#294 தேனூறும் ராகம் - உயிரே உனக்காக

படம்: உயிரே உனக்காக
இசை: லக்ஷ்மிகாந்த்-ப்யாரிலால்
பாடியவர்: எஸ்.ஜானகி


ஆரிராரோ.. ஆரிராரிரோ.. ஆரிராரோ.. ஆரிராரிரோ..
தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே
உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே
கண்ணின் மணியே நீயும் உறங்கு
கண்ணின் மணியே நீயும் உறங்கு
...

ஆடாத தீபந்தான் என் இல்லம்
பூங்காற்றுக்கும் தாங்காது என்னுள்ளம்
உன் அன்பாலே பொங்காதோ ஆனந்த வெள்ளம்
கனவுகளே.. கனவுகளே..
இரவென்னும் தீபம் எரிகின்ற நேரம்
உறவைத் தேடி வாருங்கள் கண்களில்
தென்றல் வீசும்.. கண்ணுறங்கு
உன்னை நீயே மறந்துறங்கு

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே
ராரிராரோ.. ஆரிராரிரோ..
கண்ணின் மணியே நீயும் உறங்கு
...

ஷ்ஷ்ஷ்..don't tell anyone
...

ஆகாயம் மண் மீது வீழாது
நம் சொந்தங்கள் எந்நாளும் மாறாது
இனி என் போன்ற அன்னைக்கு ஏகாந்தம் ஏது
உறவுகளால் ஒரு உலகம்
இது ஒரு தோட்டம்.. கிளிகளின் கூட்டம்
ஆட்டம் பாட்டம் ஆர்ப்பாட்டம் கேட்கலாம்
அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்
இன்னும் கொஞ்சம் ஓய்வெடுங்கள்

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே
கண்ணின் மணியே நீயும் உறங்கு
கண்ணின் மணியே நீயும் உறங்கு
ஆரிராரோ.. ம்ஹுஹுஹுஹும்..
ம்ஹுஹுஹும்.. லாலாலாலலா..

0 மறுமொழிகள்:

Post a Comment