#106 நீதானா நீதானா - தாலாட்டு பாடவா

படம்: தாலாட்டு பாடவா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி & எஸ்.ஜானகி

பெ: ஆஆஆ.. ஆ.. ஆஆஆ..
ஆஆஆ.. ஆ.. ஆஆஆ..
ஆஆ ஆஆ.. ஆஆ ஆஆ.. ஆஆ ஆ..
...
பெ: நீதானா.. நீதானா.. நெஞ்சே நீதானா
நீயின்றி நானேதான் இங்கே வாழ்வேனா
அன்பே அன்பே.. எந்தன் அன்பே
வாழும் ஜீவன் நீதான் அன்பே
துணை நீயே அன்பே
நீதானா.. நீதானா.. நெஞ்சே நீதானா
நீயின்றி நானேதான் இங்கே வாழ்வேனா
...

பெ: காவிரியும் வழி மறந்து வேறு திசை நடப்பதில்லை
கன்னியிளம் நினைவுகளைக் காதல் மனம் மறப்பதில்லை
காதல் அலை வீசும் கடல்தான் மனது
காலம்.. பலகாலம் இது வாழுவது
தூங்காமல் என் கண்கள் வாடும் பொழுது
தோள் மீது சாய்ந்தாட ஏங்கியது
நீயின்றி நானேது.. நேசமோடு வாழும் மாது

பெ: நீதானா.. நீதானா.. நெஞ்சே நீதானா
: நீயின்றி நானேதான் இங்கே வாழ்வேனா
அன்பே அன்பே.. எந்தன் அன்பே
வாழும் ஜீவன் நீதான் அன்பே
துணை நீயே அன்பே
நீதானா.. நீதானா.. நெஞ்சே நீதானா
நீயின்றி நானேதான் இங்கே வாழ்வேனா
...

: கூவி வரும் புதுக் குயிலின் குரல் வழியே ஒரு துயரம்
பாடி வரும் மொழிதனிலே பாதியிலே ஒரு சலனம்
ஓடும் நதி நீரில் மலர் பூப்பதில்லை
உண்மை இதைக் கண்டும் மனம் கேட்பதில்லை
காலங்கள் நேரங்கள் பாலம் அமைக்கும்
கையோடு கையென்று சேரந்திருக்கும்
வாடாதே.. வாடாதே.. வாசம் இந்தப் பூவைத் தேடும்

: நீதானா.. நீதானா.. நெஞ்சே நீதானா
பெ: நீயின்றி நானேதான் இங்கே வாழ்வேனா
: அன்பே அன்பே.. எந்தன் அன்பே
பெ: வாழும் ஜீவன் நீதான் அன்பே
துணை நீயே அன்பே
பெ: நீதானா.. நீதானா.. நெஞ்சே நீதானா
: நீயின்றி நானேதான் இங்கே வாழ்வேனா
...

0 மறுமொழிகள்:

Post a Comment