326 பாதக் கொலுசு பாட்டு - திருமதி பழனிச்சாமி
325 நிலவே நீ வரவேண்டும் - என்னருகில் நீ இருந்தால்
படம்: என்னருகில் நீ இருந்தால்
இசை: இளையராஜா
எழுதியவர்: நா. காமராசன்
பாடியவர்: இளையராஜா
நிலவே நீ வர வேண்டும்.. ஓஓஓஓ..
தனியே உன் துணை வேண்டும்.. ஓஓஓஓ..
வான் தேடுதே உன்னைத்தான் ஓடி வா
ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ..
நிலவே நீ வர வேண்டும்.. ஓஓஓஓ..
தனியே உன் துணை வேண்டும்.. ஓஓஓஓ..
...
ஓ.. ஓஓஓ..
இதய தாகம் கூடுதே.. அமுத யமுனை நீயே
பருவ ராகம் பாடுதே.. வசந்த சுகமும் நீயே
நீயின்றி வாடுதே பூஞ்சோலை மலரே
துன்பங்கள் சேர்ந்ததே என் காதல் உறவே
இணைந்து இருந்த சோலைகள்
உலகை மறந்த கோலங்கள்
ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ..
நிலவே நீ வர வேண்டும்.. ஓஓஓஓ..
தனியே உன் துணை வேண்டும்.. ஓஓஓஓ..
...
ஓ.. ஓஓஓ..
பழக வந்த தேவதை உறவை மறந்த மாயம்
இதயம் வரைந்த வேதனை மனதில் விழுந்த காயம்
மாயங்கள் செய்வதேன் என் காதல் விருந்தே
காயங்கள் ஆனதேன் என் நோய்க்கு மருந்தே
கலைந்து பிரிந்த மேகங்கள்
இழந்த காதல் சோகங்கள்
ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ..
நிலவே நீ வர வேண்டும்.. ஓஓஓஓ..
தனியே உன் துணை வேண்டும்.. ஓஓஓஓ..
வான் தேடுதே உன்னைத்தான் ஓடிவா
ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ..
நிலவே நீ வர வேண்டும்.. ஓஓஓஓ..
தனியே உன் துணை வேண்டும்.. ஓஓஓஓ..
...
324 மனமே மனமே தடுமாறும் - ரோஜாவனம்
இசை: பரத்வாஜ்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பெ: ஆ ஆ.. ஆ ஆஆ..
ஆ ஆ.. ஆ ஆஆ..
...
ஆ: மனமே மனமே.. தடுமாறும் மனமே
உள்ளுக்குளிருந்தே உயிர் கொல்லும் மனமே
பெண்ணைப் பார்க்கும்பொழுது நீ சிறகு விரிக்காதே
பிரிந்து போன பிறகு நீ சிதையும் வளர்க்காதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
மனமே மனமே.. தடுமாறும் மனமே
உள்ளுக்குளிருந்தே உயிர் கொல்லும் மனமே
...
ஆ: காதலென்ற மாத்திரைக்கு எப்போதும் இரண்டு குணம்
போட்டுக் கொண்டால் போதையைக் கொடுக்கும்
போகப் போகத் தூக்கத்தைக் கெடுக்கும்
காதலென்ற யாத்திரைக்கு எப்போதும் இரண்டு வழி
வந்த வழி வெளிச்சத்தில் ஜொலிக்கும்
போகும் வழியோ இருளுக்குள் இருக்கும்
கண் மூடினால் தூக்கம் இல்லை
கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை
ஆல விருட்சம் போல வளருது அழகுப் பெண்ணின் நினைப்பு
வெட்டி எறிந்து பார்த்தேன்.. மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு?
என் நெஞ்சமே பகையானதே
உயிர் வாழ்வதே சுமையானதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
...
பெ: ஆ ஆ.. ஆ ஆஆ ஆ..
ஹா ஆ.. ஆ ஆஆ ஆ..
...
ஆ: காதல் தந்த நினைவுகளைக்
அலைகள் வந்து அடிப்பதனாலே
என்னை மறக்க நினைக்கையிலும்
உலை மூட மூடிகளுண்டு
காதலின் கையில் பூக்களும் உண்டு
காதலின் கையில் கத்தியும் உண்டு
பூக்கள் கொண்டு வந்து நீ வாசம் வீசுவாயா?
கத்தி கொண்டு வந்து நீ கழுத்தில் வீசுவாயா?
என் வாழ்விலே என்ன சோதனை
நான் வாழ்வதே என் வேதனை
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
ஆ: மனமே மனமே.. தடுமாறும் மனமே
உள்ளுக்குளிருந்தே உயிர் கொல்லும் மனமே
பெண்ணைப் பார்க்கும்பொழுது நீ சிறகு விரிக்காதே
பிரிந்து போன பிறகு நீ சிதையும் வளர்க்காதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
...
323 உன்னைப் பார்த்த பின்பு நான் - காதல் மன்னன்
இசை: பரத்வாஜ்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
#322 சிங்காரச் சீமையிலே - நினைவுச் சின்னம்
இசை: இளையராஜா
எழுதியவர்: இளையராஜா
#321 தீர்த்தக்கரை ஓரத்திலே - தீர்த்தக்கரையினிலே
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
ஆ.. ஆஆ.. ஆஆஆ..
...
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
பாடும் மொழி உனது.. தேடும் விழி எனது
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
...
பாலைவனப் பாதையிலே பால் நிலவை நானும் கண்டேன்
பாலைவனப் பாதையிலே பால் நிலவை நானும் கண்டேன்
தேனிறைத்த பால் நிலவு தீயிறைத்துப் போவதென்ன?
காதல் வரி பாடலெல்லாம் கானல் வரி ஆனதென்ன?
என் ஜீவன் நீ இன்றி எந்நாளும் வாழாது
என் கண்கள் உன் கோலம் காணாமல் தூங்காதம்மா.. ஆ..
ஆஆஆஆ.. ஆஆஆ..
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
...
ஒற்றை வழிப் பாதையிலே உன்னை மட்டும் நான் நினைத்தேன்
ஒற்றை வழிப் பாதையிலே உன்னை மட்டும் நான் நினைத்தேன்
நெற்றி முதல் பாதம் வரை முத்தமிட்ட சொப்பனங்கள்
ஒற்றிக் கொண்ட தொட்டுக் கொண்ட அத்தனையும் கற்பனைகள்
நேராக உன் பார்வை என் மீது வாராது
நீயின்றி இன்பங்கள் என்னோடு சேராதம்மா.. ஆ..
ஆஆஆஆ.. ஆஆஆ..
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
பாடும் மொழி உனது தேடும் விழி எனது
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
...
#320 மழையும் நீயே வெயிலும் நீயே - அழகன்
இசை: கீரவாணி
எழுதியவர்: புலமைப்பித்தன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
மழையும் நீயே.. வெயிலும் நீயே
நிலவும் நீயே.. நெருப்பும் நீயே
அடடா உனைத்தானிங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
மழையும் நீயே.. வெயிலும் நீயே
நிலவும் நீயே.. நெருப்பும் நீயே
அடடா உனைத்தானிங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
...
இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா?
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா?
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுதே
பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே
அதுதானா காதல் கலை?
தோளோடு அள்ளிச் சேர்த்தானே
அதுதானா மோன நிலை?
இதுதான் சொர்க்கமா?
இது காம தேவனின் யாக சாலையா?
மழையும் நீயே.. வெயிலும் நீயே
நிலவும் நீயே.. நெருப்பும் நீயே
அடடா உனைத்தானிங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
...
கடலின் அலை போல் இதயம் அலையும்
கரு நீலக் கண்கள் ரெண்டும் பவளம் பவளம்
எரியும் விரகம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம்
அதன் எல்லை யாரறிவார்?
ஏதேதோ சுகம் போதாதோ?
இந்த ஏக்கம் யாரறிவார்?
முதலாய்.. முடிவாய்
இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்
மழையும் நீயே.. வெயிலும் நீயே
நிலவும் நீயே.. நெருப்பும் நீயே
அடடா உனைத்தானிங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
...
#319 ஆலோலம் பாடி அசைந்தாடும் - ஆவாரம்பூ
பாடியவர்: இளையராஜா
படம்: ஆவாரம்பூ
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
தனியானால் என்ன? துணையிங்கே
நான் பாடும் பாட்டுண்டு
அமுதே, என் கண்ணே.. பசும் பொன்னே
இனி துன்பம் ஏனிங்கு?
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
...
ஆ.. ஆஆஆ.. மண்ணுலகில் வந்தோர்க்கெல்லாம்
இன்ப துன்பம் என்றும் உண்டு
தாயிழந்த துன்பம் போலே
துன்பமது ஒன்றும் இல்லை
பூமியென்ற தாயும் உண்டு
வானமென்ற தந்தை உண்டு
நீங்கிடாத சொந்தம் என்று
நீரும் காற்றும் எங்கும் உண்டு
பூபாளம் பாடும் காலை வந்து வரவேற்கும்
தாயின்றி நின்ற பிள்ளை தன்னையென்றும் காக்கும்
நீ காணும் எல்லாம் உன் சொந்தம்
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
தனியானால் என்ன? துணையிங்கே
நான் பாடும் பாட்டுண்டு
அமுதே, என் கண்ணே.. பசும் பொன்னே
இனி துன்பம் ஏனிங்கு?
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
...
சுகங்கள் கூட சுகமே இல்லை
ஆதரவைத் தந்தால் கூட
அதையுமிங்கு அறிந்தாயில்லை
வந்ததுண்டு போனதுண்டு
உன் கணக்கில் ரெண்டும் ஒன்று
வரவும் உண்டு செலவும் உண்டு
உன் கணக்கில் வரவே உண்டு
ஊரெங்கள் பிள்ளையென்று
இன்று சொல்லக்கூடும்
உலகமுந்தன் சொந்தமென்று
உந்தனுள்ளம் பாடும்
நீ யாரோ, அன்பே அமுதே?
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
தனியானால் என்ன? துணையிங்கே
நான் பாடும் பாட்டுண்டு
அமுதே, என் கண்ணே.. பசும் பொன்னே
இனி துன்பம் ஏனிங்கு?
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
...
#318 ஜோடி நதிகள் பாதை - அன்பே ஓடி வா
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
ம்.. ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ஹும்..
ஆ.. ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஹா..
லா.. லாலல்லாலா..
லா.. லாலலலலல லாலல்லாலா..
லலலலல.. லலலலல.. லலலலல.. லலலலல..
...
ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
ஆஹா.. ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
...
அன்பே என் நெஞ்சம் மேலும் தாளாது
மீண்டும் என் கண்ணில் கண்ணீர் கூடாது
ராகம் மாறலாம்.. நீதான் பல்லவி
காயம் நேரலாம்.. நீதான் பௌர்ணமி
இது காதலில்லை..
இது காதலில்லையென்பதா?
நினைவுகள் மறையுமா? கனவுகள் கரையுமா?
வானும் மண்ணும் இன்றோடு ஒன்றாக
ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
ஆஹா.. ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
...
ஆஹா.. என் வீணை மீண்டும் பாடாதோ
காதல் பூமாலை தோளைத் தேடாதோ
நீயோ பூவனம்.. உன் மௌனம் சம்மதம்
உன் நெஞ்சம் என் வசம்.. என் வாழ்வே உன் வசம்
இது நேசமில்லை..
இது நேசமில்லை.. பாசமே..
இருவரும் பழகினோம்.. இடையிலே விலகினோம்
காலம் மீண்டும் கையோடு கைசேர்க்க
ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
ஆஹா.. ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
...
#317 நான் ஏரிக்கரை மேலிருந்து - சின்னத் தாயி
#316 என் காதலே.. என் காதலே - டூயட்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
#315 மயங்கினேன் மன்னன் இங்கு - சேலம் விஷ்ணு
படம்: சேலம் விஷ்ணு
இசை: சங்கீத ராஜன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
தேனிசைப் பாடல் ஒன்று.. தினம் தினம் மோகம் கொண்டு
இசைத்தேன் உனக்காக..
மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
...
மூங்கில் இலை மேலே தூங்கும் துளி போலே
நாளும் ஏங்கினேன் பாவைக்காகவே
மணநாளும் வாராதோ.. அன்பே வா வா
மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
தேனிசைப் பாடல் ஒன்று.. தினம் தினம் மோகம் கொண்டு
இசைத்தேன் உனக்காக..
மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
...
ஆசை கடலாக.. நானோ அனலாக
வாழும் நாளெல்லாம் நானும் வாடினேன்
திரை இன்னும் ஏனோ கண்ணே.. அன்பே வா வா
மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
தேனிசைப் பாடல் ஒன்று.. தினம் தினம் மோகம் கொண்டு
இசைத்தேன் உனக்காக..
மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
...
#314 மாமரத்துக் குயிலு - ராஜா ராஜாதான்
#313 அன்பே ஆருயிரே - செவ்வந்தி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
உன்னைப் பார்ப்பதற்கே.. உயிரே.. உருகுது என் மனமே
...
அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
உன்னைப் பார்ப்பதற்கே.. உயிரே.. உருகுது என் மனமே
உன்னைப் பார்ப்பதற்கே.. உயிரே.. உருகுது என் மனமே
ஜீவன் ஓயுமுன்னே வருவேன்
ஜீவன் ஓயுமுன்னே நான் வருவேன் உன்னிடமே
அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
...
நெஞ்சம் அழிந்தாலும் உண்மைக் காதல்
நேசம் அழியாது பெண் மானே
உன்னை நினைத்தே நான் ஓடாய்த் தேய்ந்தே
உருவம் குலைந்தேதான் போனேனே
என் காதலின் சின்னமே.. ஏங்காதே என் அன்னமே
மண்ணில் நானிங்கே மறைந்தாலும்
மயிலே உன் எண்ணம் மறையாது
கண்ணே என் தேகம் சாய்ந்தாலும்
காற்றாய் உனைத் தேடி வருவேனே
அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
...
தீபம் இல்லாத கோயில் போலே
தினமும் தவித்தேனே நானிங்கே
பூக்கள் இல்லாத சோலை போலே
பொழுதே.. பூங்காற்றே நீ அங்கே
உனக்காகவே நானுமே உயிர் வாழ்கிறேன் இன்னுமே
இனியும் சுமை தாங்க முடியாது
எந்தன் உயிர்க்கூடு தாங்காது
உன்னை நான் வந்து பார்க்காமல்
உருகும் என் மூச்சு போகாது
அன்பே ஆருயிரே..
உன்னைப் பார்ப்பதற்கே.. உயிரே.. உருகுது என் மனமே
ஜீவன் ஓயுமுன்னே நான் வருவேன் உன்னிடமே
ஜீவன் ஓயுமுன்னே நான் வருவேன் உன்னிடமே
அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
...
#312 வள்ளி வள்ளி என வந்தான் - தெய்வ வாக்கு
#311 இது குழந்தை பாடும் தாலாட்டு - ஒருதலை ராகம்
பாட்டுத் தலைவனைஅவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!
படம்: ஒருதலை ராகம்
இசை: டி. ராஜேந்தர்
எழுதியவர்: டி. ராஜேந்தர்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
...
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
இது நதியில்லாத ஓடம்
...
நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன்
வடமிழந்த தேரதுவொன்றை நாள்தோறும் இழுக்கிறேன்
சிறகிழந்த பறவையொன்றை வானத்தில் பார்க்கிறேன்
சிறகிழந்த பறவையொன்றை வானத்தில் பார்க்கிறேன்
உறவுறாத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன்
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
...
வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்
வெறும் காற்றில் உளி கொண்டு சிலையொன்றை வடிக்கிறேன்
விடிந்துவிட்ட பொழுதில்கூட விண்மீனைப் பார்க்கிறேன்
விடிந்துவிட்ட பொழுதில்கூட விண்மீனைப் பார்க்கிறேன்
விருப்பமில்லாப் பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
...
உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது
உறவுறுவாள் எனதானோ மனதை நான் கொடுத்தது
உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது
உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது
ஒருதலையாய்க் காதலிலே எத்தனை நாள் வாழ்வது
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
இது நதியில்லாத ஓடம்
...
#310 காதல் என்பது பொதுவொடைமை - பாலைவன ரோஜாக்கள்
என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!!
படம்: பாலைவன ரோஜாக்கள்
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்: இளையராஜா
ஆஆ ஆஆஆஆ.. ஆஆ ஆ ஆஆஆஆ..
...
காதல் என்பது பொதுவொடைமை
கஷ்டம் மட்டுந்தானே தனி உடைமை
காதல் என்பது பொதுவொடைமை
கஷ்டம் மட்டுந்தானே தனி உடைமை
அப்பனும் ஆத்தாளும் சேராமப் போனா
நீயுந்தான் பொறக்க முடியுமா
இதை எப்போதும் நீயுந்தான் மறுக்க முடியுமா
காதல் என்பது பொதுவொடைமை
கஷ்டம் மட்டுந்தானே தனி உடைமை
அப்பனும் ஆத்தாளும் சேராமப் போனா
நீயுந்தான் பொறக்க முடியுமா
இதை எப்போதும் நீயுந்தான் மறுக்க முடியுமா
...
ஆசை மட்டும் இல்லாத ஆளேது கூறு
அந்த வழி போகாத ஆளிங்கு யாரு
புத்தனும் போன பாதைதான்
பொம்பளை என்னும் போதைதான்
அந்த வேகம் வந்திடும்போது
ஒரு வேலி என்பது ஏது
இது நாளும் நாளும் தாகந்தான்
உண்மைய எண்ணிப் பாரடா
இது இல்லாட்டா உலகம் இங்க ஏதடா
காதல் என்பது பொதுவொடைமை
கஷ்டம் மட்டுந்தானே தனி உடைமை
அப்பனும் ஆத்தாளும் சேராமப் போனா
நீயுந்தான் பொறக்க முடியுமா
இதை எப்போதும் நீயுந்தான் மறுக்க முடியுமா
...
#309 மின்னலே நீ வந்ததேனடி - மே மாதம்
படம்: மே மாதம்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே.. என் வானம் உன்னைத் தேடுதே
மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே.. என் வானம் உன்னைத் தேடுதே
...
கண் விழித்துப் பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே
கண் விழித்துப் பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே
கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இன்று சிதறிப் போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்
மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
ஓ.. மின்னலே.. என் வானம் உன்னைத் தேடுதே
...
பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா
பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞனில்லையா
நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நாம் பூத்திருக்கிறேன்
மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே.. என் வானம் உன்னைத் தேடுதே
...
#308 ஆறும் அது ஆழமில்ல - முதல் வசந்தம்
படம்: முதல் வசந்தம்
இசை: இளையராஜா
எழுதியவர்: முத்துலிங்கம்
பாடியவர்: இளையராஜா
பெ.குழு: ம்ம் ம்ம்ம்.. ம் ம்ம் ம்ம்ம்..
ம்ம் ம்.. ம்ம் ம்.. ம்ம்ம்ம் ம்.. ம்..
...
ஆ: ஆறும் அது ஆழமில்ல
அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆறும் அது ஆழமில்ல
அது சேருங்கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
அடி அம்மாடி.. அதனாழம் பார்த்ததாரு
அடி ஆத்தாடி.. அதப் பார்த்த பேரைக் கூறு நீ
ஆறும் அது ஆழமில்ல
அது சேருங்கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
...
ஆ: மாடி வீட்டுக் கன்னிப் பொண்ணு
மனசுக்குள்ள ரெண்டு கண்ணு
ஏழைக் கண்ணை ஏங்க விட்டு
இன்னும் ஒன்னைத் தேடுதம்மா
கண்ணுக்குள்ள மின்னும் மையே
உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யே
சொன்ன சொல்லு என்ன ஆச்சு
சொந்தமெல்லாம் எங்கே போச்சு
நேசம் அந்தப் பாசம்
அது எல்லாம் வெளி வேஷம்
திரை போட்டுச் செஞ்ச மோசமே
ஆ: ஆறும் அது ஆழமில்ல
அது சேருங்கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
...
பெ.குழு: ம்ம் ம்ம் ம்ம்ம்..
ம்ம் ம்ம் ம்.. ம்ம் ம்ம் ம்..
ம்ம் ம்ம் ம்.. ம்ம் ம்ம் ம்..
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்..
...
ஆ: தண்ணியில கோலம் போடு
ஆடிக்காத்தில் தீபம் ஏத்து
ஆகாயத்தில் கோட்டை கட்டு
அந்தரத்தில் தோட்டம் போடு
ஆண்டவனக் கூட்டி வந்து
அவன அங்கே காவல் போடு
அத்தனையும் நடக்கும் ஐயா
ஆசை வச்சாக் கிடைக்கும் ஐயா
ஆனா கிடைக்காது நீ ஆசை வைக்கும் மாது
அவள் நெஞ்சம் யாவும் வஞ்சமே
ஆ: ஆறும் அது ஆழமில்ல
அது சேருங்கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
அடி அம்மாடி.. அதனாழம் பார்த்ததாரு
அடி ஆத்தாடி.. அதப் பார்த்த பேரைக் கூறு நீ
ஆறும் அது ஆழமில்ல
அது சேருங்கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
...