# 104 வராது வந்த நாயகன் - தாலாட்டு பாடவா

படம்: தாலாட்டு பாடவா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி & எஸ்.ஜானகி

: முதாக ராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம்
கலா தறாவ தம் சகம் விலாசி லோக ரக்ஷகம்
அனாயகைக நாயகம் வினாசி தேப்ர தைத்யகம்
பெ: நதாசு பாசு நாஷ்யகம் நமாமி தம் விநாயகம்
முதாக ராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம்
வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்

பெ: வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்.. நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன்.. கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்.. நிரந்தரம் நிறைந்தவன்
...

: கொடாமலும் படாமலும் உலாவும் காதல் வாகனம்
வராமலும் தராமலும் விடாது இந்த வாலிபம்
பெ: உன்னோடுதான் பின்னோடுதான் வந்தாடும் இந்த மோகனம்
கையோடுதான் மெய்யோடுதான் கொஞ்சாமல் என்ன தாமதம்
: உன் பார்வை யாவும் நூதனம்.. பெண்பாவை நீயென் சீதனம்
பெ: உன் வார்த்தை அன்பின் சாசனம்.. பெண்ணுள்ளம் உந்தன் ஆசனம்
: அள்ளாமலும் கிள்ளாமலும் தள்ளாடும் இந்தப் பூவனம்

பெ: வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்.. நிரந்தரம் நிறைந்தவன்
: வரம் தரும் உயர்ந்தவன்.. கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
பெ: வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்
: தராதரம் புரிந்தவன்.. நிரந்தரம் நிறைந்தவன்
...

பெ: லால்லா லலல்ல லால்ல லால்லலா லாலா
லால்லா லலல்ல லால்ல லால்லலா லாலா
...

பெ: கல்யாணமும் வைபோகமும் கொண்டாடும் நல்ல நாள் வரும்
அந்நாளிலே பொன்னாளிலே என் மாலை உந்தன் தோள் வரும்
: சல்லாபமும் உல்லாசமும் கண் காணும் நேரம் சோபனம்
சொல்லாமலும் கொள்ளாமலும் திண்டாடும் பாவம் பெண் மனம்
பெ: இந்நேரம் அந்த நியாபகம் உண்டாக நீயும் காரணம்
: கண்ணார நாமும் காணலாம் செவ்வாழைப் பந்தல் தோரணம்
பெ: என்னாசையும் உன்னாசையும் அந்நாளில்தானே பூரணம்

: வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்.. நிரந்தரம் நிறைந்தவன்
பெ: வரம் தரும் உயர்ந்தவன்.. கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
: வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்
பெ: தராதரம் புரிந்தவன்.. நிரந்தரம் நிறைந்தவன்
...

0 மறுமொழிகள்:

Post a Comment