Showing posts with label உன்னி மேனன். Show all posts
Showing posts with label உன்னி மேனன். Show all posts

#149 கண்ணுக்கு மையழகு - புதிய முகம்

படம்: புதிய முகம்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: பி.சுசீலா & உன்னி மேனன்

: ம்.. ம்ம்ம் ம்ம்.. ம்.. ம்ம் ம்ம்..
பெ: கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
அவரைக்குப் பூவழகு
அவருக்கு நானழகு
கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
அவரைக்குப் பூவழகு
அவருக்கு நானழகு
...

பெ: மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளியழகு
அலை மீண்டு போனாலும் கரை கொண்ட நுரையழகு
இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடுதானழகு
இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடுதானழகு
இளமாறன் கண்ணுக்கு எப்போதும் நானழகு

பெ: கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
அவரைக்குப் பூவழகு
அவருக்கு நானழகு
கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
அவரைக்குப் பூவழகு
அவருக்கு நானழகு
...

பெ: ஆனந்த மஞ்சத்தில் அவிழ்ந்தாலும் குழலழகு
அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டழகு
பெண்ணோடு காதல் வந்தால் பிறை கூடப் பேரழகு
பெண்ணோடு காதல் வந்தால் பிறை கூடப் பேரழகு
என்னோடு நீயிருந்தால் இருள் கூட ஓரழகு

பெ: கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
அவரைக்குப் பூவழகு
அவருக்கு நானழகு
கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
அவரைக்குப் பூவழகு
அவருக்கு நானழகு
...

# 111 பொன் மானே கோபம் - ஒரு கைதியின் டைரி

படம்: ஒரு கைதியின் டைரி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: உன்னி மேனன் & உமா ரமணன்

: பொன் மானே.. கோபம் ஏனோ
பொன் மானே.. கோபம் ஏனோ
காதல் பால் குடம் கள்ளாய்ப் போனது
ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது
பொன் மானே.. கோபம் ஏனோ
பொன் மானே.. கோபம் ஏனோ
...

: காவல் காப்பவன் கைதியாய் நிற்கிறேன்.. வா
பெ: ஊடல் என்பது காதலின் கௌரவம்.. போ
: ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல் கோபம் கொள்வதா
லால்ல லால்லலா.. லால்ல லால்லலா.. லால்ல லால்லலா
பெ: ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்
: ஊடல் கூட அன்பின் அம்சம்
பெ: நாணம் வந்தால் ஊடல் போகும்.. ஓஹோ..

: பொன் மானே.. கோபம் ஏனோ
பொன் மானே.. கோபம் ஏனோ
...

பெ: எந்தன் கண்களில் உன்னையே பார்க்கிறேன்.. வா
: ரெண்டு பௌர்ணமி கண்களில் பார்க்கிறேன்.. வா
பெ: உன்னைப் பார்த்ததும் எந்தன் பெண்மைதான் கண் திறந்ததே
லால்ல லால்லலா.. லால்ல லால்லலா.. லால்ல லால்லலா
: கண்ணே.. மேலும் காதல் பேசு
பெ: நேரம் பார்த்து நீயும் பேசு
: பார்வை பூவை நெஞ்சில் வீசு.. ஓஹோ..

: பொன் மானே
பெ: ம்ஹும்..
: கோபம்
பெ: ம்ஹும்..
: எங்கே
பெ: ம்ஹும்.. ம்ஹும்.. ம்ஹும்..
: பொன் மானே
பெ: ம்ஹும்..
ஆ: கோபம்
பெ: ம்ஹும்..
: எங்கே
பெ: ம்ஹும்.. ம்ஹும்.. ம்ஹும்..
பூக்கள் மோதினால் காயம் நேருமா
தென்றல் கிள்ளினால் ரோஜா தாங்குமா
&பெ: லா.. லால்லா.. லால்லா.. லால்லா..
லா.. லால்லா.. லால்லா.. லால்லா..
...