Showing posts with label மரகதமணி. Show all posts
Showing posts with label மரகதமணி. Show all posts

#320 மழையும் நீயே வெயிலும் நீயே - அழகன்

பாட்டுத் தலைவனைஅவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: அழகன்
இசை: கீரவாணி
எழுதியவர்: புலமைப்பித்தன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


மழையும் நீயே.. வெயிலும் நீயே
நிலவும் நீயே.. நெருப்பும் நீயே
அடடா உனைத்தானிங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
மழையும் நீயே.. வெயிலும் நீயே
நிலவும் நீயே.. நெருப்பும் நீயே
அடடா உனைத்தானிங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
...

இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா?
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா?
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுதே
பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே
அதுதானா காதல் கலை?
தோளோடு அள்ளிச் சேர்த்தானே
அதுதானா மோன நிலை?
இதுதான் சொர்க்கமா?
இது காம தேவனின் யாக சாலையா?

மழையும் நீயே.. வெயிலும் நீயே
நிலவும் நீயே.. நெருப்பும் நீயே
அடடா உனைத்தானிங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
...

கலையெல்லாம் கற்றுக் கொள்ளும் பருவம் பருவம்
கடலின் அலை போல் இதயம் அலையும்
கரு நீலக் கண்கள் ரெண்டும் பவளம் பவளம்
எரியும் விரகம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம்
அதன் எல்லை யாரறிவார்?
ஏதேதோ சுகம் போதாதோ?
இந்த ஏக்கம் யாரறிவார்?
முதலாய்.. முடிவாய்
இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்

மழையும் நீயே.. வெயிலும் நீயே
நிலவும் நீயே.. நெருப்பும் நீயே
அடடா உனைத்தானிங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
...

# 82 அழகிய கார்த்திகை தீபங்களாடும் - தேவ ராகம்

படம்: தேவ ராகம்
இசை: மரகதமணி
பாடியவர்: சித்ரா


பெ: அழகிய கார்த்திகை தீபங்களாடும்
நம்தன நம்தன நம்தன நம் நம்
கன்னியர் கண்களில் வாழ்த்துக்கள் பாடும்
நம்தன நம்தன நம்தன நம் நம்
இந்த மங்கையர் கொலுசுகள் மங்கல மேளம்
தநநந நநநந தநநம்
சுப ராகங்கள் கேட்கையில் விடியும் ஜாமம்
தநநந நநநந தநநம்
இனி புதிய உறவில் இதயம் முழுதும் மகிழும்
தநநம் தநநம் நம் நம் நம் நம்
தம் தநநநம் தநாநந தம் தநநநம்
பெ&பெ.குழு: தம் தநநநம் தநாநந தம் தநநநம்
: ஆ..
பெ&பெ.குழு: தம் தநநநம் தநாநந தம் தநநநம்
: நிஸ நிஸ கஸ மத பம நிப கம பா
பெ&பெ.குழு: தம் தநநநம் தநாநந தம் தநநநம்
...

பெ: வரலக்‌ஷ்மி கோலம் வரைகின்ற நேரம்
கண்களின் ஓரம் கரை போடும் ஈரம்
சந்நிதி கண்டு.. சந்தனம் கொண்டு
குங்கும தேவியை அலங்கரித்தோம்
விண் கொண்ட மீன்களின் ஒளி வாங்கி
தரையில் நடந்தோம் அகல் தாங்கி
கிண்கிணி நாதம்.. புண்ணிய கீதம்
அவள் கால் சலங்கைகள் தேவ கானங்கள்
கலகலகலவெனச் சிரித்திடு தேவி
பெ&பெ.குழு: தம் தநநநம் தநாநந தம் தநநநம்
தம் தநநநம் தநாநந தம் தநநநம்
தம் தநநநம் தநாநந தம் தநநநம்
தம் தநநநம் தநாநந தம் தநநநம்
...

பெ: ஆஆ ஆஆ ஆஆ ஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆ..
...

பெ: கல் மண்டபங்களில் சந்தனாபிஷேகம்
களி மண் விளக்கிலே கனகாபிஷேகம்
கைகளில் ஆடும் தீபங்கள் போல
கண்களில் நூறு கனவாடும்
கன்னியின் ஆசைகள் பல கோடி
கவிதை தந்தோம் சுரம் பாடி
...
பெ: தேவியின் கண்ணில் என்னுயிர் கண்டேன்
என் சிந்தை முழுதும் சந்தக் கவிதைகள்
சிலுசிலுசிலுவென சிலிர்க்குது தேகம்
பெ&பெ.குழு: தம் தநநநம் தநாநந தம் தநநநம்
தம் தநநநம் தநாநந தம் தநநநம்

பெ: அழகிய கார்த்திகை தீபங்களாடும்
நம்தன நம்தன நம்தன நம் நம்
கன்னியர் கண்களில் வாழ்த்துக்கள் பாடும்
நம்தன நம்தன நம்தன நம் நம்
இந்த மங்கையர் கொலுசுகள் மங்கல மேளம்
தநநந நநநந தநநம்
சுப ராகங்கள் கேட்கையில் விடியும் ஜாமம்
தநநந நநநந தநநம்
இனி புதிய உறவில் இதயம் முழுதும் மகிழும்
தநநம் தநநம் நம் நம் நம் நம்
பெ&பெ.குழு: தம் தநநநம் தநாநந தம் தநநநம்
தம் தநநநம் தநாநந தம் தநநநம்
: ஆ..
பெ&பெ.குழு: தம் தநநநம் தநாநந தம் தநநநம்
: நிஸ நிஸ கஸ மத பம நிப கம பா
பெ&பெ.குழு: தம் தநநநம் தநாநந தம் தநநநம்
...