#293 மழையின் துளியில் - சின்னத்தம்பி பெரியதம்பி

படம்: சின்னத்தம்பி பெரியதம்பி
இசை: கங்கை அமரன்
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்: சித்ரா

மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
மலரின் இதழில் பனி விழுந்தது
மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா.. என் மாமா..
தூவானம் தூவும்.. அதில் ஏதேதோ கானம்
ஆராரோ பாடும்.. அதில் ஆனந்தம் கூடும்
மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
...

ஆகாயம் அங்கும் இங்கும் ஆயிரமாயிரம் பூக்கோலம்
தாழ்வாரம் எங்கும் வண்ணம் தங்கம் மின்னும் மாக்கோலம்
ஆகாயம் அங்கும் இங்கும் ஆயிரமாயிரம் பூக்கோலம்
தாழ்வாரம் எங்கும் வண்ணம் தங்கம் மின்னும் மாக்கோலம்
பூவோடு பூங்காற்றும் பூபாளம் பாடாதோ
பெண்ணான என்னுள்ளம் பூப்போல ஆடாதோ
பாசமெனும் கூட்டில் பல பாடம் பெறும் கிளிகள்
பாடி வரும் பாட்டில் பல பாவம் பெறும் மொழிகள்
நாதமென்று கீதமென்று சேர்ந்தது வழிகள்

மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
மலரின் இதழில் பனி விழுந்தது
மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா.. என் மாமா..
...

ஆ ஆஆ.. ஆஆ ஆஆஆ..
லலலலலல லலலலலல லா லா லா லா..
...

அன்பான நெஞ்சம் எல்லாம் ஆண்டவன் வாழும் கோவிலது
யாரோடு யாரைக் கண்டு சங்கமமாகப் போகிறது
அன்பான நெஞ்சம் எல்லாம் ஆண்டவன் வாழும் கோவிலது
யாரோடு யாரைக் கண்டு சங்கமமாகப் போகிறது
எந்நாளும் சங்கீதம் நம்மோடு ஒன்றாகும்
எப்போதும் சந்தோஷம் நம்மோடு வந்தாடும்
வானம் எங்கும் பறந்து நாம் தேடும் இளம் வயது
சோகங்களை மறந்து இது ராகம் தரும் மனது
சேர்ந்ததென்று பாடுதம்மா.. ஆனந்தம் எனது

மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
மலரின் இதழில் பனி விழுந்தது
மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா.. என் மாமா..
தூவானம் தூவும்.. அதில் ஏதேதோ கானம்
ஆராரோ பாடும்.. அதில் ஆனந்தம் கூடும்
மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
...

#292 ஆஹா.. கனவேதானா - அமராவதி

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!! doasembahros
படம்: அமராவதி
இசை: பாலபாரதி
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
காதல் தேவதை மண்ணில் வந்ததோ
கண்கள் ரெண்டும் போதை கொண்டதோ
ஓஹோ.. முன்னால் பாரடி.. உன் முகத்தைப் பார்க்கிறேன்
நீ பின்னால் போவதேன்.. நான் பெண்ணா கேட்கிறேன்
ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
...

கட்டுக் கூந்தல் பார்த்தேன்.. தரையில் வந்த மேகமா
பட்டுத் தோள்கள் பார்த்தேன்.. பாரிஜாத தேகமா
முதுகு வண்ணம் பார்த்தேன்.. முல்லைப் பூவின் பாகமா
மொட்டு வண்ணம் பார்த்தேன்.. கட்டுக் காவல் மீறுமா
கழுத்து வரைக்கும் பார்த்தேன்.. சில கணக்கு வழக்கும் பார்த்தேன்
பளிங்கு நிறங்கள் பார்த்தேன்.. அடி.. பறந்து பறந்து பார்த்தேன்
ஓஹோ.. முன்னால் பாரடி.. உன் முகத்தைப் பார்க்கிறேன்
நீ பின்னால் போவதேன்.. நான் பெண்ணா கேட்கிறேன்

ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
...

ஏரி நீரில் நீந்தும் ஈரமான முல்லையே
மீன்கள் செய்த புண்ணியம் ஆண்கள் செய்யவில்லையே
தேக வண்ணம் காட்டித் தீ வளர்த்த முல்லையே
பூமுகத்தைக் காட்டு.. பொறுமையின்னும் இல்லையே
முழுக்க நனைந்த பின்னே உன் முகத்தை மறைப்பதென்ன
குளித்து முடித்த பெண்ணே.. உன் கூந்தல் தடுப்பதென்ன
ஓஹோ.. முன்னால் பாரடி.. உன் முகத்தைப் பார்க்கிறேன்
நீ பின்னால் போவதேன்.. நான் பெண்ணா கேட்கிறேன்

ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
காதல் தேவதை மண்ணில் வந்ததோ
கண்கள் ரெண்டும் போதை கொண்டதோ
ஓஹோ.. முன்னால் பாரடி.. உன் முகத்தைப் பார்க்கிறேன்
நீ பின்னால் போவதேன்.. நான் பெண்ணா கேட்கிறேன்
ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
...

#291 தாஜ்மஹால் தேவையில்லை - அமராவதி

படம்: அமராவதி
இசை: பாலபாரதி
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

: தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
பெ: காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
: இந்த பந்தம் இன்று வந்ததோ
பெ: ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
: உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ
பெ: தாஜ்மஹால் தேவையில்லை
: அன்னமே அன்னமே.. காடு மலை நதிகளெல்லாம்
பெ: காதலின் சின்னமே
...

: பூலோகம் என்பது பொடியாகிப் போகலாம்
பொன்னாரமே நம் காதலோ பூலோகம் தாண்டி வாழலாம்
பெ: ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்
ஆனாலுமே நம் நேசமே ஆகாயம் தாண்டி வாழலாம்
: கண்ணீரில் ஈரமாகிக் கறையாச்சு காதலே
பெ: கறை மாற்றி நாமும் மெல்லக் கரையேற வேண்டுமே
: நாளை வரும் காலம் நம்மைக் கொண்டாடுமே

பெ: தாஜ்மஹால் தேவையில்லை
: அன்னமே அன்னமே.. காடு மலை நதிகளெல்லாம்
பெ: காதலின் சின்னமே
...

பெ: சில்வண்டு என்பது சில மாதம் வாழ்வது
சில்வண்டுகள் காதல் கொண்டால் செடியென்ன கேள்வி கேட்குமா
: வண்டாடும் காதலைக் கொண்டாடும் கூட்டமே
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால் அது ரொம்பப் பாவமென்பதா
பெ: வாழாத காதல் ஜோடி இம்மண்ணில் கோடியே
: வாழாத பேர்க்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே
பெ: வாணும் மண்ணும் பாடல் சொல்லும் நம் பேரிலே

: தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
பெ: காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
: இந்த பந்தம் இன்று வந்ததோ
பெ: ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
: உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ
பெ: தாஜ்மஹால் தேவையில்லை
: அன்னமே அன்னமே.. காடு மலை நதிகளெல்லாம்
பெ: காதலின் சின்னமே
...

#290 காதல் கசக்குதய்யா - ஆண்பாவம்

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros - See more at: http://isaiamudham.blogspot.com/2013/06/257.html#sthash.71W6SxoW.dpuf
என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros - See more at: http://isaiamudham.blogspot.com/2013/06/257.html#sthash.71W6SxoW.dpuf
என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros
படம்: ஆண்பாவம்
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜாகாதல் கசக்குதய்யா.. வர வர காதல் கசக்குதய்யா
மனந்தான் லவ்வு லவ்வுன்னு அடிக்கும்.. லபோன்னுதான் துடிக்கும்
தோத்துப் போனா குடிக்கும்.. பைத்தியம் புடிக்கும்
காதல் கசக்குதய்யா.. வர வர காதல் கசக்குதய்யா
...

யாராரோ காதலிச்சு.. யாராரோ காதலிச்சு உருப்படல.. ஒண்ணும் சரிப்படல
வாழ்க்கையிலே என்றும் சுகப்படல
காதலைப் படமெடுத்தா ஓடுமுங்க.. தியேட்டரிலே சனம் கூடுமுங்க
தேவதாஸ்.. அவன் பார்வதி.. அம்பிகாபதி.. அமராவதி
கதையக் கேளு.. முடிவப் பாரு..
கடைசியில் சேராம வாழாம செத்தாங்க

எனக்கிந்தக் காதல் கசக்குதய்யா.. வர வர காதல் கசக்குதய்யா
மனந்தான் லவ்வு லவ்வுன்னு அடிக்கும்.. லபோன்னுதான் துடிக்கும்
தோத்துப் போனா குடிக்கும்.. பைத்தியம் புடிக்கும்
காதல் கசக்குதய்யா..
...

எத்தனை சினிமா எத்தனை ட்ராமா பாத்தாச்சு
எத்தனை டூயட் எத்தனை ட்யூனு கேட்டாச்சு
இத்தனையும் பார்த்து இத்தனையும் கேட்டு என்னாச்சு
புத்தியும் கெட்டு சக்தியும் கெட்டு நின்னாச்சு
கிட்டப்பா அந்த காலத்துல.. காயாத கானகத்தே
பி.யு.சின்னப்பா வந்த காலத்துல.. காதல் கனிரசமே
மன்மத லீலை எம்.கே.டி. காலத்துல
நடையா இது நடையா.. நம்ம நடிகர் திலகம் பாணியில
ஹலோ.. ஹலோ.. சுகமா.. அட.. ஆமா நீங்க நலமா
எங்கேயுந்தான் கேட்டோம் அண்ணன் எம்.ஜி.ஆர் பாட்டுக்கள
இந்தக் கால இளைஞன் செய்யும் காதலுக்கு
இளையராஜா எந்தன் பாட்டிருக்கு
வீட்டுல அதைப் பாடுங்க.. பொண்டாட்டிய லவ் பண்ணுங்க
நம்ம தகப்பன் பேச்சை.. தாயின் பேச்சை மதிக்கணும்
நீயாகப் பெண் தேடக் கூடாது

எனக்கிந்தக் காதல் கசக்குதய்யா.. வர வர காதல் கசக்குதய்யா
மனந்தான் லவ்வு லவ்வுன்னு அடிக்கும்.. லபோன்னுதான் துடிக்கும்
தோத்துப் போனா குடிக்கும்.. பைத்தியம் புடிக்கும்
காதல்.. மோதல் சாதல்.. காதல் காதல்..
கசக்குதய்யா.. கசக்குதய்யா.. கசக்குதய்யா..
...

#289 புன்னகையில் மின்சாரம் - பரதன்

படம்: பரதன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி: புன்னகையில் மின்சாரம் பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க
பெ: கன்னமெனும் தாம்பாளம் கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க
: அஹா.. அஹா.. கண்ணன் துணை ராதே ராதே
கட்டிக் கொள்ளும் மாதே மாதே
நெஞ்செல்லாம்.. ஜிகுஜிகு ஜம்ஜம்..
புன்னகையில் மின்சாரம் பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க
...

: மந்திரத்தை நான் பாட.. அந்தரத்தில் நீயாட
சொர்க்கந்தான்.. மிகப் பக்கந்தான்
பெ: முத்தளந்து நான் போட.. முக்கனியை நீ தேட
மெள்ளத்தான் இடை துள்ளத்தான்
: வெப்பங்களும் தாளாமல் தெப்பக்குளம் நீந்த
செங்கமலம் தானாக என்னை நெருங்க
பெ: செங்கமலம் நோகாமல் அன்புக்கரம் ஏந்த
சங்கமங்கள் தேனாகத் தித்திக்க
: இன்பக் கதை நீ பாதி நான் பாதி நாள்தோறும் சொல்லத்தான்
பெ: இரு உள்ளங்களும் பூந்தேரின் மேலேறி ஊர்கோலம் செல்லத்தான்
ஜிகுஜிகு ஜம்ஜம்..

: தரத்தத்த.. புன்னகையில் மின்சாரம் பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க
பெ: கன்னமெனும் தாம்பாளம் கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க
: ஹ.. கண்ணன் துணை ராதே ராதே
கட்டிக் கொள்ளும் மாதே மாதே
நெஞ்செல்லாம்.. ஜிகுஜிகு ஜம்ஜம்..
புன்னகையில் மின்சாரம் பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க
...

பெ: சொல்லியது மாளாது.. சொல்லிச் சொல்லித் தீராது
நித்தந்தான் ஒரு பித்தந்தான்
: பொற்கலசம் ஏராட.. பைங்கொடியும் போராட
அம்மம்மா.. துயர் என்னம்மா
பெ: வெண்ணிலவு போல் இந்தப் பெண்ணிலவு தேய
வெட்கங்களைப் பார்க்காமல் கட்டித் தழுவு
: ஹா.. பள்ளியறை ராஜாங்கம் என்னவென்றுதானே
நள்ளிரவில் நீயாகச் சொல்லித் தா
பெ: சொல்லித் தர நீ கேட்டுப் பாய் போட்டுத் தேன் பாட்டுக் கேட்கத்தான்
: சுகம் அள்ளித் தர வந்தாளே கண்ணே.. என் கண்ணம்மா.. ஜிகுஜிகு ஜம்ஜம்..

பெ: கன்னமெனும் தாம்பாளம் கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க
: தரததத்தத்தத்த.. தத்தத்தத்த..
புன்னகையில் மின்சாரம் பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க
கண்ணன் துணை ராதே ராதே
கட்டிக் கொள்ளும் மாதே மாதே
நெஞ்செல்லாம்.. ஜிகுஜிகு ஜம்ஜம்..
பெ: கன்னமெனும் தாம்பாளம் கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க
: தததுதுத்து தத்தத்துதுத்து..
தாதத்தத்தத் தகுததா.. தகுதத்தத்தத் தகுததத்தத்த..
தத்தத் தகுதத்தா.. தகதுகுதகு தத்தத்ததத்தது.. தகதுகுதகு.. தா..