#313 அன்பே ஆருயிரே - செவ்வந்தி

பாட்டுத் தலைவனை அவர் நினைவு நாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: செவ்வந்தி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்



அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
உன்னைப் பார்ப்பதற்கே.. உயிரே.. உருகுது என் மனமே
...
அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
உன்னைப் பார்ப்பதற்கே.. உயிரே.. உருகுது என் மனமே
உன்னைப் பார்ப்பதற்கே.. உயிரே.. உருகுது என் மனமே
ஜீவன் ஓயுமுன்னே வருவேன்
ஜீவன் ஓயுமுன்னே நான் வருவேன் உன்னிடமே
அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
...

நெஞ்சம் அழிந்தாலும் உண்மைக் காதல்
நேசம் அழியாது பெண் மானே
உன்னை நினைத்தே நான் ஓடாய்த் தேய்ந்தே
உருவம் குலைந்தேதான் போனேனே
என் காதலின் சின்னமே.. ஏங்காதே என் அன்னமே
மண்ணில் நானிங்கே மறைந்தாலும்
மயிலே உன் எண்ணம் மறையாது
கண்ணே என் தேகம் சாய்ந்தாலும்
காற்றாய் உனைத் தேடி வருவேனே

அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
...

தீபம் இல்லாத கோயில் போலே
தினமும் தவித்தேனே நானிங்கே
பூக்கள் இல்லாத சோலை போலே
பொழுதே.. பூங்காற்றே நீ அங்கே
உனக்காகவே நானுமே உயிர் வாழ்கிறேன் இன்னுமே
இனியும் சுமை தாங்க முடியாது
எந்தன் உயிர்க்கூடு தாங்காது
உன்னை நான் வந்து பார்க்காமல்
உருகும் என் மூச்சு போகாது

அன்பே ஆருயிரே..
உன்னைப் பார்ப்பதற்கே.. உயிரே.. உருகுது என் மனமே
ஜீவன் ஓயுமுன்னே நான் வருவேன் உன்னிடமே
ஜீவன் ஓயுமுன்னே நான் வருவேன் உன்னிடமே
அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
...

#312 வள்ளி வள்ளி என வந்தான் - தெய்வ வாக்கு

படம்: தெய்வ வாக்கு
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: இளையராஜா & எஸ். ஜானகி

: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
சொல்லித் தரச் சொல்லிக் கேட்டு தினமும்
சொல்லித் தந்த சிந்து பாடினான்
வல்லி இன்பவல்லியென்று தினமும்
முல்லைச் சரம் கொண்டு சூடினான்
பெ: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்.. ஹோஓ..
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
...

: சொல்லால் சொல்லாதது காதல் சுகம் சொல்லில் நில்லாதது
பெ: கண்ணால் உண்டானது கைகள் தொட இந்நாள் ஒன்றானது
: வண்ணப் பூ.. வஞ்சிப் பூ.. வாய் வெடித்த வாசப் பூ
அன்புத் தேன் இன்பத் தேன் கொட்டுமா
பெ: இந்தப் பூ சின்னப் பூ.. கன்னிப் போகும் கன்னிப் பூ
வண்டுதான வந்துதான் கட்டுமா
: என்னை மீண்டும் கொஞ்சத் தூண்டும்
நாணல் போலத் தேகம் தன்னில் நாணம் என்னம்மா

பெ: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
சொல்லித் தரச் சொல்லிக் கேட்டு தினமும்
சொல்லித் தந்த சிந்து பாடினான்
வல்லி இன்பவல்லியென்று தினமும்
முல்லைச் சரம் கொண்டு சூடினான்
: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
...

பெ: வந்தாள் புல்லாங்குழல் வாங்கி அதை ஏந்தும் மன்னன் விரல்
: மன்னன் சொல்லும் கவி மங்கைக்கது காதல் நீலாம்பரி
பெ: அம்மம்மா.. அப்பப்பா.. இன்பம் தரும் கானங்கள்
எத்திக்கும் என்றைக்கும் தித்திக்கும்
: மங்கை நீ.. கங்கை நீ.. வெண்ணிலவின் தங்கை நீ
உன்னைத்தான் என் கண்கள் சந்திக்கும்
பெ: எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன்
உன்னையன்றி வேறு இங்கு யாரும் இல்லையே

: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
சொல்லித் தரச் சொல்லிக் கேட்டு தினமும்
சொல்லித் தந்த சிந்து பாடினான்
வல்லி இன்பவல்லியென்று தினமும்
முல்லைச் சரம் கொண்டு சூடினான்
பெ: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்.. ஹோஓ..
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
சொல்லித் தரச் சொல்லிக் கேட்டு தினமும்
சொல்லித் தந்த சிந்து பாடினான்
வல்லி இன்பவல்லியென்று தினமும்
முல்லைச் சரம் கொண்டு சூடினான்
: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
பெ: புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
...