#210 பனியில் நனையும் மலர்கள் ரெண்டு - ப்ரியா ஓ ப்ரியா

படம்: ப்ரியா ஓ ப்ரியா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா

பெ: லலல்லா.. லலல்லா.. லலல்லா.. லலல்லா..
...
பெ: லலல்லா.. லலல்லா.. லலல்லா.. லலல்லா..
: ம்ஹும்.. ம்ஹும்ஹும்ஹும்.. ஆஹா.. ஆஹஹஹா..
லலலா.. லலலா.. லா லா..
...
: பனியில் நனையும் மலர்கள் ரெண்டு
புதிதாய்க் கவிதை எழுதும் இன்று
பெ: மழைத் தூறலிலும் மலைச் சாரலிலும்
குளிர் கொண்டது மலர்ச் செண்டு
பனியில் நனையும் மலர்கள் ரெண்டு
: புதிதாய்க் கவிதை எழுதும் இன்று
...

: கண்ணோடு நீந்திடும் கலைவண்ணமே
கண்மூடும் பொழுதிலும் உன் எண்ணமே
பெ: இளவேனிற்காலமும் பிறந்தது மெல்ல
பூந்தென்றல் காதோடு உன் பெயர் சொல்ல
: விதை மீது ஒரு நாள் வான் மழைத்துளி
விழும்போது மலரும் சிறு பூச்செடி
பெ: ஒரு நாள் திருநாள் நாளை வரலாம்
கேட்கும் எல்லாம் கண்ணன் பெறலாம்

: பனியில் நனையும் மலர்கள் ரெண்டு
புதிதாய்க் கவிதை எழுதும் இன்று
...

பெ: நீயின்றி வாழ முடியாதய்யா
நான் தேடும் பொழுதிங்கு விடியாதய்யா
: நீ வேறு நான் வேறு இனியில்லையே
நான் தூங்க வேறொரு மடியில்லையே
பெ: நாள்தோறும் வந்திங்கு இளைப்பாறு
நீராட நானொரு தேனாறு
: தென்றல் நாளும் தீண்டும் பூவே
தரை மேல் இறங்கி நடக்கும் நிலவே

பெ: பனியில் நனையும் மலர்கள் ரெண்டு
புதிதாய்க் கவிதை எழுதும் இன்று
: மழைத் தூறலிலும் மலைச் சாரலிலும்
குளிர் கொண்டது மலர்ச் செண்டு
: லலலா..       பெ : லலலா..
: லலலா..       பெ : லலலா..
: லலலா..       பெ : லலலா..
: லலலா..       பெ : லலலா..
: லலலா..       பெ : லலலா..
: லலலா..       பெ : லலலா..
: லலலா..       பெ : லலலா..
: லலலா..       பெ : லலலா..
...

0 மறுமொழிகள்:

Post a Comment