324 மனமே மனமே தடுமாறும் - ரோஜாவனம்

பாட்டுத் தலைவனை அவர் நினைவு நாளில் வணங்குகிறேன்!🙏🌹
படம்: ரோஜாவனம்
இசை: பரத்வாஜ்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


பெ: ஆ ஆ.. ஆ ஆஆ..
ஆ ஆ.. ஆ ஆஆ..
...
: மனமே மனமே.. தடுமாறும் மனமே
உள்ளுக்குளிருந்தே உயிர் கொல்லும் மனமே
பெண்ணைப் பார்க்கும்பொழுது நீ சிறகு விரிக்காதே
பிரிந்து போன பிறகு நீ சிதையும் வளர்க்காதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
மனமே மனமே.. தடுமாறும் மனமே
உள்ளுக்குளிருந்தே உயிர் கொல்லும் மனமே
...

: காதலென்ற மாத்திரைக்கு எப்போதும் இரண்டு குணம்
போட்டுக் கொண்டால் போதையைக் கொடுக்கும் 
போகப் போகத் தூக்கத்தைக் கெடுக்கும் 
காதலென்ற யாத்திரைக்கு எப்போதும் இரண்டு வழி
வந்த வழி வெளிச்சத்தில் ஜொலிக்கும்
போகும் வழியோ இருளுக்குள் இருக்கும் 
கண் மூடினால் தூக்கம் இல்லை
கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை
ஆல விருட்சம் போல வளருது அழகுப் பெண்ணின் நினைப்பு
வெட்டி எறிந்து பார்த்தேன்.. மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு?
என் நெஞ்சமே பகையானதே
உயிர் வாழ்வதே சுமையானதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
...

பெ: ஆ ஆ.. ஆ ஆஆ ஆ..
ஹா ஆ.. ஆ ஆஆ ஆ..
...
: காதல் தந்த நினைவுகளைக்
கழற்றி எறிய முடியவில்லை
அலைகள் வந்து அடிப்பதனாலே
கரைகள் எழுந்து ஓடுவதில்லை
என்னை மறக்க நினைக்கையிலும்
அவளை மறக்க முடியவில்லை
உலை மூட மூடிகளுண்டு
அலைகடல் மூடிட மூடிகளில்லை
காதலின் கையில் பூக்களும் உண்டு
காதலின் கையில் கத்தியும் உண்டு
பூக்கள் கொண்டு வந்து நீ வாசம் வீசுவாயா?
கத்தி கொண்டு வந்து நீ கழுத்தில் வீசுவாயா?
என் வாழ்விலே என்ன சோதனை
நான் வாழ்வதே என் வேதனை 
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு

: மனமே மனமே.. தடுமாறும் மனமே
உள்ளுக்குளிருந்தே உயிர் கொல்லும் மனமே
பெண்ணைப் பார்க்கும்பொழுது நீ சிறகு விரிக்காதே
பிரிந்து போன பிறகு நீ சிதையும் வளர்க்காதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
...