#176 ஓ.. ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி - கருப்பு வெள்ளை

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!! doasembahros

படம்: கருப்பு வெள்ளை

இசை: தேவா
எழுதியவர்: காளிதாசன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

பெ.குழு1: ஆஆஆ.. ஆஆஆ..
பெ.குழு2: ஆஆஆ..
பெ.குழு1: ஆஆஆ..
பெ.குழு: ஆஆஆ.. ஆஆஆ ஆஆ ஆ..
...
: ஓ.. ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி
ஓ.. ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி
சந்தனப் பூவினில் வந்தனம் கூறிடவா
இந்திர பூஜைக்கு மந்திரம் பாடிடவா
அந்தியிலே புதுத் தந்தி இனி
இளம் சுந்தர வீணையொன்று சிந்தட்டும் ராகம் இன்று
பெ: உன் ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி
உன் ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி
...

பெ.குழு: ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ..
ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ..
...

பெ: நந்தா.. வருக.. வந்தால் மனதில் புல்லாங்குழல் ஒலிக்கும்
: பிருந்தாவனமும் செந்தேன் குழைத்துத் தந்தே எனை மயக்கும்
பெ: விழா ஒன்று உள்ளம் கூடும் வேடந்தாங்கலிலே
: ஆ.. ஆஆஆஆ ஆ.. உலா வந்த தென்றல் பாடும் கோடை மூங்கிலிலே
பெ: வெண்ணை அள்ளும் சின்னக் கண்ணனைப் போல்
தினம் என்னை அள்ளு அள்ளு.. இன்பத்தின் கீதை சொல்லு

: ஓ.. ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி
பெ: உன் ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி
...

பெ.குழு: ஆஆஆ ஆஆ ஆஆ ஆஆஆ ஆஆஆ..
ஆஆஆ.. ஆஆஆ..
ஆஆஆ ஆஆஆஆ ஆஆ ஆ...
ஆஆஆஆ ஆஆஆஆஆ..
...

: இன்னோர் யுகமும் பின்னால் தொடர்ந்து கண்ணே நான் வருவேன்
பெ: இங்கே மறந்த இன்பம் இருந்தால் அங்கே நான் தருவேன்
: இதோ இந்த மண்ணும் விண்ணும் பாடும் ராகம் எது
பெ: ஓஓஓஓ ஓஓஓஓ.. ஒரே சொல்லில் அர்த்தம் கோடி காதல் வேதமது
: கண்ணும் கண்ணும்.. சுகம் பின்னும் பின்னும்
அந்த மன்மத மின்னல் ஒன்றே பிரம்மனைக் காயம் பண்ணும்

பெ: உன் ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி
உன் ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி
சந்தனப் பூவினில் வந்தனம் கூறிடவா
இந்திர பூஜைக்கு மந்திரம் பாடிடவா
அந்தியிலே புதுத் தந்தியிலே
இளம் சுந்தர வீணை ஒன்று சிந்தட்டும் ராகம் இன்று
: ஓ.. ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி
ஓ.. ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி
...

#175 ஒரு ஜீவன் அழைத்தது - கீதாஞ்சலி

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros

படம்: கீதாஞ்சலி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & சித்ரா


: ஒரு ஜீவன் அழைத்தது.. ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழ வேண்டாம்
இங்கு கண்ணீரும் விழ வேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
பெ: ஒரு ஜீவன் அழைத்தது.. ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழ வேண்டாம்
இங்கு கண்ணீரும் விழ வேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
...

: ஒரு ஜீவன் அழைத்தது.. ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழ வேண்டாம்
பெ: லல லல லல லா..
: இங்கு கண்ணீரும் விழ வேண்டாம்
பெ: லல லல லா..
: உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
பெ: ஒரு ஜீவன் அழைத்தது.. ஒரு ஜீவன் துடித்தது
...

: முல்லைப் பூப்போலே உள்ளம் வைத்தாய்
முள்ளை உள்ளே வைத்தாய்.. ஹோ..
பெ: என்னைக் கேளாமல் கன்னம் வைத்தாய்
நெஞ்சில் கன்னம் வைத்தாய்.. ஹோ..
: நீயில்லை என்றால் என் வாழ்வில் என்றும்
பகலென்று ஒன்று கிடையாது
பெ: அன்பே நம் வாழ்வில் பிரிவென்பதில்லை
ஆகாயம் ரெண்டாய் உடையாது
: இன்று காதல் பிறந்தநாள்.. என் வாழ்வில் சிறந்த நாள்
பெ: மண மாலை சூடும் நாள் பார்க்கவே

: ஒரு ஜீவன் அழைத்தது.. ஒரு ஜீவன் துடித்தது
...

பெ: உன்னை நான் கண்ட நேரம் நெஞ்சில் மின்னல் உண்டானது
: என்னை நீ கண்ட நேரம் எந்தன் நெஞ்சம் துண்டானது
பெ: காணாத அன்பை நானின்று கண்டேன்
காயங்களெல்லாம் பூவாக
: காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல
கண்டேனே உன்னைத் தாயாக
பெ: மழை மேகம் பொழியுமா.. நிழல் தந்து விலகுமா
: இனிமேலும் என்ன சந்தேகமா

பெ: ஒரு ஜீவன் அழைத்தது.. ஒரு ஜீவன் துடித்தது
: இனி எனக்காக அழ வேண்டாம்
பெ: லல லல லல லா..
: இங்கு கண்ணீரும் விழ வேண்டாம்
பெ: லல லல லா..
: உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
பெ: உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
லல லாலா..
: லல லாலா..
பெ: லல லலா..
: லல லலா..
பெ: லல லாலா..
: லல லாலா..
பெ: லல லலா..
: லல லலா..
...

#174 மணியே.. மணிக்குயிலே - நாடோடித் தென்றல்

படம்: நாடோடித் தென்றல்
இசை: இளையராஜா
எழுதியவர்: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, மனோ & எஸ்.ஜானகி


ஆ1: மணியே.. மணிக்குயிலே.. மாலையிளம் கதிரழகே
கொடியே.. கொடி மலரே.. கொடியிடையின் மணியழகே.. ihikhik
...

ஆ2: மணியே.. மணிக்குயிலே.. மாலையிளங் கதிரழகே
கொடியே.. கொடி மலரே.. கொடியிடையின் நடையழகே
தொட்ட இடம் பூ மணக்கும்.. துளிர்க்கரமோ தொட இனிக்கும்
பூமரப் பாவை நீயடி.. இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி
பெ: ஒஒ ஓஓ ஓஓ ஓ.. மணியே.. மணிக்குயிலே.. மாலையிளங் கதிரழகே
ஆ2: கொடியே.. கொடி மலரே.. கொடியிடையின் நடையழகே
...

ஆ2: பொன்னில் வடித்த சிலையே.. பிரம்மன் படைத்தான் உனையே
வண்ண மயில் போல வந்த பாவையே..
பெ: எண்ண இனிக்கும் நிலையே.. இன்பம் கொடுக்கும் கலையே
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே..
ஆ2: கண்ணிமையில் தூண்டிலிட்டு காதல்தனைத் தூண்டிவிட்டு
எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் ஏந்திழையே
பெ: பெண்ணிவளை ஆதரித்து பேசித் தொட்டுக் காதலித்து
இன்பம் கண்ட காரணத்தால் தூங்கலியே
ஆ2: சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன்
துடியிடையில் பாசம் வைத்தேன்
பூமரப் பாவை நீயடி.. இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி

பெ: ஒஒ ஓஓ ஓஓ ஓ.. மணியே.. மணிக்குயிலே.. மாலையிளங் கதிரழகே
ஆ2: கொடியே.. கொடி மலரே.. கொடியிடையின் நடையழகே
பெ: தொட்ட இடம் பூ மணக்கும்.. துளிர்க்கரமோ தொட இனிக்கும்
ஆ2: பூமரப் பாவை நீயடி.. இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி
...

பெ: ஆ.. ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ..
ஆஆ ஆஆஆ ஆ..
ஆஆஆ ஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ.. ஆ..
...

பெ: கண் இமைகளை வருத்தி.. கனவுகளைத் துரத்தி
நின்மனதினால் முடித்த மூக்குத்தி
ஆ2: என் உயிரிலே ஒருத்தி.. கண்டபடி எனைத் துரத்தி
அம்மனவள் வாங்கிக் கொண்ட மூக்கித்தி
பெ: கோடி மணி ஓசை நெஞ்சில் கூடி வந்துதான் ஒலிக்க
ஓடி வந்து கேட்க வரும் தேவதைகள்
ஆ2: சூட மலர் மாலை கொண்டு.. தூபமிட்டு.. தூண்டிவிட்டு
கூடவிட்டு வாழ்த்த வரும் வானவர்கள்
பெ: அந்தி வரும் நேரமம்மா.. ஆசை விளக்கேற்றுதம்மா
ஆ2: பூமரப் பாவை நீயடி.. இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி

பெ: ஒஒ ஓஓ ஓஓ ஓ.. மணியே.. மணிக்குயிலே.. மாலையிளங் கதிரழகே
மணியே.. மணிக்குயிலே.. மாலையிளங் கதிரழகே
தொட்ட இடம் பூ மணக்கும்.. துளிர்க்கரமோ தொட இனிக்கும்
ஆ2: பூமரப் பாவை நீயடி.. இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி
பெ: ஒஒ ஓஓ ஓஓ ஓ.. நாநந நாந நாநநா..
ஒஒ ஓஓ ஓஓ ஓ.. நாநந நாந நாநநா..
...