#300 இந்திரன் வந்ததும் - ஆண் பாவம்

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros
படம்: ஆண் பாவம்
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா

: ஹே வந்தனம் வந்தனம்
ஆ.குழு: வந்தனம் வந்தனம்
: வந்த சனமெல்லாம்
ஆ.குழு: குந்தணும் குந்தணும்
: இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான்
இங்க MGR வந்ததும் NTR வந்ததும் இந்தச் சினிமாதான்
ஆ.குழு: இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான்
இங்க MGR வந்ததும் NTR வந்ததும் இந்தச் சினிமாதான்
: கலை வளர்ந்ததும்
ஆ.குழு: இங்கேதான்
: காதல் சொன்னதும்
ஆ.குழு: இங்கேதான்
: கலை வளர்ந்ததும்
&ஆ.குழு: இங்கேதான்
: காதல் சொன்னதும்
&ஆ.குழு: இங்கேதான்
: கட்சி வளர்த்ததும் ஆட்சி புடிச்சதும் இந்தச் சினிமாதான்
அட அமெரிக்காவுல ஆட்சி அமைச்சதும் இந்தச் சினிமாதான்
ஆ.குழு: கட்சி வளர்த்தது ஆட்சி புடிச்சது இந்தச் சினிமாதான்
அட அமெரிக்காவுல ஆட்சி அமைச்சது இந்தச் சினிமாதான்
: ஏ..
&ஆ.குழு: இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான்
எங்க MGR வந்ததும் NTR வந்ததும் இந்தச் சினிமாதான்
...

: கைலாச நாதன முருகனக் கண்ணால
பார்க்கத்தான் முடியுமா கூறு
அம்பத்தஞ்சு காசு நீ குடுத்துட்டாத் தன்னால
கடவுளப் பார்க்கலாம் பாரு
: காத்தவ
ஆ.குழு: ராயன்
: மதுரை
ஆ.குழு: வீரன்
: திரையில தானே
ஆ.குழு: புரிஞ்சிருக்கு
: காந்தியக் கூட படத்துல தானே இன்னைக்குத் தேசம்
ஆ.குழு: தெரிஞ்சிருக்கு
: அட பசி தூக்கம் பறந்தாச்சு.. பழசெல்லாம் மறந்தாச்சு
கொட்டகை வளர்ந்த பிறகு நாட்டுல குத்தம் குறைஞ்சிருக்கு
ஆ.குழு: அட கொட்டகை வளர்ந்த பிறகு நாட்டுல குத்தம் குறைஞ்சிருச்சு

: ஏ.. இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான்
&ஆ.குழு: இங்க MGR வந்ததும் NTR வந்ததும் இந்தச் சினிமாதான்
: கலை வளர்ந்ததும்
ஆ.குழு: இங்கேதான்
: காதல் சொன்னதும்
ஆ.குழு: இங்கேதான்
: கலை வளர்ந்ததும்
&ஆ.குழு: இங்கேதான்
: காதல் சொன்னதும்
&ஆ.குழு: இங்கேதான்
கட்சி வளர்த்ததும் ஆட்சி புடிச்சதும் இந்தச் சினிமாதான்
அட அமெரிக்காவுல ஆட்சி அமைச்சதும் இந்தச் சினிமாதான்
...

: எத்தனையோ மேதைங்க ஞானிங்க வீரங்க
வெள்ளித் திரை தந்தது இங்கே
ஹரிச்சந்திரன் நாடகம் பார்த்துத்தான் காந்தியும்
சத்தியத்தை நம்பினார் அங்கே
கிசு கிசு
ஆ.குழு: போட்டு
: கேள்வி பதில்
ஆ.குழு: போட்டு
: பத்திரிக்கை வந்தா
ஆ.குழு: லாபமுங்க
: வாழ்க்கைக்கு
ஆ.குழு: இங்கே
: வடிகால்
ஆ.குழு: வேணும்
: சினிமா ஒண்ணே
ஆ.குழு: போதுமுங்க
: அட பகலெல்லாம் உழைச்சீங்க இரவெல்லாம் சிரிச்சீங்க
வெள்ளித் திரையில தங்கம் விளைஞ்சது எங்க சினிமாதான்
ஆ.குழு: அட வெள்ளித் திரையில தங்கம் விளைஞ்சது எங்கச் சினிமாதான்

: ஏ.. இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான்
இங்க MGR வந்ததும் NTR வந்ததும் இந்தச் சினிமாதான்
ஆ.குழு: இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான்
இங்க MGR வந்ததும் NTR வந்ததும் இந்தச் சினிமாதான்
: கலை வளர்ந்ததும்
ஆ.குழு: இங்கேதான்
: காதல் சொன்னதும்
ஆ.குழு: இங்கேதான்
: கலை வளர்ந்ததும்
&ஆ.குழு: இங்கேதான்
: காதல் சொன்னதும்
&ஆ.குழு: இங்கேதான்
: கட்சி வளர்த்ததும் ஆட்சி புடிச்சதும் இந்தச் சினிமாதான்
அட அமெரிக்காவுல ஆட்சி அமைச்சதும் இந்தச் சினிமாதான்
ஆ.குழு: கட்சி வளர்த்தது ஆட்சி புடிச்சது இந்தச் சினிமாதான்
அட அமெரிக்காவுல ஆட்சி அமைச்சது இந்தச் சினிமாதான்
: ஹே..
&ஆ.குழு: தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானா..
: அட..
&ஆ.குழு: தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானா..
...

0 மறுமொழிகள்:

Post a Comment