Showing posts with label மனோ. Show all posts
Showing posts with label மனோ. Show all posts

#247 அந்தியில வானம் - சின்னவர்

படம்: சின்னவர்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & ஸ்வர்ணலதா



: அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்.. ம்.. ம்ஹும்..
பெ: சந்திரரே வாரும்.. சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்.. ம்.. ம்..
: கூடும் காவிரி.. இவதான் என் காதலி
குளிர்காயத் தேடித் தேடிக் கொஞ்சத் துடிக்கும்.. ஹோ.. ஓ..
பெ: அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்.. ம்.. ம்..
: சந்திரரே வாரும்.. சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்.. ம்.. ம்ஹும்..
...

பெ: கட்டுமரத் தோணி போலக் கட்டழகன் உங்க மேல
சாய்ஞ்சா சந்தோஷம் உண்டல்லோ
பட்டுடுத்தத் தேவையில்ல.. முத்துமணி ஆசையில்ல
பாசம் நெஞ்சோடு வந்தல்லோ
: பாலூட்டும் சங்கு.. அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது
பாய் மேல நீ போடு தூங்காத விருந்து
பெ: நாணம் உண்டல்லோ.. அதை நானும் கொண்டல்லோ
இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ.. ஹோ..

: அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்.. ம்.. ம்ஹும்..
பெ: சந்திரரே வாரும்.. சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்.. ம்.. ம்..
...

: வெள்ளியலை தாளந்தட்ட.. சொல்லியொரு மேளங்கொட்ட
வேளை வந்தாச்சு கண்ணம்மா.. ஆ ஆ ஆ..
மல்லியப்பூ மாலை கட்ட.. மாரியிட வேளை கிட்ட
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா.. ஆ.. ஆஆஆ..
பெ: கடலோரம் காத்து.. ஒரு கவிபாடும் பார்த்து
காணாம நூலானேன் ஆளான நாந்தான்
தோளோடு நான் சேர ஊராதோ தேன்தான்
: தேகம் ரெண்டல்லோ.. இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகமொன்று ஜீவனொன்று கூடும் இன்றல்லோ

பெ: அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்.. ம்.. ம்..
: சந்திரரே வாரும்.. சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்.. ம்.. ம்ஹும்..
பெ: கூடும் காவிரி.. இவதான் உன் காதலி
குளிர்காயத் தேடித் தேடிக் கொஞ்சத் துடிக்கும்.. ஹோ.. ஓ..

: அந்தியில வானம்
பெ: ஹா..
: தந்தனத்தோம் போடும்
பெ: ஆஹா..
: அலையோட சிந்து படிக்கும்.. ம்.. ம்ஹும்..
பெ: சந்திரரே வாரும்
: ஹோய்..
பெ: சுந்தரியப் பாரும்
: ஆஹா..
பெ: சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்.. ம்.. ம்..
...

#245 மந்திரம் சொன்னேன் வந்துவிடு - வேதம் புதிது

படம்: வேதம் புதிது
இசை: தேவேந்திரன்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: மனோ & எஸ்.ஜானகி





: மந்திரம் சொன்னேன் வந்துவிடு.. சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொல்வேனே.. அதன் பொருளைச் சொல்வாய் செந்தேனே
புதிய பாடம் சொல்வேனே.. அதன் பொருளைச் சொல்வாய் செந்தேனே
பாதம் பார்த்து வேதம் சொல்ல ஆற்றங்கரைக்கு வந்தேனே
மந்திரம் சொன்னேன் வந்துவிடு.. சம்மதம் எங்கே தந்துவிடு
...

: கண்மணி உனக்கொண்ணு தெரியுமா
அந்த இடுப்பில் இருக்குது என் மனசு
பெ: என் மனம் உனக்கென்ன புரியுமா
தண்ணிக் குடத்தில் துடிக்குது என்னுயிரு
: நீ குளித்தால் நதியில் மணமிருக்கும்
பெ: நீ ரசித்தால் கவியின் குணமிருக்கும்
: வந்துவிட்டேன்.. மெல்ல மெல்ல
பெ: தந்துவிட்டேன்.. என்ன சொல்ல
: பாவமல்ல.. வேதங்கள் தடையல்ல

: மந்திரம் சொன்னேன் வந்துவிடு.. சம்மதம் எங்கே தந்துவிடு
...

: பொருத்தம் நமக்குள் இல்லையென்று
நீ நினைத்ததுண்டோ நெஞ்சுக்குள்ள
பெ: தாமிரபரணி ஆத்துத் தண்ணி
அது ஜாதி பேதம் பார்ப்பதில்ல
: நீ நினைத்தால் திருநீரணிந்திருப்பேன்
பெ: நீ தடுத்தால் கோயில் மறந்திருப்பேன்
: தொட்டதெல்லாம் வெற்றியடி
பெ: வெற்றி தந்தாள் அல்லிக் கொடி
: கட்டிப் பிடி..
பெ: காதல் வேதம் கற்பிக்க வா
காதில் வந்து ஒப்பிக்க வா
காதல் என்னை அழைக்குது
எங்கள் வேதம் என்னைத் தடுக்குது
காதல் பெரிதா.. வேதம் பெரிதா
...
&பெ: காதல்தானே ஜெயிக்குது

: மந்திரம் சொன்னேன் வந்துவிட்டாள்.. சம்மதம் எங்கே தந்துவிட்டாள்
காலம் நேரம் பாராமல்.. பிறர் கண்கள் ஏதும் காணாமல்
காலம் நேரம் பாராமல்.. பிறர் கண்கள் ஏதும் காணாமல்
&பெ: ஆற்று மணலில் பேர்கள் எழுதி அழகு பார்ப்போம்.. அன்பே வா
அழகு பார்ப்போம்.. அன்பே வா
அழகு பார்ப்போம்.. அன்பே வா
...

#237 மலையோரம் மாங்குருவி - எங்க தம்பி

படம்: எங்க தம்பி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & மின்மினி



: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதடி
மகராணி உன் வரவை ராப்பகலா எம்மனசு தேடுதடி
மணமேளம் காதில் கேட்குதா.. மனசோடு தேனை வார்க்குதா
பெ: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதய்யா
மகராசன் உன் வரவை ராப்பகலா என் மனசு தேடுதய்யா
...

: பூங்காத்து வீசுது.. அனலைப் பூசுது
பொன் மானே பக்கத்திலே கொஞ்சம் வாம்மா
பெ: தாங்காத ஆசையில் தவிக்கும் வேளையில்
தாலாட்டுப் பாடிக் கொஞ்சம் கொஞ்சலாமா
: சேலை கட்டும் நந்தவனம் நீயா.. செம்பருத்திப் பூவுக்கு நீ தாயா
பெ: கண்ணுக்குள்ளே காதலெனும் தீயா.. சின்ன இடை தேய்வதென்ன நோயா
: கட்டியணைச்சா.. முத்தம் பதிச்சா.. நோய் முழுக்கத் தீர்ந்துவிடும் வாம்மா.. ஹோ..

பெ: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதய்யா
மகராசன் உன் வரவை ராப்பகலா என் மனசு தேடுதய்யா
மணமேளம் காதில் கேட்குதா.. மனசோடு தேனை வார்க்குதா
: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதடி
மகராணி உன் வரவை ராப்பகலா எம்மனசு தேடுதடி
...

பெ.குழு: துரு ருருருரு ருருருரு ருரு ருருருரு ருருருரு..
துரு ருருருருருரு ருரு.. துரு ருரு ருருருருருரு..
துரு ருரு ருருருருருரு..
...
பெ: கல்யாண மாப்பிள்ளை.. எனை நீ பார்க்கலை.. கண் மூடி நாணத்திலே நிக்கலாமா
: ஊரெங்கும் தோரணம்.. நடக்கும் ஊர்வலம்.. உன்னோட கன்னத்திலே வைக்கலாமா
பெ: அந்தியிலே சந்தனத்தைப் பூச.. ஆசைகளைக் கண்களிலே பேச
: சேலையிலே நீ விசிறி வீச.. காலையிலே பார்த்த கண்ணுக் கூச
பெ: என்ன சுகமோ.. எப்ப வருமோ.. என்னென்னவோ பண்ணுதய்யா ஆசை.. ஓ..

: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதடி
பெ: மகராசன் உன் வரவை ராப்பகலா என் மனசு தேடுதய்யா
: மணமேளம் காதில் கேட்குதா.. மனசோடு தேனை வார்க்குதா
பெ: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதய்யா
: மகராணி உன் வரவை ராப்பகலா எம்மனசு தேடுதடி
...

#236 மானே மரகதமே - எங்க தம்பி

படம்: எங்க தம்பி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & எஸ். ஜானகி



: மானே.. மரகதமே..
...
: மானே.. மரகதமே..
...
: மானே.. மரகதமே.. நல்ல திருநாளிது.. தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இது.. இதமான நேரம் இது.. பனி தூவும் மாலை வேளைதான்
மானே.. மரகதமே.. நல்ல திருநாளிது.. தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இது.. இதமான நேரம் இது.. பனி தூவும் மாலை வேளைதான்
மானே.. மரகதமே..
...

: நேசம் வச்சு நெஞ்சில் வச்ச பூச்செடி நீயடி
பெ: பூவும் வெச்சு.. பொட்டும் வச்ச பைங்கிளி உன் மடி
: பாசம் வச்சு பாடும் பாட்டைக் கேளடி என் கண்மணி
பெ: உள்ளம் என்னும் வீட்டிலே ஒட்டி வச்ச ஓவியம்
எண்ணம் என்னும் ஏட்டிலே அச்சடிச்ச காவியம்
: மனசுக்குள் கோயில் கட்டி மகராசி உன்ன வச்சு
பொழுதானா பூசை பண்ணி வாழுறேன்

பெ: தேனே.. திரவியமே.. நல்ல திருநாளிது.. தென்றல் தமிழ் பாடுது
: இளவேனில் காலம் இது.. இதமான நேரம் இது
பெ: பனி தூவும் மாலை வேளைதான்
: மானே.. மரகதமே..
...

பெ: ராகம் வெச்சு புன்னை வனப் பூங்குயில் கூவுது
: மோகம் வெச்சு கன்னி உந்தன் பேரைத்தான் கூறுது
பெ: தேகம் ரெண்டும் கூடுகின்ற நாளிது.. நன்னாளிது
: நட்ட நடு ராத்திரி சொப்பனங்கள் தோணுது
சொப்பனத்தில்தானடி கண்கள் உன்னைக் காணுது
பெ: அழகான தென்னஞ்சிட்டே.. இனிமேலும் உன்னை விட்டே
இருந்தாலே ஏழை நெஞ்சம் தாங்குமா

: மானே.. மரகதமே.. நல்ல திருநாளிது.. தென்றல் தமிழ் பாடுது
பெ: இளவேனில் காலம் இது.. இதமான நேரம் இது
: பனி தூவும் மாலை வேளைதான்
பெ: தேனே.. திரவியமே.. நல்ல திருநாளிது
: தென்றல் தமிழ் பாடுது

#235 கண்ணே இன்று கல்யாணக் கதை - ஆணழகன்

படம்: ஆணழகன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & ஸ்வர்ணலதா



ஆ1: கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
...
ஆ1: கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
பெ.குழு: கேளடி
ஆ1: அன்பே.. இன்று பொன்னான திருநாளடி
பெ.குழு: நாளடி
பெ: பன்னீர்ப் பூவே வா வா.. செந்தேன் வேண்டும் தா தா..
ஆ1: முத்துப் பல்லக்கிலே இந்தத் தத்தை ஆடி வர
பெ: கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
பெ.குழு: கேளடி
ஆ1: அன்பே.. இன்று பொன்னான திருநாளடி
பெ.குழு: நாளடி
...

பெ.குழு: ஓஹோ.. ஓ ஹோ.. ஓ ஹோ ஓஓ..
ஓஹோ.. ஓ ஹோ.. ஓ ஹோ ஓஓ..
...
ஆ1: கோடைக்கானல் சாரலில்..
ஆ2: ஆ.. ஆ.. ஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆ..
ஆ1: கோடைக்கானல் சாரலில் குறிஞ்சியொன்று ஆடுது
கூட வந்த காதலன் சூடிக் கொள்ளும் நாளிது
பெ: ஒவ்வொரு நாளும் காமதேவன் தேர் வரும்
பெ&பெ.குழு: ஓஓஓ ஓ
பெ: உன்னுடன் நானும் போக வேண்டும் ஊர்வலம்
பெ.குழு: ஓ.. ஓ..
ஆ1: உள்ளது யாவும் என்னைச் சேர்ந்த சீதனம்
ஆ1&பெ.குழு: ஓஓஓ ஓ
ஆ1: அள்ளிட வேண்டும் ஆவல் தீர வாலிபம்
பெ.குழு: ஓ.. ஓ..
பெ: உன்னால் சின்னச் சின்ன எண்ணமெல்லாம் அரங்கேறுமே
ஆ1: பெண்ணே.. தமிழ்ப் பண்ணே.. இன்று சொல்வாய் புது ராகமே

பெ: கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
பெ.குழு: கேளடி
பெ: அன்பே.. இன்று பொன்னான திருநாளடி
பெ.குழு: நாளடி
ஆ1: பன்னீர்ப் பூவே வா வா.. செந்தேன் வேண்டும் தா தா..
பெ: முத்துப் பல்லக்கிலே இந்தத் தத்தை ஆடி வர
ஆ1: கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
பெ.குழு: கேளடி
ஆ1: அன்பே.. இன்று
பெ: ஆ..
...

பெ.குழு: தகதத்தம் தத்தகதம் தகதத்தம்.. தகதத்தம் தத்தகதம் தகதத்தம்..
...
பெ: நீயில்லாத நாளெல்லாம்..
பெ.குழு: ஆ.. ஆ.. ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆ..
பெ: நீயில்லாத நாளெல்லாம் நெருஞ்சி முள்ளில் தூங்கினேன்
நீண்ட நேரம் ராவெல்லாம் நெருப்பு மூச்சு வாங்கினேன்
ஆ1: எத்தனை காலம் பாவம் இந்தத் தொல்லையோ
ஆ1&பெ.குழு: ஓஓஓ ஓ
ஆ1: என்னிடம் கூற தோழி யாரும் இல்லையோ
பெ.குழு: ஓ.. ஓ..
பெ: என்றென்றும் என்னை நீங்கிடாமல் வாழ்ந்திடு
பெ&பெ.குழு: ஓஓஓ ஓ
பெ: கற்பகச் சோலை காய்ந்திடாமல் நீர் விடு
பெ.குழு: ஓ.. ஓ..
ஆ1: வந்தேன்.. என்னைத் தந்தேன்.. உன்னைக் கொண்டேன்.. இது போதுமா
பெ: தொட்டால்.. விரல் பட்டால்.. நெஞ்சின் உள்ளே அலைமோதுமா

ஆ1: கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
பெ.குழு: கேளடி
ஆ1: அன்பே.. இன்று பொன்னான திருநாளடி
பெ.குழு: நாளடி
பெ: பன்னீர்ப் பூவே வா வா.. செந்தேன் வேண்டும் தா தா..
ஆ1: முத்துப் பல்லக்கிலே இந்தத் தத்தை ஆடி வர
பெ: கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
பெ.குழு: கேளடி
ஆ1: அன்பே.. இன்று பொன்னான திருநாளடி
பெ.குழு: நாளடி
...

#210 பனியில் நனையும் மலர்கள் ரெண்டு - ப்ரியா ஓ ப்ரியா

படம்: ப்ரியா ஓ ப்ரியா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா

பெ: லலல்லா.. லலல்லா.. லலல்லா.. லலல்லா..
...
பெ: லலல்லா.. லலல்லா.. லலல்லா.. லலல்லா..
: ம்ஹும்.. ம்ஹும்ஹும்ஹும்.. ஆஹா.. ஆஹஹஹா..
லலலா.. லலலா.. லா லா..
...
: பனியில் நனையும் மலர்கள் ரெண்டு
புதிதாய்க் கவிதை எழுதும் இன்று
பெ: மழைத் தூறலிலும் மலைச் சாரலிலும்
குளிர் கொண்டது மலர்ச் செண்டு
பனியில் நனையும் மலர்கள் ரெண்டு
: புதிதாய்க் கவிதை எழுதும் இன்று
...

: கண்ணோடு நீந்திடும் கலைவண்ணமே
கண்மூடும் பொழுதிலும் உன் எண்ணமே
பெ: இளவேனிற்காலமும் பிறந்தது மெல்ல
பூந்தென்றல் காதோடு உன் பெயர் சொல்ல
: விதை மீது ஒரு நாள் வான் மழைத்துளி
விழும்போது மலரும் சிறு பூச்செடி
பெ: ஒரு நாள் திருநாள் நாளை வரலாம்
கேட்கும் எல்லாம் கண்ணன் பெறலாம்

: பனியில் நனையும் மலர்கள் ரெண்டு
புதிதாய்க் கவிதை எழுதும் இன்று
...

பெ: நீயின்றி வாழ முடியாதய்யா
நான் தேடும் பொழுதிங்கு விடியாதய்யா
: நீ வேறு நான் வேறு இனியில்லையே
நான் தூங்க வேறொரு மடியில்லையே
பெ: நாள்தோறும் வந்திங்கு இளைப்பாறு
நீராட நானொரு தேனாறு
: தென்றல் நாளும் தீண்டும் பூவே
தரை மேல் இறங்கி நடக்கும் நிலவே

பெ: பனியில் நனையும் மலர்கள் ரெண்டு
புதிதாய்க் கவிதை எழுதும் இன்று
: மழைத் தூறலிலும் மலைச் சாரலிலும்
குளிர் கொண்டது மலர்ச் செண்டு
: லலலா..       பெ : லலலா..
: லலலா..       பெ : லலலா..
: லலலா..       பெ : லலலா..
: லலலா..       பெ : லலலா..
: லலலா..       பெ : லலலா..
: லலலா..       பெ : லலலா..
: லலலா..       பெ : லலலா..
: லலலா..       பெ : லலலா..
...

#187 ஒரு மந்தாரப்பூ வந்தா - சின்ன ஜமீன்

படம்: சின்ன ஜமீன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா


: ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா.. ஹோ..
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
பெ: ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா.. ஹோ..
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
: மலையோரம் மாந்தோப்பு.. மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும் சாயங்கால வேளையில்
பெ: ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா.. ஹோ..
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
...

பெ: நித்தம் நித்தம் நான் குளிக்கும் மஞ்சளுக்கு
ஒன்ன விட்டா யாருமில்ல காவலுக்கு
: நெஞ்சுக்குள்ள உன்னை வச்சேன் பத்திரமா
நான் ரசிக்கத் தீட்டி வச்சேன் சித்திரமா
பெ: உன்னால ராத்திரி தூக்கம் கெட்டுப் போவுது
: ஒத்தையில தூங்குனா என் உடம்பு நோவுது
பெ: ஒன்ன விட்டு அஞ்சு நிமிஷம் என்னால் வாழ ஆவாது

: ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா.. ஹோ..
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
பெ: மலையோரம் மாந்தோப்பு.. மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும் சாயங்கால வேளையில்
: ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா.. ஹோ..
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
...

: வெத்தலைய பாக்கு வச்சு நான் கொடுப்பேன்
நீ சுவைச்சு மிச்சம் மீதி நான் எடுப்பேன்
பெ: செம்பெடுத்துப் பால் நிரப்பி நான் கொடுப்பேன்
நீ குடிச்ச மிச்சம் மீதி நான் குடிப்பேன்ன்
: ஒண்ணாகச் சேர்ந்துதான் சந்திரனைப் பார்க்கணும்
பெ: உண்டான ஏக்கத்தை ரெண்டு பேரும் தீர்க்கணும்
: நள்ளிரவில் நாம கலந்தா கோழி கூவக் கூடாது

பெ: ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா.. ஹோ..
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
: மலையோரம் மாந்தோப்பு.. மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும் சாயங்கால வேளையில்
பெ: ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா.. ஹோ..
: அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
...

#174 மணியே.. மணிக்குயிலே - நாடோடித் தென்றல்

படம்: நாடோடித் தென்றல்
இசை: இளையராஜா
எழுதியவர்: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, மனோ & எஸ்.ஜானகி


ஆ1: மணியே.. மணிக்குயிலே.. மாலையிளம் கதிரழகே
கொடியே.. கொடி மலரே.. கொடியிடையின் மணியழகே.. ihikhik
...

ஆ2: மணியே.. மணிக்குயிலே.. மாலையிளங் கதிரழகே
கொடியே.. கொடி மலரே.. கொடியிடையின் நடையழகே
தொட்ட இடம் பூ மணக்கும்.. துளிர்க்கரமோ தொட இனிக்கும்
பூமரப் பாவை நீயடி.. இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி
பெ: ஒஒ ஓஓ ஓஓ ஓ.. மணியே.. மணிக்குயிலே.. மாலையிளங் கதிரழகே
ஆ2: கொடியே.. கொடி மலரே.. கொடியிடையின் நடையழகே
...

ஆ2: பொன்னில் வடித்த சிலையே.. பிரம்மன் படைத்தான் உனையே
வண்ண மயில் போல வந்த பாவையே..
பெ: எண்ண இனிக்கும் நிலையே.. இன்பம் கொடுக்கும் கலையே
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே..
ஆ2: கண்ணிமையில் தூண்டிலிட்டு காதல்தனைத் தூண்டிவிட்டு
எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் ஏந்திழையே
பெ: பெண்ணிவளை ஆதரித்து பேசித் தொட்டுக் காதலித்து
இன்பம் கண்ட காரணத்தால் தூங்கலியே
ஆ2: சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன்
துடியிடையில் பாசம் வைத்தேன்
பூமரப் பாவை நீயடி.. இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி

பெ: ஒஒ ஓஓ ஓஓ ஓ.. மணியே.. மணிக்குயிலே.. மாலையிளங் கதிரழகே
ஆ2: கொடியே.. கொடி மலரே.. கொடியிடையின் நடையழகே
பெ: தொட்ட இடம் பூ மணக்கும்.. துளிர்க்கரமோ தொட இனிக்கும்
ஆ2: பூமரப் பாவை நீயடி.. இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி
...

பெ: ஆ.. ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ..
ஆஆ ஆஆஆ ஆ..
ஆஆஆ ஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ.. ஆ..
...

பெ: கண் இமைகளை வருத்தி.. கனவுகளைத் துரத்தி
நின்மனதினால் முடித்த மூக்குத்தி
ஆ2: என் உயிரிலே ஒருத்தி.. கண்டபடி எனைத் துரத்தி
அம்மனவள் வாங்கிக் கொண்ட மூக்கித்தி
பெ: கோடி மணி ஓசை நெஞ்சில் கூடி வந்துதான் ஒலிக்க
ஓடி வந்து கேட்க வரும் தேவதைகள்
ஆ2: சூட மலர் மாலை கொண்டு.. தூபமிட்டு.. தூண்டிவிட்டு
கூடவிட்டு வாழ்த்த வரும் வானவர்கள்
பெ: அந்தி வரும் நேரமம்மா.. ஆசை விளக்கேற்றுதம்மா
ஆ2: பூமரப் பாவை நீயடி.. இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி

பெ: ஒஒ ஓஓ ஓஓ ஓ.. மணியே.. மணிக்குயிலே.. மாலையிளங் கதிரழகே
மணியே.. மணிக்குயிலே.. மாலையிளங் கதிரழகே
தொட்ட இடம் பூ மணக்கும்.. துளிர்க்கரமோ தொட இனிக்கும்
ஆ2: பூமரப் பாவை நீயடி.. இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி
பெ: ஒஒ ஓஓ ஓஓ ஓ.. நாநந நாந நாநநா..
ஒஒ ஓஓ ஓஓ ஓ.. நாநந நாந நாநநா..
...

#163 நினைத்தது யாரோ நீதானே - பாட்டுக்கு ஒரு தலைவன்

படம்: பாட்டுக்கு ஒரு தலைவன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & ஜிக்கி


: நினைத்தது யாரோ.. நீதானே.. தினம் உன்னைப் பாட நான்தானே
நினைத்தது யாரோ.. நீதானே.. தினம் உன்னைப் பாட நான்தானே
நீதானே என் கோயில்.. உன் நாதம் என் நாவில்
ஊர்வலம் போவோம் பூந்தேரில்
பெ: நினைத்தது யாரோ.. நீதானே.. தினம் உன்னைப் பாட நான்தானே
...

: மனதில் ஒன்று விழுந்ததம்மா.. விழுந்தது பூவாய் எழுந்ததம்மா
கனவில் ஒன்று தெரிந்ததம்மா.. கைகளில் வந்தே புரிந்ததம்மா
நானறியாத உலகினைப் பார்த்தேன்.. நான் தெரியாத உறவினில் சேர்ந்தேன்
எனக்கோர் கீதை உன் மனமே.. படிப்பேன் நானும் தினம் தினமே
பரவசமானேன் அன்பே..

பெ: நினைத்தது யாரோ.. நீதானே.. தினம் உன்னைப் பாட நான்தானே
...

பெ: பூவெடுத்தேன்.. நான் தொடுத்தேன்.. பூஜையின் நேரம் நான் கொடுத்தேன்
காலமெல்லாம் காத்திருப்பேன்.. கண்ணனைத் தேடி சேர்ந்திருப்பேன்
பூவிழி மூட முடியவுமில்லை.. மூடிய போது விடியவுமில்லை
கடலைத் தேடும் காவிரி போல் கலந்திட வேண்டும் உன் மடி மேல்
இது புது சொந்தம் அன்பே..

: நினைத்தது யாரோ.. நீதானே.. தினம் உன்னைப் பாட நான்தானே
நீதானே என் கோயில்.. உன் நாதம் என் நாவில்
ஊர்வலம் போவோம் பூந்தேரில்
பெ: நினைத்தது யாரோ.. நீதானே.. தினம் உன்னைப் பாட நான்தானே
...

#157 ஓம் நமஹா - இதயத்தை திருடாதே

படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: மனோ & எஸ்.ஜானகி

: ம்.. ம் ம்..
ஓம் நமஹா.. உருகும் உயிருக்கு
ஓம் நமஹா.. உயிரின் உணர்வுக்கு ஓம்..
பெ: ஓம் நமஹா.. உணர்வின் உறவுக்கு
ஓம் நமஹா.. உறவின் உதவிக்கு ஓம்..
: வான் வழங்கும் அமுதக் கலசம்
வாய் வழியே ததும்பித் ததும்பி வழியுதோ.. ஓஓஓ ஓஓஓ..
பெ: தேன் பொங்கும் தெய்வ வடிவம்
தோள் தழுவித் தலைவன் மடியில் விழுந்ததோ
...

: மூங்கிலில் காற்று நுழைந்து மோகனம் பாடுதா
பெ: நால்வகை நாணம் மறந்து நாடகம் ஆடுதா
: ஆயிரம் சூரியன் நாடியில் ஏறுதா
பெ: ஆதியும் அந்தமும் வேர்வைகள் ஊறுதா
: நூலாடை விலகி விலகி.. நீரோடை பெருகி வடியும் வேளை
பெ: முத்தங்கள் வைத்ததும் மூன்று உலகை மறந்த நெஞ்சுக்கு ஓம்..
...

பெ: செவ்விதழ் சேரும்போது ஜீவன்கள் சிலிர்த்தது
: ஒவ்வொரு ஆசையாக உள்ளத்தில் துளிர்த்தது
பெ: மெல்லிய மேனியும் சில்லென ஆனது
: வெட்கமும் சீக்கிரம் விடைபெற்று போனது
பெ: ஏடென்று இடையும் இருக்க.. நூலொன்று இதயம் எழுதாதோ
: இளமையின் இலக்கணம் எடுத்துச் சொல்லிய இளைய கன்னிக்கு
&பெ: ஓம்..

பெ: நமஹா.. உருகும் உயிருக்கு
ஓம் நமஹா.. உயிரின் உணர்வுக்கு ஓம்..
: ஓம் நமஹா.. உணர்வின் உறவுக்கு
ஓம் நமஹா.. உறவின் உதவிக்கு ஓம்..
பெ: வான் வழங்கும் அமுதக் கலசம்
வாய் வழியே ததும்பித் ததும்பி வழியுதோ.. ஓஓஓ ஓஓஓ..
: தேன் பொங்கும் தெய்வ வடிவம்
தோள் தழுவித் தலைவன் மடியில் விழுந்ததோ
...

#156 காட்டுக்குள்ள பாட்டுச் சொல்லும் - இதயத்தை திருடாதே

படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: மனோ & சித்ரா

பெ1: ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ..
காட்டுக்குள்ள பாட்டுச் சொல்லும் கன்னிப் பூவும் நான்தானோ
கிட்ட வந்து கொஞ்சச் சொல்லும் சின்னப் பொண்ணு நான்தானோ
நிழலாய்த்தான் ஓட.. நானோ உன் கூட
என் ஊர் என்ன
பெ2: என்ன
பெ1: என் பேர் என்ன
பெ2: என்ன
பெ1: நாந்தான் யாரு
பெ2: யாரு
பெ1: என் வழி யாரு
பெ2:
பெ1: ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ..
...

பெ1: எந்நாளும் ஆசைகள் எனை விடுமோ
நீ தழுவ நான் வரவோ
இந்நாளில் சூடாகும் என் மனமும்
கண் விழி மேல் நீயில்லையோ
மோகினி பிசாசு என் இனந்தான்
சாத்தானின் பேய் கூட என் நிழல்தான்
மோகினி பிசாசு என் இனந்தான்
சாத்தானின் பேய் கூட என் நிழல்தான்
பருவத்துணை மயக்கியுன்னை பாய் போட நீ வாடா

பெ1: காட்டுக்குள்ள பாட்டுச் சொல்லும் கன்னிப் பூவும் நான்தானோ
: பூதப் பேத பிசாச வேதாள
பேயின் ஜம்பம் ஜடம்பம்பம்
காட்டுக்குள்ளே பாட்டுச் சொல்லும் கன்னிப் பூவும் நீதானோ
கிட்ட வந்து கொஞ்சச் சொல்லும் சின்னப் பொண்ணு நீதானோ
நிழலாய்த்தான் ஓட.. நானோ உன் கூட
என் சபலம் வருதா.. நீயும் காட்டுக்குப் புதிதா
நீ மயங்கும் பொழுதா.. நானும் புடிச்சிக்கத் தோதா
ஆஆஆஆ ஆஆஆ.. ஓஓஓஓ.. ஓஓஓ..
...

: ராத்திரி நேரப் பூஜைகள் எல்லாம் இப்போ.. இனிமேல்தான்
அருகினில் வருவேண்டி.. ஆசையில் தொடுவேண்டி
குண்டலி ஏற சொக்குர பூஜை இப்போ.. இனிமேல்தான்
சட்டுன்னு போடத்தான் சுள்ளுன்னு ஏறாதா
நில்லடி மானே.. போக்கிரிப் பெண்ணே.. பெண் பேய் உனை பார்த்தா
நாளொரு மோகம் ஏறிடும் கண்ணே.. அதுதான் அடங்காதா
நில்லடி மானே.. போக்கிரிப் பெண்ணே.. பெண் பேய் உனை பார்த்தா
நாளொரு மோகம் ஏறிடும் கண்ணே.. அதுதான் அடங்காதா
அடியாத்தி பட் பட் பட் பட்.. விலகாதே.. ஜட் ஜட் ஜட் பட்..
ஓ பெண்ணே.. மயக்கங்கள் எதுக்கு.. நான் கூட..

: காட்டுக்குள்ளே பாட்டுச் சொல்லும் கன்னிப் பூவும் நீதானோ
கிட்ட வந்து கொஞ்சச் சொல்லும் சின்னப் பொண்ணு நீதானோ
நிழலாய்த்தான் ஓட.. ட.. ட.. ட.. நானோ உன் கூட
என் சபலம் வருதா.. நீயும் காட்டுக்குப் புதிதா
நீ மயங்கும் பொழுதா.. நானும் புடிச்சிக்கத் தோதா
ஆஆஆஆ ஆஆஆ.. ஓஓஓஓ.. ஓஓஓ..
காட்டுக்குள்ளே பாட்டுச் சொல்லும் கன்னிப் பூவும் நீதானோ
கிட்ட வந்து கொஞ்சச் சொல்லும் சின்னப் பொண்ணு நீதானோ
...

#155 காவியம் பாடவா தென்றலே - இதயத்தை திருடாதே

படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: மனோ

காவியம் பாடவா தென்றலே.. புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ.. புரியாத புதிர்தான் எதிர்காலமோ
பாடும் நீலப் பூங்குயில் மௌனமான வேளையில்
காவியம் பாடவா தென்றலே.. காவியம் பாடவா தென்றலே
...

விளைந்ததோர் வசந்தமே.. புதுச்சுடர் பொலிந்திட
மனத்திலோர் நிராசை ஏன்.. இருட்டிலே மயங்கிட
வாழ்கின்ற நாளிலே சோகங்கள் என்பதை
கண்ணீரில் தீட்டினேன்.. கேளுங்கள் என் கதை
கலைந்து போகும் கானல் நீரிது

காவியம் பாடவா தென்றலே.. புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ..
...

புலர்ந்ததோர் பொழுதிதுவோ.. புள்ளினத்தின் மகோத்சவம்
இவை மொழி இசை தரும் சுரங்களின் மனோகரம்
புதுப் பிரபஞ்சமே மலர்ந்த நேரமே
அம்மாடி சொர்க்கந்தான் முன்னாடி வந்ததோ
கசந்து போன காட்சியில்லையே

காவியம் பாடவா தென்றலே.. புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ.. புரியாத புதிர்தான் எதிர்காலமோ
பாடும் நீலப் பூங்குயில் மௌனமான வேளையில்
காவியம் பாடவா தென்றலே.. காவியம் பாடவா தென்றலே
...

#154 விடிய விடிய நடனம் - இதயத்தை திருடாதே

படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: மனோ

விடிய விடிய நடனம்.. சந்தோஷம் விழியில் வழியும் தருணம்
ஒன்றான இளைய கரங்கள் எழுதும் மண் மேலே புது யுகம்
பிறந்து பிறந்து எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும்
மீண்டும்தான் புதிய புதிய ஜனனம்.. பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம்.. நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்.. ரம்பம்பம்பம்..
விடிய விடிய நடனம்.. சந்தோஷம் விழியில் வழியும் தருணம்
ஒன்றான இளைய கரங்கள் எழுதும் மண் மேலே புது யுகம்
பிறந்து பிறந்து எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும்
மீண்டும்தான் புதிய புதிய ஜனனம்.. பயமென்னடா யமனிடம்
...

காலங்கள் உதயமாகட்டும்.. கவலைகள் விலகி ஓடட்டும்
காட்டாறு நாமல்லவோ.. ஹேஹே..
வா மனிதா உலகை ஆளலாம்.. வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்
ராஜாதி ராஜாக்கள் போல்..
ஏனென்று கேள்வி கேட்பவன் யாரும் இல்லை
எங்கேயும் கால்கள் போகலாம்.. ஏது எல்லை
கொண்டாட்டம் கும்மாளம்தானே.. தப்பாத தாளங்கள் நாம் போட
தக தகதிமி தகஜனு

விடிய விடிய நடனம்.. சந்தோஷம் விழியில் வழியும் தருணம்
ஒன்றான இளைய கரங்கள் எழுதும் மண் மேலே புது யுகம்
பிறந்து பிறந்து எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும்
மீண்டும்தான் புதிய புதிய ஜனனம்.. பயமென்னடா யமனிடம்
...

பாடுங்கள் புதிய கீர்த்தனம்.. எழுதுங்கள் புதிய சாசனம்
மாறட்டும் சமுதாயமே.. ஹோஹோ..
ஆடுங்கள் புதிய தாண்டவம்.. அழியட்டும் பழைய தத்துவம்
அச்சங்கள் நமக்கில்லை
ஓர் நாளும் ஓய்வதில்லையே நம் போராட்டம்
ஓர் நாளும் சாய்வதில்லையே நம் தேரோட்டம்
ஆரம்பம் ஆனந்த கீதம்.. தப்பாத தாளங்கள் நாம் போட
தக தகதிமி தகஜனு

விடிய விடிய நடனம்.. சந்தோஷம் விழியில் வழியும் தருணம்
ஒன்றான இளைய கரங்கள் எழுதும் மண் மேலே புது யுகம்
பிறந்து பிறந்து எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும்
மீண்டும்தான் புதிய புதிய ஜனனம்.. பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம்.. நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்.. ரம்பம்பம்பம்..
விடிய விடிய நடனம்.. சந்தோஷம் விழியில் வழியும் தருணம்
ஒன்றான இளைய கரங்கள் எழுதும் மண் மேலே புது யுகம்
தகிட தகிட தகதிமி.. தகதிமி தக.. தகிட தகிட தகதிமி.. தகதிமி தக..
தகிட தகிட தகதிமி.. தகதிமி தக.. தகிட தாம் தாம் தாம் தாம் தாம்..
...

#152 ஓ பாபா லாலி - இதயத்தை திருடாதே

படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: மனோ

: ஓ பாபா லாலி..
பெ.குழு: ஆ..
: கண்மணி லாலி..
பெ.குழு: ஆ..
: பொன்மணி லாலி
பெ.குழு: ஆ..
: பாடினேன் கேளடி.. ஓ பாபா லாலி..
பெ.குழு: ஆ..
: கண்மணி லாலி..
பெ.குழு: ஆ..
: பொன்மணி லாலி
பெ.குழு: ஆ..
: பாடினேன்.. ஓ பாபா லாலி..
...

: நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட
காதலன் குழந்தைதான் காதலி
ஏன் செவ்விழி கலங்குது பூந்தென்றலில்
கொதித்ததா குளிர்ந்ததா கூறடி
தலை சாய்த்திட மடிப் பாய் மேல் திருமேனிக்கு சுகமோ
எந்த நாளிலும் வாடாத இளம் தாமரை முகமோ
இதைக் காப்பது என்றும் பார்ப்பது இந்தத் தாய் மனமே

: ஓ பாபா லாலி..
பெ.குழு: ஆ..
: கண்மணி லாலி..
பெ.குழு: ஆ..
: பொன்மணி லாலி
பெ.குழு: ஆ..
: பாடினேன் கேளடி.. ஓ பாபா லாலி..
...

: ஓ.. மேகமே.. ஓரமாய் நீ ஒதுங்கிடு
இரைச்சலோ இடிகளோ வேண்டுமோ
ஓ.. குயிலியே பாடி வா என் பாடலை
நல்லிசை இதயத்தின் நாதமோ
எழும் சந்தமும் இனிதாக.. அதன் ஓசைகள் சுகமோ
இந்த நாளொரு அலைபாய.. வரும் ஆசைகள் கனவோ
எந்த ஆசையும் நிறைவேறிட நல்ல நாள் வருமே

: ஓ பாபா லாலி..
பெ.குழு: ஆ..
: கண்மணி லாலி..
பெ.குழு: ஆ..
: பொன்மணி லாலி
பெ.குழு: ஆ..
: பாடினேன் கேளடி.. ஓ பாபா லாலி..
பெ.குழு: ஆ..
: கண்மணி லாலி..
பெ.குழு: ஆ..
: பொன்மணி லாலி
பெ.குழு: ஆ..
: பாடினேன்.. ஓ பாபா லாலி..
பெ.குழு: ஆ..
...

#145 காதல் ராகமும் கனித் தமிழும் - இந்திரன் சந்திரன்

படம்: இந்திரன் சந்திரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா

: தும்தும்தும்ச தும்தும்தும் சகுச..
தும்தும்தும்ச தும்தும்தும் சகுச..
காதல் ராகமும் கனித் தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ
பெ: ஆசைத் தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ
: ஓயாமல் என் நெஞ்சில் உன்னன்பே
பெ: ஆத்தாடி.. கண்பார்வை என் மீதா.. உனை நெருங்கிட
காதல் ராகமும் கனித் தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ
: ஆசைத் தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ
...

: தினமும் தினமும் தவிப்பதோ.. சிறிது உறங்க மடி கொடு
தழுவத் தழுவத் தடுப்பதோ.. அழகு முழுதும் அளந்திடு
பெ: மருவி மருவி அணைப்பதோ.. வயதும் மனதும் துடிப்பதேன்
இதுவும் அதுவும் கொடுப்பதோ.. சபலம் உனக்குப் பிறப்பதேன்
: தென்றலும் தீண்டினாலே புஷ்பமே நோகுமா
பெ: காதல் ஓர் போதையாகும்.. கன்னிப் பூவும் தாங்குமா
: அள்ளினால்.. கிள்ளினால்.. என்னடி.. ஏந்தினால் வாடுமோ மடல்

பெ: ஓஓஓஓஓஓ.. காதல் ராகமும் கனித் தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ
: ஆசைத் தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ
பெ: ஓயாமல் என் நெஞ்சில் உன்னன்பே
: ஆத்தாடி.. கண்பார்வை என் மீதா.. உனை நெருங்கிட
காதல் ராகமும் கனித் தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ
பெ: ஆசைத் தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ
...

பெ: அமுத மழையைப் பொழியவே சிவந்த உதடு அழைக்குதே
வரவும் தொடவும் பருவமே.. விருந்து வழங்கும் அணைப்பிலே
: மனமும் உடம்பும் கனியுமோ.. இரவு முழுதும் விரல் தொட
மதுர மதுர சுவைகளோ பருகும்பொழுது இனித்திட
பெ: தேனிலே ஊறுமிந்தப் பூமடல் போதுமா
: தென்னையின் கள்ளும் இந்தப் பூவுதட்டில் ஊறுமா
பெ: மெல்ல நீ கொண்டு போ.. மன்னவா.. பெண்மகள் மேனி ஓர் மலர்

: ஓஓஓஓஓஓ.. காதல் ராகமும் கனித் தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ
பெ: ஆசைத் தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ
: ஓயாமல் என் நெஞ்சில் உன்னன்பே
பெ: ஆத்தாடி.. கண்பார்வை என் மீதா.. உனை நெருங்கிட
காதல் ராகமும் கனித் தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ
: ஆசைத் தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ
...

#80 நூறு வருஷம் இந்த - பணக்காரன்

படம்: பணக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ

நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்
பேரு விளங்க இங்கு வாழணும்
சோலை வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடணும்
ஒண்ணுக்கொண்ணு பக்கத்தில பொண்ணு புள்ள நிக்கையில
கண்ணு படும் மொத்தத்துல
கட்டழக அம்மாடி என்ன சொல்ல
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்
பேரு விளங்க இங்கு வாழணும்
சோலை வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடணும்.. ஹா..
...

உசிலை மணியாட்டம் உடம்பத்தான் பாரு
தெருவில் அசைஞ்சாடும் திருவாரூர் தேரு
ஓமக்குச்சி போல் புடிச்சாரு தாரம்
தாவி அணைச்சாக்கா தாங்காது பாரம்
இவரு ஏழு அடி.. நடக்கும் ஏணியடி
நிலவை நின்னுக்கிட்டே தொட்டிடுவார் பாரு
மனைவி குள்ள மணி.. உயரம் மூணு அடி
இரண்டும் இணைஞ்சிருந்தா கேலி பண்ணும் ஊரு
ரெட்டை மாட்டு வண்டி வரும்போது
நெட்டை குட்டை என்றும் இணையாது
இந்த ஒட்டகந்தான் கட்டிக்கிட குட்டை வாத்தைப் புடிச்சார்

நூறு வருஷம்.. ஹே ஹே ஹேய்..
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்
பேரு விளங்க இங்கு வாழணும்
ஹே.. ஒண்ணுக்கொண்ணு பக்கத்தில பொண்ணு புள்ள நிக்கையில
கண்ணு படும் மொத்தத்துல
கட்டழக அம்மாடி என்ன சொல்ல
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்
பேரு விளங்க இங்கு வாழணும்.. ஹே..
...

புருஷன் பொஞ்சாதி பொருத்தந்தான் வேணும்
பொருத்தம் இல்லாட்டி வருத்தந்தான் தோணும்
அமைஞ்சா அதுபோல கல்யாணம் பண்ணு
இல்ல நீ வாழு தனியாளா நின்னு
மொதலில் யோசிக்கணும்.. பிறகு நேசிக்கணும்
மனசு ஏத்துக்கிட்டா சேத்துக்கிட்டு வாழு
ஒனக்கு தகுந்தபடி.. குணத்தில் சிறந்தபடி
இருந்தா ஊரறிய மாலை கட்டிப் போடு
சொத்து வீடு வாசல் இருந்தாலும்
ஹேய்.. சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்
அட உள்ளம் ரெண்டு ஒட்டாவிட்டால் கல்யாணந்தான் கசக்கும்

நூறு வருஷம்.. ஹேய்.. ஹேய் ஹேய்..
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்
பேரு விளங்க இங்கு வாழணும்
சோலை வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடணும்
ஒண்ணுக்கொண்ணு பக்கத்தில பொண்ணு புள்ள நிக்கையில
கண்ணு படும் மொத்தத்துல
கட்டழக அம்மாடி என்ன சொல்ல
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்
பேரு விளங்க இங்கு வாழணும்
சோலை வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடணும்.. ஹா..
...

# 71 பட்டுப் பூவே மெட்டுப் பாடு - செம்பருத்தி

படம்: செம்பருத்தி
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: மனோ & எஸ்.ஜானகி

பெ: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
மீண்டும் மீண்டும் வேண்டும்
அணை தாண்டிப் பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே.. உன்னைத்தானே
சொந்தம் நானே.. சொந்தம் நானே
: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
பட்டுப் பூவே..
...

: கைகளில் உன்னைத் தொடாமல் கண்கள் தூங்குமா
சந்தனத் தேனைத் தராமல் தாகம் நீங்குமா
பெ: காதலன் கைகள் படாமல் காதல் ஏதய்யா
சித்திரப் பூவை உன்னோடு சேர்த்துக் கொள்ளய்யா
: இதழ்களின் மேலே இதழ்களினாலே
கதைகளைத் தீட்டு.. சுகக் கொடியேற்று
பெ: மன்னவனே.. என் மன்மதனே
எனைத் தொட்டுத் தொட்டுத் தழுவு

: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
பெ: கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
: பட்டுப் பூவே..
...

பெ: மன்மத பாணம் இப்போது பாயும் நேரமே
நெஞ்சினில் நாணம் இப்போது நீங்கும் காலமே
: விண்ணுக்கு மேலே இல்லாத சொர்க்கம் தன்னையே
மண்ணுக்குள் இங்கே கண்டேனே இந்த வேளையே
பெ: மதிமொழி கேட்டு மயங்குது நெஞ்சம்
மலர் மழை தூவி அழைக்குது மஞ்சம்
: சின்னக் கிளி.. என் செல்லக் கிளி
எனைத் தொட்டுத் தொட்டுத் தழுவு

பெ: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
: மீண்டும் மீண்டும் வேண்டும்
அணை தாண்டிப் பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே.. உன்னைத்தானே
சொந்தம் நானே.. சொந்தம் நானே
பெ: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
: கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
&பெ: பட்டுப் பூவே
...

# 69 ஓர் பூமாலை - இனிய உறவு பூத்தது

படம்: இனிய உறவு பூத்தது
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா

பெ: ஆ.. ஆஆஆஆ ஆஆ ஆஆ..
ஆஆ ஆஆ ஆ.. ஆஆஆஆ ஆஆ ஆஆ..
ஆஆஆஆ ஆ..
ஆஆஆஆ ஆஹாஹா.. ஹாஹாஹா..
: ஓர் பூமாலை.. அதில் தேன் இவ்வேளை
பெ: மன்னன் மார்பில் தவழ்ந்திடும்போது
என்னை நானே நினைப்பது ஏது
ஆ: இந்த வானம்.. பூமி யாவும் மயங்கிட
ஓர் பூமாலை.. பூமாலை..
...

பெ: விழியில் ஒரு கவிதை நாடகம்
வரையுமிந்த அழகு மோகனம்
நினைவில் இந்தத் தலைவன் ஞாபகம்
நிலவுகின்ற பருவம் வாலிபம்
: பனிவிழும்
பெ: இரவுகள்
: பலப்பல
பெ: கனவுகள்
: தொட்ட இடம் யாவும் சர்க்கரையும் பாலும்
கொண்டு வரும் தேகம் என்னை வந்து கூடும்
தொட்ட இடம் யாவும் சர்க்கரையும் பாலும்
கொண்டு வரும் தேகம் என்னை வந்து கூடும்
பெ: இனி ஆதி அந்தமெங்கும்
: புது ஆசை வெள்ளம் பாயும் உறவிது

: ஓர் பூமாலை.. அதில் தேன் இவ்வேளை
...

பெ: ஆஹா.. ஆ.. ஆஆஆ ஆ..
ஆஹாஹா.. ஆஆ ஆஆஆஆ ஹா..
ஆஹாஹா.. ஆஆ ஆஆஆஆ ஆ..
ஆஹாஹா.. ஆ..
...

: மலையில் விழும் அருவி போலவே
மனதில் எழும் அலைகள் கோடியே
உனக்கும் வரும் உணர்ச்சி போலவே
எனக்கும் வரும் இனிய தோழியே
பெ: முதல் முதல்
: தொடுவது
பெ: தினம் தினம்
: வளர்வது
பெ: முத்திரைகள் போட நித்திரையும் ஓடும்
சிற்றிடையுமாட.. சித்திரமும் வாடும்
முத்திரைகள் போட நித்திரையும் ஓடும்
சிற்றிடையுமாட.. சித்திரமும் வாடும்
: சுகம் பாதிப் பாதியாகும்
பெ: ஒரு போதை வந்து சேரும் பொழுதிது

பெ: ஓர் பூமாலை.. அதில் தேன் இவ்வேளை
: மன்னன் மார்பில் தவழ்ந்திடும்போது
என்னை நானே நினைப்பது ஏது
பெ: இந்த வானம்.. பூமி யாவும் மயங்கிட
: ஓர் பூமாலை.. அதில் தேன் இவ்வேளை
...

# 66 சொந்தம் ஒன்றைத் தேடும் - என்னைப் பெத்த ராசா

படம்: என்னைப் பெத்த ராசா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா

பெ: சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லிப் பாடும் அன்னக்கிளி
...

பெ: சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லிப் பாடும் அன்னக்கிளி
இந்தக் குரல் கேட்குதா.. இன்பம் தன்னைத் தூண்டுதா
அன்பு கொள்ளக் காலம் நேரம் ஏது
அன்பு கொள்ளக் காலம் நேரம் ஏது
: சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லிப் பாடும் அன்னக்கிளி
...

: வானத்து அம்புலியை வரவழைக்க வேணுமென்று
தனியாகத் தவமிருந்து வெகுநாளும் வேண்டி நின்றேன்
வானத்து அம்புலியை வரவழைக்க வேணுமென்று
தனியாகத் தவமிருந்து வெகுநாளும் வேண்டி நின்றேன்
எந்தன் தவம்தான் பலிக்க தெய்வம் வரம் தந்ததம்மா
அம்புலியும் பூமிதன்னில் உன் உருவில் வந்ததம்மா
வீதி வழி போனால் வெள்ளி ரதம்
தரையில் நடந்தாலே தங்க ரதம்
உன்னை என்னை தெய்வம் இணைத்தது

பெ: சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லிப் பாடும் அன்னக்கிளி
...

பெ: சிறு வீணை தானெடுத்து.. விரலாலே சுதியெழுப்பி
குறுநகையாள் பாடுவதைக் குறும்புடனே கேட்டீரோ
சிறு வீணை தானெடுத்து.. விரலாலே சுதியெழுப்பி
குறுநகையாள் பாடுவதைக் குறும்புடனே கேட்டீரோ
பாடல்தனில் நீ மயங்கி பைங்கொடியே வேண்டுமென்றாய்
குரல்தனிலே நீ கிறங்கி குலக்கொடியை வேண்டி நின்றாய்
ஈசனருள் உனக்கே இருந்தது
ஏந்திழையின் மனமும் இணைந்தது
நம்மை அன்புதானே இணைத்தது

: சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லிப் பாடும் அன்னக்கிளி
இந்தக் குரல் கேட்குதா.. இன்பம் தன்னைத் தூண்டுதா
அன்பு கொள்ளக் காலம் நேரம் ஏது
அன்பு கொள்ளக் காலம் நேரம் ஏது
பெ: சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லிப் பாடும் அன்னக்கிளி
...

# 47 பாராமல் பார்த்த நெஞ்சம் - பூந்தோட்டக் காவல்காரன்

படம்: பூந்தோட்டக் காவல்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா



பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம்ம் ம்.. ம்ம்ம் ம்ம்ம்ம் ம்..
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்.. ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்..
ம்.. ம்.. ம்.. ம்..
பெ: பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
: இரு பார்வை அது பாடட்டும்.. இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
பெ: பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
...

: நித்திரை கெட்டது கண்ணே.. என் சித்திரப் பெண்ணே
பெ: முத்திரை கண்டது முன்னே.. நீ தொட்டதன் பின்னே
: நித்திரை கெட்டது கண்ணே.. என் சித்திரப் பெண்ணே
பெ: முத்திரை கண்டது முன்னே.. நீ தொட்டதன் பின்னே
: பூபாளம் கேட்டேனே.. பொன்மானைப் பார்த்தேனே
பெ: பேசாமல் நின்றேனே.. பெண்ணென்று ஆனேனே
: கட்டளையிட்டதும் பட்டதும் தொட்டதும் கற்பனையல்ல
இள வெற்றிலை என்றொரு வெற்றிலை கண்டது அற்புதமல்ல
பெ: நீ தொட்டதும் சுட்டது.. பட்டுடை விட்டது நானும் சொல்ல

: பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
பெ: இரு பார்வை அது பாடட்டும்.. இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
: பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
...

பெ.குழு: ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ ஓ.. ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓ ஓஓஓ..
ஓஓஓ ஓஓஓஓ ஓஓ.. ஓஓஓ ஓஓஓஓ ஓ..

பெ: மெல்லிய மல்லிகைப் பூவே.. புது மெல்லிசை பாடு
: வல்லியின் மெல்லிடை மேலே புது சங்கதி போடு
பெ: மெல்லிய மல்லிகைப் பூவே.. புது மெல்லிசை பாடு
: வல்லியின் மெல்லிடை மேலே புது சங்கதி போடு
பெ: பூந்தேகம் தாங்காது என் தேவன் ஏந்தாது
: ஆறாது தீராது நீ வந்து சேராது
பெ: பெண்ணிவள் மேனியில் கண்ணிமை மூடிடும் காவியம் கண்டு
நான் பண்ணிய புண்ணியம் உன்னுடன் கூடிடும் என் மனம் இன்று
: புவி மண்ணிலும் விண்ணிலும் பொன்கவி பாடிடும் தேகம் ஒன்று

பெ: பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
: இரு பார்வை அது பாடட்டும்.. இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
பெ: பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்
பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம்ம் ம்..
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்.. ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்..
ம்..
...