#269 எம்மனசப் பறிகொடுத்து - உள்ளம் கவர்ந்த கள்வன்

படம்: உள்ளம் கவர்ந்த கள்வன்
இசை: இளையராஜா
பாடியவர்: பி.ஜெயச்சந்திரன்

எம்மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்

கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
...

எம்மனசப் பறிகொடுத்து..
...

சின்னச்சின்ன கண்ணு ரெண்டும் என்னைப் பந்தாட
வண்ண வண்ணக் கன்னங்களில் காதல் முத்தாட

ஒரு ஜோடி நெஞ்சுக்குள்ளே..
ஆஆஆஆ.. ஆஆஆஆ..
ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆ ஆஆ..
ஒரு ஜோடி நெஞ்சுக்குள்ளே ஒரு கோடி இன்பம் வைத்தான்
அழகே.. அருகே வரலாமா
அட வந்தால் என்ன பக்கம்.. இனிமேலும் என்ன வெட்கம்
உன் கூந்தல்தன்னில் ஊஞ்சல் கட்டிச் சாய்ந்தாடவா.. ம்ஹும்ஹும்ஹும்ஹும்..

என் மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
எம்மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
எம்மனசப் பறிகொடுத்து..
...

பச்சரிசிப் புன்னகையில் முத்துச் சிந்தாதோ
பக்கம் வந்து தொட்டவுடன் மின்னல் மின்னாதோ

மலரோடு தென்றல் வந்து விளையாடிச் செல்லும்போது
மனதோடு ஆசை வந்து உறவாட வந்தேனம்மா
இளமை இனிமை சுவைத்தேனே.. இனிமேல் தினமும் சுகம்தானே
கதை சொல்வேனடி மானே.. உனைக் கொண்டாடுவேன் நானே
நீ சொல்லித் தந்த பாடமெல்லாம் நான் பாடவா.. ம்ஹும்ஹும்ஹும்ஹும்..

என் மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
எம்மனசப் பறிகொடுத்து.. உம்மனசில் இடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
எம்மனசப் பறிகொடுத்து..
...

0 மறுமொழிகள்:

Post a Comment