#253 மந்திரப் புன்னகையோ மஞ்சள் நிலவோ - மந்திரப் புன்னகை

என்றும் இளமை பொங்கும், கொஞ்சும் குரல் கொண்ட
எஸ்.ஜானகி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!! doasembahros

படம்: மந்திரப் புன்னகை
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

மந்திரப் புன்னகையோ.. மஞ்சள் நிலவோ.. கண்ணே.. கண்ணே..
மந்திரப் புன்னகையோ.. மஞ்சள் நிலவோ.. கண்ணே.. கண்ணே..
வாழ்க்கை ஒரு வானம்.. ஆசை அதில் மேகம்
பாசம் ஒரு தீபமே.. பாவை மனம் பாடுதே

மந்திரப் புன்னகையோ.. மஞ்சள் நிலவோ.. கண்ணே.. கண்ணே..
...

தேவதைகள் தேரினில் போகிற நேரம்
தாமரைகள் ஆயிரம் பார்வையில் பூக்கும்
தேகம் தினம் பாடும்.. பாவமதில் போகும்.. நீ ஓடி வா
வாழ்க்கை என்னும் காவியம்.. காலம் அன்பின் ஆலயம்
வா.. வா.. வா..

மந்திரப் புன்னகையோ.. மஞ்சள் நிலவோ.. கண்ணே.. கண்ணே..
...

ஆசைகள் இங்கே குதிரைகள் ஆனால்
ஏழைகள் கூட ஊர்வலம் போவார்
பூவும் மலர்ந்தாடும்.. நாளும் மணம் வீசும்.. வாழ்வைப் பார்க்கிறோம்
பொம்மலாட்டம் ஆடலாம்.. போரும் செய்து பார்க்கலாம்
என்றும் வாழ்விலே