#30 மலரே பேசு மௌன மொழி - கீதாஞ்சலி

படம்: கீதாஞ்சலி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & சித்ரா

பெ: ஆ.. ஆஆஆஆ ஆஆஆ..
ஆ.. ஆஆஆஆ ஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆ ஆ ஆ..
...
பெ: மலரே பேசு மௌன மொழி
மனம்தான் ஓடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே பேசு மௌன மொழி.. மலரே
...

: வாசனைப் பூக்கள் வாய் வெடிக்க
ஆயிரம் ஈக்கள் தேன் குடிக்க
பெ: நானொரு பூவோ நீ பறிக்க
நால்வகை குணமும் நான் மறக்க
: மெதுவாய்க் குலுங்கும் மாங்கனியே
கிடைத்தால் விடுமோ ஆண்கிளியே
பெ: மடிமேல் கொடிபோல் விழுந்தேனே

: மலரே பேசு மௌன மொழி
மனம்தான் ஓடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே பேசு மௌன மொழி.. மலரே
...

பெ: ஏந்திய வீணை நானிருக்க
ஏழிசை மீட்ட நீயிருக்க
: ராத்திரி நேர ராகமிது
பூவொடு காற்று பாடுவது
பெ: இதழால் இனிமேல் நீ எழுதும்
கதைதான் படிப்பேன் நாள் முழுதும்
: படித்தால் எனக்கும் இனிக்காதோ

பெ: மலரே பேசு மௌன மொழி
: மனம்தான் ஓடும் ஆசை வழி
பெ: வாசலைத் தேடி ஓடி வந்தேன்
: வாலிப ராகம் பாடி வந்தேன்
பெ: மலரே பேசு மௌன மொழி
&பெ: மலரே
...

இசை ஞானியின் பிறந்தநாளின்று!!senyum நம் ராஜா என்றும் நம்மிடையே வாழ இறைவனை வேண்டுவோம்!!doa

0 மறுமொழிகள்:

Post a Comment