பாட்டுத் தலைவனை அவர் நினைவு நாளில் வணங்குகிறேன்!🙏🌹
படம்: தீர்த்தக்கரையினிலே
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன் பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
ஓ.. ஓஓ ஓ.. ஓஓஓ.. ஓஓ ஓ.. ஆ.. ஆஆ.. ஆஆஆ.. ... தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே பாடும் மொழி உனது.. தேடும் விழி எனது தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே ...
பாலைவனப் பாதையிலே பால் நிலவை நானும் கண்டேன் பாலைவனப் பாதையிலே பால் நிலவை நானும் கண்டேன் தேனிறைத்த பால் நிலவு தீயிறைத்துப் போவதென்ன? காதல் வரி பாடலெல்லாம் கானல் வரி ஆனதென்ன? என் ஜீவன் நீ இன்றி எந்நாளும் வாழாது என் கண்கள் உன் கோலம் காணாமல் தூங்காதம்மா.. ஆ.. ஆஆஆஆ.. ஆஆஆ..
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே ...
ஒற்றை வழிப் பாதையிலே உன்னை மட்டும் நான் நினைத்தேன் ஒற்றை வழிப் பாதையிலே உன்னை மட்டும் நான் நினைத்தேன் நெற்றி முதல் பாதம் வரை முத்தமிட்ட சொப்பனங்கள் ஒற்றிக் கொண்ட தொட்டுக் கொண்ட அத்தனையும் கற்பனைகள் நேராக உன் பார்வை என் மீது வாராது நீயின்றி இன்பங்கள் என்னோடு சேராதம்மா.. ஆ.. ஆஆஆஆ.. ஆஆஆ..
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே பாடும் மொழி உனது தேடும் விழி எனது தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே ...
என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! பாடியவர்: இளையராஜா படம்: ஆவாரம்பூ இசை: இளையராஜா எழுதியவர்: கங்கை அமரன்
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே தனியானால் என்ன? துணையிங்கே நான் பாடும் பாட்டுண்டு அமுதே, என் கண்ணே.. பசும் பொன்னே இனி துன்பம் ஏனிங்கு? ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே ...
ஆ.. ஆஆஆ.. மண்ணுலகில் வந்தோர்க்கெல்லாம் இன்ப துன்பம் என்றும் உண்டு தாயிழந்த துன்பம் போலே துன்பமது ஒன்றும் இல்லை பூமியென்ற தாயும் உண்டு வானமென்ற தந்தை உண்டு நீங்கிடாத சொந்தம் என்று நீரும் காற்றும் எங்கும் உண்டு பூபாளம் பாடும் காலை வந்து வரவேற்கும் தாயின்றி நின்ற பிள்ளை தன்னையென்றும் காக்கும் நீ காணும் எல்லாம் உன் சொந்தம்
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே தனியானால் என்ன? துணையிங்கே நான் பாடும் பாட்டுண்டு அமுதே, என் கண்ணே.. பசும் பொன்னே இனி துன்பம் ஏனிங்கு? ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே ...
சோகமெதும் சுமையே இல்லை சுகங்கள் கூட சுகமே இல்லை ஆதரவைத் தந்தால் கூட அதையுமிங்கு அறிந்தாயில்லை வந்ததுண்டு போனதுண்டு உன் கணக்கில் ரெண்டும் ஒன்று வரவும் உண்டு செலவும் உண்டு உன் கணக்கில் வரவே உண்டு ஊரெங்கள் பிள்ளையென்று இன்று சொல்லக்கூடும் உலகமுந்தன் சொந்தமென்று உந்தனுள்ளம் பாடும் நீ யாரோ, அன்பே அமுதே?
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே தனியானால் என்ன? துணையிங்கே நான் பாடும் பாட்டுண்டு அமுதே, என் கண்ணே.. பசும் பொன்னே இனி துன்பம் ஏனிங்கு? ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே ...
படம்: சின்னத்தம்பி பெரியதம்பி இசை: கங்கை அமரன் எழுதியவர்: கங்கை அமரன் பாடியவர்: சித்ரா
மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
மலரின் இதழில் பனி விழுந்தது
மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா.. என் மாமா..
தூவானம் தூவும்.. அதில் ஏதேதோ கானம்
ஆராரோ பாடும்.. அதில் ஆனந்தம் கூடும்
மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
...
ஆகாயம் அங்கும் இங்கும் ஆயிரமாயிரம் பூக்கோலம்
தாழ்வாரம் எங்கும் வண்ணம் தங்கம் மின்னும் மாக்கோலம்
ஆகாயம் அங்கும் இங்கும் ஆயிரமாயிரம் பூக்கோலம்
தாழ்வாரம் எங்கும் வண்ணம் தங்கம் மின்னும் மாக்கோலம்
பூவோடு பூங்காற்றும் பூபாளம் பாடாதோ
பெண்ணான என்னுள்ளம் பூப்போல ஆடாதோ
பாசமெனும் கூட்டில் பல பாடம் பெறும் கிளிகள்
பாடி வரும் பாட்டில் பல பாவம் பெறும் மொழிகள்
நாதமென்று கீதமென்று சேர்ந்தது வழிகள்
மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
மலரின் இதழில் பனி விழுந்தது
மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா.. என் மாமா..
...
ஆ ஆஆ.. ஆஆ ஆஆஆ..
லலலலலல லலலலலல லா லா லா லா..
...
அன்பான நெஞ்சம் எல்லாம் ஆண்டவன் வாழும் கோவிலது
யாரோடு யாரைக் கண்டு சங்கமமாகப் போகிறது
அன்பான நெஞ்சம் எல்லாம் ஆண்டவன் வாழும் கோவிலது
யாரோடு யாரைக் கண்டு சங்கமமாகப் போகிறது
எந்நாளும் சங்கீதம் நம்மோடு ஒன்றாகும்
எப்போதும் சந்தோஷம் நம்மோடு வந்தாடும்
வானம் எங்கும் பறந்து நாம் தேடும் இளம் வயது
சோகங்களை மறந்து இது ராகம் தரும் மனது
சேர்ந்ததென்று பாடுதம்மா.. ஆனந்தம் எனது
மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
மலரின் இதழில் பனி விழுந்தது
மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா.. என் மாமா..
தூவானம் தூவும்.. அதில் ஏதேதோ கானம்
ஆராரோ பாடும்.. அதில் ஆனந்தம் கூடும்
மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
...
பெ1: சில்லென மெல்லிய தென்றலும் வந்திசை சொல்லியது
சுவை அள்ளியது.. மனம் நில்லென சொல்லியும் துள்ளியது பெ.குழு: ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ.. பெ1: சில்லென மெல்லிய தென்றலும் வந்திசை சொல்லியது
சுவை அள்ளியது.. மனம் நில்லென சொல்லியும் துள்ளியது பெ2: பெண் மனம் பூவினும் மெல்லியது
தவிக்கும் நினைவோ எனைக் கிள்ளியது
மல்லிகை முல்லையில் பஞ்சணையோ
மன்னவன் கொண்டது நெஞ்சணையோ
மின்னிய மின்னலும் கன்னியின் எண்ணங்களோ
இனிக் கனவுகள் தொடர்ந்திட
பெ2: தம்தன நம்தன பெ1&பெ2: தாளம் வரும் பெ2: புது பெ1&பெ2: ராகம் வரும் பெ2: பல பெ1&பெ2: பாவம் வரும் பெ2: அதில் பெ1&பெ2: சந்தன மல்லிகை வாசம் வரும்
...
பெ.குழு: ஆ.. ஆஆஆ ஆ ஆஆஆஆஆ.. ஆஆஆ ஆ ஆஆஆஆஆ..
ஆஆஆ ஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ.. ஆ..
ஆ..
... பெ2: சிந்தனை அம்புகள் எய்தது என்னிடம் வந்து விழ.. பல சிந்தை எழ
மனம் மன்னவன் உன்னடி வந்து தொழ பெ.குழு: ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ.. பெ1: சிந்தனை அம்புகள் எய்தது என்னிடம் வந்து விழ.. பல சிந்தை எழ
மனம் மன்னவன் உன்னடி வந்து தொழ பெ2: சிந்திய பூ மலர் சிந்திவிழ.. அலைபோல் உணர்வோ தினம் முந்தியெழ
அந்தியில் வந்த்தது சந்திரனோ.. சந்திரன் போலொரு இந்திரனோ பெ1: முந்திய நாளினில் எந்தனின் முன்பலனோ
துணை சுகம் தர.. சுவை பெற
பெ2: தம்தன நம்தன பெ1&பெ2: தாளம் வரும் பெ2: புது பெ1&பெ2: ராகம் வரும் பெ2: பல பெ1&பெ2: பாவம் வரும் பெ2: அதில் பெ1&பெ2: சந்தன மல்லிகை வாசம் வரும் பெ1: மண மாலை வரும்.. சுப வேளை வரும்..
மண நாள்.. திருநாள்.. புது நாள்.. உனை அழைத்தது பெ2: தம்தன நம்தன பெ1&பெ2: தாளம் வரும் பெ2: புது பெ1&பெ2: ராகம் வரும் பெ2: பல பெ1&பெ2: பாவம் வரும் பெ2: அதில் பெ1&பெ2: சந்தன மல்லிகை வாசம் வரும் பெ.குழு: தம்தன நம்தன.. நம்தன நம்தன.. நம்தன நம்தன.. நம்தன நம்தன..
...
படம்: சட்டம் இசை: கங்கை அமரன் பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
ஆ: வா வா என் வீணையே பெ: நநநா.. ஆ: விரலோடு கோபமா பெ: நநநா.. ஆ: மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமா
கிள்ளாத முல்லையே.. காற்றோடு கோபமா
இளந்தென்றல் தேடும்போது ஊடலாகுமா ஆ: வா வா என் வீணையே பெ: நநநா.. ஆ: விரலோடு கோபமா பெ: நநநா.. நநந்நநநா..
...
பெ: தண்டோடு தாமரையாட.. வண்டோடு மோகனம் பாட
நான் பார்க்கையில் நெஞ்சிலே உந்தன் ஞாபகம் கூட
தண்டோடு தாமரையாட.. வண்டோடு மோகனம் பாட
நான் பார்க்கையில் நெஞ்சிலே உந்தன் ஞாபகம் கூட ஆ: துணை தேடுதோ.. தனிமைத் துயர் கூடுதோ பெ: அணை மீறுதோ.. உணர்ச்சி அலை பாயுதோ ஆ: நாள்தோறும் ராத்திரி மேடையில் ரகசிய பாஷையில் பாட
பெ: வா வா உன் வீணை நான் ஆ: நநநா.. பெ: விரல் மீட்டும் வேளைதான் ஆ: நநநா.. பெ: மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமோ
கிள்ளாத முல்லையே வந்தாள் உன் எல்லையே
இளந்தென்றல் தேடும்போது ஊடலாகுமோ
...
ஆ: சந்தோஷ மந்திரம் ஓத.. சந்தர்ப்பம் சாதகமாக
நாள் பார்ப்பதோ இன்னமும் இன்ப நாடகம் போட
சந்தோஷ மந்திரம் ஓத.. சந்தர்ப்பம் சாதகமாக
நாள் பார்ப்பதோ இன்னமும் இன்ப நாடகம் போட பெ: இரவாகலாம்.. இளமை அரங்கேறலாம் ஆ: உறவாடலாம்.. இனிய சுரம் பாடலாம் பெ: கேட்காத வாத்திய ஓசைகள் கேட்கையில் ஆசைகள் தீரும்
ஆ: வா வா என் வீணையே பெ: லலலா.. ஆ: விரலோடு கோபமா பெ: லலலா..
மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமோ ஆ: கிள்ளாத முல்லையே.. காற்றோடு கோபமா பெ: இளந்தென்றல் தேடும்போது ஊடலாகுமோ ஆ: வா வா என் வீணையே பெ: லலலா.. ஆ: விரலோடு கோபமா பெ: லலலா.. வா வா உன் வீணை நான் ஆ: நநநா.. பெ: விரல் மீட்டும் வேளைதான் ஆ: நநநா.. நநந்நநநா..
...
படம்: அறுவடை நாள் இசை: இளையராஜா எழுதியவர்: கங்கை அமரன் பாடியவர்கள்: இளையராஜா & சித்ரா
ஆ: ப்ரேமம் ப்ரேமாதி ப்ரேமப் ப்ரியம்.. ப்ரேம வஸ்யப் ப்ரேமம்
ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம்
ப்ரியம் ப்ரியமாதி ப்ரீதிதப் ப்ரேமம்.. ப்ரீதி வஸ்யப் ப்ரீதம்
ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம்
குமம் கும்கும் குங்குமம் தந்தோம்.. தந்துனா மமச்சீவனம்
மமச்சீவனம் மமச்சீவனம் மகம் கல்யம் மாங்கல்யம் தந்தோம்
மங்களா மமச்சீவிதம்.. மமச்சீவனம் மமச்சீவனம்
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி ஷாந்தி.. பெ: தேவனின் கோவில் மூடிய நேரம் நானென்ன கேட்பேன் தெய்வமே
இன்று என் ஜீவன் தேயுதே.. என் மனம் ஏனோ சாயுதே
தேவனின் கோவில் மூடிய நேரம் நானென்ன கேட்பேன் தெய்வமே
...
பெ: நானொரு சோக சுமைதாங்கி.. துன்பம் தாங்கும் இடிதாங்கி
நானொரு சோக சுமைதாங்கி.. துன்பம் தாங்கும் இடிதாங்கி
பிரிந்தே வாழும் நதிக்கரை போல தனித்தே வாழும் நாயகி
இணைவது எல்லாம் பிரிவதற்காக.. இதயங்களெல்லாம் மறப்பதற்காக
மறந்தால்தானே நிம்மதி
பெ: தேவனின் கோவில் மூடிய நேரம் நானென்ன கேட்பேன் தெய்வமே
...
ஆ: ஏ.. ஏஏஏ.. தந்தன தந்தன தந்தனா.. ஆஆஆ..
தந்தானத் தந்தானத் தானன்னா.. நநா.. தந்தானா.. தந்தானா.. ஹே..
... பெ: ஒரு வழிப்பாதை என் பயணம்.. மனதினில் ஏனோ பல சலனம்
ஒரு வழிப்பாதை என் பயணம்.. மனதினில் ஏனோ பல சலனம்
கேட்டால் தருவேன் என்றவன் நீயே.. கேட்டேன் ஒன்று.. தந்தாயா
ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்.. அழுதிடக் கண்ணில் நீருக்குப் பஞ்சம்
நானோர் கண்ணீர்க் காதலி
பெ: தேவனின் கோவில் மூடிய நேரம் நானென்ன கேட்பேன் தெய்வமே
இன்று என் ஜீவன் தேயுதே.. என் மனம் ஏனோ சாயுதே
தேவனின் கோவில் மூடிய நேரம் நானென்ன கேட்பேன் தெய்வமே
...
படம்: பயணங்கள் முடிவதில்லை இசை: இளையராஜா எழுதியவர்: கங்கை அமரன் பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
ஏ ஆத்தா.. ஆத்தோரமா வார்றியா நான் பார்த்தா பார்க்காமலே போறியா அடியே ஆத்தா.. ஆத்தோரமா வார்றியா நான் பார்த்தா பார்க்காமலே போறியா அட அக்கம் பக்கம் யாருமில்லே அள்ளிக்கலாம்.. வா புள்ளே.. ஏ ஆத்தா.. ஆத்தோரமா வார்றியா நான் பார்த்தா பார்க்காமலே போறியா ...
ஏய்.. ஆத்தா.. ஆத்தோரமா வார்றியா நான் பார்த்தா பார்க்காமலே போறியா அட அக்கம் பக்கம் யாருமில்லே அள்ளிக்கலாம்.. வா புள்ளே.. ஏ ஆத்தா.. ஆத்தோரமா வார்றியா நான் பார்த்தா பார்க்காமலே போறியா ...
படம்: பயணங்கள் முடிவதில்லை இசை: இளையராஜா எழுதியவர்: கங்கை அமரன் பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
வைகறையில் வைகைக் கரையில் வந்தால் வருவேன் உன்னருகில்
வைகறையில் வைகைக் கரையில் வந்தால் வருவேன் உன்னருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில் நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
வைகறையில் வைகைக் கரையில் வந்தால் வருவேன் உன்னருகில்
...
உன் நினைவே எனக்கோர் சுருதி.. உன் கனவே எனக்கோர் கிருதி
உன் உணர்வில் மனமே உருகி.. வாடுதம்மா மலர் போல் கருகி
பலப்பல ஜென்மம் நானெடுப்பேன்.. பாடல்கள் நூறு நான் படிப்பேன்
அன்பே உனக்கே காத்திருப்பேன்
ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..
வைகறையில் வைகைக் கரையில் வந்தால் வருவேன் உன்னருகில்
...
ஆயிரமாயிரம் ஆசைகளை ஆசையில் உன்னிடம் பேச வந்தேன்
ஆவியில் மேவிய சேதிகளைக் கேளென நெஞ்சிடம் கூற வந்தேன்
நினைவுகள் எங்கோ அலைகிறதே.. கனவுகள் ஏனோ கலைகிறதே
நிழல் போல் உன்னைத் தொடர்கிறதே
ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..
வைகறையில் வைகைக் கரையில் வந்தால் வருவேன் உன்னருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில் நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
வைகறையில் வைகைக் கரையில் வந்தால் வருவேன் உன்னருகில்
...
படம்: இதய கோயில் இசை: இளையராஜா பாடியவர்கள்: கங்கை அமரன் & சித்ரா
ஆ: ஜும்ஜும்குஜும் ஜுங்குச் சுக்குச் ஜும்ஜும்குஜும் ஜும்ஜும்குஜும் ஜுங்குச் சுக்குச் ஜும்ஜும்குஜும் ஜும்ஜும்குஜும் சுக்குச் ஜும்ஜும்குஜும் ஜும்ஜும்குஜும் சுக்குச் ஜும்ஜும்குஜும் ஜும்ஜும்குஜும் சுக்குச் ஜும்ஜும்குஜும் ஜும்ஜும்குஜும் சுக்குச் ஜும்ஜும்குஜும் ஜும்ஜும்குஜும் ஜுங்குச் சுக்குச் ஜும்ஜும்குஜும் ஜும்ஜும்குஜும் ஜுங்குச் சுக்குச் ஜும்ஜும்குஜும் ஊரோரமா ஆத்துப் பக்கம் தென்னந்தோப்பு தோப்போரமா இந்தப் பக்கம் குருவிக் கூடு அட.. ஊரோரமா ஆத்துப் பக்கம் தென்னந்தோப்பு தோப்போரமா இந்தப் பக்கம் குருவிக் கூடு ஆண் குருவிதான் இரையத் தேடிப் போயிருந்தது பெண் குருவிதான் கூட்டுக்குள்ளே காத்திருந்தது வீட்டைத் தேடி ஆண் குருவிதான் வந்து சேர்ந்தது கூட்டுக்குள்ளே குருவி ரெண்டுமே ஒண்ணாச் சேர்ந்து ஜிம்ஜுகு ஜிம்ஜுகு ஆ&பெ: ஜிம் ஜிம்குஜும் ஜிங்குச் ஜிம் ஜிம்குஜும் ஜிம் ஜிம்குஜும் ஜிங்குச் ஜிம் ஜிம்குஜும் ஆ: ஊரோரமா ஆத்துப் பக்கம் தென்னந்தோப்பு ஜும்ஜும்குஜும் ஜுங்குச் சுக்குச் ஜும்ஜும்குஜும் ஜும்ஜும்குஜும் ஜுங்குச் சுக்குச் ஜும்ஜும்குஜும் ...
பெ: அங்கே தினம் முத்தம் இடும் சத்தம் வருது ஆ: இங்கே அது வந்தால் பெரும் குத்தம் வருது பெ: அங்கே ஒரு பெட்டை பல முட்டை இடுது ஆ: இங்கே பல பெட்டை விரல் பட்டால் சுடுது பெ: கண்ணாடி மீனா பின்னாடி போனா கண்ணாலே முறைப்பாளே ஆ: என்னான்னு கேட்டுக் கூச்சல்கள் போட்டு வில்லாட்டம் விரைப்பாளே பெ: நாள்தோறுமே உறவைக் காட்டும் பண் பாடிடும் குருவிக் கூட்டம் நாம்தான்
ஆ: ஜும்ஜும்குஜும் ஜுங்குச் சுக்குச் ஜும்ஜும்குஜும் ஜும்ஜும்குஜும் ஜுங்குச் சுக்குச் ஜும்ஜும்குஜும் ஊரோரமா ஆத்துப் பக்கம் தென்னந்தோப்பு பெ: தோப்போரமா இந்தப் பக்கம் குருவிக் கூடு ஆ: ஊரோரமா ஆத்துப் பக்கம் தென்னந்தோப்பு பெ: தோப்போரமா இந்தப் பக்கம் குருவிக் கூடு ஆ: ஆண் குருவிதான் இரையத் தேடிப் போயிருந்தது பெ: பெண் குருவிதான் கூட்டுக்குள்ளே காத்திருந்தது ஆ: வீட்டைத் தேடி ஆண் குருவிதான் வந்து சேர்ந்தது ஆ&பெ: கூட்டுக்குள்ளே குருவி ரெண்டுமே ஒண்ணாச் சேர்ந்து ஆ: ஜிம்ஜுகு ஜிம்ஜுகு ஆ&பெ: ஜிம் ஜிம்குஜும் ஜிங்குச் ஜிம் ஜிம்குஜும் ஜிம் ஜிம்குஜும் ஜிங்குச் ஜிம் ஜிம்குஜும் ...
ஆ: அங்கே ஒரு சொர்க்கம்.. அது இங்கே வருமோ பெ: இங்கே பல வர்க்கம்.. இது இன்பம் தருமோ ஆ: எல்லாம் ஒரு சொந்தம் என எண்ணும் பறவை பெ: கண்ணும் இள நெஞ்சும் அதில் காணும் உறவை பெண் பார்க்கும்போதே பேரங்கள் பேசும் ஆண் வர்க்கம் அங்கேது ஆ: அம்மாடி வேண்டாம் கல்யாண வாழ்க்கை.. நம்மாலே ஆகாது ஆ&பெ: நாம்தானொரு பறவைக் கூட்டம்.. நாள்தோறுமே ஆட்டம் பாட்டம்தான்
ஆ: ஜும்ஜும்குஜும் ஜுங்குச் சுக்குச் ஜும்ஜும்குஜும் ஜும்ஜும்குஜும் ஜுங்குச் சுக்குச் ஜும்ஜும்குஜும் ஊரோரமா ஆத்துப் பக்கம் தென்னந்தோப்பு பெ: தோப்போரமா இந்தப் பக்கம் குருவிக் கூடு ஆ: அடடட.. ஊரோரமா ஆத்துப் பக்கம் தென்னந்தோப்பு பெ: தோப்போரமா இந்தப் பக்கம் குருவிக் கூடு ஆ: ஆண் குருவிதான் இரையத் தேடிப் போயிருந்தது பெ: பெண் குருவிதான் கூட்டுக்குள்ளே காத்திருந்தது ஆ: வீட்டைத் தேடி ஆண் குருவிதான் வந்து சேர்ந்தது ஆ&பெ: கூட்டுக்குள்ளே குருவி ரெண்டுமே ஒண்ணாச் சேர்ந்து ஆ: ஜிம்ஜுகு ஜிம்ஜுகு ஆ&பெ: ஜிம் ஜிம்குஜும் ஜிங்குச் ஜிம் ஜிம்குஜும் ஜிம் ஜிம்குஜும் ஜிங்குச் ஜிம் ஜிம்குஜும் ஜிம் ஜிம்குஜும் ஜிங்குச் ஜிம் ஜிம்குஜும் ஜிம் ஜிம்குஜும் ஜிங்குச் ஜிம் ஜிம்குஜும் ஆ: ஜுகுஜுகுஜுகுஜுகுஜும் ...
வானில் தோன்றும் கோலம்.. அதை யார் போட்டதோ பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்ததோ வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம் வளர்ந்தாடுது.. இசை பாடுது.. வழிந்தோடிடும் சுவை கூடுது
புத்தம் புது காலை.. பொன்னிற வேளை என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும் சுக ராகம் கேட்கும்.. எந்நாளும் ஆனந்தம் லல்ல லல லா.. லாலல லா.. ...
பெ.குழு: ஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
ஆஆ ஆஆஆ.. ஆஆ ஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆ: பூந்தளிராட.. பெ.குழு: ஆஆ ஆஆஆ.. ஆஆஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ. ஆ: பொன் மலர் சூட.. பெ.குழு: ஆஆ ஆஆஆ.. ஆஆ ஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ. ஆ: பூந்தளிராட.. பொன் மலர் சூட..
சிந்தும் பனி வாடைக் காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்.. இனி நாடும் சுப காலங்கள்
பூந்தளிராட.. பெ.குழு: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆ: பொன் மலர் சூட.. பெ.குழு: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
...
பெ.குழு: லலலால்லல லலலல்லா..
லலலால்லல லலலல்லா..
லலலால்லலலா லலலால்லலலா
லலலால்லலலா லலலால்லா..
லலலால்லல லலலா..
... பெ: காதலை ஏற்றும் காலையின் காற்றும் ஆ: ம்ம்ம்ம்ம்.. பெ: வீணை தொட்டுப் பாடும் பாட்டும் காதில் பட்டதே
வாலிப நாளில் வாசனைப் பூவின் ஆ: ம்ம்ம்ம்ம்.. பெ: வாடை பட்டு வாடும் நெஞ்சின் எண்ணம் சுட்டதே ஆ: கோடிகளாசை கூடிய போது
கூடும் நெஞ்சிலே கோலம் இட்டதே பெ: தேடிடுதே தென்காற்றின் ராகம்..
பெ: பூந்தளிராட.. பெ.குழு: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ.. பெ: பொன் மலர் சூட.. பெ.குழு: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
...
பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம் ம் ம்ம்.. ம்ம்ம் ம்ம்ம் ம் ம்ம்..
ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்..
... ஆ: பூ மலர் தூவும் பூமரம் நாளும் பெ: ம்ம்ம்ம்ம்.. ஆ: போதை கொண்டு பூமி தன்னைப் பூஜை செய்யுதே பெ: ஆஆஆஆஆ.. ஆ: பூவிரலாலும் பொன்னிதழாலும் பெ: ம்ம்ம்ம்ம்.. ஆ: பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் செய்யுதே பெ: பூமழை தூவும் வெண்ணிற மேகம்
பொன்னை அள்ளுதே.. வண்ணம் நெய்யுதே ஆ:ஏங்கிடுதே என்னாசை எண்ணம்
ஆ: பூந்தளிராட.. பெ.குழு: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆ: பொன் மலர் சூட.. பெ.குழு: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ.. பெ: சிந்தும் பனி வாடைக் காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சும்
பாடும் புது ராகங்கள்.. ஆ: இனி நாடும் சுப காலங்கள் பெ: பாடும் புது ராகங்கள்.. ஆ: இனி நாடும் சுப காலங்கள்
...
படம்: அம்மன் கோயில் கிழக்காலே இசை: இளையராஜா எழுதியவர்: கங்கை அமரன்பாடியவர்கள்: பி.ஜெயச்சந்திரன் & எஸ்.ஜானகி
ஆ: பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம்.. கச்சேரி.. எப்போது பெ: பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம்.. கச்சேரி.. எப்போது
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
...
ஆ: காத்துல சூடம் போல கரையிறேன் உன்னால பெ: காத்துல சூடம் போல கரையிறேன் உன்னால
கண்ணாடி வளை முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெறும் நன்னாள நெனச்சாச்சு ஆ: சின்ன வயசுப் புள்ள.. கன்னி மனசுக்குள்ள வண்ணக் கனவு வந்ததே பெ: கல்யாணம்.. கச்சேரி.. எப்போது
பெ: உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம்.. கச்சேரி.. எப்போது
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
...
ஆ: வாடைய வீசும் காத்து வளைக்குதே எனைப் பார்த்து பெ: வாங்களேன் நேரம் பார்த்து.. வந்து என்னைக் காப்பாத்து
குத்தால மழை எம்மேல விழ.. அப்போதும் சூடாச்சு
எப்போதும் எனை கொத்தாக அணை.. என் தேகம் ஏடாச்சு
மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க.. கொஞ்சம் அணைச்சுக் கொள்ளய்யா
கல்யாணம்.. கச்சேரி.. எப்போது
பெ: உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம்.. கச்சேரி.. எப்போது ஆ: பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
...
படம்: 16 வயதினிலே இசை: இளையராஜா எழுதியவர்: கங்கை அமரன் பாடியவர்: எஸ்.ஜானகி
செந்தூரப் பூவே..
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே..
...
தென்றலைத் தூது விட்டு.. ஒரு சேதிக்குக் காத்திருப்பேன்
கண்களை மூட விட்டு.. இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
கன்னிப் பருவத்தில் வந்த கனவிதுவே
எண்ண இனிக்கிது அந்த நினைவதுவே
வண்ணப் பூவே.. தென்றல் காற்றே.. என்னைத் தேடி சுகம் வருமோ
செந்தூரப் பூவே..
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே..
...
நீலக் கருங்குயிலே.. தென்னஞ்சோலைக் குருவிகளே
ஓலமிடும் மயிலே.. நல்ல கானப் பறவைகளே
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழியெங்கும் பூவை இறைத்திடுங்கள்
வண்ணப் பூவே.. தென்றல் காற்றே.. என்னைத் தேடி சுகம் வருமோ
செந்தூரப் பூவே..
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே..
...
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ்வானிலே ஒளிதான் தோன்றுதே
ஆயிரம் ஆசையில் என் நெஞ்சம் பாடாதோ
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
...
துள்ளி வரும் உள்ளங்களில் தூது வந்து தென்றல் சொல்ல
தோன்றும் எங்கும் இன்பத்தின் ஆனந்தத் தாளங்களே
வெள்ளி மலைக் கோலங்களை அள்ளிக் கொண்ட மேகங்களைக்
காணும் நெஞ்சில் பொங்கட்டும் சொந்தத்தின் பாவங்களே
கள்ளமின்றி உள்ளங்கள் துள்ளியெழ
கட்டிக் கொண்ட எண்ணங்கள் மெல்ல விழ
ராகங்கள் பாட.. தாளங்கள் போட
வானெங்கும் போகாதோ
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
லாலால லாலா.. லாலா லாலா..
...
வண்ண வண்ண எண்ணங்களும்.. வந்து விழும் உள்ளங்களும்
வானின் மீது ஊர்வலம் போகின்ற காலங்களே
சின்னச் சின்ன மின்னல்களும்.. சிந்தனையின் பின்னல்களும்
சேரும் போது தோன்றிடும் ஆயிரம் கோலங்களே
இன்று முதல் இன்பங்கள் பொங்கி வரும்
இந்த மனம் எங்கெங்கும் சென்று வரும்
காவிய ராகம் காற்றினில் கேட்கும்
காலங்கள் ஆரம்பம்
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ்வானிலே ஒளிதான் தோன்றுதே
ஆயிரம் ஆசையில் என் நெஞ்சம் பாடாதோ
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
லாலால லாலா.. லாலா லாலா..
...
பெ: இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான் சிந்து பாடும்
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான் சிந்து பாடும் ஆ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே பெ: இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த மான்
...
பெ: இந்த மான் உந்தன் சொந்த மான் ஆ: பக்கம் வந்துதான் சிந்து பாடும் பெ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே ஆ: கண்மணியே பெ: சந்திக்க வேண்டும் தேவனே ஆ: என்னுயிரே
...
பெ: பொன்மணி மேகலை ஆடுதே.. உன் விழிதான் இடம் தேடுதே ஆ: பெண்ணுடல் பார்த்ததும் நாணுதே.. இன்பத்தில் வேதனை ஆனதே பெ: எண்ணத்தான்.. ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ...
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
எண்ணத்தான் உன்னை எண்ணித்தான்
உடல் மின்னத்தான் வேதனை தின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சைக் கிள்ளித்தான்
என்னை சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான் ஆ: மோகம்தான் சிந்தும் தேகம்தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்
ஆ: இந்த மான் பெ: உந்தன் சொந்த மான் ஆ: பக்கம் வந்துதான் பெ: சிந்து பாடும்.. இந்த மான் ஆ: எந்தன் சொந்த மான் பெ: பக்கம் வந்துதான் ஆ: சிந்து பாடும் பெ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே ஆ: கண்மணியே.. சந்திக்க வேண்டும் தேவியே பெ: என்னவனே
...
ஆ: பாவாடை கட்டயில பாத்தேனே மச்சம்
ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம் பெ: நோகாம பாத்துப்புட்ட வேறென்ன மிச்சம்
கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம் ஆ: அச்சு வெல்லப் பேச்சுல ஆளத் தூக்குற
கொஞ்ச நேரம் பாருன்னா கூலி கேக்குற பெ: துள்ளிப் போகும் புள்ளி மான மல்லு வேட்டி இழுக்குது
மாமன் பேசும் பேச்சக் கேட்டு வேப்பங்குச்சி இனிக்கிது
பெ: ஊரெல்லாம் உன்னப் பத்தி வெறும் வாய மெல்ல
தோதாக யாருமில்ல தூது சொல்ல ஆ: வாய் வார்த்தை பொம்பளைக்கி போதாது புள்ள
கண் ஜாடை போல ஒரு பாஷையில்ல பெ: சுத்திச் சுத்தி வந்து நீ சோப்பு போடுற
கொட்டிப் போன குடுமிக்கு சீப்பு தேடுற ஆ: என்னப் பார்த்து என்ன கேட்ட.. ஏட்ட ஏண்டி மாத்துற
கால நேரம் கூடிப் போச்சு.. மாலை வந்து மாத்துற