#218 தென்றல் வந்து என்னைத் தொடும் - தென்றலே என்னைத் தொடு

படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி


: தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா.. சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு.. இரவே.. பாய் கொடு
நிலவே.. பன்னீரைத் தூவி ஓய்வெடு
பெ: தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா.. சத்தம் இன்றி முத்தம் இடும்
...

: தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும்
பெ: சாரல் பாடும் சங்கீதம்.. கால்கள் தாளம் போடும்
: தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
பெ: நனைந்த பிறகு நாணம் எதற்கு
: மார்பில் சாயும்போது

பெ: தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா.. சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு.. இரவே.. பாய் கொடு
நிலவே.. பன்னீரைத் தூவி ஓய்வெடு
: தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா.. சத்தம் இன்றி முத்தம் இடும்
...

&பெ: தரரத் தரரத் தரரா.. தரரத் தரரத் தரரா..
...
&பெ: தரரத் தரரத் தரரத் தரரத் தரரத் தரராரா..
...

பெ: தேகம் எங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே
: மோகம் வந்து என் மார்பில் வீழ்ந்ததேனோ கண்ணே
பெ: மலர்ந்த கொடியோ மயங்கிக் கிடக்கும்
: இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும்
பெ: சாரம் ஊறும் நேரம்

: தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா.. சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு.. இரவே.. பாய் கொடு
நிலவே.. பன்னீரைத் தூவி ஓய்வெடு
பெ: தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா.. சத்தம் இன்றி முத்தம் இடும்
...

#217 கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்- தென்றலே என்னைத் தொடு

படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & உமா ரமணன்


பெ: கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
: கண் விழித் தாமரை பூத்திருந்தேன்.. என் உடல் வேர்த்திருந்தேன்
பெ: ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே
: கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
பெ: அந்திப் பகல் கன்னி மயில் உன்னருகே
: கண்மணி நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
...

: நீலம் பூத்த ஜாலப் பார்வை மானா? மீனா?
பெ: நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா? நானா?
: நீலம் பூத்த ஜாலப் பார்வை மானா? மீனா?
பெ: நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா? நானா?
: கள்ளிருக்கும்..                           பெ: பூவிது.. பூவிது
: கையணைக்கும்..                     பெ: நாளிது.. நாளிது..
: பொன்னென மேனியும்..        பெ: மின்னிட.. மின்னிட..
: மெல்லிய நூலிடை..               பெ: பின்னிடப் பின்னிட..
: வாடையில் வாடிய..               பெ: ஆடையில் மூடிய..
: தேன்..                                                பெ: நான்..

: கண்மணி நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
பெ: கண் விழித் தாமரை பூத்திருந்தேன்.. என் உடல் வேர்த்திருந்தேன்
: ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மங்கையின் ஞாபகமே
பெ: கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
: பொன்னழகே.. பூவழகே.. என்னருகே
பெ: கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
...

: ஆசை தீரப் பேச வேண்டும் வரவா? வரவா?
பெ: நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா.. மெதுவா..
: ஆசை தீரப் பேச வேண்டும் வரவா? வரவா?
பெ: நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா.. மெதுவா..
: பெண் மயங்கும்..                    பெ: நீ தொட.. நீ தொட..
: கண் மயங்கும்..                        பெ: நான் வர.. நான் வர..
: அங்கங்கு வாலிபம்..              பெ: பொங்கிடப் பொங்கிட..
: அங்கங்கள் யாவிலும்..        பெ: தங்கிடத் தங்கிட..
: தோள்களில் சாய்ந்திட..      பெ: தோகையை ஏந்திட..
: யார்?                                                  பெ: நீ..

பெ: கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
: கண் விழித் தாமரை பூத்திருந்தேன்.. என் உடல் வேர்த்திருந்தேன்
பெ: ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே
: கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
பெ: அந்திப் பகல் கன்னி மயில் உன்னருகே
: கண்மணி நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
பெ: கண் விழித் தாமரை பூத்திருந்தேன்.. என் உடல் வேர்த்திருந்தேன்
...

#216 புதிய பூவிது.. பூத்தது - தென்றலே என்னைத் தொடு

படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி


: புதிய பூவிது.. பூத்தது.. இளைய வண்டுதான் பார்த்தது
தூது வந்ததோ.. ஓஓ.. சேதி சொன்னதோ.. ஓஓ..
தூது வந்ததோ.. சேதி சொன்னதோ.. நாணம் கொண்டதோ..
ஏன் ஏன் ஏன்.. ஏன் ஏன் ஏன்..
பெ: புதிய பூவிது.. பூத்தது.. இளைய வண்டுதான் பார்த்தது
...

பெ: ஜவ்வாது பெண்ணானது.. ரெண்டு செம்மீன்கள் கண்ணானது
: பன்னீரில் ஒண்ணானது.. பாச பந்தங்கள் உண்டானது
பெ: என்ன சொல்லவோ.. மயக்கமல்லவோ
: கன்னியல்லவோ.. கலக்கமல்லவோ
பெ: என்ன சொல்லவோ.. மயக்கமல்லவோ
: கன்னியல்லவோ.. கலக்கமல்லவோ
பெ: தள்ளாடும் தேகங்களே கோயில் தெப்பங்கள் போலாடுமோ
: சத்தமின்றியே முத்தமிட்டதும் கும்மாளம்தான்
ஹாஹாஹா ஹாஹாஹா..

பெ: புதிய பூவிது.. பூத்தது.. இளைய வண்டுதான் பார்த்தது
தூது வந்ததோ.. ஓஓஓ.. சேதி சொன்னதோ.. ஓஓஓ..
தூது வந்ததோ.. சேதி சொன்னதோ.. காதல் கொண்டதோ
சொல் சொல் சொல்.. சொல் சொல் சொல்
: புதிய பூவிது.. பூத்தது.. இளைய வண்டுதான் பார்த்தது
...

: கல்யாணம் ஆகாமலே ஆசை வெள்ளோட்டம் பார்க்கின்றது
பெ: கூடாது கூடாதென நாணம் காதோடு சொல்கின்றது
: என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ
பெ: உள்ள மட்டிலும் எடுப்பதென்னவோ
: என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ
பெ: உள்ள மட்டிலும் ihikhikஎடுப்பதென்னவோ
: தண்டோடு பூவாடுது.. வண்டு தாகங்கள் கொண்டாடுது
பெ: உன்னைக் கண்டதும் என்னைத் தந்ததும் உண்டாகுமோ
தேன் தேன் தேன்.. தேன் தேன் தேன்

: புதிய பூவிது.. பூத்தது
பெ: இளைய வண்டுதான் பார்த்தது
: தூது வந்ததோ.. ஓஓஓ..
பெ: சேதி சொன்னதோ.. ஓஓஓ..
: தூது வந்ததோ
பெ: சேதி சொன்னதோ
: நாணம் கொண்டதோ.. ஏன் ஏன் ஏன்.. ஏன் ஏன் ஏன்..
பெ: புதிய பூவிது.. பூத்தது
: இளைய வண்டுதான் பார்த்தது
...

#215 ஏம்மா.. அந்தி மயக்கமா - தென்றலே என்னைத் தொடு

படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்: மலேசியா வாசுதேவன்

ஏம்மா.. அந்தி மயக்கமா.. இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு.. எங்கிட்டே சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லு
ஏம்மா.. அந்தி மயக்கமா.. இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு.. எங்கிட்டே சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லு
...

மூடு நல்ல மூடுதான்.. ஹேய்.. போடு சக்கைப் போடுதான்
ஆடு நம்ம கூடத்தான்.. ஆசை வெள்ளம் ஓடத்தான்
வளையணும்.. நெளியணும் பூங்கொடி
குலுங்கணும்.. குதிக்கணும் மாங்கனி
கையும் காலும் ஒண்ணாப் பின்ன
கன்னம் ரெண்டும் பொன்னா மின்ன
மெல்லத்தான் துள்ளத்தான் இன்னும் நான் சொல்லத்தான்

ஏம்மா.. அந்தி மயக்கமா.. இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு.. எங்கிட்டே சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லு
ஏம்மா.. அந்தி மயக்கமா.. இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு.. எங்கிட்டே சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லு.. ஹேய்..
...

நேத்து ஒரு மாலதி.. இன்று ஒரு மைதிலி
நாளை ஒரு மோகினி.. நாளும் ஒரு காதலி
இது ஒரு தனி வகை ஜாதகம்
இளமையில் புதுப்புது நாடகம்
அன்பே வா வா.. கண்ணே வா வா
வண்டைத் தேடும் வண்ணப் பூவா
கன்னித் தேன் பொங்கத்தான் அள்ளித்தான் உண்ணத்தான்

ஏம்மா.. அந்தி மயக்கமா.. இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு.. எங்கிட்டே சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லு
ஏம்மா.. அந்தி மயக்கமா.. இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு.. எங்கிட்டே சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லு
...

#214 கவிதை பாடு குயிலே குயிலே - தென்றலே என்னைத் தொடு

படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


பா.. ரபப்பா.. ஹே.. ரபப்பா.. ரபப்பா.. ரபப்பா.. ரபப்பா..
...
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே.. விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒரு நாள் இதுதானே
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
...

நூறு வண்ணங்களில் சிரிக்கும் பனி தூங்கும் புஷ்பங்களே
ஆசை எண்ணங்களில் மிதக்கும் அடியேனை வாழ்த்துங்களே
வான வெளியில் வலம் வரும் பறவை
நானும் அது போல்.. எனக்கென்ன கவலை
காற்று என் பக்கம் வீசும்போது.. காலம் என் பேரைப் பேசும்போது
வாழ்வு எனது வாசல் வருது.. நேரம் இனிதாக.. யாவும் சுகமாக

கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே.. விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒரு நாள் இதுதானே
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
...

கோயில் சிற்பங்களைப் பழிக்கும் அழகான பெண் சித்திரம்
கோடி மின்னல்களில் பிறந்து ஒளி வீசும் நட்சத்திரம்
கூட எனது நிழலென வருமோ
நாளும் இனிய நினைவுகள் தருமோ
பாவை கண் கொண்ட பாசம் என்ன.. பார்வை சொல்கின்ற பாடமென்ன
நீல மலராய் நேரில் மலர.. நாளும் தடுமாற.. நெஞ்சம் இடம் மாற

கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே..
விழிகள் யாவிலும்.. ம்ஹும் ம்ஹும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒரு நாள் இதுதானே
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
ரபப்பப்பா.. பபபப்பப்பா.. பபப்பா பப பபப்பப்பா..
ரபப்பப்பா.. பா பா பா பா பபப பபப்பப்பா..
...

#213 முத்தமிழ்க் கவியே வருக - தர்மத்தின் தலைவன்

படம்: தர்மத்தின் தலைவன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா


பெ.குழு: ஊஊ ஊஊ.. ஊ ஊஊஊ.. ஊஊ ஊஊ.. ஊ ஊஊஊ..
ஊஊ.. ஊஊ.. ஊஊ.. ஊஊ.. ஊ..
...
பெ: முத்தமிழ்க் கவியே வருக.. முக்கனிச் சுவையே வருக
முத்தமிழ்க் கவியே வருக.. முக்கனிச் சுவையே வருக
காதலெனும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது
: முத்தமிழ்க் கலையே வருக.. முக்கனிச் சுவையும் தருக
காதலெனும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது
முத்தமிழ்க் கலையே வருக.. முக்கனிச் சுவையும் தருக
...

பெ: காதல் தேவன் மார்பில் ஆடும் பூமாலை நான்
காவல் கொண்ட மன்னன் நெஞ்சில் நானாடுவேன்
: கண்கள் மீது ஜாடை நூறு நான் பார்க்கிறேன்
கவிதை நூறு தானே வந்து நான் பாடினேன்
பெ: மூடாத தோட்டத்தில் ரோஜாக்கள் ஆட
தேனோடு நீயாட ஓடோடி வா
: காணாத ஸ்வர்க்கங்கள் நாம் காணத்தானே
பூந்தென்றல் தேரேறி நீ ஓடி வா
பெ: காலங்கள் நேரங்கள் நம் சொந்தம்.. இன்பம் கோடி..
ஆஆஆஆ ஆஆ ஆஆ ஆ..

: ஆஆ.. முத்தமிழ்க் கலையே வருக.. முக்கனிச் சுவையும் தருக.. ஹோ..
...

பெ.குழு: ஊஊ ஊஊ.. ஊ ஊஊஊ.. ஊஊ ஊஊ.. ஊ ஊஊஊ..
ஊஊ.. ஊஊ.. ஊ..
...
: சந்தம் கொள்ளும் தமிழ்க் காதல் சிந்து
கொஞ்சம் கெஞ்சும் வண்ணம்.. ஒரு ராகம் சிந்து
பெ: நெஞ்சம் எந்தன் மஞ்சம்.. அதில் அன்பைத் தந்து
தந்தோம் தந்தோம் என்று புதுத் தாளம் சிந்து
: வார்த்தைக்குள் அடங்காத ரசமான சரசம்
நானாட ஒரு மேடை நீ கொண்டு வா
பெ: என்றைக்கும் விளங்காத பல கோடி இன்பம்
யாருக்கும் தெரியாமல் நீ சொல்ல வா
: காலங்கள் நேரங்கள் நம் சொந்தம்.. இன்பம் கோடி..
ஆஆஆஆ ஆஆ ஆஆ ஆ..

பெ: ஆஆ.. முத்தமிழ்க் கவியே வருக.. முக்கனிச் சுவையே வருக
: காதலெனும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது
பெ: முத்தமிழ்க் கவியே வருக.. முக்கனிச் சுவையே வருக
: முத்தமிழ்க் கலையே வருக.. முக்கனிச் சுவையும் தருக.. ஹோ..
...

#212 முத்து நகையே.. முழு நிலவே - சாமுண்டி

படம்: சாமுண்டி
இசை: தேவா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

 
பெ: முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே
முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே
கண்ணிரண்டும் மயங்கிட.. கன்னி மயில் உறங்கிட
நான் தான் பாட்டெடுப்பேன்.. உன்னைத் தாய் போல் காத்திருப்பேன்
: முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே
இன்னும் பல பிறவிகள் நம்முடைய உறவுகள்
வாழும் தொடர்கதைதான்.. உந்தன் நேசம் வளர்பிறைதான்
பெ: முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே
...

பெ: உன்னப் பார்த்து ஆசப்பட்டேன்.. அதப் பாட்டில் சொல்லிப்புட்டேன்
நீயும் தொட.. நானும் தொட.. நாலு வகைக் கூச்சம் விட
அட்டை போல ஒட்டியிருப்பேன்
ihikhikஇந்தக் காதல் பொல்லாதது.. ஒரு காவல் இல்லாதது
ஊதக் காத்தில் வஞ்சி மாது ஒத்தயிலே வாடும்போது
போர்வை போலப் பொத்தி அணைப்பேன்
பெ: ஆறேழு நாளாச்சு விழி மூடி.. அடி ஆத்தாடி அம்மாடி உனைத் தேடி
: நீதானே மானே என் இளஞ்சோடி.. உனை நீங்காது என்றும் என் உயிர் நாடி
பெ: நித்தம் தவித்தேன்.. நீ வரும் வரைக்கும்

: முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே
பெ: முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே
...

: புள்ளி மானு பெண்ணானதா.. கெண்டை மீனு கண்ணானதா
பூ முடிச்சுப் பொட்டு வச்சு.. புன்னகையில் தேன் தெளிச்சு
பக்கம் ஒரு சொர்க்கம் வருதா
பெ: அட வாய்யா கையத் தொடு.. பள்ளிப் பாடம் கத்துக் கொடு
ஆவணியில் பூப்படைஞ்சே தாவணியைப் போட்டுக்கிட்ட
சின்னப் பொண்ண ஆசை விடுதா
: ஆவாரம் பூ வாட விடுவேனா.. ஒரு அச்சாரம் வெக்காம இருப்பேனா
பெ: தேனாறும் பாலாறும் கலந்தாச்சு.. அன்பு நாளாக நாளாக வளர்ந்தாச்சு
: என்னைப் படைச்சான்.. நீ துணை வரத்தான்

பெ: முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே
கண்ணிரண்டும் மயங்கிட.. கன்னி மயில் உறங்கிட
நான் தான் பாட்டெடுப்பேன்.. உன்னைத் தாய் போல் காத்திருப்பேன்
முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே
...

#211 ஐ லவ் யூ மீனா - மதுரை மீனாட்சி

படம்: மதுரை மீனாட்சி
இசை: தேவா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

: ஐ லவ் யூ மீனா.. மீனா.. மீனா.. மீனா..
பெ: நீயின்றி நானா.. நானா.. நானா..
...
: ஐ லவ் யூ மீனா.. மீனா..
பெ: நீயின்றி நானா.. நானா..
: கண்ணுக்குள்ளே சொக்கி விட்டேன்.. கைகளுக்குள் சிக்கி விட்டேன்
பெ: ஒரு மீனாட்சி நானில்லையா.. இனிமேலாட்சி நீயில்லையா
: ஐ லவ் யூ மீனா.. மீனா..
பெ: நீயின்றி நானா.. நானா..
: ஐ லவ் யூ மீனா.. மீனா..
பெ: நீயின்றி நானா.. நானா..
...

: நான் விண்ணைத் தாண்டி ஓடிச் செல்லும் பிள்ளை
உன் கண்ணைத் தாண்டி ஓடக் கூடவில்லை.. ஹோ..
பெ: நீ விண்ணில் சென்றும் கூட கத்தும் கிள்ளை
நான்தானே கூட ஏலம் கேட்கும் முல்லை
: மேல்வர்க்கம் கீழ்வர்க்கம் சேராதம்மா
விபத்தாக நான் வந்து சேர்ந்தேனம்மா
பெ: மேல்வர்க்கம் மேல்வர்க்கம்தான் தேடுமா
மேகங்கள் மேல்நோக்கி மழை பெய்யுமா
: கண்ணுக்குள் கண் வைத்தோம்.. கன்னத்தில் வைப்போமா

: ஐ லவ் யூ மீனா.. மீனா..
பெ: நீயின்றி நானா.. நானா..
: ஐ லவ் யூ மீனா.. மீனா..
பெ: நீயின்றி நானா.. நானா..
...
: பூவுக்குள் வீசும் வாசம் எந்தப் பக்கம்
பெண்ணுக்குள் காணும் இன்பம் எந்தப் பக்கம்.. ஹா..
பெ: கற்கண்டில் தித்திப்புத்தான் எந்தப் பக்கம்
கன்னிக்குள் காதல் சொர்க்கம் அந்தப் பக்கம்
: நதி நீரில் மழை போல விழுந்தேனம்மா
நானிங்கு உனக்குள்ளே கரைந்தேனம்மா
பெ: மண்ணோடு சேராமல் பயிர் வாழுமா
உன்னோடு சேராமல் உயிர் வாழுமா
: வார்த்தைக்குள் அர்த்தம் போல் வாழ்க்கைக்குள் வாழ்வோமா

: ஐ லவ் யூ மீனா.. மீனா..
பெ: நீயின்றி நானா.. நானா..
: கண்ணுக்குள்ளே சொக்கி விட்டேன்.. கைகளுக்குள்ihikhik சிக்கி விட்டேன்
பெ: ஒரு மீனாட்சி நானில்லையா.. இனிமேலாட்சி நீயில்லையா
: ஐ லவ் யூ மீனா.. மீனா..
பெ: நீயின்றி நானா.. நானா..
: ஐ லவ் யூ மீனா.. மீனா..
பெ: நீயின்றி நானா.. நானா..
...