#282 பூங்காற்று உன் பேர் சொல்ல - வெற்றி விழா

படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

: பூங்காற்று உன் பேர் சொல்லக் கேட்டேனே இன்று
பெ: நீரூற்று என் தோள் கொஞ்சப் பார்த்தேனே இன்று
: தீர்த்தக்கரை ஓரத்திலே
பெ: தேன் சிட்டுகள் உள்ளத்திலே
: கல்யாண வைபோகந்தான்
பெ: நீரூற்று என் தோள் கொஞ்சப் பார்த்தேனே இன்று
...
பெ.குழு: ராரா ராரா ரா.. ராரா.. ராரா ரா..
ராரா ராரா ரா.. ராரா ராரரா..
...

: மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு மோகப் பண் பாடுதே
மேலைக் காற்றோடு கைசேர்த்து நாணல் காதல் கொண்டாடுதே
பெ: ஆலம் விழுதோடு கிளிக் கூட்டம் ஆடும் காலம் இதுவல்லவா
ஈரச் சிறகோடு இசை பாடித் திரியும் நேரம் இதுவல்லவா
: ஏதேதோ எண்ணம் தோன்ற.. ஏகாந்தம் இங்கே
பெ: நான் காணும் வண்ணம் யாவும் நீதானே அன்பே
: வண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும்
பெ: ஆசைகள் ஈடேறக் கூடும்

: பூங்காற்று உன் பேர் சொல்லக் கேட்டேனே இன்று
...

பெ: ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன ஜீவன் உன்னோடுதான்
தேவி ஶ்ரீதேவி பூவாரம் சூட.. தேவன் என்னோடுதான்
: நீல வான் கூட நிறம் மாறிப் போகும்.. நேசம் நிறம் மாறுமா
கால காலங்கள் போனாலும் என்ன.. காதல் தடம் மாறுமா
பெ: ஓயாமல் உன்னைக் கொஞ்சும் ஊதாப்பூ வண்ணம்
: ராஜாவின்.. ihikhik முத்தம் கொள்ளும் ரோஜாப்பூ கன்னம்
பெ: வாடை தீண்டாத வாழைத் தோட்டம்
: ஆனந்த எல்லைகள் காட்டும்

: பூங்காற்று உன் பேர் சொல்லக் கேட்டேனே இன்று
பெ: நீரூற்று என் தோள் கொஞ்சப் பார்த்தேனே இன்று
: தீர்த்தக்கரை ஓரத்திலே
பெ: தேன் சிட்டுகள் உள்ளத்திலே
: கல்யாண வைபோகந்தான்
பூங்காற்று உன் பேர் சொல்லக் கேட்டேனே இன்று
...

#281 தத்தோம் தளாங்கு தத்தோம் - வெற்றி விழா

படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ: தத்தோம் தளாங்கு தத்தோம்.. தொட்டும் தொடாமல் தொட்டோம்
கனியைத் தாங்கும் கொடியைத் தாங்கு.. தகதோம்..
: தத்தோம் தளாங்கு தத்தோம்.. பட்டும் படாமல் பட்டோம்
மிருதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும்.. தகதோம்
தழுவட்டும் தழுவட்டும்.. இளவட்டம் இளவட்டம்..
பரவட்டும் பரவட்டும்.. இசை வெள்ளம் பரவட்டும்..
இமயத்தின் முடி மட்டும் இளமைதான் கொடி கட்டும்.. ஹோய்..
பெ: தத்தோம் தளாங்கு தத்தோம்.. தொட்டும் தொடாமல் தொட்டோம்
: தத்தோம் தளாங்கு தத்தோம்.. பட்டும் படாமல் பட்டோம்
...
&பெ: ருட்டுட்டுட் டுடுட்டுட்டு டுட்டுட்.. ருட்டுட்டுட் டுடுட்டுட்டுடு
ருட்டுட்டுட் டுடுட்டுட்டு டுட்டுட்.. ருட்டுட்டுட் டுடுட்டுட்டுடு
டுட்டுட்டுட் டுடுட்டுட்டு டுட்டுட் டுட்டுட்டுட் டுடுட்டுட்டுடு
டுட்டுட்டுட் டுடுட்டுட்டு டுட்டுட் டுட்டுட்டுட் டுடுட்டுட்டுடு
...

: இரவில் உன்னோடு நர்த்தனம்தான்.. இடையில் உண்டாகும் சத்தம்
உறவில் முன்னூறு கீர்த்தனம்தான்.. இதழ்கள் கொண்டாடும் முத்தம்
பெ: சுதந்திரம் தினம் தினந்தான்.. நிரந்தரம் சுகம் சுகந்தான்
நலம் பெறும் மனம் மனந்தான்.. வலம் வரும் நகர்வலந்தான்
: இணையத்தான் இணையத்தான்.. அணையத்தான் அணையத்தான்
பெ: ஒரு அத்தான் ஒரு அத்தான்.. உருகத்தான் உருகத்தான்
: திசையெட்டும் இசையெட்டும் தாளங்கள் முழங்கட்டும்.. ஹோய்

பெ: தத்தோம் தளாங்கு தத்தோம்.. தொட்டும் தொடாமல் தொட்டோம்
கனியைத் தாங்கும் கொடியைத் தாங்கு.. தகதோம்..
: தத்தோம் தளாங்கு தத்தோம்.. பட்டும் படாமல் பட்டோம்
மிருதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும்.. தகதோம்
தழுவட்டும் தழுவட்டும்.. இளவட்டம் இளவட்டம்..
பரவட்டும் பரவட்டும்.. இசை வெள்ளம் பரவட்டும்..
இமயத்தின் முடி மட்டும் இளமைதான் கொடி கட்டும்.. ஹோய் ஹோய் ஹோய்..
பெ: தத்தோம் தளாங்கு தத்தோம்.. தொட்டும் தொடாமல் தொட்டோம்
: தத்தோம் தளாங்கு தத்தோம்.. பட்டும் படாமல் பட்டோம்..
...
பெ.குழு: துதுத்துது.. துதுத்துது.. துதுத்துது.. துதுத்துது..
துத்தூ.. துத்தூ.. துத்தூ.. துத்தூ..
...

பெ: கழுவும் தண்ணீரில் நழுவிடுமே வலையில் சிக்காத மீன்கள்
தடைகள் இல்லாமல் தாவிடுமே நடைகள் கொண்டாடும் மான்கள்
: சிறையினில் பறவைகள்தான் சிறகினை விரித்திடத்தான்
பிறந்தது துணிச்சலும்தான்.. பறந்திடும் இருப்பிடம்தான்
பெ: இதயத்தின் துணிவைத்தான் குடி வைக்கும்.. குடி வைக்கும்
: எதிரிக்கும் புதிரிக்கும்.. வெடி வைக்கும்.. வெடி வைக்கும்
&பெ: திசையெட்டும் கொடி கட்டும் தாளங்கள் முழங்கட்டும்.. ஹோய்

: தத்தோம் தளாங்கு தத்தோம்
பெ: ஹா..
: பட்டும் படாமல் பட்டோம்
பெ: ஹா..
: மிருதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும்.. தகதோம்
பெ: ஹோய்.. தத்தோம் தளாங்கு தத்தோம்
: ஹெய்..
பெ: தொட்டும் தொடாமல் தொட்டோம்
: ஹா..
பெ: கனியைத் தாங்கும் கொடியைத் தாங்கு.. தகதோம்..
: தழுவட்டும் தழுவட்டும்.. இளவட்டம் இளவட்டம்..
பரவட்டும் பரவட்டும்.. இசை வெள்ளம் பரவட்டும்..
இமயத்தின் முடி மட்டும் இளமைதான் கொடி கட்டும்.. ஹோய்..
பெ: தத்தோம் தளாங்கு தத்தோம்.. தொட்டும் தொடாமல் தொட்டோம்
: தத்தத்.. தத்தோம் தளாங்கு தத்தோம்
பெ: தத்தத்..
: பட்டும் படாமல் பட்டோம்..
பெ: தத்தத்..
...

#280 மாருகோ மாருகோ மாருகயி - வெற்றி விழா

படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

பெ2: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
பெ1: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
பெ2: காசுகோ         பெ1: காசுகோ
பெ2: பூசுகோ           பெ1: பூசுகோ
பெ2: மாலையில் ஆடிக்கோ மந்திரம் பாடிக்கோ
பெ1: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
: கண்மணி.. பொன்மணி.. கொஞ்சு நீ.. கெஞ்சு நீ..
மாலையில் ஆடு நீ.. மந்திரம் பாடு நீ
ஆ.குழு: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
...

: சம்பா சம்பா அடி ரம்பா ரம்பா
இது சோம்பேறி பூஞ்சிரிப்பா
பெ1: கொம்பா கொம்பா இது வம்பா வம்பா
நீ கொம்பேறி மூக்கனப்பா.. ஹோய் ஹோய்
: ம்.. சும்மா சும்மா பொய் சொல்லாதம்மா உன் சிங்காரம் ஏங்குதம்மா
பெ1: ஹேய் கும்மா கும்மா அடியம்மா யம்மா உன் கும்மாளம் தாங்கிடுமா
: ஆசையாகப் பேசினால் போதாதம்மோய்
தாகத்தோடு மோகம் இன்னும் போகாதம்மா
பெ1: ஆத்திரம் காட்டினால் ஆகாதய்யா
அச்சத்தோடு நாணம் இன்னும் போகாதய்யா
: ஏத்துக்கடி என்னை சேர்த்துக்கடி
வாலிபம் வாடுது வெப்பமோ ஏறுது

ஆ.குழு&பெ.குழு: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
: குலு குலு
ஆ.குழு&பெ.குழு: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
பெ1: குலு குலு
: கண்மணி.. பொன்மணி.. கொஞ்சு நீ.. கெஞ்சு நீ..
பெ1: மாலையில் ஆடு நீ.. மந்திரம் பாடு நீ
&பெ1: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி

பெ.குழு: குலுலூ.. குலுலூ.. குலுலூ.. குலுலூ..
குலுகுலுகுலு.. குலுகுலுகுலு.. குலுகுலுகுலு.. குலுகுலுகுலு..
தனனா.. தனனா.. தனனா.. தனனா..
தனனா.. தனனா.. தனனா.. தனனா..
தனனா.. தனனா.. தனனா.. தனனா..
தனனா.. தனனா.. தனனா.. தனனா..
ஹே.. ஹேஹேஹே ஹேஹேஹே ஹே..
...

பெ1: நான் சின்னப் பொண்ணு செவ்வாழைக் கண்ணு
நீ கல்யாண வேலி கட்டு
: என் செந்தாமரை கை சேரும் வரை
நான் நின்றேனே தூக்கம் கெட்டு
பெ1: உன் ஆசை என்ன உன் தேவை என்ன
நீ லேசாகக் காதைக் கடி
: என் எண்ணங்களை நான் சொல்லாமலே
நீ இந்நேரம் கண்டுபிடி
பெ1: கேட்குது கேட்குது ஏதோ ஒண்ணு
பார்த்துப் பார்த்து ஏங்குது லவ்வு பண்ணு
: ஆஹ்.. தாக்குது தாக்குது ஊதக் காத்து
தள்ளித் தள்ளி நிக்கிற ஆளைப் பார்த்து
பெ1: காலம் வரும் நல்ல நேரம் வரும்
அள்ளி நீ சேர்த்துக்கோ ஆசையைத் தீர்த்துக்கோ

ஆ.குழு&பெ.குழு: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
: ஜிக்கிஜக்கா
ஆ.குழு&பெ.குழு: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
பெ1: ஜிக்கிஜக்கா
: கண்மணி.. பொன்மணி.. கொஞ்சு நீ.. கெஞ்சு நீ..
&பெ1: மாலையில் ஆடு நீ.. மந்திரம் பாடு நீ
ஆ.குழு&பெ.குழு: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
...

#279 சீவி சிணுக்கெடுத்துப் பூவ - வெற்றி விழா

படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி

: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே
மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நாந்தானே
பெ: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணு
மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
: மாப்பிள்ளை கையால மாலைதான் நீ வாங்கு
பெ: மன்மதன் போட்டானே மல்லிகைப்பூ பாணந்தான்
: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே.. ஹே..
பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
...

பெ: தேரில் ஏறித்தான் மாமா மாமா.. தேவலோகந்தான் பார்ப்போம்
: தேடிப் பார்க்கலாம் வாம்மா வாம்மா.. தேவ ரகசியம் காப்போம்
பெ: பூட்டிப் பூட்டித்தான் பார்த்தேன் பார்த்தேன்.. கேக்கவில்லையே மனசு
: ஜோடி சேரத்தான் நினைக்கும் நினைக்கும்.. சூடு ஏறிடும் வயசு
பெ: சொப்பனமோ தந்ததொரு தொந்தரவுதான்
: வந்ததடி மன்மதனின் உத்தரவுதான்
பெ: கூடினாப் பிரியாது.. வேறெதும் தெரியாது.. ஹோய்..

: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே.. ஹஹா..
பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
...

: மாலை ஏறத்தான் ஏதோ ஏதோ.. தோணலாச்சுது எனக்கு
பெ: மனசில் உள்ளது ஏதோ ஏதோ.. போட்டுப் பார்க்குறேன் கணக்கு
: ஆஹா.. தூண்டில் போட்டுத்தான் தூக்கி இழுக்குதே.. ஏண்டி நமக்குள்ள வழக்கு
பெ: சேர்ந்துப் படுத்துதான் பேசி முடிச்சதும் வெளுத்துப் போச்சுது கிழக்கு
: அத்தனையும் மொத்தத்துல அள்ளி எடுப்பேன்
பெ: அப்புறமா மத்ததெல்லாம் கேட்டு ரசிப்பேன்
: ஏறுனா இறங்காது.. மனசுதான் கிறங்காது.. ஹோய்..

பெ: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணு
: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நாந்தானே
சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே
பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
: மாப்பிள்ளை கையால மாலைதான் நீ வாங்கு
பெ: மன்மதன் போட்டானே மல்லிகைப்பூ பாணந்தான்
: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே.. ஹா..
பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
...

#278 வானமென்ன கீழிருக்கு - வெற்றி விழா

படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & மலேசியா வாசுதேவன்

ஆ1: வானமென்ன கீழிருக்கு.. பூமியென்ன மேலிருக்கு
சொர்க்கலோகம் பக்கம் வந்தது
ஆ2: டடாடாவ்டூ.. டடாடாவ்டூ..
ஆ1: தேவ கானம் பாடப் பாட.. தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளந்தட்டுது
ஆ2: டடாடாவ்டூ.. டடாடாவ்டூ..
ஆட்டமும் பாட்டமும்.. ஹேய் நைனா
ஓட்டமும் துள்ளலும்.. ஹோய் ஹோய்னா
ஏதோ வேகம் வந்திருக்க
ஆ1: வானமென்ன கீழிருக்கு.. பூமியென்ன மேலிருக்கு
சொர்க்கலோகம் பக்கம் வந்தது
ஆ2: டடாடாவ்டூ.. டடாடாவ்டூ..
தேவ கானம் பாடப் பாட.. தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளந்தட்டுது
ஆ1: ததாதாவ்டூ.. ததாதாவ்டூ..
...
பெ.குழு: தாததாததத்தா.. ததாததாத தாததாத தத்தா..
தாததாததத்தா.. ததாததாத தாததத்த தத்தா..
தாததாததத்தா.. ததாததாத தாததாத தத்தா..
தாததாததத்தா.. ததாததாத தாததத்த தத்தா..
...

ஆ2: காலை மாலை ராத்திரி
ஆ1: தாதாதுதுது..
ஆ2: கட்டில் மீது பாய் விரி
ஆ1: தாதாது..
ஆ2: காமரூப சுந்தரி
ஆ1: ராபாருதுது..
ஆ2: கோடிக் கோடி சங்கதி
ஆ1: ருஜுஜு.. வாடா நண்பனே.. வேளை நல்ல வேளைதான்
வேளை வந்தபின் வேறு என்ன வேலைதான்
ஆ2: மாலை மல்லிகைதான்
ஆ1: தகுதுகுதகுதுதகுது..
ஆ2: சோலை வண்டினம்தான்
ஆ1: பாடாதோ
ஆ2: மஞ்சள் தந்திரந்தான்
ஆ1: தகுதுகுதகுதுதகுது..
ஆ2: மோக மந்திரந்தான்
ஆ1: கூறாதோ.. நேரம் காலம்
ஆ2: ரொம்ப ரொம்ப சாதகம்
ஆ1: ஆ.. சேரும் இங்கே
ஆ2: சின்னப் பெண்ணின் ஜாதகம்
ஆ1&ஆ2: வா வா.. காதல் பாட்டெடுக்க

ஆ2: வானமென்ன கீழிருக்கு.. பூமியென்ன மேலிருக்கு
சொர்க்கலோகம் பக்கம் வந்தது
ஆ1: டடாடாவ்டூ.. டடாடாவ்டூ..
தேவ கானம் பாடப் பாட.. தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளந்தட்டுது
ஆ2: டடாடாவ்டூ.. டடாடாவ்டூ.. ஆட்டமும் பாட்டமும்.
ஆ1: ஹா..
ஆ2: ஹேய் நைனா.. ஓட்டமும் துள்ளலும்
ஆ1: ஹா..
ஆ2: ஹோய் ஹோய்னா.. ஏதோ வேகம் வந்திருக்க
ஆ1: வானமென்ன கீழிருக்கு.. பூமியென்ன மேலிருக்கு
சொர்க்கலோகம் பக்கம் வந்தது
ஆ2: டடாடாவ்டூ.. டடாடாவ்டூ..
தேவ கானம் பாடப் பாட.. தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளந்தட்டுது
ஆ1: விஜேபுஜாபுஜூ.. விஜேபுஜாபுஜூ..
...

ஆ1: தீயைப் போலக் காயுது
ஆ2: தாதாதாதாதா..
ஆ1: தணலைப் போலக் கொதிக்குது
ஆ2: தாதாதா..
ஆ1: அம்பு ஒண்ணு பட்டது
ஆ2: தாதாதாதாதா..
ஆ1: ஆதி அந்தம் சுட்டது
ஆ2: தாதாதா.. ஏதோ ஞாபகம்.. மெத்தை ஒண்ணு தேடுது
எண்ணம் ஆயிரம் றெக்கை கட்டி ஓடுது
ஆ1: ஆஹா நூலிடைதான்
ஆ2: தகுதுகுதகுதுதகுது..
ஆ1: ஆளைக் கொல்லுதப்பா
ஆ2: அம்மாடி
ஆ1: நீலத் தாமரைதான்
ஆ2: தகுதுகுதகுதுதகுது..
ஆ1: நெஞ்சை அள்ளுதப்பா
ஆ2: ஆத்தாடி.. வாடா ராஜா..
ஆ1: வாலிபத்தைக் காட்டு நீ
ஆ2: ஆ.. வீணை இங்கே
ஆ1: கையெடுத்து மீட்டு நீ
ஆ1&ஆ2: ஆ.. வா வா.. காதல் பாட்டெடுக்க.. வானமென்ன

ஆ1: கீழிருக்கு.. பூமியென்ன மேலிருக்கு
சொர்க்கலோகம் பக்கம் வந்தது
ஆ2: டடாடாவ்டூ.. டடாடாவ்டூ..
தேவ கானம் பாடப் பாட.. தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளந்தட்டுது
ஆ1: ததாதாவ்டூ.. ததாதாவ்டூ..
ஆட்டமும் பாட்டமும்.. ஹேய் நைனா
ஓட்டமும் துள்ளலும்.. ஹோய் ஹோய்னா
ஏதோ வேகம் வந்திருக்க
ஆ1&ஆ2: வானமென்ன
ஆ2: கீழிருக்கு.. பூமியென்ன மேலிருக்கு
சொர்க்கலோகம் பக்கம் வந்தது
ஆ1: விஜாபுஜேபுஜூ.. விஜாபுஜேபுஜூ..
தேவ கானம் பாடப் பாட.. தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளந்தட்டுது
ஆ2: ததாதாவ்டூ
ஆ1: ஹா,,
ஆ2: ததாதாவ்டூ..
...

#277 ஹோலி ஹோலி ஹோலி - ராசுக்குட்டி

படம்: ராசுக்குட்டி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

: ஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி..
லாலி லாலி லாலி.. கதை சொன்னாள் காதல் தோழி
சொல்லச் சொல்லத் தேனாய்ப் பாய்ந்தது
உள்ளம் ரெண்டும் தானாய்ச் சேர்ந்தது
சொல்லச் சொல்லத் தேனாய்ப் பாய்ந்தது
உள்ளம் ரெண்டும் தானாய்ச் சேர்ந்தது
பெ: ஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி..
...
பெ.குழு: தாததத்தா தாததத்தா தீதிதத்தா தாதா..
தாததத்தா தாததத்தா தீதிதத்தா தாதா..
தாத்ததத்தா தத்தா தத்தா.. தாத்ததத்தா தத்தா தத்தா.. ஹோ..
...

: கொத்துக் கொத்துப் பூவாக முத்து முத்து மாலைகள்
புன்னகையில் பார்த்தேன்.. அள்ளி அள்ளிச் சேர்த்தேன்
பெ: ஒட்டி ஒட்டி உறவாட.. கட்டிக் கட்டிக் கலந்தாட
முத்தமென்னும் பூந்தேன் கொட்டிக் கொட்டிக் கொடுத்தேன்
: சிந்தாமலே ஏந்திய சிந்தாமணி
கையோடு நான் வாங்கிய செம்மாங்கனி
பெ.குழு: நாநாநநா.. நாநந நநநநா..
நாநாநநா நாநா நாநாநநா..
பெ: ஒரு மல்லிகைப் பந்தாக நெஞ்சம் மஞ்சத்தில் வந்தாடும்
அன்புக் கண்ணா.. கண்ணா.. சொன்னேன் உன்னிடம் காதல் சங்கீதம்

: ஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி..
பெ: லாலி லாலி லாலி.. கதை சொன்னாள் காதல் தோழி
...
பெ.குழு: ஆஆஆ.. ஆஆ ஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ..
...

பெ: கங்கைக் கரை ஓரத்திலே காத்திருக்கும் நேரத்திலே
கண்ணன் வருவானோ.. கையில் எடுப்பானோ
: வெள்ளியலை மேடையிலே மங்கை நீராடையிலே
உள்ளங் கொதிக்குதடி.. அள்ளத் துடிக்குதடி
பெ: அம்மாடியோ பார்வையும் அம்பானது
பொன்மானுக்கும் ஆசை உண்டாகுது
பெ.குழு: நாநாநநா.. நாநந நநநநா..
நாநாநநா நாநா நாநாநநா..
: அந்த உச்சிமலை மேலே ஒரு வெள்ளிப்பனி மாடம்
அடி ராதே.. ராதே.. நாளும் அங்கொரு காதல் கும்மாளம்

பெ: ஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி..
லாலி லாலி லாலி.. கதை சொன்னாள் காதல் தோழி
சொல்லச் சொல்லத் தேனாய்ப் பாய்ந்தது
உள்ளம் ரெண்டும் தானாய்ச் சேர்ந்தது
சொல்லச் சொல்லத் தேனாய்ப் பாய்ந்தது
உள்ளம் ரெண்டும் தானாய்ச் சேர்ந்தது
: ஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி..
...

#276 அடி நாம்புடிச்ச கிளியே - ராசுக்குட்டி

படம்: ராசுக்குட்டி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பெ.குழு: ஏஹே.. ஏஏ ஏஹே.. ஏஏ ஏஹே..
தந்தானத் தான தந்தானத் தான தந்தானத் தந்தானத் தானனா..
: அடி நாம்புடிச்ச கிளியே.. வாசமலர்க் கொடியே.. எம்மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டுத் வெளியே வந்ததென்ன தனியே.. தேகமெங்கும் கொதிக்குதடி
ஒண்ணு நீயாத் திருந்து.. இல்லை தாரேன் மருந்து
அடி உன்னைத்தான் நினைச்சேன்.. உன்னையே மணப்பேன்
நாம்புடிச்ச கிளியே.. வாசமலர்க் கொடியே.. எம்மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டுத் வெளியே வந்ததென்ன தனியே.. தேகமெங்கும் கொதிக்குதடி
...

: கட்டுக் கட்டா புத்தகத்தை சுமக்கவில்லை நானடி
ஆனாலுந்தான் கெட்ட வழி போனதில்லை நானடி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள ஆளு நானடி
என்னைப் பத்தி ஊருக்குள்ளே நீயும் கொஞ்சம் கேளடி
படிப்பு ஒண்ணே வாழ்க்கையா.. பாசம் அன்பு இல்லையா
படிப்பில்லாமல் வாழ்க்கையில் உயர்ந்த மேதை இல்லையா
உன்னைக் கண் போலத்தான் வச்சுக் காப்பேனடி
அடி உன்னைத்தான் நினைச்சேன்.. உன்னையே மணப்பேன்

: நாம்புடிச்ச கிளியே.. வாசமலர்க் கொடியே.. எம்மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டுத் வெளியே வந்ததென்ன தனியே.. தேகமெங்கும் கொதிக்குதடி
ஒண்ணு நீயாத் திருந்து.. இல்லை தாரேன் மருந்து
அடி உன்னைத்தான் நினைச்சேன்.. உன்னையே மணப்பேன்
நாம்புடிச்ச கிளியே.. வாசமலர்க் கொடியே.. எம்மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டுத் வெளியே வந்ததென்ன தனியே.. தேகமெங்கும் கொதிக்குதடி
...

: ஊருக்குள்ள நூறு பொண்ணு என் நெனப்பில் ஏங்குது
அத்தனையும் தள்ளி வச்சி உன் நெனப்பில் ஏங்குறேன்
காசு பணம் சீர் வரிசை கேட்கவில்லை நானடி
ஆசப்பட்ட பாவத்துக்கு அல்லி தர்பார் ஏனடி
மயக்கம் என்ன பூங்கொடி.. மாமன் தோளை சேரடி
நடந்ததெல்லாம் கனவென மறந்து மாலை சூடலாம்