#268 தேனே.. செந்தேனே - உள்ளம் கவர்ந்த கள்வன்

படம்: உள்ளம் கவர்ந்த கள்வன்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


ம்ஹுஹுஹு ம்ஹுஹு ஹுஹும்..
ம்ஹுஹு ம்ஹுஹு ஹுஹும்..
ம்ஹுஹுஹு ஹுஹுஹு ஹுஹுஹு ஹுஹுஹு ஹு..
தேனே.. செந்தேனே.. மானே.. பொன் மானே
மலரும் பூவே.. வளரும் காற்றே
மலரும் பூவே.. வளரும் காற்றே
தேனே.. செந்தேனே.. மானே.. பொன் மானே
...

ஆசையில் ஆடினேன்.. துணை தேடினேன் என் வாழ்விலே.. ஹோய்
ஆனந்தம் பாடினேன்.. மலர் சூடினேன்.. பொன் மாலையில்
ஆயிரம் ஜாடை சிந்தும் பார்வை ஊடல் நாடகம்
அழகிலே தோன்றும் வண்ணக் காதல் காவியம்
தேவி உன் கோவில் தேடி தீபம் ஏற்றினேன்
பூஜை காணவே..

தேனே.. செந்தேனே.. மானே.. பொன் மானே
...

வானவில் ஊஞ்சலில் இளஞ்ஜோடிகள் பண்பாடுது.. ஹா..
மௌனமே ராகமாய்.. சுகம் கோடியே கொண்டாடுது
வாசனை மோகம் தந்த தேகம் போதை ஊட்டுது
பூச்சரம் போலே வந்த வேகம் எல்லை மீறுது
ராணி எந்தன் காதல் ராணி.. ihikhik பட்டம் சூட்டவா
என்னை ஆள வா..

தேனே.. செந்தேனே.. மானே.. பொன் மானே
மலரும் பூவே.. வளரும் காற்றே
மலரும் பூவே.. வளரும் காற்றே
தேனே.. செந்தேனே.. மானே.. பொன் மானே
...

0 மறுமொழிகள்:

Post a Comment