#270 காலங்காத்தாலே ஒரு பாடம் கேட்பேனே - உள்ளம் கவர்ந்த கள்வன்

படம்: உள்ளம் கவர்ந்த கள்வன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா

: குயில் கூவத் துயில் பறந்து குயிலொன்று எழுந்து வந்து
பயிலாத பாடமொன்றை பயிலச் சொல்லிச் சென்றதம்மா
வயதாக வயதாக இது படியாது.. பயிலாது
கயல் கொண்ட விழியாளே.. இங்கு இயலோடு இசையாக..
காலங்காத்தாலே ஒரு பாடங்கேட்பேனே
நீ சொல்லித் தந்தால் போதும் என் கல்லூரிப் பொன்மானே
பெ: என்ன பாடம்.. அது என்ன பாடம்
: காதல் பாடம்.. அது காதல் பாடம்
பெ: ஓஹோஹோஹோ.. காலங்காத்தாலே ஒரு வேலை இல்லாமே
சிறு கல்லூரிப் பெண் பின்னால் சுற்றும் காதல் சின்னவனே
போதும் போதும்
: ஓஹோஹோஹோ
பெ: நீ கேட்ட பாடம்
: ஆஹாஹாஹா
பெ: ஆகும் ஆகும்
: எப்போ
பெ: ரொம்ப காலம் காலம்
: ஓஹோஹோஹோ..
...

பெ: தாவணியைப் போட்டால் போதும்.. கனவுகள்தான் பின்னால் சுற்றும்
தனியாகப் போனால் போதும்.. நினைவுகள்தான் தன்னால் சுற்றும்
பேசாமல் இருக்கும் நிலவைப் பெண்ணுக்கு உவமை சொல்லும்
கூசாமல் தென்றல் காற்றை தூதாகப் போகச் சொல்லும்
ஒழுங்காக இருந்த உன்னைக் கெடுத்தது யார்.. சொல் சொல் பையா
ஒழுங்காக இருந்த உன்னைக் கெடுத்தது யார்.. சொல் சொல் பையா
போகுது போகுது வாலிபந்தான்.. வேலையைப் பார்.. சீக்கிரம் சீக்கிரம்

பெ: காலங்காத்தாலே ஒரு வேலை இல்லாமே
சிறு கல்லூரிப் பெண் பின்னால் சுற்றும் காதல் சின்னவனே
போதும் போதும்
: ஓஹோஹோஹோ
பெ: நீ கேட்ட பாடம்
: ஆஹாஹாஹா
பெ: ஆகும் ஆகும்
: ஓஹோஹோஹோ
பெ: ரொம்ப காலம் காலம்
: ஆஹாஹாஹா
...

&பெ: லாலலாலலாலா.. லாலலாலலா.. லாலலாலலாலா.. லாலலாலலா..
லாலலாலா.. லாலலாலா.. லாலலாலலா..
...

: வகுப்பறையில் கேட்கும் பாடம் வயதானால் போகும் போகும்
குளிப்பறையில் பாடும் பாடல் போலேதான் ஆகும் ஆகும்
தனியாகச் சொல்லும் பாடம்.. இதுதானே வேணும் வேணும்
துணையாக ஆக்கும் பாடம்.. அது ஒன்றே போதும் போதும்
இளமையிலே கல் கல் காதல்.. வயதினிலும் செய் செய் காதல்
இளமையிலே கல் கல் காதல்.. வயதினிலும் செய் செய் காதல்
போகுது போகுது வாலிபந்தான்.. சீக்கிரம் நீ சொல்லடி சொல்லடி

: காலங்காத்தாலே ஒரு பாடம் கேட்பேனே
நீ சொல்லித் தந்தால் போதும் என் கல்லூரிப் பொன்மானே
பெ: காலங்காத்தாலே ஒரு வேலை இல்லாமே
சிறு கல்லூரிப் பெண் பின்னால் சுற்றும் காதல் சின்னவனே
: காதல் பாடம்.. சொல் காதல் பாடம்
பெ: ம்ஹும் ம்ஹும்.. ம்ஹும் ம்ஹும் ம்ஹும்..
...

0 மறுமொழிகள்:

Post a Comment