# 98 சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் - அமுத கானம்

படம்: அமுத கானம்
இசை: இளையராஜா
பாடியவர்: பி.சுசீலா

லாலா லாலா லாலா.. லாலலலா..
லாலல லாலல லாலலலா..
சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் செங்கமலப் பூவா
அம்மாடி நீ ஆடி வரும் அங்காளம்மன் தேரா
நீ சிரிச்சா நான் சிரிப்பேன்
பூந்தளிரே.. பொன் விளக்கே
ஆரிரரோ.. ஆரிரரோ..
சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் செங்கமலப் பூவா
அம்மாடி நீ ஆடி வரும் அங்காளம்மன் தேரா
...

தோள் தொட்டு மாலையிட்டு சூல் கொண்ட பெண்ணில்லை
அன்னையானேன் கன்னி நானே
வேறென்ன பிள்ளைச் செல்வம்.. நீ மட்டும் போதாதோ
இந்த வாழ்க்கை.. இன்ப வாழ்க்கை
நீதான் எங்கே.. கண்ணே.. நான்தான் அங்கே
நாளும் ஒரு தரம்.. தரிசனம்
வழங்கிடும் திருமுகம்.. எனக்கொரு தரிசனம்

சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் செங்கமலப் பூவா
அம்மாடி நீ ஆடி வரும் அங்காளம்மன் தேரா
...

நூறாண்டு காலம் வாழ.. உன்னோடு நான் வாழ
தெய்வம் நம்மைச் சேர்க்க வேண்டும்
ஆனந்த கங்கை போல.. காவிரி நீர் போல
உந்தன் வாழ்க்கை பொங்க வேண்டும்
பூவே.. பூவே.. தென்றல் காற்றே.. காற்றே
நீதான் பசுங்கிளி.. பைங்கொடி
மழலைகள் பொழிந்திட இனித்திடும் மணிமொழி

சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் செங்கமலப் பூவா
அம்மாடி நீ ஆடி வரும் அங்காளம்மன் தேரா
அம்மாடி நீ ஆடி வரும் அங்காளம்மன் தேரா
நீ சிரிச்சா நான் சிரிப்பேன்
பூந்தளிரே.. பொன் விளக்கே
ஆரிரரோ.. ஆரிரரோ.. ஆரிரரோ.. ஆரிரரோ..
...

# 97 தத்தெடுத்த முத்தே வா - அமுத கானம்

படம்: அமுத கானம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

ம்ம்ம் ம்ம்.. ம்ம் ம்ம்ம் ம்ம்..
ம்ம்ம் ம்ம்.. ம்ம் ம்ம்ம் ம்ம்..
ஓஓஓ ஓ.. ஓ ஓஓஓ.. ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ..
தத்தெடுத்த முத்தே வா.. சாதி மல்லிக் கொத்தே வா
ஆ.. தத்தெடுத்த முத்தே வா.. சாதி மல்லிக் கொத்தே வா
சிப்பியென்னைப் பாராயோ.. சின்ன முத்தம் தாராயோ
சிப்பியென்னைப் பாராயோ.. சின்ன முத்தம் தாராயோ
தத்தெடுத்த முத்தே வா.. சாதி மல்லிக் கொத்தே வா
...

யார் என்பது தெரியாமே.. ஏன் என்பதும் புரியாமே
நீ கண்டது ஒரு சொந்தம்.. நான் கொண்டது உயிர் பந்தம்
ஆராரோ.. ஆரிரரோ.. என்றே அன்று பாட்டு சொன்னேனே
யாராரோ என்றாகும் அர்த்தம் ஒன்று அதிலே கண்டேன் நான்
உங்கம்மா எவ்வளவு நல்லா பாடுறாங்க
ihikhik ஆடை கட்டிய ரோஜாப் பூக்கள்
அன்புக் காட்டில் துள்ளும் மான்கள்
Come on.. March.. March..
Left.. Right.. Left.. Right.. Left.. Right.. Left.. Right..
Left.. Right.. Left.. Right.. Left.. Right.. Left.. Right..
ஆடை கட்டிய ரோஜாப் பூக்கள்
அன்புக் காட்டில் துள்ளும் மான்கள்
ஊர்கோலம் போகும் விண்மீன்கள்

தத்தெடுத்த முத்தே வா.. சாதி மல்லிக் கொத்தே வா
சிப்பியென்னைப் பாராயோ.. சின்ன முத்தம் தாராயோ
சிப்பியென்னைப் பாராயோ.. சின்ன முத்தம் தாராயோ
தத்தெடுத்த முத்தே வா.. சாதி மல்லிக் கொத்தே வா
...

ம்ம்ம் ம்ம்.. ம்ம் ம்ம்ம் ம்ம்..
ம்ம்ம் ம்ம்.. ம்ம் ம்ம்ம் ம்ம்..
ம்ம்ம் ம்ம்.. ம்ம் ம்ம் ம்.. ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்..
தத்தெடுத்த முத்தே வா.. சாதி மல்லிக் கொத்தே வா
தத்தெடுத்த முத்தே வா.. சாதி மல்லிக் கொத்தே வா
சிப்பியென்னைப் பாராயோ.. சின்ன முத்தம் தாராயோ
சிப்பியென்னைப் பாராயோ.. சின்ன முத்தம் தாராயோ
தத்தெடுத்த முத்தே வா.. சாதி மல்லிக் கொத்தே வா
...

இது ஊமையின் ராகங்கள்.. ஒரு ஏழையின் சோகங்கள்
யார் வந்து தீர்ப்பதோ.. யார் கையில் சேர்ப்பதோ
ஊரெல்லாம் கார்காலம்.. எந்தன் வானில் எந்நாளும் கோடை
எந்தன் வானில் எந்நாளும் கோடை
நான் கேட்டே வந்த வரம்.. கண்கள் ரெண்டும் கண்ணீரின் ஓடை
கண்கள் ரெண்டும் கண்ணீரின் ஓடை
...

# 96 வெள்ளி நிலா பதுமை - அமுத கானம்

படம்: அமுத கானம்
இசை: இளையராஜா
பாடியவர்: ரமேஷ் & வாணி ஜெயராம்

பெ: ஆ.. ஆஆ ஆஆஆ.. ஆஆஆ..
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..
ம்ஹும்ஹும்..
: ம்ஹும்ஹும்ஹும்..
பெ: ம்ஹும்ஹும்..
: ம்ஹும்ஹும்ஹும்..
பெ: ம்ஹும்..
: ம்ம்..
பெ: ம்ஹும்..
: லாலா..
பெ: ஆ.. ஆ.. ஆ.. ஆ.. லால லால லால லாலா..
: வெள்ளி நிலா பதுமை.. காதல் பள்ளியிலே இளமை
வெள்ளி நிலா பதுமை.. காதல் பள்ளியிலே இளமை
இது பூமேடையோ.. இசை நான் பாடவோ
மலைத் தேன் மழையோ.. மதுவோ
வெள்ளி நிலா பதுமை.. காதல் பள்ளியிலே இளமை
...

பெ: நான் சூடும் சந்தன மல்லிகையோ
நான் சூடும் சந்தன மல்லிகையோ
பூமேனி மன்மதன் பூபாளமோ
: தாமரைப் பூவில் ஊர்வலமே
பெ: ஆஆஆ..
: தாமரைப் பூவில் ஊர்வலமே
பெ: ஆஆஆஆஆ..
: அமுத கானமே
பெ: ஆஹாஹா..
: இதழோடு பாடவோ
பெ: ஆஹாஹா..
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ..
: என் திருவிழாவில் தேரில் ஆடும் கிளியே

பெ: வெள்ளி நிலா பதுமை.. காதல் பள்ளியிலே இளமை
இது பூமேடையோ.. இசை நான் பாடவோ
மலைத் தேன் மழையோ.. மதுவோ
வெள்ளி நிலா பதுமை
...

பெ: கண்டாலே கொண்டாடும் தேவதை நான்
கண்டாலே கொண்டாடும் தேவதை நான்
கண்ணாலே சுக ராகம் நான் பாடவா
: ஆடையில் மூடிய தேன் நிலவே
பெ: ஆஆஆ..
: ஆடையில் மூடிய தேன் நிலவே
பெ: ஆஆஆ..
: அணைத்துப் பேசவோ
பெ: ஆஹாஹா..
: நான் மடியில் சாயவோ
பெ: ஆஹாஹா..
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ..
: நீ கொஞ்சும் வேளை அந்தி மாலை வருமோ

பெ: வெள்ளி நிலா பதுமை.. காதல் பள்ளியிலே இளமை
இது பூமேடையோ.. இசை நான் பாடவோ
மலைத் தேன் மழையோ.. மதுவோ
வெள்ளி நிலா பதுமை.. காதல் பள்ளியிலே இளமை
இது பூமேடையோ.. இசை நான் பாடவோ
: லாலலலா.. லலலா.. லாலலாலலலா.. லலலா..
...

# 95 ஒரே ராகம்.. ஒரே தாளம் - அமுத கானம்

படம்: அமுத கானம்
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி

: ஆ.. ஆ.. ஆஆ ஆ..
ஆஆஆ ஆ ஆ ஆ ஆ..
ஆஆஆ ஆ ஆ..
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..
...

: ஒரே ராகம்.. ஒரே தாளம்.. ஒரே பாடல் பாடவா
ஒரே ராகம்.. ஒரே தாளம்.. ஒரே பாடல் பாடவா
பெ: வரம் நீயே.. தரும் நாள்.. மடியிலே தூங்கவா
: ஒரே ராகம்.. ஒரே தாளம்.. ஒரே பாடல் பாடவா
ஒரே ராகம்.. ஒரே தாளம்.. ஒரே பாடல் பாடவா
...

பெ: சாயங்கால மேகங்கள் மேனி மூட.. மோகங்கள்
சாயங்கால மேகங்கள் மேனி மூட.. மோகங்கள்
மடி சாயும்போது சொந்தங்கள்.. தோளில்தானே சொர்க்கங்கள்
: இடைக்காவலின் தடை மீறவா.. இடைக்காவலின் தடை மீற வா
இன்னும் என்ன கன்னிப் போர்வை.. தேவையா

பெ: ஒரே ராகம்.. ஒரே தாளம்.. ஒரே பாடல் பாடவா
வரம் நீ.. தரும் நாள்.. மடியிலே தூங்கவா
...

: கண்ணில் கோடி மின்னல்கள்.. கன்னம் ஏங்கும் சின்னங்கள்
கண்ணில் கோடி மின்னல்கள்.. கன்னம் ஏங்கும் சின்னங்கள்
கண்ணன் கையில் வண்ணங்கள்.. காணும் நெஞ்சக் கிண்ணங்கள்
பெ: இதழ் வாசலில் இதழ் பூசுங்கள்.. இதழ் வாசலில் இதழ் பூசுங்கள்
காலை மாலை வேளையின்று காணவா

: ஒரே ராகம்.. ஒரே தாளம்.. ஒரே பாடல் பாடவா
ஒரே ராகம்.. ஒரே தாளம்.. ஒரே பாடல் பாடவா
பெ: வரம் நீயே.. தரும் நாள்.. மடியிலே தூங்கவா
&பெ: லலாலாலா.. லாலாலாலா.. லாலாலாலா.. லாலலா..
...

# 94 என் இனிய பொன் நிலாவே - மூடுபனி

படம்: மூடுபனி
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்: கே.ஜே.ஏசுதாஸ்

என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்.. ததத தாத்ததா..
தொடருதே தினம் தினம்.. ததத தாத்ததா..
என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
...

பன்னீரைத் தூவும் மழை.. சில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இந்நேரமே..
என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்களாடும் நிலை
என்னாசை உன்னோரமே..
வெண்ணீல வானில்.. அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும்.. அதில் உள்ளாடும் தாகம்
புரியாதோ என் எண்ணமே.. அன்பே..

என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்.. ததத தாத்ததா..
தொடருதே தினம் தினம்.. ததத தாத்ததா..
என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
...

பொன் மாலை நேரங்களே.. என்னின்ப ராகங்களே
பூவான கோலங்களே..
தென்காற்றின் இன்பங்களே.. தேனாடும் ரோஜாக்களே
என்னென்ன ஜாலங்களே
கண்ணோடு தோன்றும்.. சிறு கண்ணீரிலாடும்
கைசேரும் காலம்.. அதை என் நெஞ்சம் தேடும்
இதுதானே என் ஆசைகள்.. அன்பே..

என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்.. ததத தாத்ததா..
தொடருதே தினம் தினம்.. ததத தாத்ததா..
என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
தா.. ததததா..
...

# 93 ஓடுகிற தண்ணியில - அச்சமில்லை அச்சமில்லை

படம்: அச்சமில்லை அச்சமில்லை
இசை: வி.எஸ்.நரசிம்மன்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & பி.சுசீலா

பெ: மேகத்தைத் தூது விட்டா திசை மாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே.. தண்ணிய நான் தூது விட்டேன்
...
பெ: தண்ணிக்கு இந்தக் கன்னி தந்தனுப்பும் முத்தமெல்லாம்
எண்ணிக்கை குறையாம எப்ப வந்து தரப் போற
எப்ப வந்து தரப் போற
...
பெ: ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..
சேர்ந்துச்சோ.. சேரலையோ..
...
பெ: ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் நெத்தியிலே
ஓலை ஒண்ணு நான் எழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
...
பெ: ஓலை ஒண்ணு நான் எழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் கைகளிலே
...

: அடி கிராமத்துக் கிளியே.. என் கிழியாத தாவணியே
அடி கிராமத்துக் கிளியே.. என் கிழியாத தாவணியே
குளிரெடுக்கும் சாரலுக்குக் குடை பிடிக்க வா மயிலே
குளிரெடுக்கும் சாரலுக்குக் குடை பிடிக்க வா மயிலே
பெ: குடையுமில்லை.. வடையுமில்லை..
கூதலுக்கு ஆதரவா.. தாவணியை நீ புழிய.. தலை துவட்ட நான் வரவா
: நீ நனைச்ச ஆடையெல்லாம் நீ புழிஞ்சா நீர் வடியும்
நீ நனைச்ச ஆடையெல்லாம் நீ புழிஞ்சா நீர் வடியும்
அய்த்த மகன் நான் புழிஞ்சா அத்தனியும் தேன் வடியும்
அய்த்த மகன் நான் புழிஞ்சா அத்தனியும் தேன் வடியும்

பெ: ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் நெத்தியிலே
...

பெ: மலர் தோட்டத்துக் குயிலே.. இது உமக்காகப் பாடுதுங்க
மலர் தோட்டத்துக் குயிலே.. இது உமக்காகப் பாடுதுங்க
ஆசைய நான் தூது விட அருவி ஒரு பாலமுங்க
: அருவி போல அழுகுறேனே.. அறிந்து கொண்டாலாகாதோ
முந்தானையின் ஓரம் என்னை முடிந்து கொண்டாலாகாதோ
பெ: வக்கணையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ
வக்கணையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ
உங்க பாதம் பட்ட மண்ணெடுத்து நான் பல்லு வெளக்கப் போறதெப்போ

பெ: ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் நெத்தியிலே
ஓலை ஒண்ணு நான் எழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் கைகளிலே
ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் நெத்தியிலே
...

# 92 ஆவாரம்பூவு ஆரேழு நாளா - அச்சமில்லை அச்சமில்லை

படம்: அச்சமில்லை அச்சமில்லை
இசை: வி.எஸ்.நரசிம்மன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா

பெ: ம்.. ம்ம் ம்ம்ம்.. ம்.. ம்ம் ம்ம்ம்..
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ..
ஆவாரம்பூவு ஆரேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
ஆவாரம்பூவு ஆரேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
...

பெ: ஒம்பேரைச் சொல்லும் கைப்பிள்ளையே
நான் மட்டும் சொல்ல வாய் வல்லையே
நீ பார்க்கும்போது தவிப்பாச்சு.. செவ்வந்திப் பூவும் செவப்பாச்சு
: பார்வையிலே கெலிச்சாளே.. புளியங்கொம்பா புடிச்சாளே
வேறோடுதான் மனசைப் பறிச்சாளே

: ஆவாரம்பூவு ஆரேழு நாளா நான் போகும் பாதையில் காத்திருக்கு
உன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு
பெ: ஆவாரம்பூவு ஆரேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
...

: உன் கண்ணு ரெண்டும் துடிக்குதடி
கல்யாண மேளம் அடிக்குதடி
ஆசைய நெஞ்சில் சுமந்தபடி.. அண்ணாந்து பார்க்கும் இளையக் கொடி
பெ: ஒறங்காமத்தான் ஒம்மப் பார்த்தேன்.. ஒமக்காகத்தான் கன்னி காத்தேன்
ஓம்மடியா நெனச்சு தலை சாய்ச்சேன்

: ஆவாரம்பூவு ஆரேழு நாளா நான் போகும் பாதையில் காத்திருக்கு
உன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு
பெ: ஆவாரம்பூவு ஆரேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
ம்.. ம்ம் ம்ம்ம்.. ம்.. ம்ம் ம்ம்ம்..
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ..
...

# 91 செந்தூரப் பூவே - 16 வயதினிலே

படம்: 16 வயதினிலே
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்: எஸ்.ஜானகி

செந்தூரப் பூவே..
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே..
...

தென்றலைத் தூது விட்டு.. ஒரு சேதிக்குக் காத்திருப்பேன்
கண்களை மூட விட்டு.. இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
கன்னிப் பருவத்தில் வந்த கனவிதுவே
எண்ண இனிக்கிது அந்த நினைவதுவே
வண்ணப் பூவே.. தென்றல் காற்றே.. என்னைத் தேடி சுகம் வருமோ

செந்தூரப் பூவே..
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே..
...

நீலக் கருங்குயிலே.. தென்னஞ்சோலைக் குருவிகளே
ஓலமிடும் மயிலே.. நல்ல கானப் பறவைகளே
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழியெங்கும் பூவை இறைத்திடுங்கள்
வண்ணப் பூவே.. தென்றல் காற்றே.. என்னைத் தேடி சுகம் வருமோ

செந்தூரப் பூவே..
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே..
...

# 90 வான் நிலா நிலா அல்ல - பட்டினப் பிரவேசம்

படம்: பட்டினப் பிரவேசம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

லா.. லலா.. லலா.. லலா.. லலாலலாலலா..
...
லா.. லலா.. லலா.. லலா.. லலாலலாலலா..
...
வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா.. என் தேவி இன்னிலா
தேன் நிலா எனும் நிலா.. என் தேவி இன்னிலா
நீயிலாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
...

மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
...

தெய்வம் கல்லிலா.. ஒரு தோகையின் சொல்லிலா
தெய்வம் கல்லிலா.. ஒரு தோகையின் சொல்லிலா
பொன்னிலா.. பொட்டிலா.. புன்னகை மொட்டிலா
அவள் காட்டும் அன்பிலா
இன்பம் கட்டிலா.. அவள் தேகக் கட்டிலா
இன்பம் கட்டிலா.. அவள் தேகக் கட்டிலா
தீதிலா காதலா.. ஊடலா.. கூடலா
அவள் மீட்டும் பண்ணிலா

வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
...

வாழ்க்கை வழியிலா.. ஒரு மங்கையின் ஒளியிலா.. ஹா..
வாழ்க்கை வழியிலா.. ஒரு மங்கையின் ஒளியிலா
ஊரிலா.. நாட்டிலா.. ஆனந்தம் வீட்டிலா
அவள் நெஞ்சின் ஏட்டிலா
சொந்தம் இருளிலா.. ஒரு பூவையின் அருளிலா
சொந்தம் இருளிலா.. ஒரு பூவையின் அருளிலா
எண்ணிலா ஆசைகள் என் நிலா கொண்டதேன்
அதைச் சொல்வாய் வெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா.. என் தேவி இன்னிலா
நீயிலாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
...

# 89 குமரிப் பெண்ணின் உள்ளத்திலே - எங்க வீட்டுப் பிள்ளை

படம்: எங்க வீட்டுப் பிள்ளை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்க்ள்: டி.எம்.சௌந்தரராஜன் & பி.சுசீலா

ஆ2: குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வர வேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும்
பெ2: குமரிப் பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தர வேண்டும்
காதல் நெஞ்சைத் தந்து விட்டு குடியிருக்க நீ வர வேண்டும்
குமரிப் பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தர வேண்டும்
காதல் நெஞ்சைத் தந்து விட்டு குடியிருக்க நீ வர வேண்டும்
...
ஆ1: குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வர வேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும்
பெ1: ஆ.. ஆ.. ஆ.. ஆஆ.. ஆஆ.. ஆஆ..
குமரிப் பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தர வேண்டும்
காதல் நெஞ்சைத் தந்து விட்டு குடியிருக்க நீ வர வேண்டும்
...

ஆ1: திங்கள் தங்கையாம்.. தென்றல் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள்
திங்கள் தங்கையாம்.. தென்றல் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள்
பெ1: அவள் உன்னைக் கண்டு.. உயிர்க் காதல் கொண்டு
தன் உள்ளம் தன்னையே தருவாள்
அவள் உன்னைக் கண்டு.. உயிர்க் காதல் கொண்டு
தன் உள்ளம் தன்னையே தருவாள்
ஆ1: நானள்ளிக் கொள்ள.. அவள் பள்ளி கொள்ள
சுகம் மெள்ள மெள்ளவே புரியும்
நானள்ளிக் கொள்ள.. அவள் பள்ளி கொள்ள
சுகம் மெள்ள மெள்ளவே புரியும்
பெ1: கை தொடுவார்.. தொடாமல் தூக்கம் வருமோ
துணையைத் தேடி நீ வரலாம்
தொடுவார்.. தொடாமல் தூக்கம் வருமோ
துணையைத் தேடி நீ வரலாம்

ஆ1: குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வர வேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும்
...

ஆ1: பூவை என்பதோர் பூவைக் கண்டதும்
தேவை தேவையென்று வருவேன்
பெ1: இடை மின்னல் கேட்க.. நடை அன்னம் கேட்க
அதை உன்னைக் கேட்டு நான் தருவேன்
ஆ1: கொடுத்தாலும் என்ன.. எடுத்தாலும் என்ன
ஒரு நாளும் அழகு குறையாது
பெ1: அந்த அழகே வராமல் ஆசை வருமோ
அமுதும் தேனும் நீ பெறலாம்

ஆ1: குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வர வேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும்
பெ1: குமரிப் பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தர வேண்டும்
காதல் நெஞ்சைத் தந்து விட்டு குடியிருக்க நீ வர வேண்டும்
ஆ.. ஆஆ.. ஆஆ ஆஆ ஆஆஆ
ஆ.. ஆஆ.. ஆ.. ஆ.. ஆஆ
...
ஆ1: ihikhik குட் நைட்
பெ1: குட் நைட்
...

# 88 நாணமோ.. இன்னும் நாணமோ - ஆயிரத்தில் ஒருவன்

படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்க்ள்: டி.எம்.சௌந்தரராஜன் & பி.சுசீலா

: நாணமோ.. இன்னும் நாணமோ..
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்தப் பார்வை கூறுவதென்ன
நாணமோ.. நாணமோ..
பெ: ஓ.. ஓஓஓ.. நாணுமோ.. இன்னும் நாணுமோ..
தன்னை நாடும் காதலன் முன்னே
திருநாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ.. நாணுமோ..
: நாணமோ.. இன்னும் நாணமோ..
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்தப் பார்வை கூறுவதென்ன
நாணமோ.. நாணமோ..
...

: தோட்டத்துப் பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
தோட்டத்துப் பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது.. வாடையில் வாடுது
ஆனந்த வெள்ளத்தில் நீராடுது
அது எது..
பெ: ஆடவர் கண்களில் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
...
பெ: ஆடவர் கண்களில் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை மூடுவது
அது இது..

பெ: நாணுமோ.. இன்னும் நாணுமோ..
தன்னை நாடும் காதலன் முன்னே
திருநாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ.. நாணுமோ..
...

பெ: மாலையில் காற்றினில் உண்டாவது
அது மஞ்சத்திலே மலர்ச் செண்டாவது
மாலையில் காற்றினில் உண்டாவது
அது மஞ்சத்திலே மலர்ச் செண்டாவது
காலையில் நீரினில் ஆடிடும் வேளையில்
காதலி எண்ணத்தில் தேனாவது
அது எது..
: உண்டால் மயக்கும் கள்ளாவது
அது உண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது
...
: உண்டால் மயக்கும் கள்ளாவது
அது உண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது
நாளுக்கு நாள் மனம் மாறுவது
ஞானியின் கண்களும் தேடுவது
அது இது..

: நாணமோ.. இன்னும் நாணமோ..
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்தப் பார்வை கூறுவதென்ன
நாணமோ.. நாணமோ..
பெ: ஓ.. ஓஓஓ.. நாணுமோ.. இன்னும் நாணுமோ..
தன்னை நாடும் காதலன் முன்னே
திருநாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ.. நாணுமோ..
...

# 87 இரு பறவைகள் மலை முழுவதும் - நிறம் மாறாத பூக்கள்

படம்: நிறம் மாறாத பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜென்சி

இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே.. இங்கே.. பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே.. அங்கே.. கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே.. இங்கே.. பறந்தன
...

சாரல் தூவும் முகில்களும்.. சந்தம் பாடும் மலர்களும்
...
சாரல் தூவும் முகில்களும்.. சந்தம் பாடும் மலர்களும்
ஆனந்தப் புது வெள்ள நீரோட்டமும்
ஆகாய பூப்பந்தல் தேரோட்டமும்
ஆறோட.. கலைமானாக
பார்த்தன.. ரசித்தன ஓராயிரமே

இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே.. இங்கே.. பறந்தன
...

பூவில் பொங்கும் நிறங்களே.. பூக்கள் ஆளும் மனங்களே
...
எங்கெங்கும் அவர் போல நான் காண்கிறேன்
அங்கங்கு எனைப் போல அவர் காண்கிறார்
நீயென்றும்.. இனி நானென்றும்
அழிக்கவும்.. பிரிக்கவும் முடியாதம்மா

இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே.. இங்கே.. பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே.. அங்கே.. கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்
லல லாலா லாலா லாலாலாலா
லல லாலா லாலா லாலாலாலா
...

# 86 ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள் - உறவாடும் நெஞ்சம்

படம்: உறவாடும் நெஞ்சம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
 
பெ: ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள்..
...

: மஞ்சளின் மகராணி.. குங்குமப் பெருந்தேவி
உன்னால் பொன் நாள் கண்டேனே
கண்ணில் சொர்க்கத்தின் நிழலைக் கண்டேனே
பெ: உன் முகம் பார்த்து மலர்ந்தேனே
உன் நிழல் தேடி வளர்ந்தேனே

பெ: ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
...

பெ: உன்னிடம் நான் கண்ட பெருமைகள் பல உண்டு
கோபம்.. வேகம்.. மாறாதோ
மாறும் நன்னாள் எந்நாள்.. காண்பேனோ
: புன்னகையாலே எனை மாற்று
பொன்னழகே நீ பூங்காற்று

: ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
...

பெ: மங்கல நாண் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் தீபம் நானாக
மங்கல நாண் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் தீபம் நானாக
: காவியம் போலே வாழ்ந்திருப்போம்
ஆயிரம் நிலவைப் பார்த்திருப்போம்

பெ: ஒரு நாள்..
ஆ: உன்னோடு ஒரு நாள்
பெ: உறவினிலாட..
: புதுமைகள் காண
&பெ: காண்போமே எந்நாளும் திருநாள்
...