#321 தீர்த்தக்கரை ஓரத்திலே - தீர்த்தக்கரையினிலே

பாட்டுத் தலைவனை அவர் நினைவு நாளில் வணங்குகிறேன்!🙏🌹
படம்: தீர்த்தக்கரையினிலே
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
ஓ.. ஓஓ ஓ.. ஓஓஓ.. ஓஓ ஓ..
ஆ.. ஆஆ.. ஆஆஆ..
...
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
பாடும் மொழி உனது.. தேடும் விழி எனது
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
...

பாலைவனப் பாதையிலே பால் நிலவை நானும் கண்டேன்
பாலைவனப் பாதையிலே பால் நிலவை நானும் கண்டேன்
தேனிறைத்த பால் நிலவு தீயிறைத்துப் போவதென்ன?
காதல் வரி பாடலெல்லாம் கானல் வரி ஆனதென்ன?
என் ஜீவன் நீ இன்றி எந்நாளும் வாழாது
என் கண்கள் உன் கோலம் காணாமல் தூங்காதம்மா.. ஆ..
ஆஆஆஆ.. ஆஆஆ..

தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
...

ஒற்றை வழிப் பாதையிலே உன்னை மட்டும் நான் நினைத்தேன்
ஒற்றை வழிப் பாதையிலே உன்னை மட்டும் நான் நினைத்தேன்
நெற்றி முதல் பாதம் வரை முத்தமிட்ட சொப்பனங்கள்
ஒற்றிக் கொண்ட தொட்டுக் கொண்ட அத்தனையும் கற்பனைகள்
நேராக உன் பார்வை என் மீது வாராது
நீயின்றி இன்பங்கள் என்னோடு சேராதம்மா.. ஆ..
ஆஆஆஆ.. ஆஆஆ..

தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
பாடும் மொழி உனது தேடும் விழி எனது
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
...

#320 மழையும் நீயே வெயிலும் நீயே - அழகன்

பாட்டுத் தலைவனைஅவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: அழகன்
இசை: கீரவாணி
எழுதியவர்: புலமைப்பித்தன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


மழையும் நீயே.. வெயிலும் நீயே
நிலவும் நீயே.. நெருப்பும் நீயே
அடடா உனைத்தானிங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
மழையும் நீயே.. வெயிலும் நீயே
நிலவும் நீயே.. நெருப்பும் நீயே
அடடா உனைத்தானிங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
...

இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா?
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா?
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுதே
பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே
அதுதானா காதல் கலை?
தோளோடு அள்ளிச் சேர்த்தானே
அதுதானா மோன நிலை?
இதுதான் சொர்க்கமா?
இது காம தேவனின் யாக சாலையா?

மழையும் நீயே.. வெயிலும் நீயே
நிலவும் நீயே.. நெருப்பும் நீயே
அடடா உனைத்தானிங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
...

கலையெல்லாம் கற்றுக் கொள்ளும் பருவம் பருவம்
கடலின் அலை போல் இதயம் அலையும்
கரு நீலக் கண்கள் ரெண்டும் பவளம் பவளம்
எரியும் விரகம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம்
அதன் எல்லை யாரறிவார்?
ஏதேதோ சுகம் போதாதோ?
இந்த ஏக்கம் யாரறிவார்?
முதலாய்.. முடிவாய்
இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்

மழையும் நீயே.. வெயிலும் நீயே
நிலவும் நீயே.. நெருப்பும் நீயே
அடடா உனைத்தானிங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
...

#319 ஆலோலம் பாடி அசைந்தாடும் - ஆவாரம்பூ

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros 
பாடியவர்: இளையராஜா
படம்: ஆவாரம்பூ
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்

ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
தனியானால் என்ன? துணையிங்கே
நான் பாடும் பாட்டுண்டு
அமுதே, என் கண்ணே.. பசும் பொன்னே
இனி துன்பம் ஏனிங்கு?
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
...

ஆ.. ஆஆஆ..  மண்ணுலகில் வந்தோர்க்கெல்லாம்
இன்ப துன்பம் என்றும் உண்டு
தாயிழந்த துன்பம் போலே
துன்பமது ஒன்றும் இல்லை
பூமியென்ற தாயும் உண்டு
வானமென்ற தந்தை உண்டு
நீங்கிடாத சொந்தம் என்று
நீரும் காற்றும் எங்கும் உண்டு
பூபாளம் பாடும் காலை வந்து வரவேற்கும்
தாயின்றி நின்ற பிள்ளை தன்னையென்றும் காக்கும்
நீ காணும் எல்லாம் உன் சொந்தம்

ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
தனியானால் என்ன? துணையிங்கே
நான் பாடும் பாட்டுண்டு
அமுதே, என் கண்ணே.. பசும் பொன்னே
இனி துன்பம் ஏனிங்கு?
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
...

சோகமெதும் சுமையே இல்லை
சுகங்கள் கூட சுகமே இல்லை
ஆதரவைத் தந்தால் கூட
அதையுமிங்கு அறிந்தாயில்லை
வந்ததுண்டு போனதுண்டு
உன் கணக்கில் ரெண்டும் ஒன்று
வரவும் உண்டு செலவும் உண்டு
உன் கணக்கில் வரவே உண்டு
ஊரெங்கள் பிள்ளையென்று
இன்று சொல்லக்கூடும்
உலகமுந்தன் சொந்தமென்று
உந்தனுள்ளம் பாடும்
நீ யாரோ, அன்பே அமுதே?

ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
தனியானால் என்ன? துணையிங்கே
நான் பாடும் பாட்டுண்டு
அமுதே, என் கண்ணே.. பசும் பொன்னே
இனி துன்பம் ஏனிங்கு?
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
...