#255 ஓ.. காதல் என்னைக் காதலிக்கவில்லை - கொடி பறக்குது

படம்: கொடி பறக்குது
இசை: ஹம்சலேகா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா
பெ: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் என்னைக் காதலிக்கவில்லை
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் என்னை ஆதரிக்கவில்லை
கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன்
உன்னை எண்ணியே பூத்திருக்கிறேன்
தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..
...

: தேவி.. வான் சொல்லியா மேகம் வரும்.. நீ சொல்லியா காதல் வரும்
பெ: தேவா.. நான் கேட்பது காதல் வரம்.. நீ தந்தது கண்ணீர் வரம்
: பெண்ணழகு முழுதும் கற்பனையென்று உறுதி மொழிகிறேன்
பெ: என்னழகு உனது அர்ப்பணம் என்று எழுதிவிடுகிறேன்
: போதும் போதும் பெண்ணே.. புன்னகை என்பது காதலின் பல்லவி
I love you.. I love you.. I love you..
...

பெ: ஆஹா.. என் வானமோ ரெண்டானது.. நீ சொல்லியே ஒன்றானது
: ஓஹோ.. கள்ளென்பது பாலானது.. நான் காணவே நாளானது
பெ: என் புடவை உனது கட்டளை கேட்டு  ihikhikஇடையை மறந்தது
: என் விழிகள் உனது கண்களைக் கண்டு  ihikhik இமைய மறந்தது
பெ: தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..

: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் உன்னைக் காதலித்ததம்மா
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் உன்னை ஆதரித்ததம்மா
: கன்னி வெண்ணிலா
பெ: லாலலாலலா..
: கையில் வந்தது
பெ: லாலலாலலா..
: கையில் வந்ததும்
பெ: லாலலாலலா..
: காதல் வந்தது
பெ: லாலலாலலா..
: தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..
...

0 மறுமொழிகள்:

Post a Comment