Showing posts with label சங்கர்-கணேஷ். Show all posts
Showing posts with label சங்கர்-கணேஷ். Show all posts

#301 மூங்கிலிலைக் காடுகளே - பெண்மணி அவள் கண்மணி

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!doasembahros
படம்: பெண்மணி அவள் கண்மணி
இசை: சங்கர் கணேஷ்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்
வானகத்தில் சொர்க்கமில்லை வையகத்தில் உள்ளதென்று
ஜோடியொன்று தேடுதிங்கே பாருங்கள்.. பாருங்கள்
மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்
வானகத்தில் சொர்க்கமில்லை வையகத்தில் உள்ளதென்று
ஜோடியொன்று தேடுதிங்கே பாருங்கள்.. பாருங்கள்
...

மாம்பூக்களே மைனாக்களே.. சந்தோஷ வேளைதான்.. சங்கீதம் பாடுங்கள்
நாணல்களே நாரைகளே.. கல்யாணப் பெண்ணிவள்.. நல்வாழ்த்துக் கூறுங்கள்
காலகாலமாய்த் தப்பாத தாளமாய்
காதல் வண்ணமே மங்காத கோலமாய்
பெண்ணென்ற காவியம் பல்லாண்டு வாழணும்

மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்
வானகத்தில் சொர்க்கமில்லை வையகத்தில் உள்ளதென்று
ஜோடியொன்று தேடுதிங்கே பாருங்கள்.. பாருங்கள்
மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்
...

கார்காலமே நீர்த் தூவுமே.. செந்தாழம் பூவுடல் சில்லென்று கூசுமே ihikhik
ஆண் பாதியும் பெண் பாதியும் ஒன்றாகும் வேளையில் சம்சார கானமே
ஓடம் போலவே உள்ளங்களாடவே.. ஏரி போலவே வெள்ளங்கள் ஊறவே
ஒன்றான ஜாதகம் பல்லாண்டு வாழணும்

மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்
வானகத்தில் சொர்க்கமில்லை வையகத்தில் உள்ளதென்று
ஜோடியொன்று தேடுதிங்கே பாருங்கள்.. பாருங்கள்
மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்.. வாருங்கள்
...

#167 மாசி மாசந்தான் - ஊர்க்காவலன்

படம்: ஊர்க்காவலன்
இசை: சங்கர்-கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

பெ: ஓடுகிற மேகங்களா... ஓடைத் தண்ணி மீனுங்களா
கன்னிதான் கண்ணாலம் கட்டுறா
ஊரெல்லாம் தம்பட்டம் கொட்டுறா
மச்சானுக்கும் மணப் பொண்ணுக்கும் மொய்யெழுத வாரீயளா
...

பெ: மாசி மாசந்தான்.. சொல்லு சொல்லு.. சொல்லு சொல்லு
மேள தாளந்தான்.. சொல்லு சொல்லு.. சொல்லு சொல்லு
மாசி மாசந்தான்
பெ2: சொல்லு சொல்லு.. சொல்லு சொல்லு
பெ: மேள தாளந்தான்
பெ2: சொல்லு சொல்லு.. சொல்லு சொல்லு
: மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலைதான் வந்து கூடும் வேளைதான்
பெ: பட்டுச் சேலை ரவிக்கை சொலிசொலிக்க
பக்கம் மாமன் இருக்க.. தாலி முடிக்க
வந்து வாழ்த்துச் சொல்லணும் ஊரு சனம்
: மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலைதான் வந்து கூடும் வேளைதான்
...

: பொட்டோடு பூச்சூடி பொஞ்சாதி வந்தாச்சு
பெ: என் புருஷன் நீயாச்சு.. என் மனசு போலாச்சு
: நேரங்காலம் எல்லாமே இப்பத்தானே தோதாச்சு
பெ: சொந்தமென்னு ஆயாச்சு.. சோகமெல்லாம் போயாச்சு
: பூ முடிச்ச மானே.. பசுந்தேனே.. சுகந்தா
பெ: தொட்டு தொட்டு
: ஹோய்..
பெ: வரும் பந்தம் இது
: அட தொத்திக் கொண்டு வந்த சொந்தம் இது
பெ: ஆயிரம் காலங்கள் கூடுவது

: மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்
பெ: மாத்து மாலைதான் வந்து கூடும் வேளைதான்
: ஆஹாஹா..பட்டுச் சேலை ரவிக்கை சொலிசொலிக்க
பெ: பக்கம் மாமன் இருக்க.. தாலி முடிக்க
: வந்து வாழ்த்துச் சொல்லணும் ஊரு சனம்
பெ: மாசி மாசந்தான்
: கெட்டி மேள தாளந்தான்
பெ: மாத்து மாலைதான்
: வந்து கூடும் வேளைதான்
...

பெ: ராசாவே உன்னாலே ராத்தூக்கம் போயாச்சு
: பொன்மானே ஒன்னால பூங்காத்தும் தீயாச்சு
பெ: அஞ்சு வகைப் பூபாணம் மம்முதனும் போட்டாச்சு
: அந்திப் பகல் இனிமேலே கட்டிலறைப் பாட்டாச்சு
பெ: நித்தம் இது போலே மடி மேலே விழவா
: எந்நாளுமே
பெ: ஹா..
: இனி உன்னோடுதான்
பெ: என் ஜீவனும்
: ஹஹஹா..
பெ: உன் பின்னோடுதான்
: நாளொரு நாடகம் ஆடிடத்தான்

பெ: மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்
: மாத்து மாலைதான் வந்து கூடும் வேளைதான்
பெ: ஆஹாஹா..பட்டுச் சேலை ரவிக்கை சொலிசொலிக்க
: பக்கம் மாமன் இருக்க.. தாலி முடிக்க
பெ: வந்து வாழ்த்துச் சொல்லணும் ஊரு சனம்
மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலைதான் வந்து கூடும் வேளைதான்
...

#121 ஜானகி தேவி - சம்சாரம் அது மின்சாரம்

படம்: சம்சாரம் அது மின்சாரம்
இசை: சங்கர்-கணேஷ்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: சித்ரா

ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
...
ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்
ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
...

சீதை வணங்கி எழுந்தாளே.. கண்களில் அவனை அளந்தாளே
பாதம் பார்த்து நடந்தாளே.. ரகசிய புன்னகை புரிந்தாளே
பார்வையில் கேட்கிறான் பதில் என்ன மானே
பார்வையில் கேட்கிறான் பதில் என்ன மானே
மௌனம்.. மௌனம் சம்மதம்தானே

ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்
...

ராமன் சீதை முகம் பார்க்க.. சீதையின் கண்களோ நிலம் பார்க்க
நாணம் வந்து தடை போட.. நாயகன் அங்கங்கே எடை போட
பாவையும் பாடினாள் பரம்பரை பாட்டு
பாவையும் பாடினாள் பரம்பரை பாட்டு
சபையில் தவித்தாள் தலைவனைப் பார்த்து

ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்
ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
...

# 68 அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக் - ரேவதி

படம்: ரேவதி
இசை: சங்கர்-கணேஷ் (?!)
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி

: அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது.. கண்ணே.. கண்ணே.. கண் பேசுது
தேகம் அடிக்கடி துடிக்குது
பெ: அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது.. கண்ணா.. கண்ணா.. கண் பேசுது
தேகம் அடிக்கடி துடிக்குது
...

பெ: கண் ஜாடை சொன்னது கொஞ்சம் அல்ல
கவி பாட வார்த்தைக்குப் பஞ்சம் அல்ல
கண் ஜாடை சொன்னது கொஞ்சம் அல்ல
கவி பாட வார்த்தைக்குப் பஞ்சம் அல்ல
சொல்லத்தான் நினைக்கும்.. நடுக்கம் எடுக்கும்
இதயம் துடிக்கும்.. எதையோ மறைக்கும்
: வாடாத பூவுக்கு வாசம் இல்லை
வாடாத பூவுக்கு வாசம் இல்லை
கலந்தேன் இவளை.. மறந்தேன் கவலை

பெ: அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
ஹா.. அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
: காதல் சொல்ல வாய் கூசுது.. கண்ணே.. கண்ணே.. கண் பேசுது
தேகம் அடிக்கடி துடிக்குது
பெ: அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
: அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
...

: நான் கண்ட பெண்மைக்கு அச்சம் இல்லை
பெ: ம்..
: நாணங்கள் ஏனடி மிச்சம் இல்லை
பெ: ம்ஹும்..
: நான் கண்ட பெண்மைக்கு அச்சம் இல்லை
பெ: ம்..
: நாணங்கள் ஏனடி மிச்சம் இல்லை
நிலவாய் எழுவாய்.. மடிமேல் விழுவாய்
ஒரு வாய் அமுதம்.. தருவாய் மெதுவாய்
பெ: தாளாத பெண்மைக்குத் தாழ்ப்பாளில்லை
தாளாத பெண்மைக்குத் தாழ்ப்பாளில்லை
மெதுவாய் திறக்கும்.. அதுவாய் கொடுக்கும்

: அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
பெ: ihikhik அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
: காதல் சொல்ல வாய் கூசுது
பெ: கண்ணா.. கண்ணா.. கண் பேசுது
: தேகம் அடிக்கடி துடிக்குது
பெ: அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
: அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
...

# 35 ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் - இதய தாமரை

படம்: இதய தாமரை
இசை: சங்கர்-கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

: ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலை வேளையில்
பெ: ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலை வேளையில்
: ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
...

: பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா
பூவுக்கொரு பூஜை செய்யப் பிறந்தவன் நானில்லையா
பெ: இதயத்தின் தாமரையில் இருப்பது நீயா
தாமரைக்குள் வீடு கட்டித் தந்தவள் நானில்லையா
: ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது
பெ: உன் மூச்சிலல்லவா என் மூச்சும் உள்ளது
: ஒன்றானது

பெ: ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
: ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
பெ: கள்ளூறும் காலை வேளையில்
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
...

பெ: யாருக்கு யாருறவு யாரறிவாரோ
என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ
: பொன்மகள் மூச்சுவிட்டால் பூ மலராதோ
பூமகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ
பெ: கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது
: ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது
பெ: இயல்பானது

: ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
பெ: ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
: கள்ளூறும் காலை வேளையில்
பெ: லல லால லாலலா லாலல லாலா
லல லால லாலலா லாலல லாலா
...

#23 தேவாம்ருதம் ஜீவாம்ருதம் - மூன்று முகம்

படம்: மூன்று முகம்
இசை: சங்கர்-கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்

: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
துறவறம் என்ன சுகம் தரும்
என்றும் பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்
&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
: தீவானா
&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
பெ: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்

: இதம் பதம் சுகமாகலாம்.. இதழ் தரும் இனிய மதுவில்
ஜபம் தவம் இனியேதடி.. மனம் தினம் உனது மடியில்
பெ: இதை விடவா இன்பலோகம்.. இதுவல்லவா ராஜ யோகம்
இதை விடவா இன்பலோகம்.. இதுவல்லவா ராஜ யோகம்
உற்சாகம் உல்லாசம் உண்டாகும் பெண்ணாலேதான்

: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
பெ: சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
: எவ்ரிபடி..
&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
: தீவானா
&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
...

: ஷாபரபரிபரப...
பெ: பாபாபா..
...

பெ: தளர் நடை தடுமாறுதே.. தளிர் இடை தழுவத் தழுவ
தணல் சுடும் நிலையானதே.. விரல் நகம் பதியப் பதிய
: மனநிலையை மாற்றி வைத்தாய்.. புதுக் கனலை ஏற்றி வைத்தாய்
மனநிலையை மாற்றி வைத்தாய்.. புதுக் கனலை ஏற்றி வைத்தாய்
தொட்டாலும் பட்டாலும் மின்சாரம் பாய்கின்றதே

பெ: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
: சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
பெ: துறவறம் என்ன சுகம் தரும்
: என்றும் பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்.. கமான்..
,பெ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
: தீவானா
,பெ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
ஆ: தீவானா
,பெ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
: தீவானா
,பெ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
...

#12 உன்னை அழைத்தது கண் - தாய் வீடு

படம்: தாய் வீடு
இசை: சங்கர்-கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
...
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
பெ: உன்னை அழைத்தது கண்.. உறவை நினைத்தது பெண்
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
பெ: சொல்ல நினைத்தது கண்.. மெல்ல சிரித்தது பெண்
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
பெ: ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி.. ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
: ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா..
...

பெ: நீருமின்றி மீனுமில்லை நீயுமின்றி நானுமில்லை
வா வா எந்தன் மன்னவா
கையணைக்க மெய்யணைக்க கட்டழகைத் தொட்டணைக்க
ஆனந்தம் நான் சொல்லவா
: நீ புது ரோஜா.. நான் யுவராஜா
நீயொரு பொன் மேகம்.. நான்தான் தொடும் செவ்வானம்
பெ: ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
: ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா..
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..

பெ: உன்னை அழைத்தது கண்.. உறவை நினைத்தது பெண்
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
...

பெ: முன்னழகும் பின்னழகும் மூடி வைத்த பெண்ணழகும்
ராஜா நீ கொண்டாடத்தான்
முத்து நவரத்தினமும் முத்தமிடும் சித்திரமும்
எந்நாளும் உன்னோடுதான்
: நான் மயங்க.. தேன் வழங்க
நீ நெருங்க.. நாடகம் தொடங்காதோ
பெ: ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
: ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா..
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..

பெ: அரே.. உன்னை அழைத்தது கண்.. உறவை நினைத்தது பெண்