பூ விரியும்.. அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்
இவளின் கனவு கனியும் வரையில் விடியாது திருமகள் இரவுகள்

: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
...

பெ:ஆடும் பொம்மை மீது ஜாடை சொன்ன மாது
: லாலா லாலலாலா.. லாலலால லாலா..
பெ: தன்னோடுதான் போராடினாள்.. வேர்வைகளில் நீராடினாள்
: லாராரரா.. ராராரரா.. ராராரரா.. ராராரரா..
அன்பே ஆடை கொடு.. எனை அனுதினம் அள்ளிச் சூடி விடு
பெ: இதழில் இதழால் ஒரு கடிதம் எழுது.. ஒரு பேதை உறங்கிட மடி கொடு

: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
பெ: மலர் மாலை தலையணையாய்.. சுகமே பொதுவாய்
ஒரு வாய் அமுதம் மெதுவாய்ப் பருகியபடி
&பெ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
...

#20 பூபாளம் இசைக்கும் - தூறல் நின்னு போச்சு

படம்: தூறல் நின்னு போச்சு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & உமா ரமணன்

: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பெ: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
...

: மாலை அந்தி மாலை.. இந்த வேளை மோகமே
மாலை அந்தி மாலை.. இந்த வேளை மோகமே
பெ: நாயகன் ஜாடை நூதனமே.. நாணமே பெண்ணின் சீதனமே
: மேக மழை நீராட.. தோகை மயில் வாராதோ
பெ: தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது
நநநந நந நநநந நா..

: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
...

பெ: பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா
பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா
: மன்மதன் கோயில் தோரணமே.. மார்கழித் திங்கள் பூ முகமே
பெ: நாளும் இனி சங்கீதம்.. பாடும் இவள் பூந்தேகம்
: அம்மம்மா.. அந்த சொர்க்கத்தில் சுகம்
நநநந நந நநநந நா..

பெ: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
...

#19 அழகிய கண்ணே உறவுகள் நீயே - உதிரிப் பூக்கள்

படம்: உதிரிப் பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

அழகிய கண்ணே.. உறவுகள் நீயே
நீ எங்கே.. இனி நான் அங்கே
என் சேயல்ல.. தாய் நீ
அழகிய கண்ணே.. உறவுகள் நீயே
...

சங்கம் காணாதது தமிழும் அல்ல
தனை அறியாதவள் தாயும் அல்ல
சங்கம் காணாதது தமிழும் அல்ல
தனை அறியாதவள் தாயும் அல்ல
என் வீட்டில் என்றும் சந்த்ரோதயம்
நான் கண்டேன் வெள்ளி நிலா

அழகிய கண்ணே.. உறவுகள் நீயே
...

சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
என் நெஞ்சம் என்றும் கண்ணாடிதான்
என் தெய்வம் மாங்கல்யம்தான்

அழகிய கண்ணே.. உறவுகள் நீயே
...

மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
நம் வீட்டில் என்றும் அலைமோதுது
என் நெஞ்சம் அலையாதது

அழகிய கண்ணே.. உறவுகள் நீயே
நீ எங்கே.. இனி நான் அங்கே
என் சேயல்ல.. தாய் நீ
அழகிய கண்ணே.. உறவுகள் நீயே
...

#18 அந்தி மழை பொழிகிறது - ராஜ பார்வை

படம்: ராஜ பார்வை
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

: அந்தி மழை பொழிகிறது.. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
அந்தி மழை பொழிகிறது.. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே.. மன்மத நாட்டுக்கு மந்திரியே
அந்தி மழை பொழிகிறது.. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
...
ஆ2: ஆ..
பெ: தேனில் வண்டு மூழ்கும்போது..
ஆ2: ஆ..
பெ: பாவம் என்று வந்தாள் மாது..
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கிக் கொண்டே தாகம் என்பாய்
: தனிமையிலே.. வெறுமையிலே.. எத்தனை நாளடி இளமையிலே
பெ: ஆ..
: கெட்டன இரவுகள்.. சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இளமையிலே
அந்தி மழை பொழிகிறது
பெ: ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
...

: தேகம் யாவும் தீயின் தாகம்
ஆ2: ஆ..
: தாகம் தீர நீதான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது
பெ: நெஞ்சு பொறு.. கொஞ்சம் இரு.. தாவணி விசிறிகள் வீசுகிறேன்
: ஆ..
பெ: மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் எனைப் பூசுகிறேன்
அந்தி மழை பொழிகிறது
: ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
பெ: ஆஆ ஆஆ.. சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே
அந்தி மழை பொழிகிறது.. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
...

#17 சந்தனக் காற்றே - தனிக்காட்டு ராஜா

படம்: தனிக்காட்டு ராஜா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

: சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா
சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா
காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை.. ஹோஹோய்.. நீங்காத ஆசை
பெ: சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா
காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை.. ஹோய் ஹோய்.. நீங்காத ஆசை
...

: நீர் வேண்டும் பூமியில்
பெ: நா நா நா நா
: பாயும் நதியே
பெ: த நா நா நா
: நீங்காமல் தோள்களில்
பெ: த நா நா நா
: சாயும் ரதியே
பெ: லலா லலா.. பூலோகம்.. தெய்வீகம்.. பூலோகம்
: ஆ.. மறைய மறைய
பெ: தெய்வீகம்
: ஆ.. தெரியத் தெரிய
பெ: வைபோகம்தான்
&பெ: த நந நந நந நந நந நந நந நந

பெ: சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா
: காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை.. ஹோஹோய்.. நீங்காத ஆசை
பெ: சந்தனக் காற்றே
: செந்தமிழ் ஊற்றே
பெ: சந்தோஷப் பாட்டே வா வா
...

பெ: கோபாலன் சாய்வதோ
: நா நா நா நா
பெ: கோதை மடியில்
: நா நா நா நா
பெ: பூ பாணம் பாய்வதோ
: நா நா நா நா
பெ: பூவை மனதில்
: நா நா நா நா.. பூங்காற்றும்.. சூடேற்றும்.. பூங்காற்றும்
பெ: ஆ.. தவழத் தவழ
: சூடேற்றும்
பெ: ஆ.. தழுவத் தழுவ
: ஏகாந்தம்தான்
&பெ: த நந நந நந நந நந நந நந நந

பெ: சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா
: காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை.. ஹோஹோய்.. நீங்காத ஆசை
பெ: சந்தனக் காற்றே
: செந்தமிழ் ஊற்றே
&பெ: சந்தோஷப் பாட்டே வா வா
...

#16 ஆனந்த தாகம் உன் கூந்தல் - வா இந்தப் பக்கம்

படம்: வா இந்தப் பக்கம்
இசை: ஷ்யாம்
பாடியவர்கள்: தீபன் சக்கரவர்த்தி & எஸ். ஜானகி

: ஆனந்த தாகம் உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
நாணம் தோற்குமே
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே
பெ: ஆனந்த தாகம் என் கூந்தல் பூக்கள் தீர்க்குமோ
நாணம் தோற்குமோ
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமோ
...

: உண்மையில் என் மயில் ஆடுமுன்
பெ: ஆடுமுன்..
: பொன் மழைக்காலம் போய்விடும்
பெ: போகட்டும்..
: ஆசை ஆறி விட நேர்ந்திடும்
பெ: நேருமோ..
ராத்திரி அலைகள் ஓயட்டும்
: ஓயுமோ..
பெ: மூத்தவர் தலைகள் சாயட்டும்
: சாயுமோ..
பெ: தீபத்தின் விழிகள் மூடட்டும்
: மூடுமோ..
ஆடை கொடு
பெ: ஆளை விடு
: தேகம் தொடு
பெ: போதும் விடு
: தாகம் ஊறுதே
பெ: வளைக்கரம் ஒலிக்கையில் மானம் போகுதே

: ஆனந்த தாகம்
...

பெ: கன்னியின் மேனி வேர்க்குதே
: ஏனம்மா..
பெ: ஜன்னலின் கம்பி பார்க்குதே
: அட ராமா..
பெ: பேசும் ஓசையொன்று கேட்குதே
: கேட்குமோ..
திரிகளை விரல்கள் தூண்டுதே
பெ: தூண்டாதே..
: அணைகளை வெள்ளம் தாண்டாதே
பெ: தாண்டாதே..
: ஆசை நாகம் வந்து தீண்டுதே
பெ: தீண்டாதே..
நாணம் வந்து ஊர்கின்றது
: தீயில் விஷம் சேர்கின்றது
பெ: கண்கள் மூடுதே
: அணைக்கையில் கவிக்குயில் ஊமை ஆனதே

: ஆனந்த தாகம்
பெ: லாலால லாலா..
: உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
பெ: லாலால லாலா லாலலா..
: நாணம் தோற்குமே
பெ: லாலா லாலலா..
: அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே
பெ: லாலா லாலலா..
: நேரம் பார்க்குமே
பெ: ஆஆ ஆஅஆ..
: நேரம் பார்க்குமே
பெ: லாலா லாலலா..
: நேரம் பார்க்குமே
பெ: லாலா லாலலா..
...