#317 நான் ஏரிக்கரை மேலிருந்து - சின்னத் தாயி

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros
படம்: சின்னத் தாயி
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: இளையராஜா

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு தெசை பாத்திருந்து
ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன்.. காணல்ல..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்.. ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னுத் தோணல்ல..
என் தெம்மாங்குப் பாட்டக் கேட்டுத்
தென்காத்து ஓடி வந்துத் தூதாகப் போக வேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகள சொல்லாமப் பூட்டி வச்சு
உள்ளார வாடுறேனே இக்கரையில..
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு தெசை பாத்திருந்து
ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன்.. காணல்ல..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்.. ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னுத் தோணல்ல..
...

நேத்து வெதச்சு வச்ச நேசந்தான்
பூத்துக் கனிஞ்சு வரும் நேரந்தான்
வாராமப் போகாது.. வாடாதே பூந்தேனே
சேராம வாழாது.. தண்ணீரச் செம்மீனே
நம்மூரு கோட்டச்சாமி ஒன்ன என்ன(னை) சேத்தாச்சு
என் ஜோடி நீதானென்று என்றோ எழுதி வச்சாச்சு
எப்போதும் சொந்தங்கள் போகாது
செந்தாழ(ழை) கத்தாழ(ழை) ஆகாது

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு தெசை பாத்திருந்து
ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன்.. காணல்ல..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்.. ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னுத் தோணல்ல..
என் தெம்மாங்குப் பாட்டக் கேட்டுத்
தென்காத்து ஓடி வந்துத் தூதாகப் போக வேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகளச் சொல்லாமப் பூட்டி வச்சு
உள்ளார வாடுறேனே இக்கரையில..
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு தெசை பாத்திருந்து
ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன்.. காணல்ல..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்.. ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னுத் தோணல்ல..
...

ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியம்
என்ன(னை)ப் பொருத்தவரை காவியம்
எந்நாளும் நீதான்டி என்னோட ராசாத்தி
பொன்னாட்டம் நெஞ்சோடு வச்சேனே காப்பாத்தி
எங்கே நான் போனா என்ன எண்ணம் யாவும் இங்கேதான்
உன் பேர(ரை) மெட்டுக்கட்டி உள்ளம் பாடும் அங்கேதான்
என்னாச(சை) காத்தோடு போகாது
எந்நாளும் என் வாக்குப் பொய்க்காது

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு தெசை பாத்திருந்து
ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன்.. காணல்ல..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்.. ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னுத் தோணல்ல..
என் தெம்மாங்குப் பாட்டக் கேட்டுத்
தென்காத்து ஓடி வந்துத் தூதாகப் போக வேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகளச் சொல்லாமப் பூட்டி வச்சு
உள்ளார வாடுறேனே இக்கரையில..
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு தெசை பாத்திருந்து
ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன்.. காணல்ல..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்.. ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னுத் தோணல்ல..
...

0 மறுமொழிகள்:

Post a Comment