#288 ஒரு நாள் ஒரு பொழுது - அந்தி மந்தாரை

படம்: அந்தி மந்தாரை
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: ஸ்வர்ணலதா

ஒரு நா(ள்) ஒரு பொழுது உம் மூஞ்சிக் காங்காம.. உசுரு அல்லாடுதே
ஒரு நா(ள்) ஒரு பொழுது உம் மூஞ்சிக் காங்காம உசுரு அல்லாடுதே
மறு நா(ள்) வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே
காவிரி நதியும் ரெண்டாகக் கூடும்.. கொள்ளிடம் வந்து ஒண்ணாகச் சேரும்
காலத்தின் கணக்கு யார் காணக் கூடும்
ஒரு நா(ள்) ஒரு பொழுது உம் மூஞ்சி காங்காம உசுரு அல்லாடுதே
மறு நா(ள்) வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே
...

நீண்ட முடி கொஞ்சம் நிறம் மாறிப் போச்சு
சங்குக் குழியோடு குரல் மாறிப் போச்சு
நீண்ட முடி கொஞ்சம் நிறம் மாறிப் போச்சு
சங்குக் குழியோடு குரல் மாறிப் போச்சு
ஓடி வயசாச்சு.. உருமாறிப் போச்சு
சங்குக் குழியோடு குரல் மாறிப் போச்சு
ஒடி வயசாச்சு.. உருமாறிப் போச்சு
நெனப்புக மட்டும்தானே மாறாம இருக்கு

ஒரு நா(ள்) ஒரு பொழுது உம் மூஞ்சிக் காங்காம உசுரு அல்லாடுதே
மறு நா(ள்) வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே
...

என்னச் சுத்தி ஒரு கூட்டம் சிரிக்கின்ற போதும்
உன்னப் பத்தி என் உதடு ஓயாமப் பேசும்

காத்து மழை எதனாலும் கரையாத பாசம்
காத்து மழை எதனாலும் கரையாத பாசம்
கட்டையிலும் வேகாது கைத்தொட்ட வாசம்