Showing posts with label ஸ்வர்ணலதா. Show all posts
Showing posts with label ஸ்வர்ணலதா. Show all posts

#306 நில்லாத வெண்ணிலா - ஆணழகன்

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros
படம்: ஆணழகன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & ஸ்வர்ணலதா

: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் காதலி
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் கண் வழி
நில்லாமலே நீ போவதேன்.. சொல்லாமலே நான் நோவதேன்.. ஏன்
பெ: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் வாசலில்
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் பார்வையில்
...

: மான் துள்ளும் மலையாளத்தின் விழிச் சித்திரமே.. சித்திரமே
வாழையும் இளநீரையும் கொண்ட நன்னிலமே.. நன்னிலமே
பெ: கேரளக் குயில் கூவிடும் இசை தித்தித்ததோ.. தித்தித்ததோ
ஆவணித் திருவோணத்தில் உன்னைச் சந்தித்ததோ.. சந்தித்ததோ
: பொன்னல்லவோ.. சிறு பூவல்லவோ
மெல்லத் தொடவோ.. என்னைத் தரவோ
பெ: தேனல்லோ பசும் பாலல்லோ
பக்கம் வரவோ.. நான் தரவோ
: செம்மீன்கள் துள்ளுதே.. இங்கும் அங்கும்.. கண்ணோடையில்
பெ: சந்தோஷம் பொங்குதே .. முன்னும் பின்னும்.. உன் கூடலில்
நான் சொல்லவோ.. சின்னப் பெண் அல்லவோ..

: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் காதலி
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் கண் வழி
பெ: நில்லாமலே நீ போவதேன்.. சொல்லாமலே நான் நோவதேன்.. ஏன்
: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் காதலி
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் கண் வழி
...

பெ: நீ வர எதிர்பார்த்தது இந்த நந்தவனம்.. நந்தவனம்
நீ தொட இங்கு பூத்தது இந்த செங்கமலம்.. செங்கமலம்
: காமனின் கலை காண்பது இந்த அந்தப்புரம்.. அந்தப்புரம்
பூமரக் குயில் கூவுது இங்கு சப்தஸ்வரம்.. சப்தஸ்வரம்
பெ: மஞ்சமே இந்த நெஞ்சமே
சுகம் பஞ்சமோ.. இல்லை கொஞ்சுமோ
: உள்ளமே இன்ப வெள்ளமே
உன்னை அள்ளவோ.. அள்ளிச் செல்லவோ
பெ: அன்றாடம் சேர்வது.. மன்னா.. மன்னா உன் பொன்மடி
: எந்நாளும் இன்பமே.. நீயே.. நீயே என் பைங்கிளி
ஓ.. மங்கையே.. பொங்கிடும் கங்கையே

பெ: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் வாசலில்
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் பார்வையில்
: நில்லாமலே நீ போவதேன்.. சொல்லாமலே நான் நோவதேன்.. ஏன்
பெ: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் வாசலில்
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் பார்வையில்
...

#288 ஒரு நாள் ஒரு பொழுது - அந்தி மந்தாரை

படம்: அந்தி மந்தாரை
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: ஸ்வர்ணலதா

ஒரு நா(ள்) ஒரு பொழுது உம் மூஞ்சிக் காங்காம.. உசுரு அல்லாடுதே
ஒரு நா(ள்) ஒரு பொழுது உம் மூஞ்சிக் காங்காம உசுரு அல்லாடுதே
மறு நா(ள்) வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே
காவிரி நதியும் ரெண்டாகக் கூடும்.. கொள்ளிடம் வந்து ஒண்ணாகச் சேரும்
காலத்தின் கணக்கு யார் காணக் கூடும்
ஒரு நா(ள்) ஒரு பொழுது உம் மூஞ்சி காங்காம உசுரு அல்லாடுதே
மறு நா(ள்) வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே
...

நீண்ட முடி கொஞ்சம் நிறம் மாறிப் போச்சு
சங்குக் குழியோடு குரல் மாறிப் போச்சு
நீண்ட முடி கொஞ்சம் நிறம் மாறிப் போச்சு
சங்குக் குழியோடு குரல் மாறிப் போச்சு
ஓடி வயசாச்சு.. உருமாறிப் போச்சு
சங்குக் குழியோடு குரல் மாறிப் போச்சு
ஒடி வயசாச்சு.. உருமாறிப் போச்சு
நெனப்புக மட்டும்தானே மாறாம இருக்கு

ஒரு நா(ள்) ஒரு பொழுது உம் மூஞ்சிக் காங்காம உசுரு அல்லாடுதே
மறு நா(ள்) வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே
...

என்னச் சுத்தி ஒரு கூட்டம் சிரிக்கின்ற போதும்
உன்னப் பத்தி என் உதடு ஓயாமப் பேசும்
என்னச் சுத்தி ஒரு கூட்டம் சிரிக்கின்ற போதும்
உன்னப் பத்தி என் உதடு ஓயாமப் பேசும்
காத்து மழை எதனாலும் கரையாத பாசம்
காத்து மழை எதனாலும் கரையாத பாசம்
கட்டையிலும் வேகாது கைத்தொட்ட வாசம்

ஒரு நா(ள்) ஒரு பொழுது உம் மூஞ்சிக் காங்காம உசுரு அல்லாடுதே
மறு நா(ள்) வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே
காவிரி நதியும் ரெண்டாகக் கூடும்.. கொள்ளிடம் வந்து ஒண்ணாகச் சேரும்
காலத்தின் கணக்கு யார் காணக் கூடும்
ஒரு நா(ள்) ஒரு பொழுது உம் மூஞ்சிக் காங்காம உசுரு அல்லாடுதே
மறு நா(ள்) வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே
...

#275 உன்னை எதிர்பார்த்தேன் - வனஜா கிரிஜா

படம்: வனஜா கிரிஜா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா & குழுவினர்

பெ: ஓ ஓ ஓஓ.. ஓ ஓ ஓ.. ஓ ஓ ஓஓஓ..
...
பெ: உன்னை எதிர்பார்த்தேன்
பெ.குழு: ம்.. ம்ம்..
பெ: தென்றலிடம் கேட்டேன்
பெ.குழு: ம்ம்.. ம்..
பெ: இன்னும் வரக் காணேன்
பெ.குழு: ம்.. ம்ம்..
பெ: தன்னந்தனியானேன்
பெ.குழு: ம்ம்.. ம்..
பெ: மன்னவா மன்னவா மன்னவா
பெ.குழு: ம்ம்ம் ம்..
பெ: என் மன்றத்தின் தென்றலாய் இங்கு வா
பெ.குழு: ம்ம்ம் ம்..
பெ: வெண்ணிலவிலே.. ஓ ஓ ஓ ஓ..
உன்னை எதிர்பார்த்தேன்
பெ.குழு: ம்.. ம்ம்..
பெ: தென்றலிடம் கேட்டேன்
பெ.குழு: ம்ம்.. ம்..
...

பெ.குழு: ம்ம்ம் ம்.. ம்ம்ம்ம்.. ம் ம்..
ம்ம்ம் ம்.. ம்ம்ம்ம்..
...

பெ: தேரோடும் வீதி தேவன் உந்தன்..
பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்..
பெ: தேரோடக் கண்டவுடன் துள்ளுமே
பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்..
பெ: பூவாடும் சோலை மன்னன் உந்தன்..
பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்..
பெ: தோள் மீது ஆட இன்பம் கொள்ளுமே
பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்..
பெ: பொய்கையெல்லாம் உன்னையெண்ணிக் கண்மயங்கி நின்றதென்னவோ
காதல் மணிமண்டபங்கள் உன் நினைவைத் தந்ததென்னவோ
மன்னவா மன்னவா இங்கு வா
பெ.குழு: ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்..
பெ: வெண்ணிலவிலே.. ஓ ஓ ஓ ஓ..

பெ: உன்னை எதிர்பார்த்தேன்
பெ.குழு: ம்.. ம்ம்..
பெ: தென்றலிடம் கேட்டேன்
பெ.குழு: ம்ம்.. ம்..
...

பெ.குழு: ம்ம்ம்ம் ம்ம்ம்.. ம்ம்ம்..
...
: வேய்ங்குழல் போலே கானம் ஒன்று..
பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்..
: காற்றோடு வந்ததென்ன நங்கையே
பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்..
: ஓசையின் வழியே உள்ளம் செல்ல
பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்..
: உன் தோற்றம் கண்டதென்ன மங்கையே
பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்..
: வான்மதியின் வெள்ளியலை வீசும் ஒளி உந்தன் கண்ணிலே
தேவதைகள் கொண்டு தரும் வானமுதம் உந்தன் சொல்லிலே
தென்றலே தென்றலே இங்கு வா
பெ.குழு: ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்..
: வெண்ணிலவிலே.. ஓ ஓ ஓ ஓ..

: உன்னை எதிர்பார்த்தேன்
பெ.குழு: ம்.. ம்ம்..
: தென்றலிடம் கேட்டேன்
பெ.குழு: ம்ம்.. ம்..
: இன்னும் வரக் காணேன்
பெ.குழு: ம்.. ம்ம்..
: தன்னந்தனியானேன்
பெ.குழு: ம்ம்.. ம்..
: முல்லையே முல்லையே முல்லையே
பெ.குழு: ம்ம்ம் ம்..
: நீ இல்லையேல் இன்பமே இல்லையே
பெ.குழு: ம்ம்ம் ம்..
: வெண்ணிலவிலே.. ஓ ஓ ஓ ஓ..
உன்னை எதிர்பார்த்தேன்
பெ.குழு: ம்.. ம்ம்..
: தென்றலிடம் கேட்டேன்
பெ.குழு: ம்ம்.. ம்..
...

#247 அந்தியில வானம் - சின்னவர்

படம்: சின்னவர்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & ஸ்வர்ணலதா

: அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்.. ம்.. ம்ஹும்..
பெ: சந்திரரே வாரும்.. சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்.. ம்.. ம்..
: கூடும் காவிரி.. இவதான் என் காதலி
குளிர்காயத் தேடித் தேடிக் கொஞ்சத் துடிக்கும்.. ஹோ.. ஓ..
பெ: அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்.. ம்.. ம்..
: சந்திரரே வாரும்.. சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்.. ம்.. ம்ஹும்..
...

பெ: கட்டுமரத் தோணி போலக் கட்டழகன் உங்க மேல
சாய்ஞ்சா சந்தோஷம் உண்டல்லோ
பட்டுடுத்தத் தேவையில்ல.. முத்துமணி ஆசையில்ல
பாசம் நெஞ்சோடு வந்தல்லோ
: பாலூட்டும் சங்கு.. அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது
பாய் மேல நீ போடு தூங்காத விருந்து
பெ: நாணம் உண்டல்லோ.. அதை நானும் கொண்டல்லோ
இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ.. ஹோ..

: அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்.. ம்.. ம்ஹும்..
பெ: சந்திரரே வாரும்.. சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்.. ம்.. ம்..
...

: வெள்ளியலை தாளந்தட்ட.. சொல்லியொரு மேளங்கொட்ட
வேளை வந்தாச்சு கண்ணம்மா.. ஆ ஆ ஆ..
மல்லியப்பூ மாலை கட்ட.. மாரியிட வேளை கிட்ட
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா.. ஆ.. ஆஆஆ..
பெ: கடலோரம் காத்து.. ஒரு கவிபாடும் பார்த்து
காணாம நூலானேன் ஆளான நாந்தான்
தோளோடு நான் சேர ஊராதோ தேன்தான்
: தேகம் ரெண்டல்லோ.. இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகமொன்று ஜீவனொன்று கூடும் இன்றல்லோ

பெ: அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்.. ம்.. ம்..
: சந்திரரே வாரும்.. சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்.. ம்.. ம்ஹும்..
பெ: கூடும் காவிரி.. இவதான் உன் காதலி
குளிர்காயத் தேடித் தேடிக் கொஞ்சத் துடிக்கும்.. ஹோ.. ஓ..

: அந்தியில வானம்
பெ: ஹா..
: தந்தனத்தோம் போடும்
பெ: ஆஹா..
: அலையோட சிந்து படிக்கும்.. ம்.. ம்ஹும்..
பெ: சந்திரரே வாரும்
: ஹோய்..
பெ: சுந்தரியப் பாரும்
: ஆஹா..
பெ: சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்.. ம்.. ம்..
...

#235 கண்ணே இன்று கல்யாணக் கதை - ஆணழகன்

படம்: ஆணழகன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & ஸ்வர்ணலதா

ஆ1: கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
...
ஆ1: கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
பெ.குழு: கேளடி
ஆ1: அன்பே.. இன்று பொன்னான திருநாளடி
பெ.குழு: நாளடி
பெ: பன்னீர்ப் பூவே வா வா.. செந்தேன் வேண்டும் தா தா..
ஆ1: முத்துப் பல்லக்கிலே இந்தத் தத்தை ஆடி வர
பெ: கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
பெ.குழு: கேளடி
ஆ1: அன்பே.. இன்று பொன்னான திருநாளடி
பெ.குழு: நாளடி
...

பெ.குழு: ஓஹோ.. ஓ ஹோ.. ஓ ஹோ ஓஓ..
ஓஹோ.. ஓ ஹோ.. ஓ ஹோ ஓஓ..
...
ஆ1: கோடைக்கானல் சாரலில்..
ஆ2: ஆ.. ஆ.. ஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆ..
ஆ1: கோடைக்கானல் சாரலில் குறிஞ்சியொன்று ஆடுது
கூட வந்த காதலன் சூடிக் கொள்ளும் நாளிது
பெ: ஒவ்வொரு நாளும் காமதேவன் தேர் வரும்
பெ&பெ.குழு: ஓஓஓ ஓ
பெ: உன்னுடன் நானும் போக வேண்டும் ஊர்வலம்
பெ.குழு: ஓ.. ஓ..
ஆ1: உள்ளது யாவும் என்னைச் சேர்ந்த சீதனம்
ஆ1&பெ.குழு: ஓஓஓ ஓ
ஆ1: அள்ளிட வேண்டும் ஆவல் தீர வாலிபம்
பெ.குழு: ஓ.. ஓ..
பெ: உன்னால் சின்னச் சின்ன எண்ணமெல்லாம் அரங்கேறுமே
ஆ1: பெண்ணே.. தமிழ்ப் பண்ணே.. இன்று சொல்வாய் புது ராகமே

பெ: கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
பெ.குழு: கேளடி
பெ: அன்பே.. இன்று பொன்னான திருநாளடி
பெ.குழு: நாளடி
ஆ1: பன்னீர்ப் பூவே வா வா.. செந்தேன் வேண்டும் தா தா..
பெ: முத்துப் பல்லக்கிலே இந்தத் தத்தை ஆடி வர
ஆ1: கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
பெ.குழு: கேளடி
ஆ1: அன்பே.. இன்று
பெ: ஆ..
...

பெ.குழு: தகதத்தம் தத்தகதம் தகதத்தம்.. தகதத்தம் தத்தகதம் தகதத்தம்..
...
பெ: நீயில்லாத நாளெல்லாம்..
பெ.குழு: ஆ.. ஆ.. ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆ..
பெ: நீயில்லாத நாளெல்லாம் நெருஞ்சி முள்ளில் தூங்கினேன்
நீண்ட நேரம் ராவெல்லாம் நெருப்பு மூச்சு வாங்கினேன்
ஆ1: எத்தனை காலம் பாவம் இந்தத் தொல்லையோ
ஆ1&பெ.குழு: ஓஓஓ ஓ
ஆ1: என்னிடம் கூற தோழி யாரும் இல்லையோ
பெ.குழு: ஓ.. ஓ..
பெ: என்றென்றும் என்னை நீங்கிடாமல் வாழ்ந்திடு
பெ&பெ.குழு: ஓஓஓ ஓ
பெ: கற்பகச் சோலை காய்ந்திடாமல் நீர் விடு
பெ.குழு: ஓ.. ஓ..
ஆ1: வந்தேன்.. என்னைத் தந்தேன்.. உன்னைக் கொண்டேன்.. இது போதுமா
பெ: தொட்டால்.. விரல் பட்டால்.. நெஞ்சின் உள்ளே அலைமோதுமா

ஆ1: கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
பெ.குழு: கேளடி
ஆ1: அன்பே.. இன்று பொன்னான திருநாளடி
பெ.குழு: நாளடி
பெ: பன்னீர்ப் பூவே வா வா.. செந்தேன் வேண்டும் தா தா..
ஆ1: முத்துப் பல்லக்கிலே இந்தத் தத்தை ஆடி வர
பெ: கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
பெ.குழு: கேளடி
ஆ1: அன்பே.. இன்று பொன்னான திருநாளடி
பெ.குழு: நாளடி
...

#234 மானே நானே சரணம் - செந்தூர பாண்டி

படம்: செந்தூர பாண்டி
இசை: தேவா
பாடியவர்கள்: எஸ்.என்.சுரேந்தர் & ஸ்வர்ணலதா

: மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
பெ: ஊர் தூங்கும் ராத்திரி நேரம்.. இள மனதில் எத்தனை தாகம்
ஊர் தூங்கும் ராத்திரி நேரம்.. இள மனதில் எத்தனை தாகம்
: நீராடு இளமையிலே.. சேவல் கூவும் வரையினிலே
பெ: நானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
...

: ஆடை நனைந்திருக்க.. ஆசை தீயை மூட்டாதா
ஆத்தாடி.. காளைக் கன்று வாலை மெல்ல ஆட்டாதா
பெ: தேகம் தழுவியொரு யாகம் செய்யக் கூடாதா
காதோரம் கன்னிப் பூவும் காதல் வேதம் ஓதாதா
: மின்சார மின்னல் ஒன்று மெல்ல மெல்லப் பாய
பெ: மீட்டாத வீணை உந்தன் மார்பின் மீது சாய
: புது ராகம் நரம்புகளில் உருவாகும் நொடிப் பொழுதில்

பெ: நானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
: மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
...

: பாதக் கொலுசு கொஞ்சும் பாதம் என்ன பூச்செண்டா
நான் தீண்டும் அங்கம் எல்லாம் தித்திக்கின்ற கற்கண்டா
பெ: பூவில் குடியிருக்க நீயும் என்ன பொன்வண்டா
நான்தானே உன்னையெண்ணி சிந்திக்காத நாளுண்டா
: ஆகாயம் பொத்துக் கொண்டு தண்ணீர் விடும்போது
பெ: ஆகாது என்று சொல்லும் தோட்டம் இங்கு ஏது
: ஒரு பாதி குளிர்ந்ததென்ன.. மறு பாதி கொதிப்பதென்ன

பெ: நானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
: நானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
பெ: ஊர் தூங்கும் ராத்திரி நேரம்.. இள மனதில் எத்தனை தாகம்
ஊர் தூங்கும் ராத்திரி நேரம்.. இள மனதில் எத்தனை தாகம்
: நீராடு இளமையிலே.. சேவல் கூவும் வரையினிலே
பெ: நானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
: மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
...

#194 உத்தம புத்திரி நானு - குரு சிஷ்யன்

படம்: குரு சிஷ்யன்
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா

உத்தம புத்திரி நானு.. உண்டேனே செந்தேனு
தண்ணியில் துள்ளுற மீனு.. தள்ளாடும் பொன் மானு
அப்பாவுக்குத் தப்பாமதான் பொறந்த பெண்தானே
ஹோய் ஹோய்.. பொறந்த பெண்தானே
உத்தம புத்திரி நானு.. ஹா.. ஆஆஆ ஓஓஓ..
...

பெண் ஜென்மங்கள் எல்லாமே ஒரு வெள்ளாட்டு மந்தைதான்
ஓஓஓ.. நம் சொந்தங்கள் எந்நாளும் ஒரு வியாபாரச் சந்தைதான்
இதிலென்ன காதல் கீதம்.. இங்கு யாவும் மாயம்தானே
இலக்கியக் காதல் கூட வெறும் ஏட்டில் வாழும் மானே
கோப்பைதான் என் கையோடு.. போதைதான் என் கண்ணோடு
ஆனந்தம் என் நெஞ்சோடு.. ஆலோலம் என் நினைவோடு
சோகங்களே ராகங்களாய் நான் பாடுறேன்.. ஹோய்.. ஹா..

உத்தம புத்திரி நானு.. உண்டேனே செந்தேனு.. ஹோய்..
தண்ணியில் துள்ளுற மீனு.. தள்ளாடும் பொன் மானு
அப்பாவுக்குத் தப்பாமதான் பொறந்த பெண்தானே
ஹோய் ஹோய்.. பொறந்த பெண்தானே

உத்தம புத்திரி நானு.. ஹா.. ஆஆஆ ஓஓஓ..
...

தரரரர தரத்தா தரத்தத்தத்தா.. தரத்தா தரத்தத்தத்தம்.. ததம்
தரத்தா தரத்தத்தத்தா.. தரத்தா தரத்தத்தத்தம்..
தரத்தா தரத்தத்தத்தா.. தரத்தா தரத்தத்தத்தம்.. ததம்
தரத்தா தரத்தத்தத்தா.. தரத்தா தரத்தத்தத்தம்..
தரத்தா தரத்தா தரத்தா தரத்தா
தரத்தா தரத்தா தா..
...

என் எண்ணத்தில் இப்போது ஒரு உல்லாசக் கச்சேரி
ஆஆ ஆஆ.. நான் தள்ளாடித் தள்ளாடி இங்கு வந்தாடும் சிங்காரி
அந்திப் பகல் நான்தான் வாட.. வந்த காதல் நோயும் போச்சு
கண்ணிரண்டில் பார்த்தா ஆசை.. இப்போ கானல் நீராய் ஆச்சு
போடி போ.. நீ தனியாளு.. நாளெல்லாம் உன் திருநாளு
கூத்தாடு.. உன் மனம் போலே.. பூத்தாடு.. பொன் மலர் போலே

சோகங்களே ராகங்களாய் நான் பாடுறேன்.. ஹோய்.. ஹா..

உத்தம புத்திரி நானு.. உண்டேனே செந்தேனு.. ஹோய்..
தண்ணியில் துள்ளுற மீனு.. தள்ளாடும் பொன் மானு
அப்பாவுக்குத் தப்பாமதான் பொறந்த பெண்தானே
ஹோய் ஹோய்.. பொறந்த பெண்தானே

உத்தம புத்திரி நானு.. உண்டேனே செந்தேனு.. ஹோய்..
உத்தம புத்திரி நானு.. ஆ.. ஆஆஆ ஆஆஆ..
...

#150 என்னுள்ளே என்னுள்ளே - வள்ளி

படம்: வள்ளி
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா
பெ.குழு: ஆஹாஆ.. ஆஆஆ.. ஆ ஆஆஆஆ ஆஆ..
ஆஆஆ ஆஆஆ ஆ ஆஆஆஆ ஆஆ..
...
பெ&பெ.குழு: என்னுள்ளே என்னுள்ளே.. பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே.. பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற.. ஓர் வார்த்தையில்லை கூற.. எதுவோ..
பெ: ஓர் மோகம்
பெ& பெ.குழு: என்னுள்ளே என்னுள்ளே.. பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
...

பெ.குழு: ஆஹஹாஹஹாஹா ஆஹஹாஹஹாஹா..
ஆஹஹாஹஹாஹா ஆஹஹாஹஹா..
பெ: கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடியெங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்

பெ& பெ.குழு: என்னுள்ளே என்னுள்ளே.. பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
...

பெ.குழு: ஆஆஆ.. ஆ ஆஆஆ.. ஆஆஆ ஆஆ ஆ ஆ..
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆ..
பெ: கூடு விட்டுக் கூடு ஜீவன் பாயும்போது
ஒன்றிலொன்றாய்க் கலந்தாட
ஊன் கலந்து ஊனும் ஒன்றுபட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற
காலமென்ற தேரே.. ஆடிடாமல் நில்லு
இக்கணத்தைப் போலே இன்பமெது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமேதான்

பெ& பெ.குழு: என்னுள்ளே என்னுள்ளே.. பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற.. ஓர் வார்த்தையில்லை கூற.. எதுவோ..
பெ: ஓர் மோகம்
பெ& பெ.குழு: என்னுள்ளே என்னுள்ளே.. பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே.. பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
...

# 74 மாலையில் யாரோ மனதோடு பேச - சத்ரியன்

படம்: சத்ரியன்
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே.. ஓஓ ஓஓஒ.. மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்.. ஓஓ ஓஓஓ.. மௌனம் வந்ததோ
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
...

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடியென்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
...

கரை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க
அடடா.. நானும் மீனைப் போல கடலில் பாயக் கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே.. ஓஓ ஓஓஒ.. மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்.. ஓஓ ஓஓஓ.. மௌனம் வந்ததோ
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது
...

# 52 நீயெங்கே என்னன்பே - சின்னத் தம்பி

படம்: சின்னத் தம்பி
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா

 நீயெங்கே..
...
என்னன்பே..
...
மீண்டும் மீண்டும் மீண்டும்
...
நீதானிங்கு வேண்டும்
...
நீயெங்கே என்னன்பே.. நீயின்றி நானெங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதானிங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீயெங்கே என்னன்பே.. நீயின்றி நானெங்கே
...

விடிகிற வரையினில் கதைகளைப் படித்ததை நினைத்ததே நினைத்ததே
முடிகிற கதையினைத் தொடர்ந்திட மனமிது துடிக்குதே துடிக்குதே
கதையில்லை கனவில்லை உறவுகள் உணர்வுகள் உருகுதே உருகுதே
பிழையில்லை வழியில்லை அருவிகள் விழிகளில் பெருகுதே பெருகுதே
வாழும்போது ஒன்றாக வாழ வேண்டும் வா வா
விடியும்போது எல்லோர்க்கும் விடியுமிங்கு வா வா
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது

நீயெங்கே என்னன்பே.. நீயின்றி நானெங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதானிங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீயெங்கே என்னன்பே.. நீயின்றி நானெங்கே
...

ஆஆ.. ஆஆ.. ஆஆ ஆஆ.. ஆஆ ஆஆ..
ஆஆ.. ஆஆ.. ஆஆ ஆஆ.. ஆஆ ஆஆ..
ஆஆ ஆஆஆ ஆஆ.. ஆஆ ஆஆஆ ஆஆ..
ஆஆஆ ஆஆ ஆஆஆ.. ஆஆஆ ஆஆ ஆஆஆ..
...

வீதியென்றும் வெட்டவெளிப் பொட்டலென்றும் வெண்ணிலவு பார்க்குமா பார்க்குமா
வீடு என்றும் மொட்டைச் சுடுகாடு என்றும் தென்றலிங்கு பார்க்குமா பார்க்குமா
எத்தனென்றும் ஏழை பணக்காரனென்றும் ஓடும் ரத்தம் பார்க்குமா பார்க்குமா
பித்தனென்றும் பிச்சை போடும் பக்தனென்றும் உண்மை தெய்வம் பார்க்குமா பார்க்குமா
காதல் கொண்டு வாழாத கதைகள் என்றென்றுமுண்டு
கதைகளிங்கு முடியாது மீண்டும் தொடரட்டுமிங்கு