#271 பூந்தென்றல் போகும் பாதை - உள்ளம் கவர்ந்த கள்வன்

படம்: உள்ளம் கவர்ந்த கள்வன்
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா

பூந்தென்றல்.. ஆஹஹா.. ஆஹஹா ஆஹஹா..
...
பூந்தென்றல் போகும் பாதை போகலாம்
பாடல் கேட்கலாம்.. விளையாடிப் பார்க்கலாம்
பூந்தென்றல் போகும் பாதை போகலாம்
பாடல் கேட்கலாம்.. விளையாடிப் பார்க்கலாம்
பனி மேகம் தரும் கீதம்.. மலர்ச் சோலை தரும் ராகம்
நாளும் நாளும் ஆனந்தம்
பாடல் கேட்கலாம்.. விளையாடிப் பார்க்கலாம்
பூந்தென்றல்..
...

சிறு சிறு மலைகளில் விழுகின்ற அருவிகள் இசையென ஒலிக்கிறது
அது சுரங்களைப் பிரிக்கிறது.. ஸரிகம சுரங்களைப் பிரிக்கிறது
சந்தன மரங்களில் தழுவிய காற்றினில் இலைகளும் அசைகிறது
அது தாளத்தில் இருக்கிறது.. தகதிமி தாளத்தில் இருக்கிறது
பச்சை மலை எங்கும் இந்தப் பாடல் கேட்டு
பஞ்சவர்ணப் பூக்கள் கூட ஆடுதே
இந்த இயற்கை அன்னை சீதனம்.. அது இசையால் ஆனது
இதை யாரும் இங்கு கேட்கலாம்.. புதுப் பாடல் பாடலாம்
நிஸ நிஸ.. பநி பநி.. நிஸ நிஸ பநி பநி.. மப நிஸ நிப மரி

பூந்தென்றல் போகும் பாதை போகலாம்
பாடல் கேட்கலாம்.. விளையாடிப் பார்க்கலாம்
...

ஆஆ.. ஆஆஆஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ ஆஹா..
ஆஆ.. ஆஆஆஆஆஆ ஆஆ..
கனி விட்ட மரங்களில் இளஞ்சிட்டுக் குருவிகள் கூடுகள் புனைகிறது
ஒரு குடும்பமும் வளர்கிறது.. பல பல சுகங்களும் மலர்கிறது
இயற்கையின் அழகினில் இளமையும் இனிமையும் இணைவது ஓரழகு
அதில் இணைந்தது என் மனது.. தினம் தினம் விளைந்தது புது உறவு
வானவில்லின் ஜாலம் கண்டு மோகம் கூடும்
எண்ணமெங்கும் ஜாடை சொல்லிப் பாடுமே
இங்கு கொஞ்சும் இன்பமாயிரம்.. மனம் போலே ஆடலாம்
தினம் சொர்க்கம் இங்கு காணலாம்.. புதுப் பாடல் பாடலாம்
நிஸ நிஸ.. பநி பநி.. நிஸ நிஸ பநி பநி.. மப நிஸ நிப மரி

பூந்தென்றல் போகும் பாதை போகலாம்
பாடல் கேட்கலாம்.. விளையாடிப் பார்க்கலாம்
பனி மேகம் தரும் கீதம்.. மலர்ச் சோலை தரும் ராகம்
நாளும் நாளும் ஆனந்தம்
பாடல் கேட்கலாம்.. விளையாடிப் பார்க்கலாம்
பூந்தென்றல்.. ஹேஏ ஏஏ ஏஏ ஏஏ ஏ..
...

0 மறுமொழிகள்:

Post a Comment