#311 இது குழந்தை பாடும் தாலாட்டு - ஒருதலை ராகம்

பாட்டுத் தலைவனைஅவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!doasembahros

படம்: ஒருதலை ராகம்

இசை: டி. ராஜேந்தர்

எழுதியவர்: டி. ராஜேந்தர்

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம்

...

இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம்

இது நதியில்லாத ஓடம்

...


நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன்

வடமிழந்த தேரதுவொன்றை நாள்தோறும் இழுக்கிறேன்

சிறகிழந்த பறவையொன்றை வானத்தில் பார்க்கிறேன்

சிறகிழந்த பறவையொன்றை வானத்தில் பார்க்கிறேன்

உறவுறாத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன்


இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

...


வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்

வெறும் காற்றில் உளி கொண்டு சிலையொன்றை வடிக்கிறேன்

விடிந்துவிட்ட பொழுதில்கூட விண்மீனைப் பார்க்கிறேன்

விடிந்துவிட்ட பொழுதில்கூட விண்மீனைப் பார்க்கிறேன்

விருப்பமில்லாப் பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்


இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

...


உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது

உறவுறுவாள் எனதானோ மனதை நான் கொடுத்தது

உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது

உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது

ஒருதலையாய்க் காதலிலே எத்தனை நாள் வாழ்வது


இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம்

இது நதியில்லாத ஓடம்

...

0 மறுமொழிகள்:

Post a Comment