Showing posts with label வாணி ஜெயராம். Show all posts
Showing posts with label வாணி ஜெயராம். Show all posts

#267 செல்லக் குழந்தைகளே - மை டியர் குட்டிச்சாத்தான்

படம்: மை டியர் குட்டிச்சாத்தான்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: வாணி ஜெயராம் & மாதுரி

பெ1: செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
பாடுங்களே.. கொண்டாடுங்களே.. ஒரு தோழன் துணைக்கு வந்தான்.. ஆடுங்களே
பெ2: செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
பாடுங்களே.. கொண்டாடுங்களே.. ஒரு தோழன் துணைக்கு வந்தான்.. ஆடுங்களே
...

பெ1: காற்றும் இவனுக்குக் கட்டுப்படும்.. இவன் செப்படி வித்தைக்காரன்
தரை வேண்டாம் என்றான்.. தலைகீழாய் நின்றான்
பெ2: தொண்டு கிழங்களும் கண்டு பயப்படும் காரியம் கற்று வைத்தான்
இவன் பார்த்தால் போதும்.. கடல் பாலாய் மாறும்
பெ1: இனி நம் வீட்டிலே தினம் தீபாவளி
பெ2: இங்கு நாம் பாடுவோம் புது கீதாஞ்சலி
பெ1&பெ2: அலை நான்கு விளையாடும் கவி பாடி

பெ1: செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
பாடுங்களே.. கொண்டாடுங்களே.. ஒரு தோழன் துணைக்கு வந்தான்
பெ1&பெ2: ஆடுங்களே
செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
...

பெ2: ஜன்னல் திறந்தொரு மின்னல் நுழைந்தது என்னென்ன விந்தைகளோ
இனி ஊஞ்சல் ஆடு.. இது தேவன் வீடு
பெ1: உண்மை நிலவையும் பொம்மையென இவன் கைகளில் வைத்திருப்பான்
புது லீலை மன்னன்.. இனி எங்கள் அண்ணன்
பெ2: அந்த ஆகாயமே எங்கள் பாயாகுமே
பெ1: இனி நாம் தூங்கவே வெகு நாளாகுமே
பெ1&பெ2: நம் சொந்தம் எந்நாளும் மாறாதே

பெ1: செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
பெ2: செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
பெ1: பாடுங்களே.. கொண்டாடுங்களே.. ஒரு தோழன் துணைக்கு வந்தான்
பெ1&பெ2: ஆடுங்களே
பெ2: செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
...

#254 ஓ.. காதல் என்னைக் காதலிக்கவில்லை - கொடி பறக்குது

படம்: கொடி பறக்குது
இசை: ஹம்சலேகா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்

பெ: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் என்னைக் காதலிக்கவில்லை
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் என்னை ஆதரிக்கவில்லை
கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன்
போகும் பாதையில் பூத்திருக்கிறேன்
தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் என்னைக் காதலிக்கவில்லை
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் என்னை ஆதரிக்கவில்லை
...

பெ: கைகள் ஏந்தி வந்தேன்.. கவனம் இல்லையா
கண்ணில் ஈரம் கண்டும் கருணையில்லையா
: பாலைப் போலக் கள்ளும் வெள்ளையில்லையா
பருகிப் பார்க்கச் சொன்னால் பாவம் இல்லையா
பெ: நான் இன்று சீதையென்று தீக்குளிப்பேன் உன்னாலே
பெண் பாவம் சாபம் என்று காண வேண்டும் பின்னாலே
: போதும் போதும் பெண்ணே.. புன்னகை என்பது காதலின் பல்லவி
I love you.. I love you.. I love you..
: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் உன்னைக் காதலித்ததம்மா
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் உன்னை ஆதரித்ததம்மா
...

: என்னைக் கொல்லத்தானா இளமை வந்தது
எந்த நாளிலம்மா பருவம் வந்தது
பெ: புருவம் வந்தபோதே பருவம் வந்தது
புடவை மாற்றும்போது கர்வம் வந்தது
: ஶ்ரீராமன் வில் வளைத்து சீதை கொண்டான் அப்போது
என் சீதை வில் வளைத்து ராமன் கொண்டாள் இப்போது
பெ: தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..

: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் உன்னைக் காதலித்ததம்மா
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் உன்னை ஆதரித்ததம்மா
பெ: கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன்
போகும் பாதையில் பூத்திருக்கிறேன்
: தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
பெ: I love you..
: I love you..
பெ: I love you..
...

#232 வா வா என் வீணையே - சட்டம்

படம்: சட்டம்
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்

: வா வா என் வீணையே
பெ: நநநா..
: விரலோடு கோபமா
பெ: நநநா..
: மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமா
கிள்ளாத முல்லையே.. காற்றோடு கோபமா
இளந்தென்றல் தேடும்போது ஊடலாகுமா
: வா வா என் வீணையே
பெ: நநநா..
: விரலோடு கோபமா
பெ: நநநா.. நநந்நநநா..
...

பெ: தண்டோடு தாமரையாட.. வண்டோடு மோகனம் பாட
நான் பார்க்கையில் நெஞ்சிலே உந்தன் ஞாபகம் கூட
தண்டோடு தாமரையாட.. வண்டோடு மோகனம் பாட
நான் பார்க்கையில் நெஞ்சிலே உந்தன் ஞாபகம் கூட
: துணை தேடுதோ.. தனிமைத் துயர் கூடுதோ
பெ: அணை மீறுதோ.. உணர்ச்சி அலை பாயுதோ
: நாள்தோறும் ராத்திரி மேடையில் ரகசிய பாஷையில் பாட

பெ: வா வா உன் வீணை நான்
: நநநா..
பெ: விரல் மீட்டும் வேளைதான்
: நநநா..
பெ: மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமோ
கிள்ளாத முல்லையே வந்தாள் உன் எல்லையே
இளந்தென்றல் தேடும்போது ஊடலாகுமோ
...

: சந்தோஷ மந்திரம் ஓத.. சந்தர்ப்பம் சாதகமாக
நாள் பார்ப்பதோ இன்னமும் இன்ப நாடகம் போட
சந்தோஷ மந்திரம் ஓத.. சந்தர்ப்பம் சாதகமாக
நாள் பார்ப்பதோ இன்னமும் இன்ப நாடகம் போட
பெ: இரவாகலாம்.. இளமை அரங்கேறலாம்
: உறவாடலாம்.. இனிய சுரம் பாடலாம்
பெ: கேட்காத வாத்திய ஓசைகள் கேட்கையில் ஆசைகள் தீரும்

: வா வா என் வீணையே
பெ: லலலா..
: விரலோடு கோபமா
பெ: லலலா..
மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமோ
: கிள்ளாத முல்லையே.. காற்றோடு கோபமா
பெ: இளந்தென்றல் தேடும்போது ஊடலாகுமோ
: வா வா என் வீணையே
பெ: லலலா..
: விரலோடு கோபமா
பெ: லலலா.. வா வா உன் வீணை நான்
: நநநா..
பெ: விரல் மீட்டும் வேளைதான்
: நநநா.. நநந்நநநா..
...

#189 அழகிய விழிகளில் அறுபது - டார்லிங் டார்லிங் டார்லிங்

படம்: டார்லிங் டார்லிங் டார்லிங்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்

: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
ஏ ராதா..
பெ: ஆஹா..
: ஐ லவ் யூ
பெ: ஓஹோ..
: ஏ ராதா..
பெ: ஆஹாஹா..
: ஐ லவ் யூ
பெ: ஓஹோஹோ..
: இதய தாகமது தணியும் நேரமிது.. கவிதை பாடி வருவாய்
பெ: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே
ஹே ராஜா
: ஹாஹாஹா..
பெ: ஐ லவ் யூ..
: ஹோஹோஹோ
பெ: ஹே ராஜா
: ஹா ஹாஹா..
பெ: ஐ லவ் யூ
: ஹே ஹேஹே
பெ: இதய தாகமது தணியும் நேரமிது.. கவிதை பாடி வருவாய்
: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
...

: மங்கை நீ.. ரதி தேவி தங்கை நீ
பெ: மன்னன் நீ.. இள நெஞ்சின் கள்வன் நீ
: சிறு இடை சிறை.. சிறையிடு எனை
பெ: கண்ணுக்குள் காவல் துறை.. வா.. கைதாக்கும் ஆயுள் வரை
: மங்கை நீ.. ரதி தேவி தங்கை நீ
பெ: மன்னன் நீ.. இள நெஞ்சின் கள்வன் நீ
: சிறு இடை சிறை.. சிறையிடு எனை
பெ: கண்ணுக்குள் காவல் துறை.. வா.. கைதாக்கும் ஆயுள் வரை
: என்னாசை ராஜாத்தி உன்னாசை போலே
பெ: இணைந்தும்
: கலந்தும்
பெ: சுகத்தில்
: நனைந்தும்
பெ: அம்மாடி சொன்னாலே வெட்கம் வரும்

: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
பெ: ஹே ராஜா
: ஹாஹாஹா..
பெ: ஐ லவ் யூ..
: ஓஹோஹோ.. ஏ ராதா..
பெ: ஹாஹாஹா..
: ஐ லவ் யூ
பெ: ஓஹோஹோ..
: இதய தாகமது தணியும் நேரமிது.. கவிதை பாடி வருவாய்
பெ: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே
...

பெ: பட்டுப் போல் மெதுவாகத் தொட்டுக் கொள்
: கட்டிக் கொள்.. உயிரோடு ஒட்டிக் கொள்
பெ: தலைவனின் கரம் தழுவிட வரும்
: பன்னீரை அள்ளித் தெளி.. நீ என்னாசை செல்லக்கிளி
பெ: பட்டுப் போல் மெதுவாகத் தொட்டுக் கொள்
: கட்டிக் கொள்.. உயிரோடு ஒட்டிக் கொள்
பெ: தலைவனின் கரம் தழுவிட வரும்
: பன்னீரை அள்ளித் தெளி.. நீ என்னாசை செல்லக்கிளி
பெ: என் தேகம் எங்கெங்கும் மின்சாரம் பாயும்
: விடியும்
பெ: வரைக்கும்
: அமுதம்
பெ: சுரக்கும்
: ஆத்தாடி சொன்னாலே சொர்க்கம் வரும்

பெ: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே
: ஏ ராதா..
பெ: ஹாஹாஹா..
: ஐ லவ் யூ
பெ: ஓஹோஹோ.. ஏ ராஜா
: ஹாஹா..
பெ: ஐ லவ் யூ..
: ஹா ஹஹஹா..
பெ: இதய தாகமது தணியும் நேரமிது.. கவிதை பாடி வருவாய்
: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
பெ: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே
...

# 113 A B C.. நீ வாசி - ஒரு கைதியின் டைரி

படம்: ஒரு கைதியின் டைரி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & வாணி ஜெயராம்

பெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..
: A B C.. நீ வாசி.. So easy.. உன் ராசி.. வா ரோஸி
பெ: அழகிய பள்ளியறையிது
: பள்ளியறை பள்ளியறையா
பெ: பள்ளி வந்து சொல்லித்தர வந்தேன்
: சொல்லித் தந்து வரும் கலையா
பெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..
...

பெ: வரைமுறை என ஒன்று உண்டு.. வாய் பொத்திக் கேளுங்கள்
: புடவையும் மெல்ல விலகுது.. ஏனென்று பாருங்கள்
பெ: வரைமுறை என ஒன்று உண்டு.. வாய் பொத்திக் கேளுங்கள்
: புடவையும் மெல்ல விலகுது.. ஏனென்று பாருங்கள்
பெ: பார்வையைச் சுருக்கிக் கொண்டு
: லலலா
பெ: பாடங்கள் எழுதிவிடு.. லலலா..
: படிக்கிற வயசில்லையே
பெ: லலலா..
ஆ: படுக்கையை விரித்துவிடு
பெ: என் பாடம் நான் சொல்ல
: பெண் பாடம் நான் சொல்ல.. வா மெல்ல.. மெல்ல.. மெல்ல

பெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..
...

: இது ஒரு புது அனுபவம்.. ஏழையின் சந்தோஷம்
பெ: நுனி முதல் அடி வரையிலும் பாய்ந்தது மின்சாரம்
: இது ஒரு புது அனுபவம்.. ஏழையின் சந்தோஷம்
பெ: நுனி முதல் அடி வரையிலும் பாய்ந்தது மின்சாரம்
: உதட்டினில் இனிக்கிறதே
பெ: லலலா..
: கொடுத்தது பழரசமா.. ஆஆஆ..
பெ: கொடுத்ததைத் திருப்பிக் கொடு
: ஆஆஆ..
பெ: அது என்ன இலவசமா
: ஆஹாஹா.. ஆரம்பம்
பெ: பூவுக்குள் பூகம்பம்
: தேன் சிந்தும்.. சிந்தும்.. சிந்தும்

பெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..
: A B C.. நீ வாசி.. So easy.. உன் ராசி.. வா ரோஸி
பெ: அழகிய பள்ளியறையிது
: பள்ளியறை பள்ளியறையா
பெ: பள்ளி வந்து சொல்லித்தர வந்தேன்
: சொல்லித் தந்து வரும் கலையா
பெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..
...

# 110 எது சுகம் சுகம் - வண்டிச்சோலை சின்ராசு

படம்: வண்டிச்சோலை சின்ராசு
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்

 பெ: எது சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு
எது சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு
...

: வானம் எந்தன் தோளோடு சாய்ந்ததென்ன உன்னோடு
பஞ்சு வண்ண நெஞ்சோடு படுக்கை ஒண்ணு நீ போடு
பெ: சாம வேதம் நீ ஓது.. வாடைத் தீயில் கூவும்போது
வா.. இனி தாங்காது.. தாங்காது
கண்ணோரம் இந்நேரம் செந்தூரம் உண்டாக

: சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு
...

பெ: கள்ளத் தீயும் ஒண்ணாச்சு.. காதல் நெஞ்சில் உண்டாச்சு
கண்ணில் இன்று முள்ளாச்சு.. அதிலே தூக்கம் போயாச்சு
: பாரிஜாத உன் தேகம் பார்க்கப் பார்க்க போதையேறும்
நீ கொடு பேரின்பம்..
கையோடு கை சேர.. மெய்யோடு மெய் சேர

பெ: சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு
: எது சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு
...

# 96 வெள்ளி நிலா பதுமை - அமுத கானம்

படம்: அமுத கானம்
இசை: இளையராஜா
பாடியவர்: ரமேஷ் & வாணி ஜெயராம்

பெ: ஆ.. ஆஆ ஆஆஆ.. ஆஆஆ..
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..
ம்ஹும்ஹும்..
: ம்ஹும்ஹும்ஹும்..
பெ: ம்ஹும்ஹும்..
: ம்ஹும்ஹும்ஹும்..
பெ: ம்ஹும்..
: ம்ம்..
பெ: ம்ஹும்..
: லாலா..
பெ: ஆ.. ஆ.. ஆ.. ஆ.. லால லால லால லாலா..
: வெள்ளி நிலா பதுமை.. காதல் பள்ளியிலே இளமை
வெள்ளி நிலா பதுமை.. காதல் பள்ளியிலே இளமை
இது பூமேடையோ.. இசை நான் பாடவோ
மலைத் தேன் மழையோ.. மதுவோ
வெள்ளி நிலா பதுமை.. காதல் பள்ளியிலே இளமை
...

பெ: நான் சூடும் சந்தன மல்லிகையோ
நான் சூடும் சந்தன மல்லிகையோ
பூமேனி மன்மதன் பூபாளமோ
: தாமரைப் பூவில் ஊர்வலமே
பெ: ஆஆஆ..
: தாமரைப் பூவில் ஊர்வலமே
பெ: ஆஆஆஆஆ..
: அமுத கானமே
பெ: ஆஹாஹா..
: இதழோடு பாடவோ
பெ: ஆஹாஹா..
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ..
: என் திருவிழாவில் தேரில் ஆடும் கிளியே

பெ: வெள்ளி நிலா பதுமை.. காதல் பள்ளியிலே இளமை
இது பூமேடையோ.. இசை நான் பாடவோ
மலைத் தேன் மழையோ.. மதுவோ
வெள்ளி நிலா பதுமை
...

பெ: கண்டாலே கொண்டாடும் தேவதை நான்
கண்டாலே கொண்டாடும் தேவதை நான்
கண்ணாலே சுக ராகம் நான் பாடவா
: ஆடையில் மூடிய தேன் நிலவே
பெ: ஆஆஆ..
: ஆடையில் மூடிய தேன் நிலவே
பெ: ஆஆஆ..
: அணைத்துப் பேசவோ
பெ: ஆஹாஹா..
: நான் மடியில் சாயவோ
பெ: ஆஹாஹா..
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ..
: நீ கொஞ்சும் வேளை அந்தி மாலை வருமோ

பெ: வெள்ளி நிலா பதுமை.. காதல் பள்ளியிலே இளமை
இது பூமேடையோ.. இசை நான் பாடவோ
மலைத் தேன் மழையோ.. மதுவோ
வெள்ளி நிலா பதுமை.. காதல் பள்ளியிலே இளமை
இது பூமேடையோ.. இசை நான் பாடவோ
: லாலலலா.. லலலா.. லாலலாலலலா.. லலலா..
...

#26 ஹே.. ஐ லவ் யூ - உன்னை நான் சந்தித்தேன்

படம்: உன்னை நான் சந்தித்தேன்
இசை: இளையராஜா

பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & வாணி ஜெயராம்

பெ: ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
: அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை எழுது.. மெல்ல எழுது
ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
...

பெ: பசும்புல் பாய்கள் விரிக்கும்.. பனியில் பூக்கள் குளிக்கும்
இதயமே மதுவிலே நனையுதே
: இதுதான் மாலை விருந்து.. மலரே நீயும் அருந்து
இரவிலே மயங்கலாம் நிலவிலே
பெ: காதோரம் மெல்ல கூறும் சேதி தேன் போலே பாயாதோ
: நீராடும் வண்ணப் பூவும் நாளை பூ மஞ்சம் போடாதோ
&பெ: லா.. லலலா.. லலலா.. லா..

: ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
பெ: அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை எழுது.. மெல்ல எழுது
...

: துகிலோ மெல்ல விலகும்.. கரமோ தொட்டுப் பழகும்
சுகத்திலே கனவுகள் வளருதே
பெ: முகிலோ வானில் மிதக்கும்.. மலையோ முத்தம் கொடுக்கும்
இயற்கையும் காதலால் மயங்குதே
: தேனூறும் கன்னிப் பூவைச் சூடும் பூங்காத்தும் நான்தானே
பெ: போராடும் பள்ளிக்கூடம் தேடும் பூச்செண்டு நான்தானே
&பெ: லா.. லலலா.. லலலா.. லா..

பெ: ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
: அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை எழுது.. மெல்ல எழுது
&பெ: ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
...

#23 தேவாம்ருதம் ஜீவாம்ருதம் - மூன்று முகம்

படம்: மூன்று முகம்
இசை: சங்கர்-கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்

: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
துறவறம் என்ன சுகம் தரும்
என்றும் பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்
&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
: தீவானா
&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
பெ: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்

: இதம் பதம் சுகமாகலாம்.. இதழ் தரும் இனிய மதுவில்
ஜபம் தவம் இனியேதடி.. மனம் தினம் உனது மடியில்
பெ: இதை விடவா இன்பலோகம்.. இதுவல்லவா ராஜ யோகம்
இதை விடவா இன்பலோகம்.. இதுவல்லவா ராஜ யோகம்
உற்சாகம் உல்லாசம் உண்டாகும் பெண்ணாலேதான்

: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
பெ: சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
: எவ்ரிபடி..
&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
: தீவானா
&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
...

: ஷாபரபரிபரப...
பெ: பாபாபா..
...

பெ: தளர் நடை தடுமாறுதே.. தளிர் இடை தழுவத் தழுவ
தணல் சுடும் நிலையானதே.. விரல் நகம் பதியப் பதிய
: மனநிலையை மாற்றி வைத்தாய்.. புதுக் கனலை ஏற்றி வைத்தாய்
மனநிலையை மாற்றி வைத்தாய்.. புதுக் கனலை ஏற்றி வைத்தாய்
தொட்டாலும் பட்டாலும் மின்சாரம் பாய்கின்றதே

பெ: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
: சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
பெ: துறவறம் என்ன சுகம் தரும்
: என்றும் பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்.. கமான்..
,பெ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
: தீவானா
,பெ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
ஆ: தீவானா
,பெ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
: தீவானா
,பெ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
...