#149 கண்ணுக்கு மையழகு - புதிய முகம்

படம்: புதிய முகம்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: பி.சுசீலா & உன்னி மேனன்

: ம்.. ம்ம்ம் ம்ம்.. ம்.. ம்ம் ம்ம்..
பெ: கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
அவரைக்குப் பூவழகு
அவருக்கு நானழகு
கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
அவரைக்குப் பூவழகு
அவருக்கு நானழகு
...

பெ: மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளியழகு
அலை மீண்டு போனாலும் கரை கொண்ட நுரையழகு
இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடுதானழகு
இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடுதானழகு
இளமாறன் கண்ணுக்கு எப்போதும் நானழகு

பெ: கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
அவரைக்குப் பூவழகு
அவருக்கு நானழகு
கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
அவரைக்குப் பூவழகு
அவருக்கு நானழகு
...

பெ: ஆனந்த மஞ்சத்தில் அவிழ்ந்தாலும் குழலழகு
அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டழகு
பெண்ணோடு காதல் வந்தால் பிறை கூடப் பேரழகு
பெண்ணோடு காதல் வந்தால் பிறை கூடப் பேரழகு
என்னோடு நீயிருந்தால் இருள் கூட ஓரழகு

பெ: கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
அவரைக்குப் பூவழகு
அவருக்கு நானழகு
கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
அவரைக்குப் பூவழகு
அவருக்கு நானழகு
...

#148 பூந்தளிராட.. பொன் மலர் சூட - பன்னீர் புஷ்பங்கள்

படம்: பன்னீர் புஷ்பங்கள்
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ.குழு: ஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
ஆஆ ஆஆஆ.. ஆஆ ஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
: பூந்தளிராட..
பெ.குழு: ஆஆ ஆஆஆ.. ஆஆஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ.
: பொன் மலர் சூட..
பெ.குழு: ஆஆ ஆஆஆ.. ஆஆ ஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ.
: பூந்தளிராட.. பொன் மலர் சூட..
சிந்தும் பனி வாடைக் காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்.. இனி நாடும் சுப காலங்கள்
பூந்தளிராட..
பெ.குழு: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
: பொன் மலர் சூட..
பெ.குழு: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
...

பெ.குழு: லலலால்லல லலலல்லா..
லலலால்லல லலலல்லா..
லலலால்லலலா லலலால்லலலா
லலலால்லலலா லலலால்லா..
லலலால்லல லலலா..
...
பெ: காதலை ஏற்றும் காலையின் காற்றும்
: ம்ம்ம்ம்ம்..
பெ: வீணை தொட்டுப் பாடும் பாட்டும் காதில் பட்டதே
வாலிப நாளில் வாசனைப் பூவின்
: ம்ம்ம்ம்ம்..
பெ: வாடை பட்டு வாடும் நெஞ்சின் எண்ணம் சுட்டதே
: கோடிகளாசை கூடிய போது
கூடும் நெஞ்சிலே கோலம் இட்டதே
பெ: தேடிடுதே தென்காற்றின் ராகம்..

பெ: பூந்தளிராட..
பெ.குழு: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
பெ: பொன் மலர் சூட..
பெ.குழு: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
...

பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம் ம் ம்ம்.. ம்ம்ம் ம்ம்ம் ம் ம்ம்..
ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்..
...
: பூ மலர் தூவும் பூமரம் நாளும்
பெ: ம்ம்ம்ம்ம்..
: போதை கொண்டு பூமி தன்னைப் பூஜை செய்யுதே
பெ: ஆஆஆஆஆ..
: பூவிரலாலும் பொன்னிதழாலும்
பெ: ம்ம்ம்ம்ம்..
: பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் செய்யுதே
பெ: பூமழை தூவும் வெண்ணிற மேகம்
பொன்னை அள்ளுதே.. வண்ணம் நெய்யுதே
:ஏங்கிடுதே என்னாசை எண்ணம்

: பூந்தளிராட..
பெ.குழு: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
: பொன் மலர் சூட..
பெ.குழு: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
பெ: சிந்தும் பனி வாடைக் காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சும்
பாடும் புது ராகங்கள்..
: இனி நாடும் சுப காலங்கள்
பெ: பாடும் புது ராகங்கள்..
: இனி நாடும் சுப காலங்கள்
...

#147 பனி விழும் இரவு - மௌன ராகம்

படம்: மௌன ராகம்
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ.குழு: லாலா.. லா லாலா.. லா லா.. லாலாலா லா..
...
: பனி விழும் இரவு.. நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது.. பூங்காற்றும் தூங்காது.. வா.. வா.. வா..
பெ: பனி விழும் இரவு.. நனைந்தது நிலவு
...

பெ: பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க
: பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க
பெ: மாலை விளக்கேத்தும் நேரம்.. மனசில் ஒரு கோடி பாரம்
: தனித்து வாழ்ந்தென்ன லாபம்.. தேவையில்லாத தாபம்
பெ: தனிமையே போ.. இனிமையே வா
நீரும் வேரும் சேர வேண்டும்

: பனி விழும் இரவு.. நனைந்தது நிலவு
...

பெ&பெ.குழு: லால லாலா லா.. லா லா லலா..
பெ: ஹா ஹா ஹா ஹா.. ஹா ஹா ஹா ஹா
...

: காவலில் நிலை கொள்ளாமல் தாவுதே மனது
பெ: காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது
: ஆசை கொல்லாமல் கொல்லும்.. அங்கம் தாளாமல் துள்ளும்
பெ: என்னைக் கேட்காமல் ஓடும்.. இதயம் உன்னோடு கூடும்
: விரகமே ஓர் நரகமோ சொல்
பூவும் முள்ளாய் மாறிப் போகும்

பெ: பனி விழும் இரவு.. நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது.. பூங்காற்றும் தூங்காது.. வா.. வா.. வா..
: பனி விழும் இரவு.. நனைந்தது நிலவு
...

#146 ராசாவே உன்னை நான் - தனிக்காட்டு ராஜா

படம்: தனிக்காட்டு ராஜா
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.ஷைலஜா

ராசாவே உன்னை நான் எண்ணித்தான்.. பல ராத்திரி மூடலை கண்ணத்தான்
ஏ.. பூ வச்சேன்.. பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரைப் போல சேரத்தான்
...
ராசாவே உன்னை நான் எண்ணித்தான்.. பல ராத்திரி மூடலை கண்ணத்தான்
ஏ.. பூ வச்சேன்.. பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரைப் போல சேரத்தான்
ராசாவே.. ராசாவே.. ராசாவே..
...

ஆவாரம் பூவு.. அதுக்கொரு நோவு.. உன்னை நினைச்சு உசுரிருக்கு
ஆவாரம் பூவு.. அதுக்கொரு நோவு.. உன்னை நினைச்சு உசுரிருக்கு
ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி.. ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி
பூத்தது வாடுது நீ வரத்தான்

ராசாவே உன்னை நான் எண்ணித்தான்.. பல ராத்திரி மூடலை கண்ணத்தான்
ஏ.. பூ வச்சேன்.. பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரைப் போல சேரத்தான்
...

மாக்கோலம் போட்டு மாவிளக்கேத்தி நீ கிடைக்க நேந்துக்கிட்டேன்
மாக்கோலம் போட்டு மாவிளக்கேத்தி நீ கிடைக்க நேந்துக்கிட்டேன்
பார்த்தாளே ஆத்தா.. மனக்குறை தீர்த்தா.. பார்த்தாளே ஆத்தா.. மனக்குறை தீர்த்தா
கிடைச்சது மாலையும் மஞ்சளும்தான்

ராசாவே உன்னை நான் எண்ணித்தான்.. பல ராத்திரி மூடலை கண்ணத்தான்
ஏ.. பூ வச்சேன்.. பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரைப் போல சேரத்தான்
ராசாவே.. ராசாவே.. ராசாவே..
...

#145 காதல் ராகமும் கனித் தமிழும் - இந்திரன் சந்திரன்

படம்: இந்திரன் சந்திரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா

: தும்தும்தும்ச தும்தும்தும் சகுச..
தும்தும்தும்ச தும்தும்தும் சகுச..
காதல் ராகமும் கனித் தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ
பெ: ஆசைத் தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ
: ஓயாமல் என் நெஞ்சில் உன்னன்பே
பெ: ஆத்தாடி.. கண்பார்வை என் மீதா.. உனை நெருங்கிட
காதல் ராகமும் கனித் தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ
: ஆசைத் தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ
...

: தினமும் தினமும் தவிப்பதோ.. சிறிது உறங்க மடி கொடு
தழுவத் தழுவத் தடுப்பதோ.. அழகு முழுதும் அளந்திடு
பெ: மருவி மருவி அணைப்பதோ.. வயதும் மனதும் துடிப்பதேன்
இதுவும் அதுவும் கொடுப்பதோ.. சபலம் உனக்குப் பிறப்பதேன்
: தென்றலும் தீண்டினாலே புஷ்பமே நோகுமா
பெ: காதல் ஓர் போதையாகும்.. கன்னிப் பூவும் தாங்குமா
: அள்ளினால்.. கிள்ளினால்.. என்னடி.. ஏந்தினால் வாடுமோ மடல்

பெ: ஓஓஓஓஓஓ.. காதல் ராகமும் கனித் தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ
: ஆசைத் தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ
பெ: ஓயாமல் என் நெஞ்சில் உன்னன்பே
: ஆத்தாடி.. கண்பார்வை என் மீதா.. உனை நெருங்கிட
காதல் ராகமும் கனித் தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ
பெ: ஆசைத் தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ
...

பெ: அமுத மழையைப் பொழியவே சிவந்த உதடு அழைக்குதே
வரவும் தொடவும் பருவமே.. விருந்து வழங்கும் அணைப்பிலே
: மனமும் உடம்பும் கனியுமோ.. இரவு முழுதும் விரல் தொட
மதுர மதுர சுவைகளோ பருகும்பொழுது இனித்திட
பெ: தேனிலே ஊறுமிந்தப் பூமடல் போதுமா
: தென்னையின் கள்ளும் இந்தப் பூவுதட்டில் ஊறுமா
பெ: மெல்ல நீ கொண்டு போ.. மன்னவா.. பெண்மகள் மேனி ஓர் மலர்

: ஓஓஓஓஓஓ.. காதல் ராகமும் கனித் தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ
பெ: ஆசைத் தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ
: ஓயாமல் என் நெஞ்சில் உன்னன்பே
பெ: ஆத்தாடி.. கண்பார்வை என் மீதா.. உனை நெருங்கிட
காதல் ராகமும் கனித் தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ
: ஆசைத் தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ
...

#144 சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ - பூக்களைப் பறிக்காதீர்கள்

படம்: பூக்களைப் பறிக்காதீர்கள்
இசை: டி.ராஜேந்தர்
எழுதியவர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

: சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ.. சுகம்.. சுகம்.. ஹா..
குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட.. இதம் இதம்.. ஹோ..
காதல் ஊர்வலம் இங்கே.. கன்னி மாதுளம் இங்கே..
சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ.. சுகம்.. சுகம்.. ஹா..
குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட.. இதம் இதம்.. ஹா..
பெ: காதல் ஊர்வலம் இங்கே.. கன்னி மாதுளம் இங்கே..
...

பெ.குழு: துகுதுகு துகுதுகு தூதூதூ..
...
: விழியெனும் அருவியில் நனைகிறேன்.. குளிர்கிறேன்
பெ: கவியெனும் நதியினில் குதிக்கிறேன்.. குளிக்கிறேன்
: மரகத வீணை உன் சிரிப்பிலே
பெ: ihikhik
: மயக்கிடும் ராகம் கேட்கிறேன்
பெ: மன்னவன் உந்தன் அணைப்பிலே
மான் என நானும் துவள்கிறேன்
: வாழை இலை போல நீ ஜொலிக்கிறாய்
பெ: காலை விருந்துக்கு எனை அழைக்கிறாய்

: காதல் ஊர்வலம் இங்கே
பெ: கன்னி மாதுளம் இங்கே..
...

பெ.குழு: பாபாபாபா பாபாபாபா பாபாபாபா பாபாபாபா பா..
...
: ஆஹஹா.. ஹா.. ஆ.. ஹஹஹா..
காதலி அருகிலே இருப்பதே ஆனந்தம்
பெ: காதலன் மடியிலே கிடப்பதே பரவசம்
: நட்சத்திரம் கண்ணில் சிரிக்கிதா
ihikhik மின்னி மின்னி என்னை அழைக்குதா
பெ: புத்தகம் போல் தமிழைச் சுமக்கிறாய்
பக்கம் வந்து புரட்ட அழைக்கிறாய்
: நீ வெட்கத்தில் படிக்க மறுக்கிறாய்
பெ: நீ சொர்க்கத்தை மிஞ்ச நினைக்கிறாய்

: காதல் ஊர்வலம் இங்கே.. ததத்தா.. ததத துதுத்தூ..
பெ: கன்னி மாதுளம் இங்கே.. தரத்தா.. ரரர ரரத்தா..
: சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ.. சுகம்.. சுகம்.. ஹா..
பெ: குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட.. இதம் இதம்.. ஆ..
: காதல் ஊர்வலம் இங்கே..
பெ: தரத்தா.. ரரர ரரத்தா..
கன்னி மாதுளம் இங்கே..
: ரரரா.. ரருரு ருருரு..
...