#292 ஆஹா.. கனவேதானா - அமராவதி

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!! doasembahros
படம்: அமராவதி
இசை: பாலபாரதி
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
காதல் தேவதை மண்ணில் வந்ததோ
கண்கள் ரெண்டும் போதை கொண்டதோ
ஓஹோ.. முன்னால் பாரடி.. உன் முகத்தைப் பார்க்கிறேன்
நீ பின்னால் போவதேன்.. நான் பெண்ணா கேட்கிறேன்
ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
...

கட்டுக் கூந்தல் பார்த்தேன்.. தரையில் வந்த மேகமா
பட்டுத் தோள்கள் பார்த்தேன்.. பாரிஜாத தேகமா
முதுகு வண்ணம் பார்த்தேன்.. முல்லைப் பூவின் பாகமா
மொட்டு வண்ணம் பார்த்தேன்.. கட்டுக் காவல் மீறுமா
கழுத்து வரைக்கும் பார்த்தேன்.. சில கணக்கு வழக்கும் பார்த்தேன்
பளிங்கு நிறங்கள் பார்த்தேன்.. அடி.. பறந்து பறந்து பார்த்தேன்
ஓஹோ.. முன்னால் பாரடி.. உன் முகத்தைப் பார்க்கிறேன்
நீ பின்னால் போவதேன்.. நான் பெண்ணா கேட்கிறேன்

ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
...

ஏரி நீரில் நீந்தும் ஈரமான முல்லையே
மீன்கள் செய்த புண்ணியம் ஆண்கள் செய்யவில்லையே
தேக வண்ணம் காட்டித் தீ வளர்த்த முல்லையே
பூமுகத்தைக் காட்டு.. பொறுமையின்னும் இல்லையே
முழுக்க நனைந்த பின்னே உன் முகத்தை மறைப்பதென்ன
குளித்து முடித்த பெண்ணே.. உன் கூந்தல் தடுப்பதென்ன
ஓஹோ.. முன்னால் பாரடி.. உன் முகத்தைப் பார்க்கிறேன்
நீ பின்னால் போவதேன்.. நான் பெண்ணா கேட்கிறேன்

ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
காதல் தேவதை மண்ணில் வந்ததோ
கண்கள் ரெண்டும் போதை கொண்டதோ
ஓஹோ.. முன்னால் பாரடி.. உன் முகத்தைப் பார்க்கிறேன்
நீ பின்னால் போவதேன்.. நான் பெண்ணா கேட்கிறேன்
ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
...

0 மறுமொழிகள்:

Post a Comment