#228 தேவதை இளந்தேவி - ஆயிரம் நிலவே வா

படம்: ஆயிரம் நிலவே வா
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


: தேவதை இளந்தேவி.. உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ.. நீயில்லாமல் நானா..
தேவதை இளந்தேவி.. உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ.. நீயில்லாமல் நானா..
...

: ஏரிக்கரை பூவெல்லாம் எந்தன் பெயரைச் சொல்லாதோ
பூவசந்தமே.. நீ மறந்ததேன்
ஆற்று மணல் மேடெங்கும் நாம் வரைந்த கோலங்கள்
தேவ முல்லையே.. காணவில்லையே
காதல் சோதனை.. இரு கண்ணில் வேதனை
ஒரு வானம்பாடி தேகம் வாடிப் பாடும் சோகம் கோடி

: தேவதை இளந்தேவி.. உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ.. நீயில்லாமல் நானா..
...
ஆ.குழு: லா.. லாலா.. லாலலா..
லாலலா லாலலா லாலலாலலா..
லல லாலலால லாலலால லாலலால லாலலால லா..
...

: எந்தனது கல்லறையில் வேறொருவன் தூங்குவதா
விதியென்பதா.. சதியென்பதா
சொந்தமுள்ள காதலியே.. வற்றிவிட்ட காவிரியே
உந்தனாவியை நீ வெறுப்பதா
இது கண்ணீர் ராத்திரி.. என் கண்ணே ஆதரி
இவன் தேயும் தேதி.. கண்ணீர் ஜாதி.. நீதான் எந்தன் பாதி

: தேவதை இளந்தேவி.. உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ.. நீயில்லாமல் நானா..
ஓ.. நீயில்லாமல் நானா..
ஓ.. நீயில்லாமல் நானா..
ஆ.குழு: லாலல லலலாலா.. லாலலால லாலா..
லாலலாலலாலா லாலலாலலா.. லா.. லாலலால லாலா..
...

#227 அந்தரங்கம் யாவுமே - ஆயிரம் நிலவே வா

படம்: ஆயிரம் நிலவே வா
இசை: இளையராஜா

எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்ஆ1: ம்ஹும்..
ஆ2: எப்டி எப்டி
ஆ1: ம்ஹும்..
ஆ2: ihikhikஎப்டி எப்டி
ஆ1: ம்ஹும்.. ம்ஹுஹுஹுஹுஹுஹும்
...
ஆ1: அந்தரங்கம் யாவுமே
ஆ2: எப்டி எப்டி
ஆ1: சொல்வதென்றால் பாவமே
ஆ2: ihikhikஎப்டி எப்டி
ஆ1: அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனை.. ம்ஹுஹும்ihikhik அறியுமா
அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனை.. ம்ஹுஹும் ihikhikஅறியுமா
அந்தரங்கம் யாவுமே.. ஏ.. ஏ..
...

ஆ1: காமனே நாணம் கொண்டான்.. சொல்லி அது தீராது
ஆ2: எப்டி எப்டி
ஆ1: கம்பனே வந்தால் கூடக் கட்டுப்படி ஆகாது
ஆ2: ihikhikஎப்டி எப்டி
ஆ1: கண்டதில் இன்று நான் சொல்வது பாதியே
காவிய நாயகி கண்ணகி ஜாதியே
அன்று ஒரு நாள் அந்த மயிலாள் ஆடை நனைந்தாள்
ஆ2: ஹாஹா..
ஆ1: காயும் வரையில் தோகை உடலில் என்னை அணிந்தாள்
நாணமே சேலையானதும் போதையானதும் என்னென்று சொல்ல

ஆ1: அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனை.. ம்ஹுஹும் ihikhikஅறியுமா
அந்தரங்கம் யாவுமே..
ஆ2: ஹா.. எப்டி.. எப்டி எப்டி எப்டி எப்டி..
...

ஆ1: காதலை தானம் கேட்டேன் என்னவொரு தாராளம்
ஆ2: எப்டி எப்டி
ஆ1: நானவள் தோளில் சாய்ந்து அள்ளியது ஏராளம்
ஆ2: எப்டி எப்டி
ஆ1: தாவணிப் பூவினைச் சோதனை செய்கிறேன்
எத்தனை மச்சங்கள்.. கேள் அதைச் சொல்கிறேன்
பாவை உடலில் கோடி மலரில் ஆடை அணிவேன்
ஆ2: ஆஹா..
ஆ1: ஆடை அறியும் சேதி முழுதும் நானும் அறிவேன்
மீதியை நான் உரைப்பதும் நீ ரசிப்பதும் பண்பாடு இல்லை

ஆ1: அந்தரங்கம் யாவுமே
ஆ2: எப்டி எப்டி
ஆ1: சொல்வதென்றால் பாவமே
ஆ2: ihikhikஎப்டி எப்டி
ஆ1: அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனை.. ம்ஹுஹும்ihikhik அறியுமா
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனை.. ம்ஹுஹும்ihikhik அறியுமா
...

#226 இளைய நிலா பொழிகிறதே - பயணங்கள் முடிவதில்லை

படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


இளைய நிலா பொழிகிறதே.. இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக்காணுமே.. வானமே..
இளைய நிலா பொழிகிறதே.. இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக்காணுமே.. வானமே..
இளைய நிலா பொழிகிறதே.. இதயம் வரை நனைகிறதே
...

வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும்
வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும்
வான வீதியில் மேக ஊர்வலம்.. காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

இளைய நிலா பொழிகிறதே..
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக்காணுமே.. வானமே..
இளைய நிலா பொழிகிறதே..
...

முகிலினங்கள் அலைகிறதே.. முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ.. அது மழையோ
முகிலினங்கள் அலைகிறதே.. முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் ihikhikஅழுதிடுமோ.. அது மழையோ
நீலவானிலே வெள்ளி ஓடைகள்.. ஓடுகின்றதே.. என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

இளைய நிலா பொழிகிறதே.. இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக்காணுமே.. வானமே..
இளைய நிலா பொழிகிறதே..
...

#225 சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் - பயணங்கள் முடிவதில்லை

படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி


பெ: சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்.. சங்கீதம் பாடும்
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்.. சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்.. சங்கீதம் பாடும்
...

: பாவையிவள் பார்த்துவிட்டால் பாலைவனம் ஊற்றெடுக்கும்
கண்ணிமைகள்தான் அசைந்தால் நந்தவனக் காற்றடிக்கும்
பெ: நீங்கள் என்னைப் பார்த்தால் குளிரெடுக்கும்
மனதுக்குள் ஏனோ மழையடிக்கும்
: ஹே.. பாரிஜாத வாசம்.. நேரம் பார்த்து வீசும்
பாரிஜாத வாசம்.. நேரம் பார்த்து வீசும்
பெ: மொட்டுக் கதவைப் பட்டு வண்டுகள் தட்டுகின்றதே.. இப்போது

பெ: சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்.. சங்கீதம் பாடும்
: கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்.. சங்கீதம் பாடும்
...

பெ: கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ பதிக்க
அலை வந்து அழித்ததனால் கன்னி மனம்தான் துடிக்க
: கடலுக்குக்கூட ஈரமில்லையோ
நியாயங்களைக் கேட்க யாருமில்லையோ
பெ: சேர்த்து வைத்த தாகம் கண்ணா என்று தீரும்
சேர்த்து வைத்த தாகம் கண்ணா என்று தீரும்
: பேசும் கிள்ளையே.. ஈர முல்லையே.. நேரமில்லையே.. இப்போது

: சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்.. சங்கீதம் பாடும்
பெ: கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
&பெ: தாரரத்த ராரராத்த ராரா.. தராரா ராரா..
...

#224 ஏ ஆத்தா.. ஆத்தோரமா வார்றியா - பயணங்கள் முடிவதில்லை

படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


ஏ ஆத்தா.. ஆத்தோரமா வார்றியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
அடியே ஆத்தா.. ஆத்தோரமா வார்றியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
அட அக்கம் பக்கம் யாருமில்லே
அள்ளிக்கலாம்.. வா புள்ளே..
ஏ ஆத்தா.. ஆத்தோரமா வார்றியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
...

ஆவாரம் பூவாக அள்ளாமக் கிள்ளாம அணைக்கத் துடிச்சிருக்கேன்
அச்சாரம் போட்டாச்சு.. அஞ்சாறு நாளாச்சு.. தனிச்சுத் தவிச்சிருக்கேன்
தவிச்ச மனசுக்குத் தண்ணி தர வேணாமா
தளும்பும் நெனப்புக்கு அள்ளிக்கிறேன் நீ வாம்மா
மாருல குளுருது.. சேர்த்தென்ன அணைச்சாத் தீருமடி குளிரும்
கட்டிப் புடிச்சுக்க

ஏய்.. ஆத்தா.. ஆத்தோரமா வார்றியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
அட அக்கம் பக்கம் யாருமில்லே
அள்ளிக்கலாம்.. வா புள்ளே..
...

நான் போறேன் முன்னாலே.. நீ வாடி பின்னாலே நாய்க்கர் தோட்டத்துக்கு
பேசாதே கண்ணாலே.. என்னாடி அம்மாளே.. வாடுற வாட்டத்துக்கு
சிரிச்ச சிரிப்புல சில்லறையும் சிதறுது
செவந்த முகங்கண்டு எம்மனசு பதறுது
பவள வாயில தெரியிற அழகைப் பார்த்ததுமே மனசும் பட்டுத் துடிக்குது

ஏய்.. ஆத்தா.. ஆத்தோரமா வார்றியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
அட அக்கம் பக்கம் யாருமில்லே
அள்ளிக்கலாம்.. வா புள்ளே..
ஏ ஆத்தா.. ஆத்தோரமா வார்றியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
...

#223 தோகை இளமயில் ஆடி வருகுது - பயணங்கள் முடிவதில்லை

படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


தோகை இளமயில் ஆடி வருகுது.. வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
தோகை இளமயில் ஆடி வருகுது.. வானில் மழை வருமோ
...

கோலம் போடும் நாணங்கள் காணாத ஜாலம்
இதழ்களிலே பௌர்ணமி வெளிச்சம்
கண்ணில் துள்ளும் தாளங்கள் ஆனந்த மேளம்ம்
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்
விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா
அன்னமும் இவளிடம் நடை பழகும்
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்

தோகை இளமயில் ஆடி வருகுது.. வானில் மழை வருமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
...

பூமியெங்கும் பூந்தோட்டம் நாம் காண வேண்டும்
புதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்
அந்த மழையில் மலர்கள் குளிக்கும்
அருவிகளோ ராகம் தரும்.. அதில் நனைந்தால் தாகம் வரும்
தேவதை விழியிலே அமுத அலை
கனவுகள் வளர்க்குது கள்ளூரும் உன் பார்வை

தோகை இளமயில் ஆடி வருகுது.. வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
...

#222 ராக தீபம் ஏற்றும் நேரம் - பயணங்கள் முடிவதில்லை

படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
எழுதியவர்: முத்துலிங்கம்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


ஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆ..
ஆஆஆ ஆஆ.. ஆஆஆ ஆஆ.. ஆஆஆ ஆஆ.. ஆஆஆ ஆஆ..
ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ..
ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ.. ஆ..
...
ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
முதன்முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
என் விழியோ கடல் ஆனதம்மா.. எண்ணங்களோ அலை மோதுதம்மா
புது ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
முதன்முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
...

வாடிடும் என் நெஞ்சம் குளிர்ந்திடுமோ
வசந்தமும் என் வாழ்வில் மலர்ந்திடுமோ
வாடிடும் என் நெஞ்சம் குளிர்ந்திடுமோ
வசந்தமும் என் வாழ்வில் மலர்ந்திடுமோ
விழிகள் பாராமல் செவிகள் கேளாமல் கவிதை அரங்கேறுமோ
விழிகள் பாராமல் செவிகள் கேளாமல் கவிதை அரங்கேறுமோ
தேவி உன் கோயில் வாசல் முன்னாலே காவியத் தேனென பூமியில்

முதன்முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
முதன்முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
...

ஆனந்த கங்கை வெள்ளம் பொங்கப் பொங்க
ஆரம்ப நாளில் இன்பம் கொஞ்சக் கொஞ்ச
பாடும் உள்ளம் துள்ளத் துள்ள.. பாடல் ஒன்று சொல்லச் சொல்ல
பாடும் உள்ளம் துள்ளத் துள்ள.. பாடல் ஒன்று சொல்லச் சொல்ல
ஆயிரம் சந்தம் நாவினில் சிந்தும்.. அம்பிகைக்கே சொந்தம்
நித்தம் நித்தம் உள்ளம் களிக்க.. கற்ற வித்தை என்றும் செழிக்க
நித்தம் நித்தம் உள்ளம் களிக்க.. கற்ற வித்தை என்றும் செழிக்க
முத்து ரத்தினம் சிந்தும் நித்தினம்
அன்னை உன்னை வணங்கி நின்று

ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது
புது வித ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது
கான மழை இனி நான் பொழிவேன்
தேன் மழையில் இனி நீ நன்னைவாய்
புது ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது
புது வித ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது
...

#221 வைகறையில் வைகைக் கரையில் - பயணங்கள் முடிவதில்லை

படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


வைகறையில் வைகைக் கரையில் வந்தால் வருவேன் உன்னருகில்
வைகறையில் வைகைக் கரையில் வந்தால் வருவேன் உன்னருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில் நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
வைகறையில் வைகைக் கரையில் வந்தால் வருவேன் உன்னருகில்
...

உன் நினைவே எனக்கோர் சுருதி.. உன் கனவே எனக்கோர் கிருதி
உன் உணர்வில் மனமே உருகி.. வாடுதம்மா மலர் போல் கருகி
பலப்பல ஜென்மம் நானெடுப்பேன்.. பாடல்கள் நூறு நான் படிப்பேன்
அன்பே உனக்கே காத்திருப்பேன்
ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..

வைகறையில் வைகைக் கரையில் வந்தால் வருவேன் உன்னருகில்
...

ஆயிரமாயிரம் ஆசைகளை ஆசையில் உன்னிடம் பேச வந்தேன்
ஆவியில் மேவிய சேதிகளைக் கேளென நெஞ்சிடம் கூற வந்தேன்
நினைவுகள் எங்கோ அலைகிறதே.. கனவுகள் ஏனோ கலைகிறதே
நிழல் போல் உன்னைத் தொடர்கிறதே
ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..

வைகறையில் வைகைக் கரையில் வந்தால் வருவேன் உன்னருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில் நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
வைகறையில் வைகைக் கரையில் வந்தால்:( வருவேன்:( உன்னருகில்
...

#220 மணி ஓசை கேட்டு எழுந்து - பயணங்கள் முடிவதில்லை

படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
எழுதியவர்: முத்துலிங்கம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ: மணி ஓசை கேட்டு எழுந்து.. நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து.. ஒரு கோயில் சேர்ந்த பொழுது
அந்தக் கோயிலின் மணி வாசலை இங்கு மூடுதல் முறையோ
ம்ம்ம்.. மணி ஓசை கேட்டு எழுந்து.. நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
...

: கண்ணன் பாடும் பாடல் கேட்க.. ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன்.. ஹா.. :-& :-&..
பேசக் கூடாதோ.. :-& :-&:-&..
பெ: கண்ணன் பாடும் பாடல் கேட்க.. ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக் கூடாதோ
: ராதை மனம் ஏங்கலாமோ.. கண்ணன் மனம் வாடலாமோ
வாழ்க்கை மாறுமோ.. நெஞ்சம் தாங்குமோ

: மணி ஓசை கேட்டு எழுந்து.. நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
...

: பாதை மாறிப் போகும்போது.. :-& :-&..
ஊரும் வந்தே சேராது.. :-& :-&:-&..
தாளம் மாறிப் போடும்போது.. ஹா.. :-& :-&:-&..
ராகம் தோன்.. :-&:-&.. :-&:-&..
பெ: பாதை மாறிப் போகும்போது ஊரும் வந்தே சேராது
: தாளம் மாறிப் போடும்போது ராகம் தோன்றாது
பெ: பாடும் புது வீணையிங்கே
: ராகம் அதில் மாறும் அங்கே
காலம் மாறுமோ.. தாளம் சேருமோ

பெ: ஆஹாஹா.. மணி ஓசை கேட்டு எழுந்து
: நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
பெ: திருத்தேரில் நானும் அமர்ந்து
: ஒரு கோயில் சேர்ந்த பொழுது
பெ: அந்தக் கோயிலின் மணி வாசலை இங்கு மூடுதல் முறையோ
: ம்ஹும்ஹும்.. மணி ஓசை கேட்டு எழுந்து.. நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
...

#219 ஓராயிரம் பார்வையிலே - வல்லவனுக்கு வல்லவன்

படம்: வல்லவனுக்கு வல்லவன்
இசை: வேதா
எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்

நூறு முறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகு தூரம் நான் ஒரு நாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள் ஒரு நாளும் மறைவதில்லை
...
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
...

இந்த மானிடர்க் காதலெல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும்
அந்த மலர்களிம் வாசமெல்லாம் ஒரு நாளைக்குள் வாடிவிடும்
நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
...

இந்தக் காற்றினில் நான் கலந்தேன்.. உன் கண்களைத் தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்.. உந்தன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம் உன் பூமுகம் காணுகின்றேன்

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
...