#3 பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா - பூவே பூச்சூடவா

படம்: பூவே பூச்சூடவா
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: சித்ரா


பெ.குழு: லலலா லலலா லாலாலா.. லலலா லலலா லாலாலா..
லலலா லாலா லாலாலா.. லா..லா..லா..

பெ: பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
வாசல் பார்த்து.. கண்கள் பூத்து.. காத்து நின்றேன் வா
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
...

பெ: அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை
கண்ணில் வெந்நீரை வார்ப்பேன்
கண்களும் ஓய்ந்தது.. ஜீவனும் தேய்ந்தது
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம்
நீயும் நெய்யாக வந்தாய்
இந்தக் கண்ணீரில் சோகமில்லை
இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

பெ: பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
...

பெ: காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே
பொன்முகம் பார்க்கிறேன்.. அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்தப் பொன்மானைப் பார்த்துக் கொண்டே
சென்று நான் சேர வேண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்
நான் உன் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்

பெ: பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
...

0 மறுமொழிகள்:

Post a Comment