#306 நில்லாத வெண்ணிலா - ஆணழகன்

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros
படம்: ஆணழகன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & ஸ்வர்ணலதா

: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் காதலி
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் கண் வழி
நில்லாமலே நீ போவதேன்.. சொல்லாமலே நான் நோவதேன்.. ஏன்
பெ: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் வாசலில்
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் பார்வையில்
...

: மான் துள்ளும் மலையாளத்தின் விழிச் சித்திரமே.. சித்திரமே
வாழையும் இளநீரையும் கொண்ட நன்னிலமே.. நன்னிலமே
பெ: கேரளக் குயில் கூவிடும் இசை தித்தித்ததோ.. தித்தித்ததோ
ஆவணித் திருவோணத்தில் உன்னைச் சந்தித்ததோ.. சந்தித்ததோ
: பொன்னல்லவோ.. சிறு பூவல்லவோ
மெல்லத் தொடவோ.. என்னைத் தரவோ
பெ: தேனல்லோ பசும் பாலல்லோ
பக்கம் வரவோ.. நான் தரவோ
: செம்மீன்கள் துள்ளுதே.. இங்கும் அங்கும்.. கண்ணோடையில்
பெ: சந்தோஷம் பொங்குதே .. முன்னும் பின்னும்.. உன் கூடலில்
நான் சொல்லவோ.. சின்னப் பெண் அல்லவோ..

: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் காதலி
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் கண் வழி
பெ: நில்லாமலே நீ போவதேன்.. சொல்லாமலே நான் நோவதேன்.. ஏன்
: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் காதலி
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் கண் வழி
...

பெ: நீ வர எதிர்பார்த்தது இந்த நந்தவனம்.. நந்தவனம்
நீ தொட இங்கு பூத்தது இந்த செங்கமலம்.. செங்கமலம்
: காமனின் கலை காண்பது இந்த அந்தப்புரம்.. அந்தப்புரம்
பூமரக் குயில் கூவுது இங்கு சப்தஸ்வரம்.. சப்தஸ்வரம்
பெ: மஞ்சமே இந்த நெஞ்சமே
சுகம் பஞ்சமோ.. இல்லை கொஞ்சுமோ
: உள்ளமே இன்ப வெள்ளமே
உன்னை அள்ளவோ.. அள்ளிச் செல்லவோ
பெ: அன்றாடம் சேர்வது.. மன்னா.. மன்னா உன் பொன்மடி
: எந்நாளும் இன்பமே.. நீயே.. நீயே என் பைங்கிளி
ஓ.. மங்கையே.. பொங்கிடும் கங்கையே

பெ: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் வாசலில்
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் பார்வையில்
: நில்லாமலே நீ போவதேன்.. சொல்லாமலே நான் நோவதேன்.. ஏன்
பெ: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் வாசலில்
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் பார்வையில்
...

0 மறுமொழிகள்:

Post a Comment