#119 மறக்கத் தெரியவில்லை எனது காதலை - உதவும் கரங்கள்

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!! doasembahros

படம்: உதவும் கரங்கள்

இசை: ஆதித்யன்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

ம்ஹும்ஹும்ஹும் ம்ஹும்.. ம்ஹும்ஹும் ஹுஹும்..
ஆஹாஹா ஹாஹா.. ஆஹாஹாஹா..
...

மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை
சிறகுகள் முளைக்கும் முன்பே விலங்கினைப் பூட்டிக் கொண்டேன்
என் தேவியே.. nangih

மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை
...

காதல் மலர்ச் செண்டு நான் கொண்டு வந்தேன்
உன்னைச் சேராமல் உயிர் வாடி நின்றேன்
காதல் மலர்ச் செண்டு நான் கொண்டு வந்தேன்
உன்னைச் சேராமல் உயிர் வாடி நின்றேன்
உனக்காகப் பாட இசை கொண்டு வந்தேன்
மௌனங்கள் பரிசாகத் தந்தேன்
சொந்தமாகாது சொல்லாத நேசம்
இதயம் சேராது இல்லாத பாசம்
காதல் மகராணியே..

மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை
...

உன்னை நினையாமல் ஒரு நாளுமில்லை
உன்னை மறந்தாலே உயிர் சொந்தமில்லை
உன்னை நினையாமல் ஒரு நாளுமில்லை
உன்னை மறந்தாலே உயிர் சொந்தமில்லை
கடல் நீலம் கூட கரைந்தோடிப் போகும்
என் அன்பில் நிறமாற்றம் இல்லை
தேகம் தீயோடு வேகும்போதும்
தாகம்.. என் தாகம் தீர்வதில்லை
ஆசை அழியாதடி..

மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை
சிறகுகள் முளைக்கும் முன்பே விலங்கினைப் பூட்டிக் கொண்டேன்
என் தேவியே..
...

0 மறுமொழிகள்:

Post a Comment