# 85 கூடையில கருவாடு - ஒரு தலை ராகம்

படம்: ஒரு தலை ராகம்
இசை: டி.ராஜேந்தர்
எழுதியவர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & குழுவினர்

: கூடையில கருவாடு.. கூந்தலிலே பூக்காடு
கூடையில கருவாடு.. கூந்தலிலே பூக்காடு
என்னாடி பொருத்தம் ஆயா
எம்பொருத்தம் இதைப் போலா
தாளமில்லாப் பின்பாட்டு ஆஹா..
தாளமில்லாப் பின்பாட்டு.. தட்டு கெட்ட எங்கூத்து
என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே.. அம்மாளே..

குழு: கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
...

: அல்லி வட்டம்.. புள்ளி வட்டம்.. நானறிஞ்ச நிலா வட்டம்
அல்லி வட்டம்.. புள்ளி வட்டம்.. நானறிஞ்ச நிலா வட்டம்
பாக்குறது பாவமில்லே.. புடிப்பது சுலபமில்லே
புத்தி கெட்ட விதியாலே.. ஆஹா..
புத்தி கெட்ட விதியாலே போனவதான் எம்மயிலு
என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே.. அம்மாளே..

குழு: கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
...

: ஆயிரத்தில் நீயே ஒண்ணு.. நானறிஞ்ச நல்ல பொண்ணு
ஆயிரத்தில் நீயே ஒண்ணு.. நானறிஞ்ச நல்ல பொண்ணு
மாயூரத்துக் காளை ஒண்ணு பாடுதடி மயங்கி நின்னு
ஓடாதடி காவேரி.. ஆஹா..
ஓடாதடி காவேரி.. உம்மனசில் யாரோடி
என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே.. அம்மாளே..

குழு: கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
: என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே.. அம்மாளே.. அம்மாளே.. அம்மாளே..
...

# 84 வாசமில்லா மலரிது - ஒரு தலை ராகம்

படம்: ஒரு தலை ராகம்
இசை: டி.ராஜேந்தர்
எழுதியவர்: டி.ராஜேந்தர்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

வாசமில்லா மலரிது..ihikhik வசந்தத்தைத் தேடுது
வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது.. மீனாட்சியைத் ஹ்டேடுது
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது
...

பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே

வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது
...

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சியவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே

வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது
...

மாதங்களை எண்ணப் பன்னிரண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட

வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது
...

வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது.. மீனாட்சியைத் ஹ்டேடுது
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது
...

# 83 சிட்டுக்குருவி வெட்கப்படுது - சின்ன வீடு

படம்: சின்ன வீடு
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ: தரதத் தத்தத்
&பெ: தத்தத்
தரதத் தத்தத்
&பெ: தத்தத்
தரதத் தரதத் தரதத்தா
: தரதத் தத்தத்
பெ: தரதத் தத்தத்
&பெ: தத்தத்
தரதத்
&பெ: தத்தத்
தரதத் தரதத் தரதத்தா
: தத்தத் தத்தத்
பெ: தரதத்
&பெ: தத்தத் தத்தத்
பெ: தரதத்
&பெ: தத்தத் தத்தத்
தரதத் தரதத் தரதத் தரதத் தரதத் தரதா
...

பெ: சிட்டுக்குருவி வெட்கப்படுது.. பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே
: சிட்டுக்குருவி வெட்கப்படுது.. பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே
பெ: சிட்டுக்குருவி வெட்கப்படுது
: பெட்டைக்குருவி கற்றுத் தருது
...

பெ: தத்தை தத்தித் தழுவும்.. தோளைத் தொத்தித் தழுவும்
மெத்தை யுத்தம் நிகழும்.. ம்ம் ம்ம்..
: நித்தம் இன்பத் தருணம் இன்பம் கொட்டித் தரணும்
என்றும் சரணம் சரணம்
பெ: இந்தக் கட்டில் கிளிதான் கட்டுப்படுமே.. விட்டுத்தருமே.. அடடா..
: மச்சக் குருவி முத்தம் தருதே.. உச்சந்தலையில் பித்தம் வருதே
பெ: முத்தச் சுவடு சிந்தும் உதடு.. சுற்றுப் பயணம் எங்கும் வருமே
: பட்டுச் சிறகுப் பறவை பருவச் சுமையைப் பெறுமே

பெ: சிட்டுக்குருவி வெட்கப்படுது.. பெட்டைக்குருவி கற்றுத் தருது
: தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
பெ: அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே
: சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெ: பெட்டைக்குருவி கற்றுத் தருது
...

: நித்தம் எச்சில் இரவு.. இன்பம் மட்டும் வரவு
முத்தம் மொத்தச் செலவு
பெ: மொட்டுக் கட்டும் அழகு.. மெட்டுக் கட்டும் பொழுது
கிட்டத் தொட்டுப் பழகு
: ஆஹா.. கள்ளக் கனியே.. அள்ளச் சுகமே
வெட்கப் பறவை விட்டுத் தருமோ
பெ: மன்னன் மகிழும் தெப்பக் குளமும்
செப்புக் குடமும் இவளே
: அங்கம் முழுதும் தங்கப் புதையல்
மெத்தைக் கடலில் முத்துக் குளியல்
பெ: பட்டுச் சிறகுப் பறவை பருவச் சுமையைப் பெறுமே

: சிட்டுக்குருவி வெட்கப்படுது.. பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே
பெ: சிட்டுக்குருவி வெட்கப்படுது.. பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே

: சிட்டுக்குருவி
பெ: சிட்டுக்குருவி
: வெட்கப்படுது
பெ: வெட்கப்படுது
: பெட்டைக்குருவி
பெ: பெட்டைக்குருவி
: கற்றுத் தருது
பெ: கற்றுத் தருது
: தத்தத் தர
பெ: தத்தத் தர
: தத்தத் தர
பெ: தத்தத் தர
: தத்தத் தர
பெ: தத்தத் தர
: தத்தத் தர
பெ: தத்தத் தரதா..
...

# 82 அழகிய கார்த்திகை தீபங்களாடும் - தேவ ராகம்

படம்: தேவ ராகம்
இசை: கீரவாணி
பாடியவர்: சித்ரா


பெ: அழகிய கார்த்திகை தீபங்களாடும்
நம்தன நம்தன நம்தன நம் நம்
கன்னியர் கண்களில் வாழ்த்துக்கள் பாடும்
நம்தன நம்தன நம்தன நம் நம்
இந்த மங்கையர் கொலுசுகள் மங்கல மேளம்
தநநந நநநந தநநம்
சுப ராகங்கள் கேட்கையில் விடியும் ஜாமம்
தநநந நநநந தநநம்
இனி புதிய உறவில் இதயம் முழுதும் மகிழும்
தநநம் தநநம் நம் நம் நம் நம்
தம் தநநநம் தநாநந தம் தநநநம்
பெ&பெ.குழு: தம் தநநநம் தநாநந தம் தநநநம்
: ஆ..
பெ&பெ.குழு: தம் தநநநம் தநாநந தம் தநநநம்
: நிஸ நிஸ கஸ மத பம நிப கம பா
பெ&பெ.குழு: தம் தநநநம் தநாநந தம் தநநநம்
...

பெ: வரலக்‌ஷ்மி கோலம் வரைகின்ற நேரம்
கண்களின் ஓரம் கரை போடும் ஈரம்
சந்நிதி கண்டு.. சந்தனம் கொண்டு
குங்கும தேவியை அலங்கரித்தோம்
விண் கொண்ட மீன்களின் ஒளி வாங்கி
தரையில் நடந்தோம் அகல் தாங்கி
கிண்கிணி நாதம்.. புண்ணிய கீதம்
அவள் கால் சலங்கைகள் தேவ கானங்கள்
கலகலகலவெனச் சிரித்திடு தேவி
பெ&பெ.குழு: தம் தநநநம் தநாநந தம் தநநநம்
தம் தநநநம் தநாநந தம் தநநநம்
தம் தநநநம் தநாநந தம் தநநநம்
தம் தநநநம் தநாநந தம் தநநநம்
...

பெ: ஆஆ ஆஆ ஆஆ ஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆ..
...

பெ: கல் மண்டபங்களில் சந்தனாபிஷேகம்
களி மண் விளக்கிலே கனகாபிஷேகம்
கைகளில் ஆடும் தீபங்கள் போல
கண்களில் நூறு கனவாடும்
கன்னியின் ஆசைகள் பல கோடி
கவிதை தந்தோம் சுரம் பாடி
...
பெ: தேவியின் கண்ணில் என்னுயிர் கண்டேன்
என் சிந்தை முழுதும் சந்தக் கவிதைகள்
சிலுசிலுசிலுவென சிலிர்க்குது தேகம்
பெ&பெ.குழு: தம் தநநநம் தநாநந தம் தநநநம்
தம் தநநநம் தநாநந தம் தநநநம்

பெ: அழகிய கார்த்திகை தீபங்களாடும்
நம்தன நம்தன நம்தன நம் நம்
கன்னியர் கண்களில் வாழ்த்துக்கள் பாடும்
நம்தன நம்தன நம்தன நம் நம்
இந்த மங்கையர் கொலுசுகள் மங்கல மேளம்
தநநந நநநந தநநம்
சுப ராகங்கள் கேட்கையில் விடியும் ஜாமம்
தநநந நநநந தநநம்
இனி புதிய உறவில் இதயம் முழுதும் மகிழும்
தநநம் தநநம் நம் நம் நம் நம்
பெ&பெ.குழு: தம் தநநநம் தநாநந தம் தநநநம்
தம் தநநநம் தநாநந தம் தநநநம்
: ஆ..
பெ&பெ.குழு: தம் தநநநம் தநாநந தம் தநநநம்
: நிஸ நிஸ கஸ மத பம நிப கம பா
பெ&பெ.குழு: தம் தநநநம் தநாநந தம் தநநநம்
...

# 81 ஆயிரம் தாமரை மொட்டுக்களே - அலைகள் ஓய்வதில்லை

படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்க்ள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ.குழு: ஓ.. தந்தனன தந்தனனனன தந்தனனனன தந்தனனனன..
பெ: அஹாஹாஹா.. அஹஹா.. அஹாஹாஹா..
பெ.குழு: தந்தனன.. தந்தனன.. தந்தனன.. தந்தனன.. தந்தனன..
பெ: ராரா ராரா.. ரராரா.. ராரா ராரா..
...
பெ: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
பெ: இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக் கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை
பெ&பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
...

: ஓ.. கொத்து மலரே.. அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று.. இது தீயின் ஊற்று
பெ: ஆ.. ஆஹா.. ஆஹா.. கொத்து மலரே.. அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று.. இது தீயின் ஊற்று
: உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
பெ: புல்லரிக்கும் மேனி எங்கும் பூப்பூக்கும்
: அடிக்கடி தாகம் வந்து ஆளைக் குடிக்கும்

பெ&பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
...

பெ.குழு: ம்ம்ம்ம்.. ம்ம் ம்ம்ம்ம்ம்ம்.. ம்ம்ம் ம்ம்ம்..
ம்ம்ம்ம்.. ம்ம் ம்ம்ம்ம்ம்ம்.. ம்ம்ம் ம்ம்ம்..
ஆஆஆஆ ஆஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆஆ..
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..
...

: ஹே.. வீட்டுக் கிளியே.. கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே
ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும்
பெ: புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை
ஒன்றை ஒன்று சூடும் இது பொன் மேடை
: கள் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்

பெ.குழு: ஆயிரம் தாமரை
பெ: நந நந..
பெ.குழு: ஆயிரம் தாமரை
பெ: நந நந நநந நநந..
பெ&பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
பெ: இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக் கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை
பெ&பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
...

#80 நூறு வருஷம் இந்த - பணக்காரன்

படம்: பணக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ

நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்
பேரு விளங்க இங்கு வாழணும்
சோலை வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடணும்
ஒண்ணுக்கொண்ணு பக்கத்தில பொண்ணு புள்ள நிக்கையில
கண்ணு படும் மொத்தத்துல
கட்டழக அம்மாடி என்ன சொல்ல
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்
பேரு விளங்க இங்கு வாழணும்
சோலை வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடணும்.. ஹா..
...

உசிலை மணியாட்டம் உடம்பத்தான் பாரு
தெருவில் அசைஞ்சாடும் திருவாரூர் தேரு
ஓமக்குச்சி போல் புடிச்சாரு தாரம்
தாவி அணைச்சாக்கா தாங்காது பாரம்
இவரு ஏழு அடி.. நடக்கும் ஏணியடி
நிலவை நின்னுக்கிட்டே தொட்டிடுவார் பாரு
மனைவி குள்ள மணி.. உயரம் மூணு அடி
இரண்டும் இணைஞ்சிருந்தா கேலி பண்ணும் ஊரு
ரெட்டை மாட்டு வண்டி வரும்போது
நெட்டை குட்டை என்றும் இணையாது
இந்த ஒட்டகந்தான் கட்டிக்கிட குட்டை வாத்தைப் புடிச்சார்

நூறு வருஷம்.. ஹே ஹே ஹேய்..
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்
பேரு விளங்க இங்கு வாழணும்
ஹே.. ஒண்ணுக்கொண்ணு பக்கத்தில பொண்ணு புள்ள நிக்கையில
கண்ணு படும் மொத்தத்துல
கட்டழக அம்மாடி என்ன சொல்ல
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்
பேரு விளங்க இங்கு வாழணும்.. ஹே..
...

புருஷன் பொஞ்சாதி பொருத்தந்தான் வேணும்
பொருத்தம் இல்லாட்டி வருத்தந்தான் தோணும்
அமைஞ்சா அதுபோல கல்யாணம் பண்ணு
இல்ல நீ வாழு தனியாளா நின்னு
மொதலில் யோசிக்கணும்.. பிறகு நேசிக்கணும்
மனசு ஏத்துக்கிட்டா சேத்துக்கிட்டு வாழு
ஒனக்கு தகுந்தபடி.. குணத்தில் சிறந்தபடி
இருந்தா ஊரறிய மாலை கட்டிப் போடு
சொத்து வீடு வாசல் இருந்தாலும்
ஹேய்.. சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்
அட உள்ளம் ரெண்டு ஒட்டாவிட்டால் கல்யாணந்தான் கசக்கும்

நூறு வருஷம்.. ஹேய்.. ஹேய் ஹேய்..
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்
பேரு விளங்க இங்கு வாழணும்
சோலை வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடணும்
ஒண்ணுக்கொண்ணு பக்கத்தில பொண்ணு புள்ள நிக்கையில
கண்ணு படும் மொத்தத்துல
கட்டழக அம்மாடி என்ன சொல்ல
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்
பேரு விளங்க இங்கு வாழணும்
சோலை வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடணும்.. ஹா..
...

# 79 சின்னத் தாயவள் தந்த ராசாவே - தளபதி

படம்: தளபதி
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: எஸ்.ஜானகி


ம்.. ம்ம்.. ம்ம்.. ம்ம்..
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...

தாயழுதாளே நீ வர.. நீயழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ..

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...

பால்மணம் வீசும் பூமுகம்.. பார்க்கையில் பொங்கும் தாய் மனம்
ஆயிரம் காலம் ஓர் வரம் வேண்டிட வந்த ஓர் வரம்
வெயில் வீதியில் வாடக் கூடுமோ
தெய்வக் கோயிலைச் சென்று சேருமோ
எந்தன் தேனாறே..

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...

#78 வா வா அன்பே அன்பே - அக்னி நட்சத்திரம்

படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா

: வா வா அன்பே அன்பே.. காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்.. எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்
பெ: வா வா அன்பே அன்பே.. காதல் நெஞ்சே நெஞ்சே
...

: நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரைக் கூறும் பொன்மணி
பெ: காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம்.. அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம்.. அதில் நீயும் ஆடலாம்
: நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
பெ: நீயின்றி ஏது பூ வைத்த மானே
: இதயம் முழுதும் எனது வசம்

பெ: வா வா அன்பே அன்பே
: காதல் நெஞ்சே நெஞ்சே
...

பெ: கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
கானலல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம்
பாவையல்ல பார்வை பேசும் ஓவியம்
: காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
பெ: உன் தோளில்தானே பூமாலை நானே
: சூடாமல் போனால் வாடாதோ மானே
பெ: இதயம் முழுதும் எனது வசம்

: வா வா அன்பே அன்பே
பெ: காதல் நெஞ்சே நெஞ்சே
: உன் வண்ணம் உன் எண்ணம்
பெ: எல்லாமே என் சொந்தம்
: இதயம் முழுதும் எனது வசம்
பெ: வா வா அன்பே அன்பே
: காதல் நெஞ்சே நெஞ்சே
...